.

Friday, May 4, 2007

இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மனித உரிமைக்கான சர்வதேச விருது

மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான மார்ட்டின் என்னல்ஸ் சர்வதேச விருது இலங்கையைச் சேர்ந்த இரண்டு பல்கலைக்கழக பேராசிரியர்களூக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் இந்த விருதினை புரூண்டியின் முன்னாள் பொலிஸ்காரர் ஒருவரும் பகிர்ந்துகொள்கிறார்.

இலங்கையின் இன மோதலில் இழைக்கப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டுவரும், அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், (யூ.டி.எச்.ஆர், ஜாப்னா) என்ற அமைப்பை நடத்திவரும் பேராசிரியர்கள் ராஜன் ஹுல் மற்றும் பேராசிரியர் கோபாலசிங்கம் சிறிதரன் ஆகிய இருவருக்குமே சர்வதேச மனித உரிமை இயக்கங்கள் இணைந்து வழங்கும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

அம்னெஸ்டி இண்டர்னேஷனல், ஹுயுமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட 11 மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் இந்த மனித உரிமைகள் விருதை, இந்த இலங்கை மனித உரிமையாளர்கள், புருண்டி நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு மனித உரிமை ஆர்வலர் பியர் க்ளேவர் ம்போனிம்ப்பா அவர்களுடன் இணைந்து பெறுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் அமைப்பின் நடுவர்கள் குழுத் தலைவர் ஹான்ஸ் தூலன் அவர்கள், ‘’இந்த மூவரும், ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதே ஆபத்தான ஒரு செயலாக ஆகிவிட்ட, அவர்கள் பணியாற்றும் நாடுகளில், மனித உரிமைகள் இயக்கத்தின் குறியீடாகத் திகழ்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார், இவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் சுதந்திரமாக இயங்க விடுமாறு, இலங்கை மற்றும் புருண்டி அரசுகளுக்கு இந்த விருதினை வழங்கும் 11 மனித உரிமை அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

தமிழோசை

பிஸ்மில்லா கானின் குடும்பத்தினர் உ.பி. தேர்தலைப் புறக்கணிப்பு

வாராணசி, மே 4: மறைந்த ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் குடும்பத்தினர், வியாழக்கிழமை நடந்த உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை 'குடும்பத்தாருக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை விரைவில் நிறைவேற்றவேண்டும்' என்று கோரி புறக்கணித்தனர்.

பிஸ்மில்லா கான் மறைந்தவுடன் அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவி, அவரது பெயரில் கலாசார அகாதெமி, உஸ்தாத் நினைவரங்கம் அமைக்க நிதி என பல்வேறு வாக்குறுதிகள் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டன. அவர் மறைந்து 8 மாதங்கள் ஆன பிறகும் வாக்குறுதிகளில் பல இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்று பிஸ்மில்லா கானின் மகன் நய்யார் ஹுசைன் தெரிவித்தார்.

'குடும்பமே வறுமையில் வாடுகிறது. அதை சமாளிக்க எங்களுக்கு பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு செய்யவேண்டும்' என்றார் ஹுசைன்.

Dinamani

ஆண் குழந்தை பிறக்க மருந்து யோகா குரு ராம்தேவின் நிறுவனம் மீது விசாரணை

டேராடூன், மே 4: பெண்களுக்கு ஆண்குழந்தை பிறக்க வைப்பதற்கான மருந்தை தயாரித்ததாக யோகா குரு ராம்தேவின் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது விசாரணை நடத்த உத்தரகண்ட் மாநில அரசு உத்தரவிட்டது.

மனித மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி மருந்து தயாரிப்பதாக கடந்த ஆண்டு இந்த நிறுவனம் மீது மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.

Dinamani

கக்கனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மே 4: முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் மற்றும் அவரது பேரனுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கனின் மகன் மற்றும் அவரது பேரன் ஆகியோர் வறுமையில் வாடுவதாகவும் அவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இப்பிரச்சினையை தகவல் கோரலாக எடுத்துக் கொள்வதாக ஆவுடையப்பன் அறிவித்தார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கூறியது:

கக்கனின் மகன் நடராசமூர்த்தி உடல்நலமும் மன நலமும் பாதிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக சென்னை மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இன்னொரு மகன் கே. பாக்யநாதன் வறுமையில் வாடுகிறார். அவரது மகன் கண்ணன் வேலையின்றி உள்ளார் என்று ஞானசேகரன் குறிப்பிட்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கக்கனுக்கு பத்மநாபன், பாக்யநாதன், சத்தியநாதன், காசி விஸ்வநாதன், நடராச மூர்த்தி என 5 மகன்களும், கஸ்தூரி என்ற மகளும் இருந்தனர். இவர்களில் பத்மநாபன், காசி விஸ்வநாதன் ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை. மற்றும் சத்தியநாதன் மருத்துவராக பணிபுரிகிறார். மகள் கஸ்தூரி சென்னையில் வசிக்கிறார், அவரது கணவர் அந்தமானில் பொறியாளராக உள்ளார்.

நடராசமூர்த்தி திருமணம் ஆகாதவர். அவர் மனநலம் குன்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், அரசு பராமரிப்பில் உள்ளார். அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு மகனான 62 வயதுடைய பாக்யநாதன் எவ்வித ஆதரவுமின்றி சிரமப்படுகிறார். அவரது மகன் கண்ணன் விவசாயக் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இருவரும் சிரம நிலையில் இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு அக்கறையோடு பரிசீலனை செய்ததில் கண்ணன் தாங்கள் வசிக்கும் கிராமத்திற்கு வெளியே நிலமோ, வீட்டு மனையோ பெற்றுக்கொள்ள தங்களுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். இதைக் கருத்தில் கொண்டு பாக்யநாதன் மற்றும் கண்ணன் ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சம் வங்கியில் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் வட்டியை அவர்களது மாத செலவுக்கு வழங்க வகை செய்யப்படுகிறது. மேலும் அவர்களது உடனடி தேவையை பூர்த்தி செய்து கொள்ள தலா ரூ. 25 ஆயிரம் ரொக்க நிதி வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது என்றார் கருணாநிதி.

ச: பாலியல் தொழிலாளிகளின் வங்கி ரூ. 9கோடி வியாபாரம்

உஷா மல்டி பர்ப்பஸ் கோஆப்பரேட்டிவ் சொசைட்டி(UMCS) எனும் நிதி நிறுவனம் பாலியல் தொழிலாளர்களால் நிறுவப்பட்டது. மேற்கு வங்கத்தில் அது ரூ.9 கோடிக்கு வியாபாரம் செய்து 8500 வாடிக்கையாளர்களைக் கொண்டு புதிய இலக்கை எட்டியுள்ளது.

1995ல் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் துவக்கப்பட்ட இந்த வங்கி நிதி சேவைகளை பாலியல் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக கொல்கொத்தாவின் சோனாக்காச்சி பகுதியுலுள்ளவர்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது.

பாலியல் தொழிலாளர்களிடமிருந்து மொத்தம் கிட்டத்தட்ட ரூ.50,000 தினசரி சேமிப்பில் வைக்கப்படுகிறது எனும் தகவலையும் இந்த வங்கி தந்துள்ளது.

"இன்னும் அதிக கிளைகளை சிவப்பு விளக்கு பகுதியில் ஏற்படுத்தவுள்ளோம்" என வங்கியின் பிரசிடெண்ட்டும் பாலியல் தொழிலாளருமான அமித்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

Bank managed by sex workers makes Rs9 crore
"While conducting a survey at Sonagachhi, it was found that economic insecurity forced sex workers to entertain clients who refused to use protection. Most of the sex workers did not have a savings plan and were often harassed by goons," the NGO Mahasweta, spokesperson said.
Gauri Das, president of the Samity, said, "Initially, it was very difficult to attract customers. But now things have changed. The sex workers open account and take loan for their children."
The bank has sanctioned loans upto Rs 15 lakh, mostly to sex workers, who wanted to start businesses and to fund their children's education.

ச:ஆர்க்குட்டில் அட்டகாசம் - கூகிள் உதவுகிறது

ஆர்க்குட்டில் சட்ட விரோதமான கருத்துப் பரிமாற்றங்களை கட்டுப்படுத்த கூகிள் மும்பை போலீசுக்கு உதவ முன்வந்துள்ளது.

புதிய உடன்படிக்கையின்படி முபை போலீஸ் கண்டிக்கத்தக்க செய்திகளைக் குறித்து கூகிளுக்கு மின்னஞ்சல் செய்து கூகுளிடமிருந்து செய்தியை பதித்தவரின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும். இருப்பினும் இந்திய நீதி மன்றம் ஒன்றில் வழக்கு பதிவு செய்த பின்னரே கூகிள் தகவலை அளிக்கும்.

'இணையத்தில் சுதந்திரம் உள்ளது அனால் நம் சமூகத்தை பாதிக்கும்படி சுதந்திரம் இருக்கக் கூடாது' என மும்பை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கூகிள் பிரேசில் போலிசோடு ஏற்கனவே இப்படி ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருக்கிறது.

Google to help Mumbai police investigate objectionable postings on Orkut

ச: 'போபால் வாயுக்கசிவு - அதிக நிவாரணம் இல்லை'

போபாலில் 1984ல் நடந்த விஷ வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக நிவாரணம் வழங்கப்படமாட்டாது என உச்ச நீதிமன்ற பென்ச் தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிவாரணத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாகத் தரவேண்டி போடப்பட்ட வழக்கில் இரண்டுபேர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது. இருந்தாலும் யாரேனும் இன்னும் நிவாரணம் பெறாமல் இருந்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஏற்கனவே 470 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

'No enhanced compensation for Bhopal victims'

நடால் x ஃபெடரர்

பாதி களிமண் தரை, (ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலுக்கு பரிச்சயமானது) பாதி புல்தரை (ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரருக்கு பரிச்சயமனது). நடாலும், ஃபெடரரும் டென்னிஸ் உலகில் ஜாம்பவான்களாக வலம் வந்தாலும், அவரவர்க்கு சாதகமான மைதானங்களை (கிளை, கிராஸ்) ஒருசேர வடிவமைத்து போட்டியை நடத்திப் பார்ப்போம் எனும் வித்தியாசமான சிந்தனை மலார்கா டென்னிஸ் ஆர்வலர்களுக்கு வந்தது.

அரங்கில் இருந்த 7 ஆயிரம் சீட்டுகளுக்கான டிக்கெட்டுகளும் கண நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. களிமண் தரையில் தொடர்ச்சியாக 72 வெற்றிகளுடன் நடாலும், புல்தரையில் தொடர்ச்சியாக 48 வெற்றிகளுடன் ஃபெடரரும் மோதலுக்குத் தயாரானார்கள். வென்றது களிமண்ணா, புல்லா? விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி களிமண் தரைக்குத்தான். இரண்டரை மணி நேரம் ரசிகர்களுக்கு விருந்தளித்த ஆட்டத்தில் 7-5, 4-6, 7-6(10) என்ற செட் கணக்கில் நடாலுக்கு சாதகமானது முடிவு. அது சரி. இந்த மைதானத்தை தயாரிக்க செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் 8 கோடி ரூபாய். தேவைப்பட்ட நாள்கள் 19.

Dinamani

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் உடல்நிலை கவலைக்கிடம்

தற்போது தில்லி இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துமனையில் புற்றுநோய்க்காக சிகிட்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் உடல்நிலை மோசமடைந்து மிக கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Former PM Chandra Shekhar critically ill

ரூ.450க்கு மடிகணினி: இந்திய மனிதவள அமைச்சு திட்டம்

நூறு டாலர் கணினிதிட்டத்தில் சேர மறுத்த இந்திய அரசு, பத்து டாலருக்குள் மடிக் கணினி தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அரசுத்துறை நிறுவனமான செமிகண்டக்டர் கொம்ப்ளெக்ஸ் இந்த திட்டத்தில் தீவிர ஆர்வம் காட்டுகிறது. வேலூர் தொழிற்நுட்பக் கல்லூரி (VIT) யின் இறுதியாண்டு மாணவரின் வரைவு மற்றும் பெங்களூரூ இந்திய விஞ்ஞானகழக (IISc) ஆய்வாளர் ஒருவரின் வரைவினையும் அடிப்படையாகக் கொண்டு தீட்டப்படும் இந்த திட்டத்தில் தற்போதைய விலை $47 வருகிறது. ஆனால் ஒரு மிலியன் மடிக்கணினிகள் தயாரிக்கும்போது இது விலை குறையும் என மனிதவள அமைச்சு கருதுகிறது.

HRD hopes to make $10 laptops a reality-The Times of India

ச: கேரள சுகாதார அமைச்சர்மீது வழக்கு

கடந்த ஒருமாதத்தில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த 38 குழந்தைகள் சுகாதாரமின்மையால் இறந்த விவகாரத்தில் ( நோக்க:் பத்மா அரவிந்தின் பதிவு) நீதிமன்ற தலையீட்டின்கீழ் இன்று கேரள காவல்துறை மாநில சுகாதார அமைச்சர் பி.கே ஸ்ரீமதி மீதும் மற்றும் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.


மேலும்..

ச: கௌசர் பியின் மரணம்: துப்பு துலங்கியது

மர்மமான முறையில் காணாமல் போன கௌசர்பி யின் வழக்கை புலனாய்ந்து வரும் குஜராத் சிஐடி பிரிவினர் அவர் கொலைசெய்யப் பட்டுபின்னர் எரியூட்டப் பட்டிருப்பதாக அறிகின்றனர். மேற்கொண்டு நடத்தும் ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் எனவும் கூறுகின்றனர்.

இது பற்றி... Hindustan Times

ச: பூப்பந்து விளையாட்டு சர்ச்சை:கோபிசந்த் விளக்கம்

இந்திய பூப்பந்து விளையாட்டு குழுவிற்கும் பூப்பந்து வீரர்களுக்கும் இடையே தேசிய பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி எழுந்துள்ள வேறுபாட்டில் தனது நிலையை விளக்கி பயிற்சியாளரும் முன்னாள் அனைத்து இங்கிலாந்து சாம்பியனுமான கோபிசந்த் பயிற்சிக்கூடங்கள் ஒருவரது ஆட்டதிறமையை மேம்படுத்துவதற்கே என்றும் தொடர்ந்து இடைவெளியின்றி ஆடிவரும் வீரர்களுக்கு போதிய ஓய்வு அவசியம் என்றும் கூறினார். முன்னதாக தேசிய சாம்பியன் சேத்தன் ஆனந்த் உட்பட முன்னணிவீரர்களை சிங்கை,இந்தோனேஷியா சூப்பர் சீரிஸ் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுத்து இந்திய பூப்பந்து சங்கம் (Badminton Association of India) ஆட்டவீரர்களின் கோபத்தை எதிர்கொண்டது.

தொடர்புள்ள சுட்டி: Gopichand staves off charges- Indiatimes Sport

ச:மனித போக்குவரத்து: மற்ற புள்ளிகளின் பெயர்கள் வெளிப்பட்டது

மனிதர்களின் கள்ளக் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப் படும் ஹைதராபாத்தின் இரஷீத் தனது காவல்விசாரணையில் இதில் சம்பந்தப் பட்டிருக்கும் மற்ற பிரபலங்களின் பெயர்களை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. முந்தைய தெலுங்கு தேச மந்திரிகள் கிருஷ்ண யாதவ் மற்றும் ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோரின் பாஸ்போர்ட்டுக்களும் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.


இது பற்றி மேலுமறிய..Zee News - Trafficking scam: Kingpin reveals more names

ச:தமிழக வாலிபர் ஈராக் குண்டு வெடிப்பில் மரணம்

திருச்சியை அடுத்த வரகநேரியைச் சார்ந்த 23 வயது நிரம்பிய இளைஞர் கணேசன் ஈராக்கில் சமையல் வேலை செய்துவந்தார். நேற்று நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி இவர் இறந்துவிட்டதாக இவரது குடும்பத்தார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கணேசனின் பெற்றோர் நேற்று இரவு 9.30 அளவில் அவருடன் தொலைபேசியதாகவும் பின்னர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கணேசனின் உடலை இந்தியா கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Youth dies in bomb blast in Iraq

ச:'கடன்களை மன்னியுங்கள்' - ஈராக் பிரதமர்

ஈராக்கின் பிரதமர் எகிப்ப்தில் நடக்கும் ஈராக் குறித்த மாநாட்டில் பேசுகையில் உலக நாடுகள் ஈராக்கின் புனரமைப்புக்கு உதவும் வகையில் ஈராக்கின் கடன்களை மன்னிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ஈராக்கின் மொத்த கடன் அமெரிக்க டாலர் 50 பில்லியனைத் தொடும், குறிப்பாக சவுதி அரேபியா, குவைத், ரஷ்யா, சைனா போன்ற நாடுகளிடம் ஈராக் கடன் வாங்கியுள்ளது.

Iraqi PM calls on world to forgive his countries debts

ச: Form 16 இனி தேவையில்லை

வருமான வரி கட்டுபவர்கள் இனி Form 16 என வழங்கப்படும் படிவத்தை தங்கள் விண்ணப்பத்தோடு அளிக்கத்தேவையில்லை மாறாக அதிலுள்ள கழிக்கப்பட்ட வரி குறித்த தகவல்களை தந்தாலே போதுமானது. வருமானவரி மற்றும் வட்டி வழியாக வருமானம் மட்டும் உள்ளவர்களுக்கென தனி படிவம்(form ITR1) உருவாக்கப்பட்டுள்ளது வரும் 2007-2008 நிதி ஆண்டில் இது அமலுக்கு வருகிறது.

Form 16 no longer required to be submitted

-o❢o-

b r e a k i n g   n e w s...