திருச்சி, மே 7-
மொழிக் கொள்கைக்கு எதிராக கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
தமிழர் பண்பாட்டை கற்பிக்கவும், அவர்களின் அறவியல், கலைத் திறனை வளர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு கல்லூரிகளில் தமிழ்ப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதன்படி தன்னம்பிக்கை, நாட்டுப் பற்று, சமூக சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி திருமூலர், திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் முதல் தற்போதைய இலக்கியவாதிகளின் படைப்புகள் வரை பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொலை தூரக் கல்வி மையம் மூலம் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்போருக்கு ஒரு பருவத்துக்கு (செமஸ்டர்) ஒன்று என மொத்தம் 4 தாள்களும், தொலை நிலைக் கல்வி மையம் மூலம் படிப்போருக்கு ஆண்டுக்கு ஒரு தாள் என இரண்டும் தமிழ்த் தாள்கள் இருக்கும். கல்லூரிகளில் 90 வேலை நாட்களுக்கு 90 மணி நேரம் தமிழ்ப் பாடங்கள் நடத்தப்பட்டு, நான்கு பருவத்துக்கும் மொத்தம் 360 மணி நேரம் தமிழ்ப்பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளாக இளநிலை வணிகவியல் (பி.காம்) பட்டப் படிப்பு மாணவர்களுக்கு முதல் ஆண்டு மட்டும் போதும். அதுவும் இலக்கண இலக்கியங்களைப் பயிற்றுவிக்க தேவையில்லை என்று முடிவு செய்து ‘வணிகத் தமிழ்Õ என்று ஒரு தாள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. பின்னர் தொலை நிலைக் கல்வி மையம் மூலம் கற்பிக்கப்படும் குறிப்பிட்ட சில பட்டப் படிப்புகளுக்கும் இதே நடைமுறையை தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார், பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைவு பெற்ற சில தன்னாட்சி கல்லூரிகளில் பி.காம் மற்றும் பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதலாண்டு மட்டுமே தமிழ்ப்பாடங்கள் தற்போது நடத்தப்படுகின்றன.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சில கல்லூரிகளில் 8 பட்டப் படிப்புக்களுக்கு தமிழ்ப் பாடம் முதல் ஆண்டு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இந்த தமிழ் புறக்கணிப்புக்கு விருப்ப பாட தேர்வு புள்ளி முறை (சாய்ஸ் பேஸ்டு கிரடிட் சிஸ்டம் - சி.பி.சி.எஸ்) எனும் முறையை சாதுர்யமாக பயன்படுத்தியுள்ளனர். இதையே தமிழகம் முழுவதும் சில தன்னாட்சி கல்லூரிகள் பின்பற்ற தொடங்கியுள்ளன. இது போன்ற முறை தொடர்வது நல்லதல்ல என்கின்றனர் பேராசிரியர்கள்.
- மாலை முரசு
Monday, May 7, 2007
ச: கல்லூரிகளில் தமிழ் புறக்கணிப்பு - தமிழாசிரியர்கள் கவலை
Posted by சிவபாலன் at 11:54 PM 0 comments
ச: வரதட்சணை கேட்டு நடிகர் பிரசாந்த் கொடுமை: மனைவி புகார்
சென்னை: வரதட்சணை கேட்டு நடிகர் பிரசாந்த் கொடுமை மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். நடிகர் பிரசாந்த் , கிரகலட்சுமி திருமணம் முடிந்த சொற்ப காலங்களிலே பிரிந்தனர். இதனையடுத்து மனைவியை குடும்பம் நடத்த வர உத்தரவிடுமாறு பிரசாந்த் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நிலுவையில் இருக்கும் நேரத்தில் கிரகலட்சுமி , கணவர் பிரசாந்த பல முறை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளார் என கமிஷர் லத்திகாசரணை சந்தித்து மனுக்கொடுத்துள்ளார்.
- தினமலர்
Posted by சிவபாலன் at 11:47 PM 0 comments
ச:போலி என்கௌன்டர் வழக்கு: நாடாளுமன்றம் அமளியால் தள்ளி வைப்பு
குஜராத் போலி துப்பாக்கிசூடு விவகாரத்தினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் குஜராத் முதல்வர் மோடியின் பதவி விலகலைக் கோரி அவைநடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் அவை நடைவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்டன.
News From Sahara Samay:: Parliament adjourned over Guj fake encounter
Posted by மணியன் at 5:30 PM 0 comments
ச: AIIMS: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
உச்சநீதிமன்றம் ஏஐஐஎமெஸ் இயக்குனர் வேணுகோபாலுக்கும் நடுவண் அரசிற்கும் இருவரின் உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்த மேல்முறையீட்டினை விசாரிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேல் விவரங்களுக்கு AIIMS: SC notices to Centre, Venugopal - Daily News & Analysis
Posted by மணியன் at 1:30 PM 0 comments
ச: சார்கோசி பிரான்ஸின் அதிபராக தேர்வு
ஞாயிறன்று நடந்த அதிபர் தேர்தலில் வலதுசாரி நிக்கோலஸ் சார்கோசி 53.3% வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெண் வேட்பாளரும் இடதுசாரி அரசியல்வாதியுமான ரோயல் 46.7% வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஒரு வெளிநாட்டு வம்சாவளி பிரெஞ்சுக்காரர் நாட்டின் முதல் குடிமகனாவது வளர்ந்துவரும் இனப்பிரச்சினைகளைக் களையுமா என்ற கேள்வி அந்நாட்டு அரசியலாரிடம் எழுந்துள்ளது.
இது பற்றி - New York Times
Posted by மணியன் at 1:14 PM 0 comments
b r e a k i n g n e w s...