தற்போது நடைபெற்று வரும் சென்னை வலைப்பதிவர் பட்டறையில் வருகைப்பதிவு பட்டியல் படி 274 பேர் அதிகாரப்பூர்வமாகவும் இன்னும் அதிகமானவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
காலை நிகழ்வில் தமிழிணைய அறிமுகம் குறித்து பத்ரி, தமிழிணைய மைல்கற்கள் பற்றி (தமிழா-எகலப்பை) முகுந்த், தமிழ் வலைப்பதிவுகள் இன்றைய நிலை குறித்து (தமிழ்மணம் நிறுவனர்) காசி, வலை நன்னடத்தை குறித்து மாலன், வலைப் பாதுகாப்பு பற்றி லக்கிலுக் உள்ளிட்டவர்களின் உரைகளும், பயிற்சிப் பிரிவில் கோபி, தமிழி நடத்திய தமிழ் தட்டச்சு, வலைப்பதிவு பயிற்சிகளும் நிகழ்ந்தன.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கலந்துரையாடல் பகுதியில் கிருபா சங்கர் வலைப்பதிவுகள் மூலம் சம்பாதித்தல் பற்றியும் பயிற்சிப் பிரிவில் செந்தழல் ரவி html அடிப்படைகள் பற்றியும் உரையாற்றினர்.
தொடர்வது வலைப்பதிவு/வலைப்பதிவர்களின் சமூக பங்களிப்பு பற்றி ரஜினி ராம்கி, ஒலி, ஒளிப் பதிவுகள் பற்றி செல்லா.( ....அரங்கிலிருந்து பொன்ஸ், மா. சிவகுமார்.)
Sunday, August 5, 2007
ச: சென்னை வலைப்பதிவர் பட்டறை நிகழ்வுகள்.
Posted by ✪சிந்தாநதி at 3:21 PM 6 comments
ச: சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஆரம்பமானது.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆதரவுடன் நடைபெறும் தமிழ்வலைப்பதிவர் பட்டறையில். ஆர்வமுடன் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களும் வலைப்பதிவாளர்களுமாக பட்டறை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கீழ் அரங்கில் கலந்துரையாடல்களும் மேல்மாடியில் பட்டறை பயிற்சிகளும் நடைபெறுகின்றன.
பட்டறை நிகழ்வு புகைப்படங்கள்(அரங்கிலிருந்து பாலபாரதி...)
Posted by ✪சிந்தாநதி at 11:58 AM 3 comments
ரஜினியின் புதிய படம் - கே.எஸ்.ரவிக்குமார்?
ரஜினியின் அடுத்த படம் பற்றி பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் தற்போது ஐரோப்பாவில் உள்ளார். அங்கு தனது மகள் சவுந்தர்யாவின் சுல்தான் அனிமேஷன் படவேலைகள் நடக்கிறது. இதில் ரஜினி பங்கேற்கிறார். படப்பிடிப்பிலும் கலந்து கொள்கிறார். அதன் பிறகு அமெரிக்கா செல்கிறார். அங்கு சில நாட்கள் ஓய்வுஎடுத்துவிட்டு வருகிற 20-ந்தேதிக்கு முன் அவர் சென்னை திரும்புகிறார்.
இம்மாத இறுதியில் புதுப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- மேலும் செய்திக்கு மாலை மலர்
Posted by சிவபாலன் at 12:58 AM 3 comments
b r e a k i n g n e w s...