.

Wednesday, March 28, 2007

சற்றுமுன்: சிறுவாணி அணை நீர்மட்டம்் குறைந்துவருகிறது




கோவை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவெனக் குறைந்துவருகிறது. 70 நாட்கள் தேவையைச் சமாளிக்க இந்த நீர் போதுமானது.

- மாலை முரசு

சற்றுமுன்: ஈரோடு மாவட்டத்தில் நாளை பந்த்

ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு 160 சங்கங்கள் ஆதரவளித்துள்ளன.

காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பில் பவானி ஆற்றிலிருந்து 6 டி.எம்.சி., தண்ணீரையும், அமராவதி ஆற்றிலிருந்து 3 டி.எம்.சி. தண்ணீரையும் கேரளாவுக்கு வழங்க கோரி உத்தரவிட்டுள் ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்தில் விவசாயமும், விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்க ளின் வாழ்வும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடுவர் மன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் 29ம் தேதி ரோடு மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந் தது. இதை ஏற்று அனைத்து சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் ஆதரவளித்துள்ளதால் பொதுவேலை நிறுத் தம் முழுமையாக வெற்றியடையும் என இச்சங்கத்தினர் கூறுகின்றனர்.

- மாலை முரசு

சற்றுமுன்: தொழில்நுட்பத்தில் அமெரிக்கா பின்தங்கியது

உலக பொருளாதாரக் குழுமத்தின் (World Economic Forum. ) ஆய்வுப்படி அமெரிக்கா தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலிடத்திலிருந்து ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


டென்மார்க் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா 40வது இடத்திலிருந்து 44வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சைனா 50லிருந்து 59க்கு தள்ளப்பட்டுள்ளது.

NETWORKED READINESS INDEX RANKINGS 2006 (2005)
1: Denmark (3)
2: Sweden (8)
3: Singapore (2)
4: Finland (5)
5: Switzerland (9)
6: Netherlands (12)
7: US (1)
8: Iceland (4)
9: UK (10)
10: Norway (13)
Source: WEF


US 'no longer technology king'

India was four positions down on last year to 44th, suffering from weak infrastructure and a very low level of individual usage of personal computers and the internet.
China was knocked to 59th place, nine positions down, with information technology uptake in Chinese firms lagging.

WEFன் மற்றுமொரு சர்வே

Nordics show way in sex equality

சற்றுமுன்: டீசல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ் நோயாளி சாவு

டீசல் தீர்ந்துபோனதால் நடுவழியில் நின்றது ஆம்புலன்ஸ். அதில் நெஞ்சுவலியுடன் துடித்துக் கொண்டிருந்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). மெக்கானிக். இவருக்கு நேற்று திடீரென வயிற்றுவலியும், நெஞ்சுவலியும் ஏற்பட்டது. உடனடியாக அவரை உறவினர்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்றிரவு அவரது உடல்நிலை மோசமானதால் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்சில் கோவிந்தராஜை அவரது உறவினர்கள் தஞ்சாவூருக்கு கொண்டு சென்றனர். அவர்களுடன் ஒரு நர்சும் சென்றார். நள்ளிரவு 1 மணிக்கு கந்தர்வக்கோட்டை அடுத்த காடவராயன்பட்டி என்ற இடத்தில் சென்றபோது டீசல் தீர்ந்துவிட்டதால் ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றுவிட்டது.

ஆம்புலன்சில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோவிந்தராஜ் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் டிரைவரை திட்டித் தீர்த்தனர். உறவினர்களின் கதறலை கேட்டு ஊர்மக்கள் அங்கு திரண்டனர். நிலைமை மோசமானதை உணர்ந்த நர்ஸ், ஆம்புலன்சில் இருந்து இறங்கி ஓடிவிட்டார். கோவிந்தராஜ் இறந்த தகவலை தெரிந்து கொண்ட டிரைவர் ராஜேந்திரனும் திரும்பி வரவே இல்லை.

இதுபற்றி கோவிந்தராஜின் உறவினர் ஒருவர் கூறுகையில், புதுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் புறப்படும்போதே டீசல் போட டிரைவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் பணத்தை வாங்கிக் கொண்டு டீசல் போடவில்லை. அவரது அலட்சியத்தால் இப்போது ஒரு உயிர் போய்விட்டது என்றார்.

- மாலைச் சுடர்

சற்றுமுன்:உலகின் உயர்ந்த மனிதர் மணம்புரிந்தார்

உலகத்திலேயே அதிக உயரமானவரான சீனாவைச் சேர்ந்த பவொ ஜிஷன் மணம் முடித்துள்ளார். இவரது உயரம் 7அடி 9 அங்குலமாகும் இவரது மனைவியின் உயரம் 5 அடி 6 அங்குலம்.

படம்: CNN.com
செய்தி:CNN.com

சற்றுமுன்:வீட்டில் 80 ஆடுகளை வளர்த்தவர் கைது

அமெரிக்காவில், நார்த் காரொலினா மாநிலத்தில் வீட்டுக்குள் 80 ஆடுகளை வளர்த்தவர் விலங்குகளை கொடுமைப் படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் மேல் மாடியில் இவர் தங்கிவிட்டு கீழே ஆடுகளள வளர்த்துவந்தார்.

இதில் 30 ஆடுகள் தீவிரமாய் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவற்றை கருணைக் கொலை செய்துள்ளார்கள்.

Man keeps 80 sheep in his house, authorities say

சற்றுமுன்:குறைவாகப் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு

1999-2000 முதல் 2004ஆம் ஆண்டில் வந்த புதிய 70மில்லியன் வேலைவாய்ப்புகளில் 42% நடுநிலைப் பள்ளிக்கும் குறைவாகப் படித்தவர்களுக்கே வந்துள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது.
அடுத்ததாக ஆரம்பப் பள்ளியில் படித்தவர்கள் 18மில்லியன் வேலைகளைப் பெற்றுள்ளார்கள்.

Less educated corner new jobs Times of India

சற்றுமுன்:இராம நவமி கொண்டாடிய இஸ்லாமியர்கள்

ஒரிசாவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இராம நவமியை கொண்டாடினர். இராமரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இராம நவமி விழழ அமைந்துள்ளது. இதில் இஸ்லாமியர் பலர் இந்துக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து விழாவில் பங்கெடுத்துள்ளனர்.

Muslims celebrate Ram Navami in Orrisa

சற்றுமுன்: ஆபாச தகவல் பரிமாற்றங்களுக்கு எதிராய் சட்ட திருத்தம்

சமீப காலமாக ஆபாச தகவல் பரிமாற்றங்கள் செல்போன்கள் மூலம் நடைபெறுகின்றன. இதை தடுக்கவும், இதைச் செய்பவர்களை தண்டிக்கவும் இந்தியன் பீனல் கோடில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

ஆபாச தகவல்களை அனுப்புபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும். கூடுதலாக ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.

Govt set to crackdown on obscenity

சற்றுமுன்: ஒருநாள் போட்டிகளில் இருந்து கும்ளே ஓய்வு

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எனினும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து இந்திய அணி வெளியேறியவுடன் போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய அணி வீரர்களிடம் கும்ளே இதனை தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 36 வயதாகும் கும்ளே உலகக்கோப்பைக்கு முன்பே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கும்ளே 337 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: MSN Tamil

அண்ணாமலை பல்கலை. பி.இ. மாணவி தற்கொலை: மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம், மார்ச் 28: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. விடுதியில் தங்கி பயின்ற பி.இ. மாணவி சாட்னா (20) திங்கள்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து செவ்வாய்க்கிழமை பொறியியல் புலத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் தற்கொலைக்கு காரணமான விரிவுரையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்துத் துறை மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலை வளாகத்தில் பூமாகோயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனுவில் தற்கொலைக்கு காரணமாக இருந்த விரிவுரையாளர் மணிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், செனட் மற்றும் சிண்டிகேட் மன்றத்தில் மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், ஆசிரியர்கள் - மாணவர்கள் பாலியல் நல்லுறவுக் குழு அமைக்க வேண்டும், மாணவி சாட்னா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சற்றுமுன்: புலிகள் விமானப்படை - இந்தியா ரேடார்களை அமைத்தது

விடுதலைப்புலிகள் இலங்கையில் விமானம் கொண்டு தாக்கியதை அடுத்து இந்திய விமானப் படை(IAF) 8 ரேடார்களை இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைத்துள்ளது.

IAF sets up radars after LTTE air strikeZee News
A team of 50 air force personnel, under a commander, would be posted there to monitor the skies, he said. There was also a plan to set up a permanent air-base near Seeniappa Dargah, the official, who wished not to be named, said. The decision to set up radar facility comes two days after LTTE made an aerial attack at a military airbase in Colombo, killing three persons and injuring 16.

India concerned over escalation of violence in Lanka Hindu

சற்றுமுன்: விவசாயிகளை மகிழ்விப்போம் - கருணாநிதி உறுதி

இலவச நிலங்கள் வழங்கி ஏழைகளை முடிந்தவரையில் மகிழ்விப்போம் என்று முதல்வர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
அதிமுக நிதி நிலை அறிக்கையிலே, 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்ததை நம்பி: ஏழை விவசாயக் குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் வழங்குவோம் என்று தெரிவித்தோம். ஆட்சிப் பொறுப்பேற்றதும் தான், 50 லட்சம் ஏக்கர் அளவுக்கு இல்லை என்பது தெரிய வந்தது.
ஆக்கிரமிப்பு இல்லாத ஒப்படை செய்யக் கூடிய அரசு புறம்போக்கு தரிசு நிலம் 1 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர். சிறு குறு விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு புறம்போக்கு தரிசு நிலம் 67 ஆயிரம் ஏக்கர். சிறு குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலம் 7 லட்சம் ஏக்கர் இருப்பது கண்டறியப்பட்டது.

இருப்பிலே உள்ள நிலத்தின் மதிப்பு, மொத்தமுள்ள நிலத்தின் பரப்பளவு ஆகியவற்றை கணக்கிட்டு, அதிகம் பேர் பயன்பெறும் வகையில் ஒரு ஏக்கர் என்றும், அரை ஏக்கர் என்றும், சில இடங்களில் 2 ஏக்கர் என்றும் தற்போது இலவசமாக நிலங்களை வழங்கி வருகிறோம்.

இந்த மூன்று கட்டங்களிலும் இதுவரை 77,118 ஏக்கர் நிலம், 71,755 குடும்பங்களுக்கு இதுவரை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

- தினகரன்

அம்பலமாகும் அவலங்கள்

உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த தோல்விகள் பல்வேறு கோணங்களில் அலசப்படும் நிலையில், உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட அணியில் தனக்கு உடன்பாடில்லை என்ற புதிய வெடியை கொளுத்திப் போட்டுள்ளார் அணியின் பயிற்சியாளர் சேப்பல். அணியில் இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் எனத் தான் கூறியதாகவும், அணியின் மூத்த வீரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விவரங்களுக்கு

சற்றுமுன்:தில்லியில் 55000 கடைகளுக்கு சீல் வைப்பு

தில்லியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் 55000 கடைகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சீல் வைக்கும் பணி நாளையிலிருந்து துவங்கவிருக்கிறது.

Sealing of 55000 illegal shops in Delhi from Wednesday
Over 55,000 Delhi shops to face axe from Wednesday DNA
Several Delhi shops to face axe from WedTimes of India, India

சற்றுமுன்: பெண்களுக்கான வயகரா அறிமுகம்

உடலுறவில் ஆர்வம் குன்றிய, மற்றும் குறைபாடுகளுடைய ஆண்களுக்கென வயகரா மாத்திரைகள் இருப்பதைப்போல பெண்களின் உடலுறவு ஆர்வத்தை தூண்டும் விதத்தில் வயகரா மருந்துப் பட்டைகள்(Patches) லண்டனில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

Female Viagra patch to boost women’s libido!Zee News
26 Mar 2007London, March 26: Viagra, the anti-impotence drug that has so far helped men who have lost their sex drive, will become available for women on the NHS (National Health Service) from this week.
Love is a patch on the bottom Times Online
The female Viagra hits the NHS Daily Mail

.

சற்றுமுன்: மைக்ரொசாப்ட் ஹிந்தி மென்பொருள் வெளியீடு

மைக்ரோசாப்ட்டின் Office 2007 ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

Microsoft 2007 Office released in HindiExpressindia.com
2007 Microsoft Office Goes Desi EFYTimes
Microsoft releases 2007 Office in Hindi CIOL

-o❢o-

b r e a k i n g   n e w s...