.

Tuesday, April 10, 2007

கடனைத் திருப்பித் தரக் கோரி டி. ராஜேந்தர் மீது வழக்கு

சென்னை, ஏப்.10: நடிகர், இயக்குநர் மற்றும் இசை அமைப்பாளர் டி. ராஜேந்தர் ரூ. 34 லட்சம் கடனைத் திருப்பித் தர வேண்டும் என்று கோரி திருச்சியைச் சேர்ந்த எஸ்.பி. ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

'மோனிஷா என் மோனாலிசா' என்ற திரைப்படத்தை 1998-ல் டி.ராஜேந்தர் தயாரித்தார். இப்படத்துக்காக ரூ.59 லட்சம் நிதி உதவி செய்ததாக தனது மனுவில் கூறியுள்ளார் ராமமூர்த்தி. வாங்கிய கடனில் இன்னும் 34 லட்சம் ரூபாயை டி. ராஜேந்தர் தர வேண்டியிருப்பதாக தனது வழக்கில் அவர் கூறியுள்ளார்.

தற்போது அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை சன் டி.வி.யில் டி. ராஜேந்தர் நடத்துகிறார். இதற்காக அவருக்கு வாரம் ஒரு முறை ரூ.2 லட்சம் சம்பளம் தரப்படுவதாக அறிகிறேன். அத்தொகையில் 75 சதவீதத்தை ஒவ்வொரு வாரமும் எனக்குத் தருமாறு டி. ராஜேந்தருக்கும், சன் டி.வி. நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

- Dinamani

கல்லூரி மாணவிகள் 10 பேரை கடித்துக் குதறிய தெரு நாய்கள்

கல்லூரிக்குத் தேர்வு எழுதச் சென்ற 10 மாணவிகளை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் ஹைதராபாதில் திங்கள்கிழமை நடந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தேர்வைத் தள்ளிவைத்தது.

ஹைதராபாத் கோதி பெண்கள் கல்லூரி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சந்து வழியாக சென்று கொண்டிருந்தபோது தெருநாய்கள் அவர்களைச் சுற்றி வளைத்து கடித்துக் குதறத் தொடங்கின. தகவலறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக நகராட்சி அலுவலகத்திடம் தகவல் தெரிவித்தனர். நகராட்சி ஊழியர்கள் நாய்களைப் பிடித்துச் சென்றனர்.

Dogs in biting spree in Hyderabad : stray dogs, Hyderabad, women's college : IBNLive.com : CNN-IBN

இறந்தோர் குடும்பத்தை அரசே தத்தெடுக்கும்: முதல்வர்

சென்னை, ஏப். 10: திண்டிவனத்தை அடுத்த செண்டூர் கிராமத்தில் வெடித்துச் சிதறிய ஜீப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் ஏதும் எடுத்துச் செல்லப்படவில்லை. பாறைகளைத் தகர்க்கப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் தான் இருந்தன என்று சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்:

இந்த விபத்தில் 5 கான்கிரீட் வீடுகள், 8 ஓட்டு வீடுகள், 17 குடிசை வீடுகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான 4 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 28 லட்சம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியரால் மதிப்பிடப்பட்டுள்ளது.

சேதமடைந்த அனைத்து வீடுகளையும் கட்டித் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

அரசு வேலை: இறந்தவர்களில் பெரும்பாலோர் விவசாயக் கூலித் தொழிலாளிகள். இவர்களை நம்பித்தான் அவர்களது குடும்பம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு குடும்பத்தில் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். அத்துடன் குடும்பத்தலைவனை இழந்து வாடும் குடும்பத்தை அரசே தத்தெடுத்து எதிர்காலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

தனிக்குழு: மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சி நண்பர்கள் பரிந்துரையை ஏற்று அனைத்துக் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.

வெடி மருந்துக் கிடங்கு: புதுச்சேரி மணலிபட்டு என்ற இடத்தைச் சேர்ந்த சேகர் (48) என்பவர், மயிலம் பாதிரிபுலியூரில் வெடிமருந்துக் கிடங்கை நடத்தி வருகிறார். அங்கிருந்து கல் குவாரிகளுக்கு வெடிப் பொருள்களை சப்ளை செய்து வருகிறார். "சிவசக்தி எக்ஸ்புளோஸிவ்' என்ற நிறுவனம் அவருக்கு வெடிமருந்துகளை வழங்கி வருகிறது. சனிக்கிழமை வெடித்துச் சிதறிய அந்த ஜீப்பில் 200 கிலோ ஜெலட்டின் குச்சிகள், 320 மீட்டர் சேப்ட்டி வயர், 150 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் ஆகியன எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, பாறைகளைத் தகர்க்க அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது ஜீப்பிலிருந்து திடீரென புகை வந்ததால், அதை சாலையோரம் நிறுத்தி புகையை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குக் காரணம் என்ன? ஜெலட்டின் குச்சிகளையும், டெட்டனேட்டர்களையும் தனித்தனியே எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துச் சென்றதால், அவை ஒன்றோடு ஒன்று உரசி பெரும் விபத்து ஏற்படக் காரணமாக அமைந்துவிட்டது.

Dinamani

செண்டூர் வெடி விபத்து: ஜெ. கூற்றை ஏற்கிறேன் -கருணாநிதி

சென்னை, ஏப். 10: செண்டூர் வெடி விபத்து போன்ற விபத்துகள் அனைத்து ஆட்சிக் காலத்திலும் நடைபெற்றுள்ளன.

அதிமுக ஆட்சியின்போது ரசாயன பொருள் ஏற்றிவந்த லாரி அரசு பஸ்சுடன் மோதி 54 பேர் உயிரிழந்தனர்.

அப்போது இதே பேரவையில் ஜெயலலிதா,

"இயற்கையாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது மனமாச்சரியங்களுக்கு இடம் கொடுக்காமல், பொதுமக்கள் நலன் கருதி அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்,''
என்று குறிப்பிட்டுள்ளார். அக்கூற்றை ஏற்று அதே கருத்தை நானும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கூறினார் கருணாநிதி.

Dinamani

தீவிரவாத செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது - கருணாநிதி

தமிழகத்தில் எந்தவொரு தீவிரவாத அல்லது பிரிவினைவாத நடவடிக்கைகளையும் மாநில அரசு பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்காது என்று முதல் அமைச்சர் கருணாநிதி உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும்விபரங்களுக்கு...

http://content.msn.co.in/Tamil/News/Regional/0704-10-7.htm

ஒரு பெண்ணும் தன்னைக் காதலிக்காததால் சாகசமாக ஒரு தற்கொலை

ஒரு பெண்ணும் தன்னைக் காதலிக்காததால், வெறுப்படைந்த கல்லூரி மாணவர், அரசு பேருந்து மீது வேகமாக மோட்டார் சைக்களில் சென்று மோதி தற்கொலை செய்து கொண்டார். இதில் அரசுப் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.

முழுவிவரம்...

ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது

ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது

சேலம் மாவட்டம் ஏற்காடு வசம்பாடியில் உள்ள எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் 2 மினி லாரி மற்றும் டாடாசுமோ காரில் 35 பேர் கொண்ட கும்பல் வந்து காவலாளி பழனியை சரமாரியாக அடித்து உதைத்து கட்டிப்போட்ட பின்னர் குடோனில் சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக் கப்பட்டு இருந்த உயர்ரக சந்தன கட்டைகளை2 லாரிகளில் ஏற்றி கடத்தினர்.

தகவல் அறிந்து சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர சேகரன் தலைமையில் இன்ஸ் பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணி, மாவட்ட வன அலுவலர் பாரதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கொள்ளை அடிக்கப்பட்ட சந்தன மரக்கட்டைகளுடன் வந்த 2 மினி லாரிகளையும் மடக்கினர். அதை பின்தொடர்ந்து வந்தடாடாசுமோ காரையும் சுற்றி வளைத்தனர். கொள்ளை கும்பலை சேர்ந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேர் தப்பி சென்றுவிட்டனர்.

இடஒதுக்கீடு : மாநில கல்வி அமைச்சர்கள் இன்று ஆலோசனை.

உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது குறித்து டெல்லியில் மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேங்கும் கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மாநில கல்வி அமைச்சகர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கால் துவக்கிவைக்கப்படும் இம்மாநாட்டில், உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்காவில் பஸ்-ட்ரக் மோதல், 20 பேர் மரணம்

கொழும்புவிற்கு தெற்கே 80 கி.மீ தொலைவில் பீர் ஏற்றிச்சென்ற டிரக் ஒன்றும் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் தீப்பிடித்து 20 பேர் மரணமடைந்தனர்; 40 பேருக்கு காயமேற்பட்டது.

மேலும்..Reuters AlertNet -

ச: Girl gets HIV blood at AIIMS, dies

ஒன்பது வயதுச் சிறுமி ஃபைஜான் அனீமியா வியாதிக்காக தில்லியிலுள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் னுமதிக்கப்பட்டாள். அவளுக்கு இரத்த மாற்றுச் சிகிச்சை நடந்தது. அப்போது அவளுக்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தப் பத்து வயதுச் சிறுமிக்கும் எச்.ஐ.வி. தொற்றிக்கொண்டது.

இதனால் ஃபைஜானது தந்தை கோர்ட்டில் நியாயம் கேட்க, தில்லி உயர்நீதிமன்றம் மருத்துவமனையைக் கடுமையாக விமரிசித்ததோடு. ஃபைஜானின் மருத்துவச் செலவு முழுவதையும் அந்த மருத்துவ மனையே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

இது ஒரு தனித்த சம்பவமல்ல. இன்னொரு சம்பவத்தில் HIVயால் பாதிக்கப்பட்ட இரத்தம் கொடுக்கப்பட்டதால் தில்லியிலுள்ள AIIMS மருத்துவமனையில் 17 வயதான ஜோதி என்ற பெண் மரணமடைந்திருக்கிறாள். அவள் டெங்கு ஜுரத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவளுக்கு 20 யூனிட் இரத்தம் (HIV கிருமிகள் கலந்த) கொடுக்கப்பட்டது. ஜோதி நோய் குணமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவள் தனது பரீட்சைகளையும் எழுதி முடித்தாள். ஆனால் மறுபடியும் அவள் நோய் வயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் HIVயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

நிலாச்சாரல்

மேலும்: Two Delhi hospitals under scanner for HIV transmission

-o❢o-

b r e a k i n g   n e w s...