.

Friday, August 3, 2007

மக்களுடன் தான் தோழமை; திமுகவுடன் அல்ல - பாமக, இடதுசாரிகள்

சென்னை, ஆக.3:

தமிழக அரசுக்கு எதிரான கூட்டுப் போராட்டம் தொடரும் என்று பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தோழமை திமுகவுடனா? அல்லது மக்களுடனா? என்று கேட்டால் மக்களுடன்தான் எங்கள் தோழமை என்றும் அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்"

கரடி வாயில் கட்டி - இந்திய மருத்துவர்கள் அகற்றினர்


மத்தியப்பிரதேசத்தின் வனவிஹார் தேசிய பூங்காவில் உள்ள கரடியின் வாயில் கட்டி ஒன்று இருந்தது. போபாலில் உள்ள பல் ஆஸ்பத்திரியில் அதற்கு நேற்று ஆபரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்டது. மயங்கிய நிலையில் கிடக்கும் கரடியை சுற்றி நிற்கின்றனர் டாக்டர்கள்.

நன்றி : "தமிழ் முரசு"

வரதட்சணை வழக்கில் சிக்கிய அர்ஜூன் சிங் ஒரு பொய்யர்

லக்னோ, ஆக. 3-
பேரனின் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங், அதைப்பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியிருப்பது அப்பட்டமான பொய் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு"

துணை ஜனாதிபதி வேட்பாளர் நஜ்மா மீது விரைவில் மோசடி வழக்கு பதிவு

புதுடெல்லி, ஆக. 3-
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மாநிலங்களவை முன்னாள் துணை தலைவர் நஜ்மா ஹெப்துல்லா மீது விரைவில் மோசடி வழக்கு தொடர்பாக எப்ஐஆர் போடப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு"

ராமேஸ்வரம் அகல ரயில் பாதை ஆக. 6-ல் போக்குவரத்து துவக்கம்

ராமேஸ்வரம், ஆக. 3-
ராமேஸ்வரம் அகலப்பாதையில் வரும் 6-ம் தேதி ரயில் போக்குவரத்து துவங்குகிறது. தொடக்க விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி, ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு"

அடுத்த ஆண்டு முதல், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை அரசே வசூலித்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கொடுக்கும்

தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

என்ஜினீயரிங் கல்லூரிகளில் நீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக பெற்றோர்கள், மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. பலர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளனர். சிலர் வாய் மூலம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 70 ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு, கடந்த ஜுலை மாதம் 24, 25, 27 மற்றும் ஆகஸ்டு 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் தமிழ்நாட்டில் 159 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

33 கல்லூரிகள்

அவற்றில் 33 கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது. ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிக கட்டணம் வசூலித்துள்ளனர். இந்த கட்டணம் கல்விக் கட்டணம் மட்டும் தானா? அல்லது பஸ் கட்டணமும் அதில் சேர்ந்துள்ளதா? என்று மேலும் விசாரிக்கப்படும்.

அடுத்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் அரசு ஒதுக்கீட்டில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கட்டணத்தை அரசே வசூலித்து அதை கல்லூரிக்கு கொடுத்து விடுவோம். அப்படி செய்தால் இப்படி அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு குறைவு.

கடந்த ஆண்டு 13 கல்லூரிகளில் மாணவர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு மாணவர்களை மிரட்டியதாக புகார் வந்தது. அதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களை வாங்கி கொடுத்து உள்ளோம்.

13 என்ஜினீயரிங் கல்லூரிகளில் கட்டமைப்பு குறைவு மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவை உள்ளதாக கூறி அண்ணா பல்கலைக்கழகம் அந்த கல்லூரிகளுக்கு நோட்டீசு கொடுத்துள்ளது. என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 ஆயிரம் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

பேட்டியின் போது தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் ஆர்.சிவகுமார் உடன் இருந்தார்.

தினத்தந்தி

The Hindu News :: Excess fee issue: TN Govt. mulls writing to AICTE: "The colleges included Andal Azhagar engineering college."
33 engineering colleges face derecognition threat

'என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளை தமிழ் மொழியில் கொண்டு வரவேண்டும்': டாக்டர் ராமதாஸ்

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வியை பொறுத்தவரை நாட்டின் இன்றைய அவசர, அவசியமான தேவை ஆரம்பக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான். இதை நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி, விருதுநகர் மாவட்டத்திலும் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்களும், பெற்றோரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளது. மாணவர்கள், பெற்றோர் சேர்ந்து சாலை மறியல் நடத்தி ஆசிரியர்களை நியமிக்க கோரும் நிலைமை இருக்கக்கூடாது.

ஆரம்பக்கல்வி சீரான தரமான கட்டாய கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மொத்த கல்விக்கும் ஒதுக்கப்படும் நிதியில் 50 சதவீதம் ஆரம்பக்கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆரம்பக்கல்விக்கு தனிக்கவனம் செலுத்தவும், தரத்தை உயர்த்தவும் அர்ப்பணித்துக் கொள்ளும் தனி அமைச்சர், அமைச்சகம் நியமிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழ் வழி கல்வியில்

பிளஸ்-2 வரை தமிழ் வழிகல்வியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை அடுத்த ஆண்டு முதல் தமிழ்வழியில் கொண்டு வரவேண்டும்.

50 சதவீத இடங்களை (மருத்துவம், பொறியியல்) பிளஸ்-2 வரை தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். விடுதி முதல் இலவச கல்வியும் வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்.

தாமிரபரணி ஆற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையை பற்றி நேற்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். எங்களது எம்.எல்.ஏ.க்களை அனுப்பி ஆய்வு செய்து அறிக்கையை கடிதமாக எழுதியுள்ளேன். இதுபற்றி அதிகாரிகளோடு, முதல்-அமைச்சர் கருணாநிதி அதிக நேரம் பேசியதாக அரசு தரப்பு செய்தியில் வெளியாகி உள்ளது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் இது போன்ற கருத்துக்களை கடிதம் மூலமாகவும், செய்தியாளர்களை சந்தித்தும் தெரிவித்து வருகிறேன்.

1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சரளமாக பேசும் படியான ஆங்கில மொழியை கற்றுத்தர வேண்டும். இது மாணவ, மாணவிகளுக்கு போதுமானது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

வீரமணி கருத்து

பின்னர் நிருபர்கள் டாக்டர் ராமதாசிடம், 'தி.மு.க. கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும் தோழமை கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என திராவிடர் கழகம் வீரமணி கூறியிருக்கிறாரே?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு டாக்டர் ராமதாஸ் பதிலளிக்கையில், 'வீரமணி அறிக்கையை நானும் படித்தேன். முந்தைய ஆட்சியில் அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது அடக்குமுறை அவர்கள் மீது ஏவி விடப்பட்டது. அனைத்து கட்சிகளும் கண்டித்தன. ஆனால் நண்பர் வீரமணி மட்டும் அரசு ஊழியர் போராட்டத்தை அடக்கி ஆண்ட பெருமை படைத்தார் என்றும்,அவரை போன்று நிர்வாக திறன் படைத்தவரும் வேறு எவரும் இல்லை என்றும் அப்போதைய முதல்வரை பாராட்டினார். இன்று மாறி இருக்கிறார்' என்றார்.

முழுவதும் படிக்க: தினத்தந்தி

கர்நாடகத்தில் தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக வேண்டும்.

கர்நாடகத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசு ஸ்திரமாக இல்லை. இதனால் அடுத்த தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இன்று காலை பெங்களூர் வந்த பிரதமர் தொண்டர்களிடையே உரையாற்றுகையில், அக்டோபரில் ஆட்சிப் பொறுப்பை பாஜகவிடம் ஜனதா தளம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், அக்டோபரில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கர்நாடகத்தில் அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மதக் கலவரங்கள் தான் மிஞ்சின. மக்களை மதத்தின் பெயரால் துண்டாடினார்கள். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பின் மதசார்பின்மை மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும் வென்றுள்ளோம். மதவாத சக்திகளை ஒதுக்கி வைக்க வேண்டியது மிக அவசியம். மதவாதத்தின் அபாயங்களை கர்நாடக மக்களும் உணர்ந்து கொள்வது நல்லது.

மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கூட்டணி அனைத்து விஷயங்களிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இப்போது தான் முதன் முறையாக 9 சதவீத வளர்ச்சியை நாடு கண்டு வருகிறது என்றார் சிங்.

சான் டியாகோ: சானியா கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்

சான் டியாகோவில் நடைபெறும் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் அகூரா சிளாசிக் போட்டியில் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருந்த உருசிய வீராங்கனை டைனாரா சாபினாவை 6-1,6-2 என்ற கணக்கில் வென்றார். இனி கால் இறுதி ஆட்டத்தில் முதல் எண் பெற்றுள்ள மாரியா சரபோவாவுடன் ஆட விருக்கிறார். இதற்கு முன்னால் சரபோவாவுடன் US ஓபனில் 2005 ஆண்டு நான்காவது சுற்றில் ஆடி தோற்றிருக்கிறார். ஆனால் கடந்த சில நாட்களாக முன்னணி ஆட்டக்காரர்களான கோலோவன், பியர், பட்டி ஸ்னைடர் ஆகியோரை வென்று நல்ல உற்சாகத்துடன் இருப்பதால் வெல்வாரா ?

வெற்றி பெற 'சற்றுமுன்' வாழ்த்துகிறது.

Sania sets up Sharapova clash

UK தீவிரவாதம்: கஃபீல் அஹமது மரணம்

கிளாஸ்கோ விமான நிலையத்தில் ஜீப்புடன் மோதி பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெங்களூர் பொறியாளர் கஃபீல் அகமது சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். 27 வயதாகும் கஃபீல் 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிட்சை அளிக்கப் பட்டுவந்தார்.


Kafeel Ahmed succumbs to burns

பள்ளிக் கூரை இடிந்து விழுந்தது

நாகர்கோவில் அருகே உள்ள மறவன்குடியிருப்பில் 1983-ம் ஆண்டுமுதல் இந்த தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை வகுப்புகள் நடைபெற்றபோது பள்ளி ஆசிரியர்கள் இருக்கும் அறைக்கு மேலுள்ள ஓட்டுக்கூரை இடிந்து விழுந்தது. அப்போது அந்த அறையில் யாரும் இல்லை. அருகிலுள்ள அறையில் 9-ம் வகுப்பு மாணவர்கள் இருந்தனர். அவர்கள் அச்சத்தில் வகுப்பறையை விட்டு வெளியேறினர்.

தினமணி

மசூதி மற்றும் கிறிஸ்தவ ஆலயத்துக்கு விஜயகாந்த் நிதியுதவி

தனது தொகுதியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வுசெய்ய, விஜயகாந்த் புதன்கிழமை விருத்தாசலம் வந்தார். அங்கு அவரது எம்எல்ஏ அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார்.

விருத்தாசலத்தில் உள்ள நவாப் பள்ளிவாசல் மதில் சுவர் எழுப்பவும், கிறிஸ்தவ ஆலய புனரமைப்புக்கும் தலா ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

இதையடுத்து கெங்கைகொண்டான் காலனியைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண்ணுக்கு மூக்குக் கண்ணாடியும், ஆலடி கிராமத்தைச் சேர்ந்த 15 நபர்களுக்கு முரசும் (தப்பட்டை), மங்கலம்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட பழையபட்டணம் ஊராட்சிப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஒரு ஆண்டுச் சம்பளம் ரூ. 12 ஆயிரமும் வழங்கினார்.

விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட 13-வது வார்டில் வசிக்கும் பெண்களும், கோ-மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண்களும் தங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வருவதில்லை என்றும், சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் கூறினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக விஜயகாந்த் உறுதியளித்தார்.

தினமணி

சிவதாணுப் பிள்ளைக்கு திலகர் விருது

அறிவியல் அறிஞரும் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தலைமை செயல் அலுவலருமான சிவதாணுப் பிள்ளைக்கு 2007-ம் ஆண்டுக்கான லோகமான்ய திலகர் விருது வழங்கப்பட்டுள்ளது.

திலகரின் 87-வது நினைவு நாளை முன்னிட்டு புணே நகரில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், திலகரின் கொள்ளுப் பேரன் தீபக் திலக் இந்த விருதை சிவதாணுப் பிள்ளைக்கு வழங்கினார்.

திலகர் விருது பெறுபவருக்கு தங்கப் பதக்கமும், ரூ.1 லட்சம் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படுகிறது.

தினமணி

India a strategic power, says Pillai-Pune-Cities-The Times of India: "Noted scientist and chief executive officer of BrahMos Aerospace A. Sivathanu Pillai accepted the prestigious Lokmanya Tilak award from Deepak Tilak, chairman of the Lokmanya Tilak Memorial Trust, in the presence of Union energy minister Sushilkumar Shinde and scientist Vasant Gowariker."

இந்தியருக்கு காமன்வெல்த் புகைப்பட விருது

2007-ம் ஆண்டுக்கு தெற்காசியாவுக்கான காமன்வெல்த் புகைப்பட விருது இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இயற்கை மற்றும் வனவிலங்குகளை மிகச்சிறப்பான முறையில் புகைப்படங்களில் கொண்டுவந்ததற்காக சுரேஷ் நாராயணனுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 'இயற்கையின் வெற்றி' என்ற பெயரில் பல்வேறு இடங்களில் இவரது புகைப்படக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன.

மெச்சத் தகுந்த புகைப்படங்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தபஸ் முகோபாத்யாயா, ஸ்ரீநிவாச ரெட்டி, பிராணபந்து சமாஜ்பதி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அரிந்தாம் தத்தா, தீரஜ் பால், சுகந்த சின்கா, டி.என்.பராஸ்கர் ஆகியோர் இரண்டாமிடத்தை பெற்றனர்.

தினமணி

The Hindu News :: Suresh Narayanan wins Commonwealth Photographic Award for S. Asia

காமன்வெல்த் வாலிபால்: ஆஸி.க்கு இந்தியா அதிர்ச்சி

கோல்கத்தாவில் வியாழக்கிழமை நடந்த 2-வது காமன்வெல்த் சீனியர் வாலிபால் போட்டியில் இந்திய அணியினர் 19-25, 25-21, 25-23, 27-25 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர்களின் சவாலை அடக்கி, 'ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.

அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா விளையாட உள்ளது.

அதே சமயம் "பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ள பாகிஸ்தானுடன் ஆஸ்திரேலியா மற்றொரு அரையிறுதியில் விளையாடுகிறது.

தினமணி

Zee News - India, Australia reach Commonwealth Volleyball semis
The Hindu : Sport : India finally in semifinals

'வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் பிரச்சனைக்குள்ளாகிறார்கள்'-ஆய்வு

சென்னை,டெல்லி, கொல்கொத்தா,மும்பை பெங்களூர் ஆகிய நகரங்களில் வேலைக்குச் செல்லும்1000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் எதிர்மறையான சூழல்களை சந்திப்பதாகத் தெரியவந்துள்ளது.

கணவனும், கணவன் வீட்டாரும் நவீன சிந்தனைக் கட்டுக்குள் வராமலிருப்பது இதற்கு ஒரு காரணமாய் அறியப்பட்டுள்ளது.

முக்கிய தெளிவுகள்

  • 38% பெண்கள் திருமணத்துக்குப் பின் உடல்ரீதியான கொடுமைகளை ஒருமுறையேனும் அனுபவித்துள்ளனர்.
  • 72% மனரீதியாக கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.
  • ஸ்திரமான வேலை உள்ள பெண்கள் உடல்ரீதியான தொடர் கொடுமைகளுக்கு அதிகம் ஆளாவதில்லை
  • தன் பேரில் சொத்து வைத்துள்ள பெண்களுக்கு கொடுமைகள் குறைவாக நடந்துள்ளன
  • தன் பெயரில் சொத்து வைத்துக்கொள்ளாதவர்களில் 35%பேர் தொடர் உடல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகீறார்கள்.
  • 80% கணவன் வீட்டார் வேலைக்குப்போகும் பெண்கள,் வேலையை விட வீட்டுக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என விரும்புகிறார்கள்.
'Working women face hostile conditions at home' - The Hindu

ஹைவேயில் ஹெலிகாப்டரை நிறுத்தியதற்கு லாலு மீது புகார்

வெள்ள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிகார் பகுதியை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற லாலுபிரசாத் யாதவ் அதை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி மக்களுக்கு இடையூறு செய்ததாக அவர்மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Case against Lalu for landing IAF chopper on highway Hindu
Case against Lalu, others for ‘misusing’ chopper crisis Hindustan Times
Lalu lands on highway, and in trouble CNN-IBN

உதயப்பூரில் ஆசிரியை அடித்து மாணவர் சாவு

12ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை, அவர் கால்கள் இருக்கைக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்ததை மரியாதை குறைவாக நினைத்து ஆசிரியை அடித்ததில் மாணவர் இறந்துள்ளார்.

போலீஸ் ஆசிரியை மீது கொலைக் குற்றம் சாட்டி தேடிவருகின்றனர்.

A 17-year-old schoolboy in Udaipur city succumbed to his injuries today, eight days after he was allegedly beaten by a woman teacher in a private school to discipline him.

Arpit, a class twelve student of Alok school, was admitted to a government hospital yesterday with the injuries which he sustained in the school in Udaipur, 325 km from here.


Udaipur school boy beaten to deathNDTV.com - 1 hour ago
School student dies after being 'beaten by teacher' Hindu
School student dies after being beaten by teacher Daily News & Analysis

-o❢o-

b r e a k i n g   n e w s...