அனைத்து இந்திய மருத்துவக் கல்விக் கழகத்தின் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வாறு விலக்கிக் கொள்ளவில்லையெனின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. முன்னதாக தில்லி உயர்நீதிமன்றம் இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு காண அரசிற்கு கெடு விதித்தது. மருத்துவ பட்டச் சான்றிதழ்கள் வழங்கப் படாவிடில் நீதிமன்றம் தலையிடவேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தது. இதனை அடுத்து உலக உடல்நல நிறுவன சந்திப்பொன்றிற்கு பூடான் செல்லவிருந்து உடல்நல அமைச்சர் அன்புமணி தன் பயணத்தை தள்ளிப் போட வேண்டியதாயிற்று. சான்றிதழ்களில் கையொப்பமிட்டிருந்த தாளாலர் மரு.சந்தீப் அகர்வால் நியமனம் செல்லாது என்று அமைச்சர் முன்னதாக கையெழுத்திட மறுத்து வந்தார்.
AIIMS doctors end strike
Thursday, August 30, 2007
மருத்துவர்கள் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது
Posted by
மணியன்
at
3:20 PM
0
comments
Wednesday, August 29, 2007
பிழையான ஆணுறைகள் திரும்ப அழைக்கப்பட்டது
தென்னாப்பிரிக்காவின் உடல்நலத்துறை தாங்கள் விநியோகித்த இருபது மில்லியன் ஆணுறைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. அரசு ஊழியர்களிடமிருந்து தரக்கட்டுப்பாடு பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தார்கள் என்று சலாடெக்ஸ் (Zalatex) மேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் ஐந்து மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
BBC NEWS | Africa | S Africa recalls faulty condoms
Posted by
Boston Bala
at
12:18 AM
6
comments
Monday, August 27, 2007
எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதாகச் செய்தி
பசிபிக் பெருங்கடலிலுள்ள பாப்புவா நியூகினியாத் தீவுகளில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, அவர்களது உறவினர்கள் உயிருடன் புதைப்பதை தாம் கண்டுள்ளதாக சுகாதாரச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார். தங்களுக்கும் எய்ட்ஸ் நோய் பரவிவிடும் என்கிற அச்சத்தின் காரணமாக அவர்கள் இவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை புதைத்து விடுகிறார்கள் என்று மார்கிரெட் மராபே என்னும் அந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
உயிருடன் இருக்கும் மூன்று பேர் புதைக்கப்படுவதை தாம் நேரில் கண்டதாகவும், அங்கு இவ்வாறு செய்யப்படுவது சாதாரண வழக்கம் என்று தம்மிடம் அங்குள்ளவர்கள் கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தெற்கு பசபிக் பகுதியில் பாப்புவா நியூகினியாவில்தான் அதிகபட்சமாக எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள வயதுவந்த மக்களில் இரண்டு சதவீதம் பேர் இந்தத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ் பிபிசி
BBC NEWS | Asia-Pacific | PNG Aids victims 'buried alive'
Posted by
Boston Bala
at
11:05 PM
1 comments
ஜெர்மானிய பெண்ணுக்கு 53 லட்சம் நஷ்டஈடு
11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் கையை இழந்த ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டை சேர்ந்த குந்தா நீயுபர் (Gunda Neubauer) ,53 என்ற பெண் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். பஸ்ஸில் அவர், உதய்பூரில் இருந்து மவுண்ட் அபுவிற்கு சென்ற போது பஸ் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் நீயுபர் தனது வலது கையை இழந்தார்.
இதனால் அவர் ஜெர்மனியில் பார்த்து வந்த வேலையை இழக்க நேரிட்டது. இதனையடுத்து ரூ.11.67 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரி தில்லியில் உள்ள ஜெர்மன் துதரகத்தின் மூலம் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார்.
இதற்கான நஷ்டஈடு தொகையை வழங்குவதற்கு பஸ்சை விபத்துக்குள்ளாக்கிய டிரைவரும், கண்டக்டரும் தான் பொறுப்பு. எனினும் அவர்களுக்கு பதிலாக பஸ் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிறுவனம் அந்த பெண்ணுக்கு ஒரு மாதத்திற்குள் ரூ. 53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
தினமணி
The Hindu News :: German national gets Rs 53 lakhs for loss of limb in accident
Posted by
Boston Bala
at
4:37 AM
1 comments
Sunday, August 26, 2007
ஒரிசாவில் காலரா - 48பேர் பலி
ஒரிசாவின் காலராவிற்கு 48பேர் பலியாகியுள்ளனர். ரயகடா மாவட்டத்தில் 50பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள செய்தித் தாள்கள் கடந்த சில வாரங்களில் 250பேர் இறந்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஆயிரக் கணக்கானோர் காலராவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10நிமடங்களுக்கு ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாகவும் சம்பட் எனும் செய்தித் தாள் தெரிவிக்கிறது. ஆனால் மருத்துவ அதிகாரி சீத்தாராம் இதை மறுத்துள்ளார். மாவட்டத்தின் 26 கிராமங்களில் 48 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் இதில் 16 கிராமங்களை அவர்கள் அணுக இயலவில்லை(inaccessible) என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மத்திய வெள்ளப் பெருக்கில் குடிநீர் ஆதாரங்கலில் காலரா கிருமிகள் பரவியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இறப்பு எண்ணிக்கையை பல்வேறு நாளிதழ்களும் பல்வேறு விதமாய் வெளியிட்டுவருகின்றன.
48 dead in Orissa cholera outbreak Hindustan Times, India
70 die as cholera breaks out in parts of Orissa Times of India, India
80 die of cholera in Orissa Hindu, India
Cholera outbreak kills 58 tribals in Orissa Reuters India, India
Posted by
சிறில் அலெக்ஸ்
at
5:10 PM
0
comments
Saturday, August 25, 2007
எலிக்காய்ச்சலுக்கு குஜராத்தில் 34 பேர் சாவு
தெற்கு குஜராத்தில் கடந்த 2 வாரங்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சூரத், நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் இந்த நோய்க்கு அதிகம் பேர் ஆளாகியுள்ளனர்.
தினமணி
Leptospirosis claims 34 lives in Gujarat
NDTV.com: Leptospirosis outbreak in Surat, Navsari and Valsad
Posted by
Boston Bala
at
2:08 AM
0
comments
Thursday, August 23, 2007
தலையில் விழுந்த சூட்கேஸ்-ரூ.1 லட்சம் நஷ்டஈடு தர ஏர்-இந்தியாவுக்கு உத்தரவு
விமானம் தரையிறங்கும் போது லக்கேஜ் பகுதியில் இருந்து பெட்டி ஒன்று பயணியின் தலையில் விழுந்ததற்காக அவருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு கொடுக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம், 7 வருடங்களுக்கு பின்பு தற்போது உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் தலையில் பெட்டி விழுந்ததற்கு இதுவரை ரூ.45,000 செலவழித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
விமானத்திற்குள் பயணிகள் எடுத்து செல்லும் ஹேண்ட் லக்கேஜ் 5 கிலோவுக்குள் இருக்குமாறு விமான நிறுவனங்கள் பார்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இது மாதிரியான அசம்பாவிதங்கள் நிகழ்வதை தவிர்க்கமுடியும் என்று அறிவுரை கூறி தீர்ப்பளித்தனர்.
தட்ஸ்தமிழ்: Passenger to get 'damage' money from Air-India
Posted by
Boston Bala
at
9:11 PM
1 comments
Wednesday, August 22, 2007
சீனாவின் ஏற்றுமதிகள் குறித்து தொடர்ந்து கவலைகள்
சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களின் தரம் குறித்த கவலைகள் தற்போது அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கும் பரவியுள்ளன. சீனாவில் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகளில், அதிக அளவு ஃபார்மால்டிஹைட் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆராயும் புலனாய்வு தற்போது நியூசிலாந்தில் துவங்கியுள்ளது.
துணி பூஞ்ஞைக்காளானால் பாதிக்கப்படாமல் இருக்க இந்த ரசாயனப் பொருள் உதவுகிறது. இருந்தும் இது தோலிலும், கண்ணிலும், தொண்டையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொம்மைகள், டயர்கள், உணவுப் பொருட்கள், பற்பசைகள் போன்ற பொருட்களால் உடலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் குறித்த அச்சங்களைத் தொடர்ந்து தற்போது இந்தப் பிரச்சனை வந்துள்ளது.
இது போன்ற அச்சங்கள், வர்த்தக பாதுகாப்புக்கான புதிய உத்தி என்று சீனா வர்ணித்திருப்பது முற்றிலும் தவறானது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் பீட்டர் மெண்டல்சன் கூறியுள்ளார்.
தமிழ் பிபிசி
China reports quality problems with U.S. soybean imports - International Herald Tribune
Chinese-made blankets recalled over formaldehyde content in Australia, New Zealand - International Herald Tribune
FT.com / In depth - Poison clothes add to China export scares
Posted by
Boston Bala
at
9:25 PM
0
comments
பெங்களூருவில் டெங்கு சுரம்
கடந்த ஜூலை மாதத்தில் 26 பேரும் இந்த மாதத்தில் இதுவரை ஏழுபேரும் பாதிக்கப்பட்டிருக்கும்நிலையில் எம் எஸ் இராமையா நினைவு மருத்துவமனையினர் பெங்களூருன் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்் 'டெங்கு' விஷ சுரம் பரவிவருவதாக கருதுகின்றனர். இதனை BBMP மறுத்துள்ளது.
Dengue on the rise in Bangalore-Bangalore-Cities-The Times of India
Posted by
மணியன்
at
4:14 PM
0
comments
Wednesday, August 8, 2007
'நொறுக்குத் தீனி' விளம்பரங்களுக்குத் தடை: அன்புமணி யோசனை
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் திண் பண்டங்கள் (நொறுக்குத் தீனி) மற்றும் சில குளிர்பானங்கள் ஆகியவற்றின் விளம்பரங்களைத் தடை செய்வதற்கு கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி யோசனை தெரிவித்தார்.
இந்த விஷயம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பி.ஆர்.தாஸ்முன்ஷியுடன் விரைவில் பேச உள்ளதாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
திண்பண்டங்கள் தவிர வாசனை திரவியங்கள் குறிப்பாக முகப்பூச்சுக்கான கிரீம்கள் தொடர்பான விளம்பரங்கள் தொடர்பாகவும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
தினமணி
Chennai Online News Service - Anbumani seeks policy on junk food ads
Posted by
Boston Bala
at
9:56 PM
0
comments
Tuesday, August 7, 2007
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தொற்று நோய்களால் அபாயம்
தெற்காசியாவில் சமீபத்தில் பெய்த அடைமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, அடுத்த சில நாட்களில் அவசரகால உதவிகள் கிடைக்காவிட்டால், பல லட்சக்கணக்கான மக்கள் மலேரியா, டெங்குக் காய்ச்சல் போன்ற பல விதமான நோய்களால் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள பல கிராமங்கள், மிகப் பெரிய சுகாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக இந்தியாவில் இருக்கும் ஐ நா சபையின் குழந்தைகள் நிதியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்திய மாநிலமான பீஹாரில் மட்டும், நிவாரணப் பணிகளைச் செய்வதற்கு மேலும் பல ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதாகவும், வயிற்றுப்போக்கை தடுக்கக்கூடிய வாய்வழி திரவ மருந்துப் பாக்கெட்டுகள் குறைந்தது பத்து லட்சம் தேவை என்றும் ஐ நா சபை தெரிவித்துள்ளது.
வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் வெள்ளத்தின் உயரம் குறையத் துவங்கியிருந்தாலும், பல லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து மேடான பகுதிகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
தமிழ் பிபிசி
U.N. sees health crisis risk from South Asia floods | Top News | Reuters
Monsoon health crisis 'days away' - Weather - MSNBC.com
South Asian Flood Death Toll Hits 311
India, Nepal bicker over cause of flood
Posted by
Boston Bala
at
10:54 PM
0
comments
Tuesday, July 17, 2007
கேரளா: நாளை முழுஅடைப்பு
கேரளாவில் (வைரஸ்) நுண்கிருமிக் காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை(புதன்) 12 மணிநேர கடையடைப்பு நடத்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக நுண்கிருமிக் காய்ச்சலால் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 450 பேர் உயிரிழந்தனர். எனினும், மாநில அரசு, காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் போதிய அளவு மருத்துவர்களை நியமிக்கவில்லை. மருந்துகளையும் இருப்பு வைக்கவில்லை. அதனால், மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை, பத்தனம்திட்டா மாவட்டம் தவிர, மாநிலம் முழுதும் 12 மணிநேர கடையடைப்பு நடத்தப்படும். மருந்து கடைகள் மற்றும் சில அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் நிறுவனர் தங்கச்சன் தெரிவித்தார் என்று தினமலர் தெரிவிக்கிறது
Posted by
வாசகன்
at
10:08 PM
0
comments
தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நிவர்த்திக்கு புதிய கருவி கண்டுபிடிப்பு
தூங்கும் நிலையிலே மூச்சுத்திணறல் வந்து மயக்கநிலை, சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். இக்குறையை நிவர்த்திக்க அமெரிக்காவில் புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
நன்றிக்கு: தினமலர் செய்தி
Posted by
வாசகன்
at
1:35 PM
1 comments
Monday, July 16, 2007
இந்தியாவில் ரூ.121 கோடி வயாகரா மாத்திரை விற்பனை
வயாகரா மாத்திரை இந்தியாவில் 2003ம் ஆண்டு முதன் முதலில் விற்பனைக்கு வந்தது. அந்த ஆண்டு ரூ.57 கோடிக்கு விற் பனை ஆனது.
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.115 கோடிக்கு விற்பனை ஆனது. கடந்த மே மாதம் வரையில் 12 மாதத்தில் ரூ.121 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது.
மாலைமலர்
Posted by
Boston Bala
at
10:07 PM
1 comments
Sunday, July 15, 2007
சண்டிகர்: இனி புகைத்தல் பகைக்கும்.
சண்டிகர் நகரம் இந்தியாவின் முதல் புகைத்தல் தடை நகரமாக இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுஇடங்களில் புகைப்பது தடை செய்யப்படுகிறது
மேலும் படிக்க:
ஒருமாதத்திற்கு முன்பே 'சற்றுமுன்' இது பற்றி செய்தி அளித்திருந்தது நினைவிருக்கலாம்
Posted by
வாசகன்
at
11:35 PM
0
comments
Friday, July 13, 2007
இந்தியாவில் கருக்கலைப்பைக் கடுமையாக்கும் பிரேரணை
இந்தியாவில் எந்தவொரு கருவுற்ற பெண்ணும், அவர் கருக்கலைப்புச் செய்து கொள்ள விரும்பும் பட்சத்தில், அரசாங்கத்திடம் பதிவு செய்து கருக்கலைப்புக்கான அனுமதியைப் பெற வேண்டும் என்று இந்திய அரசாங்க அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஆண் குழந்தைகளைப் பெறுவதற்கே முன்னுரிமை வழங்கப்படும் விவகாரம், மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருக்கின்ற இந்தியாவில், கருவில் இருப்பது பெண் என்று அறியும் பட்சத்தில் அதனை கருக்கலைப்புச் செய்வதை இது மேலும் சிரமமாக்கும் என்று, இந்தியாவின் பெண்கள் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறுகிறார்.
பிறப்பதற்கு முன்னதாகவே சிசுவின் பாலினத்தை தெரிந்துகொள்வதற்கான சோதனை மற்றும் பால் தெரிவிற்காக கருக்கலைப்புச் செய்வது ஆகியன இந்தியாவில் சட்டவிரோதமானவையாகும்.
ஆனால் கருவில் இருப்பது பெண் சிசு என்று தெரிந்துகொண்டு அதனைக் கலைப்பது மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவற்றை தடுக்க முடியாத நிலையில் இந்திய அரசாங்கம் இருக்கிறது.
- BBC Tamil
BBC NEWS | South Asia | 'Indian register' for pregnancies: "An Indian minister has proposed that all pregnant women register with the government and seek its permission if they wish to undergo an abortion."
India to register pregnancies to fight feticide | Lifestyle | Reuters: "'We cannot give elementary health services in a satisfactory way to most of our citizens, and to talk about registering pregnancies is ridiculous'"
Posted by
Boston Bala
at
10:54 PM
1 comments
Tuesday, July 10, 2007
சர்க்கரைநோயிற்கு பூசணி சிறந்த மருந்து: சீனா

சீன ஆய்வாளர்களின் கூற்றுப்படி பூசணியில் உள்ள வேதிப்பொருள்கள் சர்க்கரைநோய்காரர்களுக்கு அவர்கள் உட்கொள்ளும் இன்சுலின் அளவை குறைக்கவும் எடுத்துக்கொள்ளாமலே இருக்கவும்் செய்யும் குணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முழு விவரத்திற்கு...Pumpkins may make insulin history- Hindustan Times
Posted by
மணியன்
at
1:25 PM
0
comments
Saturday, July 7, 2007
இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய கணக்கெடுப்பின்படி குறைவு
இந்தியாவில் எய்ட்ஸ் அல்லது ஹெச் ஐ வியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கையினை விட பாதியாக இருக்கிறது என இந்தியா கூறியுள்ளது. ஐ.நா மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், இருபது லட்சம் முதல் 31 லட்சம் பேர் வரையில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக ஐம்பது லட்சம் பேர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. திறம்பட்ட வகையில் தகவல் திரட்டப்பட்டதால் இந்த வித்தியாசம் அறியப்பட்டிருப்பதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக எய்ட்ஸால் பாதிக்கப்பட்டபவர்களின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பீட்டு வருவதாக இந்தியா மீது குற்றம் சுமத்தப்பட்டது. புதிய கணக்கெடுப்பின்படி, தென்னாப்பரிக்கா, நைஜிரியாவிற்கு அடுத்தப்படியாக எய்ட்ஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கிறது.
- BBC Tamil
VOA News - India's AIDS Cases Less Than Half of Previous Estimates
Posted by
Boston Bala
at
12:14 AM
0
comments
Monday, June 18, 2007
ரத்தம் தேவையா? உதவுது வெப்சைட்.
முக்கியமான ஆபரேசன், விபத்து போன்ற நேரங்களில் ரத்தம் தேவைப்படும்போது, அது கிடைக்காமல் பலரும் தடுமாறுவது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு உதவுகிறது ஒரு
இணையதளம்.www.indianblooddonors.comஎன்ற அந்த இணையதளத்தில், நமக்கு என்ன குரூப் ரத்தம் தேவை என பதிவு செய்தால் போதும். உடனடியாக ரத்த தானம் செய்ய விரும்புபவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் நோயாளியின் இருப்பிடம் தேடி வருவார்கள். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.எந்த பகுதியாக இருந்தாலும் சரி, எவ்வளவு அரிய குரூப் ரத்தம் தேவைப்பட்டாலும் சரி... தகவல் கிடைத்த 30 நிமிடத்தில் ரத்த தானம் செய்வோர் வருவார்கள் என்கிறார் இந்த இணையதளத்தை நடத்தும் குஷ்ரூ போச்சா. நாக்பூரை சேர்ந்த இவர் 2000ம் ஆண்டில் இந்த இணையதளத்தை தொடங்கினார்.இந்த இணையதளத்தில் ரத்த தானம் செய்ய விரும்பும் 45 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும் இதில் யார் வேண்டுமானாலும் தங்கள் பெயர், ரத்த குரூப், தொலைபேசி எண் போன்ற விவரங்களை தந்து பதிவு செய்து கொள்ளலாம்.யாராவது ரத்தம் தேவை என இந்த இணைய தளத்தை தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகே உள்ள ரத்த தான விரும்பிகளுக்கு தகவல் தரப்படும். அவர்கள் உடனே நோயாளியின் இருப்பிடத்துக்கு சென்று ரத்தம் தருவார்கள். யார் வரப் போகிறார்கள் என்ற விவரம், நோயாளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.
Posted by
Adirai Media
at
10:30 AM
0
comments
Wednesday, June 13, 2007
சிக்குன் குனியா:மருந்து கடைகளுக்கு எச்சரிக்கை.
சிக்குன் குனியா நோய் தடுப்பு மருந்து என்று தனியார் மருந்துக் கடைகளில் எவரேனும் தன்னிச்சை யாக மருந்து, மாத்திரைகளை விநியோகித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எச்சரித்துள்ளார். சிக்குன் குனியா நோய் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.தலைமைச் செயலாளர் திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜன், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் தீனபந்து உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது: தமிழ்நாட்டில் சிக்குன் குனியா நோய் இல்லை. ஆயினும், இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோய் தடுப்பு மருந்து, மாத்திரை உள்ளது. வருகிற 23 மற்றும் 24 ஆகிய இரண்டு தேதிகளில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த இரு நாட்களும் எல்லா பகுதிகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். தமிழ்நாட்டை ஒட்டியுள்ள வெளி மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு சிக்குன் குனியா நோய் அறிகுறி இருந்தால் அருகில் உள்ளமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு முழுவதுமாக நோய் நீங்கி குணமான பிறகுதான் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பப் படுவார்கள். இதற்கு போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் எல்லையோர பகுதிகளில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிக்குன் குனியா நோய் கொசுக்களை ஒழிப்பதற்கு கம்பூசியா என்ற மீன்கள் பயன்படுகிறது என்று அறியப்பட்டு இருப்பதால் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் இந்தவகை மீன்களை வளர்த்து கொசுக்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிக்குன் குனியா நோய் தடுப்பு மருந்து என்று தனியார் மருந்து கடைகளில் எவரேனும் தன்னிச்சையாக மருந்து, மாத்திரைகளை விநியோகித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி என்ற கிராமத்தில் இறந்தவர் இந்த நோய் தாக்கி இறக்கவில்லை. மூச்சுதிணறல் காரணமாக இறந்தார் என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Posted by
Adirai Media
at
7:19 PM
0
comments
b r e a k i n g n e w s...

