தோழமைக்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து முடிந்தவற்றுக்கு விளக்கமும், ஏற்கத்தக்க கருத்துகளை ஏற்றுக்கொண்டும் செயல்படுவதாக முதலமைச்சர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
இடதுசாரி மார்க்சிஸ்ட் தலைவர் வரதராசனுக்கு பதிலளிக்கும் முகமாக அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் சுயநிதி கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இக்குற்றச்சாட்டை நிவர்த்திக்க, அரசே அதிக அளவில் பொறியியல் கல்லூரிகளை வரும் கல்வியாண்டிலிருந்து தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய முழுமையான அறிக்கையை மாலைமலர் வெளியிட்டுள்ளது.
Tuesday, July 17, 2007
சுயநிதி கல்லூரிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை.
Posted by வாசகன் at 11:58 PM 8 comments
நிர்வாணமாக இயற்கை ஆர்வலர்கள் முகாம் - படம்
கோபன்ஹேகன் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கிர்கே ஹிலிஞ்சில் இயற்கை ஆர்வலர்கள் முகாம் நடக்கிறது. அங்குதான் ஆண்டுதோறும் கூடும் ஆண்களும், பெண்களும் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் கோடையை கொண்டாடுகின்றனர். இதமான வெப்பத்தை அனுபவித்துக் கொண்டே, பீரையும் உள்ளே தள்ளுவார்கள் இவர்கள்..
மேலும் செய்திக்கு "தினகரன்.."
Posted by சிவபாலன் at 11:33 PM 12 comments
கேரளா: நாளை முழுஅடைப்பு
கேரளாவில் (வைரஸ்) நுண்கிருமிக் காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை(புதன்) 12 மணிநேர கடையடைப்பு நடத்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக நுண்கிருமிக் காய்ச்சலால் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 450 பேர் உயிரிழந்தனர். எனினும், மாநில அரசு, காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் போதிய அளவு மருத்துவர்களை நியமிக்கவில்லை. மருந்துகளையும் இருப்பு வைக்கவில்லை. அதனால், மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை, பத்தனம்திட்டா மாவட்டம் தவிர, மாநிலம் முழுதும் 12 மணிநேர கடையடைப்பு நடத்தப்படும். மருந்து கடைகள் மற்றும் சில அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் நிறுவனர் தங்கச்சன் தெரிவித்தார் என்று தினமலர் தெரிவிக்கிறது
Posted by வாசகன் at 10:08 PM 0 comments
மேற்குவங்கம்: பேய் பயத்தால் பள்ளிக்கு விடுமுறை.
மேற்குவங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள குசுமாகரம் என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது.
இங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக வதந்தி நிலவி வந்தது. இந்த நிலையில் மாணவிகள் சிலர் திடீர், திடீரென மயங்கி விழுந்தனர். பேய் பிடித்து விட்டதால் தான் அவர்கள் மயங்கி விழுந்துவிட்டதாக பீதி ஏற்பட்டது.
இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் அப்துல் ரஷீத் பெற்றோர்களை அழைத்துப் பேசி பார்த்தார். இதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் பள்ளிக்கூடத்துக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவித்து விட்டார்.
இப்போது சமூக அமைப்பினர் இதில் தலையிட்டு பெற்றோர்களை அழைத்து பேசி வருகின்றனர். பேய் இருக்கிறது என்பது மூட நம்பிக்கை. விஞ்ஞானப்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அமைதிபடுத்தினார்கள்.
மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்தனர். மயங்கி விழுந்த மாணவிகள் மனநிலை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Posted by வாசகன் at 9:59 PM 0 comments
நார்வே: தங்கி, தூங்கி விழித்து 'ஷாப்பிங்' செய்யலாம்
பொதுவாக எல்லாரும் பொருட்களை வாங்கத்தான் கடைக்குச் செல்வர். ஆனால், நார்வேயில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் வாடிக்கையாளர் தூங்கவும் செய்யலாம்.
ஆம், நார்வேயில் உள்ள பிரபல சர்வதேச ஷாப்பிங் சென்டரான "ஐகியா'வில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கடையிலேயே தூங்குவதற்கு சிறப்பு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன; அதுவும் இலவசமாக. தங்களுக்கு எப்படிப்பட்ட அறைகள் வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே தேர்வும் செய்யலாம். குடும்பத்துடன் வருபவர்களுக்கு ஏற்ற வகையிலும் அறைகள் தரப்படும். அவர்களுக்கு உணவும் வழங்கப்படும்.
ஐகியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ப்ரோடு உல்பஸ்ட் கூறுகையில், ""கோடை விடுமுறையில் மட்டும் எங்கள் கடைக்கு ஒன்பது லட்சம் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். நார்வே நாட்டில் அனைவரையும் கவர்ந்துள்ள "ஹோம்கோல்லன் ஸ்கை ஜம்ப்'புக்கு ஒரு ஆண்டில் வருபவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்,'' என்று கூறினார். நார்வேயில் ஏராளமானோர் "ஐகியா' கடையில் தூங்க தயாராகி வரும் நிலையில், மற்ற கடைகள் இதனை பொறாமையுடன் பார்த்து வருகின்றன.
தினமலர்
Posted by வாசகன் at 9:30 PM 0 comments
ஜப்பான்: மீண்டும் பூகம்பம்;அணுக்கதிர்வீச்சு பீதி
ஜப்பானில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் தாக்கியதால் சேதம் அடைந்த அணு உலையில் இருந்து கதிர்வீச்சு தண்ணீர் கடலில் கலந்ததால் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் நிகாட்டா பகுதியில் நேற்று காலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 6.6 ரிக்டரில் பதிவான இந்த நில நடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. பூகம்பத்தால் காஷிவாசாகி என்ற இடத்தில் ஒரு ரெயில் கவிழ்ந்தது.
இந்த பூகம்பத்தால் தாக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் ஜப்பானின் மேற்கு பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதை யொட்டி கடல் பகுதியில் ஏற்பட்டு இருந்த பூகம்பம் 6.6 ரிக்டரிலும் பதிவானது.
இதிலும் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.
நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 1000-க் கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
முதல்முதலாக ஏற்பட்ட பூகம்பத்தால் காஷிவாசாகியில் உள்ள அணுசக்தி நிலையம் சேதம் அடைந்து தீ பிடித்துக் கொண்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டாலும் அந்த உலையில் இருந்து 1200 லிட்டர் தண்ணீர் கசிந்தது. உலகிலேயே மிகப்பெரிய அணுஉலை இது தான்.
கதிர்வீச்சு தன்மை உள்ள இந்த தண்ணீர் கடலில் திருப்பிவிடப்பட்டது. அணுகதிர்வீச்சு தண்ணீர் கடலில் கலக்கிவிடப்பட்டது. பல மணிநேரம் மக்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை.
கடலில் இந்த நீர் கலந்தது பற்றி தகவல் தெரிந்ததும் அந்த பகுதி முழுவதும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. ஆனால் இதில் ஆபத்து ஏதும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாலைமலர்
Posted by வாசகன் at 9:26 PM 0 comments
அமிலம் ஏற்றிச்சென்ற வாகனத்தில் ஓட்டை: பொதுமக்கள் பீதி
ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றிச் சென்ற சரக்குவாகனத்தின்(லாரி) கொள்கலனில் ஓட்டை விழுந்து அதில் இருந்த அமிலம் சாலையில் கொட்டியதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டடு பீதியடைந்தனர்.
சென்னை அண்ணாநகர் மேற்கு, பாடி குப்பம் சாலையில் ஜி.கே.எம். என்ற பெயரில் தனியார் இராசயன நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு மணலியில் இருந்து "ஹைட்ரோ குளோரிக் அமிலம்' ஏற்றிய கொள்கலனுடனுள்ள சரக்குந்து ஒன்று நேற்று மாலை சென்றது. திருமங்கலம் அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலை வழியாக சென்று பாடி குப்பம் சாலையை அடைந்தது. அப்போது கொள்கலனில் திடீரென்று ஓட்டை விழுந்தது. இதையடுத்து சரக்குவாகனத்தில் இருந்து "அமிலம்' சாலையில் கொட்டத் தொடங்கியது.
இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்களும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் கூச்சல் போட்டனர்.அமிலம் கொட்டியபடியே சென்றதால் அப்பகுதியே புகை மண்டலமாக மாறி நெடி வீசத்துவங்கியது. இருப்பினும் ஓட்டுனர் எங்கும் நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சென்ற இச்சரக்கு வாகனம் இராசயனநிறுவனத்தின் வாசலில் சென்று நின்றது. சிறிது நேரத்தில் அப்பகுதியே அமிலக் குளமாக மாறியது.
இது குறித்து திருமங்கலம் போலீசாருக்கும், ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் குளமாக தேங்கிய அமிலத்தின்(ஆசிட்) மீது தண்ணீரை பீய்ச்சி அதன் தன்மையை குறைக்க முயன்றனர். ஆனால் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் அனைத்தும் தீர்ந்தும் நெடி குறையவில்லை. கடைசியாக அந்நிறுவனத்திற்கு அருகில் உள்ள மணல் விற்பனை கடையில் இருந்து மணல் எடுத்துவரப்பட்டது. அந்த மணல் குளமாக தேங்கியிருந்த அமிலம் மீது கொட்டப்பட்டது. இருப்பினும் பல மணி நேரம் அப்பகுதியில் அமில நெடியும், கண்எரிச்சலும் நீடித்தது.
அப்போது தீடிரென்று பெய்த மழையால் ஓரளவு நெடி தணிந்தது. இது குறித்து இராசயன நிறுவனத்தின் உரிமையாளர்களான கொரட்டூரை சேர்ந்த ராஜேஷ் மற்றும் மதன் ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமலர்
Posted by வாசகன் at 9:16 PM 0 comments
மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியை வேலை இழந்தார்
மறைமலைநகர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளியில் மாணவிகள் இரட்டை ஜடை பின்னல் போட்டுக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மாணவி சுலோசனா(14) என்பவர் சமீபத்தில் ஒரு நாள் ஒரு ஜடை பின்னல் போட்டு வந்துள்ளார்.
இதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ஆசிரியை ஷகீலா, மாணவி சுலோசனாவின் முன் தலை முடியை பிளேடால் வெட்டி வீசினார். இது பற்றி சுலோசனா பெற்றோரிடம் கூறி அழுதார்.
இதையடுத்து சுலோசனா ஆசிரியை ஷகீலா மீது மறை மலைநகர் போலீசில் புகார் கூறினார். இதனால் மாணவி தலைமுடி வெட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதை தொடர்ந்து மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி ராமானுஜம் அரசு பள்ளிக்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், மாணவி சுலோசனா, ஆசிரியை ஷகீலா, சங்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
தகவல் அறிந்த செங்கல்பட்டு எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறு முகம், திருப்பேரூர்எம்.எல்.ஏ. மூர்த்தி, மறைமலைநகர் நகராட்சி தலைவர் சசிகலா மற்றும் மனித உரிமை அமைப் புகள் பள்ளிக்கு வந்து விசா ரணை நடத்தினார்கள். மறை மலை நகர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மோகனும், விசா ரணை நடத்தினார்.
விசாரணையின் போது மாணவி சுலோசனா கூறும் போது:-
நான் பள்ளிக்கு எப் போதுமே இரட்டை ஜடை தான் போட்டு வருவேன். அன்று மட்டும் தான் ஒற்றை ஜடை போட்டு இருந்தேன். இதைப் பார்த்ததும் கோபம் அடைந்த ஆசிரியை ஷகிலா என்னை திட்டினார்.பின்னர் பிளேடால் தலைமுடியை வெட்டினார்.
சிறிது நேரம் கழித்து "நானே எனது தலைமுடியை வெட்டிக் கொண்டதாக என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டார்'' என்றார்.
ஆசிரியை ஷகிலா கூறும் போது, சம்பவத்தன்று நான் அந்த மாணவியைப் பார்க்க வில்லை. மாணவியின் முடி யையும் வெட்டவில்லை. சுலோசனா என் மீது வீண்பழி சுமத்துகிறார்'' என்றார்.
இந்த நிலையில் மாவட்ட முதன்மை அதிகாரி ராமானுஜம் இன்று கூறியதாவது:-
மாணவி சுலோசனாவின் முடியை வெட்டிய ஆசிரியை ஷகீலா பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்டவர். அவரை அக்கழகமானது "டிஸ்மிஸ்'' செய்துள்ளது.
அதே போல இந்த விவ காரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் ராஜேந்திரனை ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுலம் அரசினர் மேல் நிலைப் பள்ளிக்கு இட மாற்றம் செய்துள்ளோம். இதற்கான கடிதம் நேற்று இரவே அவரிடம் வழங்கப்பட்டு
விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்
Posted by வாசகன் at 8:27 PM 0 comments
மதுரைக்கு 286 கோடியில் புதிய இரு திட்டங்கள்
ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புதுப்பித்தல் திட்டத்தின் மாநில அளவிலாக 4-வது ஒப்பளிப்பு கூட்டம் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.286 கோடி மதிப்பிலான 2 திட்டங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.
மதுரையில் பாதாளச் சாக் கடைத்திட்டம் தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 வார்டுகளுக்கு முழு மையாகவும், 22 வார்டு களுக்கு பகுதியாகவும் நிறை வேற்றப்படுகிறது. மேற்படி திட்டத்தில் விடுபட்டுள்ள 22 வார்டுகளுக்கு முழுமையாக பாதாள சாக்கடை திட்டம் அமைக்கவும், நவீன முறையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கவும், மற்றும் பழைய திட்டத்தை மேம்படுத்தவும் ரூ.231.01 கோடிக்கு செயல் படுத்தவும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது.
மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்திய காய்கறி அங்காடியை மாட்டு தாவணி பஸ் நிலையம் அருகில் நவீன முறையில் அமைக்க ரூ.55 கோடியில் செயல்படுத்த உள்ள திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது.
கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறையின் அரசு செயலாளர் தீனபந்து, டுபிட்கோ நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கௌரிசங்கர், திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் சமீர் வியாஸ், வீட்டு வசதி துறை செயலாளர் செல்லமுத்து.நகராட்சி நிர்வாக ஆணை யர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நன்றி: மாலைமலர்
Posted by வாசகன் at 8:23 PM 0 comments
'சதி' தடுப்பு சட்டம் தீவிரப்படுத்தப்படலாம்
கணவன் இறந்தபின் சதி செய்துகொள்ளும் பழக்கத்தை தடை செய்யும் சட்டத்தை தீவிரப்படுத்த அமைச்சர்களின் குழு ஒன்று பரிந்தூரைகளை முன்வைத்துள்ளது. 1987ல் இயற்றப்பட்டது இந்த சட்டம்.
புதிய மாற்றங்களின்படி சதி செய்யத் தூண்டினால் முழு கிராமத்துக்கெதிராக சட்டபூர்வ நட்டவடிக்கை மேற்கொள்ள வகை செய்யப்படும். மேலும் கிராம அதிகாரிகள் சதி நடப்பதை காவல்துறைக்கு தெரிவிக்காமல் போனால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சதி செய்ய முற்படும் பெண்களை குற்றம் செய்பவர்களாகப் பார்க்காமல் பாதிக்கப்பட்டவராகப் பார்க்க வகை செய்யப்படும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது சதி செய்வது நடந்துவருவதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
GoM approves anti -sati law amendments Hindustan Times - 1 hour ago
COUNTER VIEW: Centre mulls changes to make sati law more stringent Times of India
Widow burning: India to get tough Independent Online
Posted by சிறில் அலெக்ஸ் at 8:10 PM 1 comments
பைக்கை இடித்தவரை அடித்துக்கொன்ற இளைஞர்கள்
டில்லியில் ஐந்து இளைஞர்கள் தங்கள் பைக்கை உரசிச்சென்ற கார் ஓட்டுனரோடு சண்டையிட்டு அவரைத்தாக்கி கொன்றனர். இதில் நான்குபேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Road rage claims one life in capital, four held Times of India
Man beaten to death for brushing past motorcycle CNN-IBN
Man stoned to death in Saket area NewKerala.com
Posted by சிறில் அலெக்ஸ் at 8:04 PM 0 comments
பெரியார் படம் - மாணவ மாணவிகள் பார்த்தனர்
ஐந்து ரூபாய் கட்டணத்தில் "பெரியார்" படம் பார்க்க, பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தமிழக அரசு சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. படம் பார்க்க கோவை ராஜா தியேட்டருக்கு இன்று சென்ற செயின்ட் பிரான்சிஸ் பள்ளி மாணவிகள்.
Posted by சிவபாலன் at 7:00 PM 1 comments
அனைத்து சாதியினரும் அச்சகர் ஆகும் பள்ளி - முடக்க குருக்கள் சதி
திருவண்ணாமலை, ஜூலை 17-
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் வகையில், தமிழகத்தின் முக்கிய கோயில்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை, மதுரை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியும், மயிலாப்பூர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் வைணவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த மே 11ம் தேதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. 40 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். மூன்று ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது தமிழ் ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். வேத பாட ஆசிரியரை நியமிக்க பலமுறை முயன்றும் யாரும் பணியில் சேர முன்வரவில்லை. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு வேதபாட ஆசிரியர் மிகவும் அவசியம். ராசிபுரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(82) என்பவர் கடந்த மாதம் வேதபாட ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி மர்ம கும்பலால் ஆசிரியர் ராமகிருஷ்ணன் தாக்கப்பட்டார். தொடர்ந்து இங்கு பணி செய்தால் கொலை செய்துவிடுவதாக மர்ம கும்பல் மிரட்டியது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பணியை ராஜினாமா செய்வதாக ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். அதனால், கோயில் நிர்வாகமும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசின் சிறப்பு திட்டத்தை முடக்க நடக்கும் சதியில் ஈடுபடுகிறவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், வேதபாட ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின்படி, அண்ணாமலையார் கோயிலில் பணிபுரியும் குருக்கள் ஒருவரின் தூண்டுதலால், இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது என போலீசுக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் குருக்களான பி.டி.ரமேஷ், அவரது நண்பர் காந்தி ஆகியோரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
விசாரணை நடந்த தாலுகா போலீஸ் ஸ்டேசன் முன்பு, அண்ணாமலையார் கோயில் குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் அனைவரும் குவிந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு பி.டி.ரமேஷ் குருக்களை போலீசார் விடுவித்தனர்.
பாதிக்கப்பட்ட வேதபாட ஆசிரியர் ராமகிருஷ்ணனிடம் நேற்றிரவு விசாரணை நடத்தப்பட்டது. தன்னை தாக்கியவர்களை அவர் அடையாளம் காட்டினார். அதை தொடர்ந்து இன்று அதிகாலை தி.மலையை சேர்ந்த காந்தி(30), கம்பிராஜா(26), விஜி(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் ஜே.எம். 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னணில் இருநததாக கூறப்படும் அண்ணாமலையார் கோயில் குருக்கள் பி.டி. ரமேஷ் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக தெரிவித்ததால் தி.மலையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர்.
- நன்றி: மாலை முரசு
Posted by சிவபாலன் at 6:36 PM 4 comments
தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நிவர்த்திக்கு புதிய கருவி கண்டுபிடிப்பு
தூங்கும் நிலையிலே மூச்சுத்திணறல் வந்து மயக்கநிலை, சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். இக்குறையை நிவர்த்திக்க அமெரிக்காவில் புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
நன்றிக்கு: தினமலர் செய்தி
Posted by வாசகன் at 1:35 PM 1 comments
கத்தோலிக்க திருச்சபை ரூ.2400கோடி சமரசம்
அமெரிக்காவின் மேற்குப்பகுதியிலிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் மறைமாவட்டம,் பாதிரியார்களால் பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களுக்கு 660 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தந்து சமரசம் செய்துகொண்டுள்ளது. இந்தியமதிப்பில் இது ரூ2400 கோடிகள் ஆகும்.
இந்த சமரசத்தை நீதிபதி இன்று ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தார்.
Judge approves $660M abuse settlement - Yahoo News
Posted by சிறில் அலெக்ஸ் at 1:16 AM 0 comments
உமா நடத்தும் பித்தலாட்ட நாடகம் - "தினமலர்" சட்டபூர்வமாக சந்திக்கும்
தினமலர்' அலுவலக ஊழியர் களுக்கு டெலிபோனில் மிரட்டல் விடுத்து வந்த உமாவை சைபர் கிரைம் போலீசார் பிடித்தனர். அதிலிருந்து தப்பிக்கவே, அபாண்டமாக "தினமலர்' நிர் வாகி மீது புகார் தெரிவித்து வருகிறார் உமா. இவர் நடத்தி வரும் நாடகம் விரைவில் அம்பலமாகி, உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
சன் "டிவி,' தினகரன் நோக்கம் என்ன?பத்திரிகை துறையிலிருந்து வெளியேறிய ஒருவரை, "பெண் நிருபருக்கு செக்ஸ் டார்ச்சர்' என்று தினந்தோறும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருப்பது யார் என்பதும் அவர்களைப் பற்றியும் எல்லாருக்கும் தெரியும்.இவர்களின் பின்னணியில் தான் உமா செயல்பட்டு வருகிறார். தினமலர் இதழை பலவீனப்படுத்த சன் "டிவி' மற்றும் "தினகரன்' என்ற நாளிதழ் பல வகைகளில் இடையூறுகளை செய்து வந்தது. அதில் எல்லாம் அவர்களுக்கு தோல்வியே ஏற்பட்டது
மேலும் செய்திக்கு "தினமலர்.."
Posted by சிவபாலன் at 1:08 AM 8 comments
b r e a k i n g n e w s...