.

Tuesday, February 27, 2007

நாக்பூரில் தொடரும் விவசாயி தற்கொலைகள்

நாக்பூர்: மகாராஸ்ட்ராவில் விதர்பா என்னுமிடத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே 11 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இறந்த 11பேருடன் சேர்த்து பிப்ரவரியில் மொத்தம் 70 பேரும் சனவரியில் 70 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

வங்கி கடன் திரும்பத் தர இயலாததால் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

தினமலர்

Views and Analyses
FRONTLINE/WORLD . Rough Cut . Seeds of Suicide PBS
India’s Farmers Bear Brunt of Globalization The Progressive
BBC NEWS South Asia Indian farmer suicide toll rises
DNA - India - One suicide every 8 hours - Daily News & Analysis

ராஜ்யசபாவில் இனி தமிழ் ஒலிக்காது?

ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்கள் யாருமே இனி தமிழில் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை இருந்த ஒரே மொழிபெயர்ப்பாளர் நாகசாமி விருப்ப ஓய்வுபெற்று சென்றுவிட்டார்.

வேலைப்பழு அதிகமாயிருப்பதாகவும் தனக்குத் துணையாக வேறு மொழிபெயர்ப்பாளர்களையும் நியமிக்க வேண்டும் எனவும் நாகசாமி கடந்த 20 ஆணுகளாக கேட்டுவந்துள்ளார். அவர் ராஜினாமா கடிதம் தந்து 4 மாதங்களாகியும் புதிய மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை.

தினமலர்

புற்று நோய் நிவாரணம் - ஆயுள் காப்பீடு திட்டம்

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்ஷ்யூரன்° புற்றுநோய் நிவாரணத்துக்காக ஒரு விரிவான திட்டத்தை அர்ப்பணித்துள்ளது.


இந்த திட்டத்தின் பெயர் "கேன்சர் கேர்", இது ஆண்கள், பெண்கள் இருவரில் யாரையும் பாதிக்கக் கூடிய புற்று நோய் பிரச்சினைகளின் தேவைகளுகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒப்பற்ற அம்சம் இது புற்று நோய் என்ற நிலையைக் கண்டறியும்போதே பணம் அளிக்க ஆரம்பிக்கிறது என்பதே. இதனால் நோயாளி மற்றும் அவரது / அவளது குடும்பத்தார் நோய்க்கான சிகிச்சைக்கு நிதி உதவியை அது குணமாகும்வரை பெற உதவுகிறது.

மேலும் விபரங்களுக்கு..

வெப் உலகம் , ICICI Prudential

உகாண்டாவில் மீண்டும் உள்நாட்டுப் போர்?

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வேண்டுமானால் 'Last King of Scotland'க்கு கிடைத்திருக்கலாம். நாளையோடு ஒப்பந்தம் முடிவுக்கு வரும் தருணத்தில், Lord's Resistance Army போராளிக்குழு, அமைதி ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்துள்ளது. அதிகாரப் பகிர்வில் பேச்சுவார்த்தை முன்னேறாத நிலையில், இராணுவத்திற்கும் எல்.ஆர்.ஏ.விற்கும் மீண்டும் போர் மூளலாம்.

மேலும்: Blow to Uganda peace process : Mail & Guardian Online

உற்பத்தியும் விலைவாசியும் ஏறுமுகம் - Economic Survey

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நாட்டின் பொருளாதார ஆய்வு வேளாண்மை தவிர்த்து பலதுறைகளிலும் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளதையும்் அதே சமயம் பணவீக்கம் அதிகரித்திருப்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி

புலிகள் தாக்குதலில் அமெரிக்க, இத்தாலிய தூதர்கள் காயம்

பத்திகோலா பகுதியை பார்வையிட வந்த பன்னாட்டு தூதர்கள் குழுவினரின் ஹெலிகாப்டர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலிய தூதர்கள் காயமடைந்தனர். அவர்களுடன் ஏழு இலங்கை இராணுவத்தினரும் காயமடைந்தனர். கூட பயணித்த கனாடிய,பிரென்ச் மற்றும் ஆங்கில தூதர்கள் காயமெதுவும் இன்றி தப்பினர்.

புலிகளின் சார்பில் ராசையா இளந்திரையன் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடுத்த அறிக்கையில் வெளிநாட்டு தூதர்களின் பயணவிவரம் தங்களுக்கு இலங்கை அரசு அளிக்காததே தவறுதலுக்குக் காரணம் என்றார்.


மேல் விவரங்களுக்கு..

பியர் விலை ஏறப் போகிறது

பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலகம் ஆயத்தமாவதில், ஓரிரு குறைகளும் உண்டு. முன்பு பார்லியைப் பயிரிட்டவர்கள் இப்பொழுது சோளம், சோயா விதைப்பதற்கு மாறிவிட்டார்கள்.

1866-க்குப் பிறகு தற்போதுதான் இவ்வளவு குறைவான அறுவடையின் காரணமாக, கடந்த வருடத்தில் மட்டும் வாற் கோதுமையின் விலை 85% உயர்ந்திருக்கிறது. பியரின் விலையை நிர்ணயிப்பதில் பார்லிக்கு எட்டு சதவிகிதம் இடம் இருக்கிறது.

மேலும்: FT.com / MARKETS / Commodities - Blow for beer as biofuels clean out barley

கோவையில் Maharaja World Theme Park

கோவை நீலம்பூரில் மஹாராஜா வேர்ல்டு தீம் பார்க் நேற்று திறந்துவைக்கப்பட்டது.




நடிகர் சூர்யா திறந்து வைத்தார். அருகில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தீம் பார்க் சேர்மன் பரமசிவம், நிர்வாக இயக்குநர் சத்தியமூர்த்தி, பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவாராயர் உட்பட பலர் உள்ளனர்.

The Hindu , The Hindu - Business Line ,

ஆப்கானிஸ்தானில் டிக் செனியை கொல்ல முயற்சி

அமெரிக்க துணை அதிபர் ஆப்கானிஸ்தான் பயணத்தின்போது அவரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.

செனி காயமின்றி தப்பினார். 3 படை வீரர்கள் உயிரிழந்தனர்.


Cheney OK After Afghan Blast; 14 Killed
Afghan Attack Leaves at Least 3 Dead, Cheney Unhurt (Update2)
Cheney targeted in Afghan blast
Cheney Ok After Explosion In Afghanistan
CIA presents Mush evidence

Google News

பஞ்சாப், உத்தராஞ்சல் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது

பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் அகாலிதளம்-பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. உத்தராஞ்சல் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளது..

பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 76 சதவீத ஓட்டுகள் பதிவாயின.இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சிரோன்மணி அகாலி தளம் பாரதிய ஜனதா கூட்டணி 68 இடங்களிலும், காங்கிரஸ் 43 இடங்களிலும் இதர கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது . இதனையடுத்து 4 வ து முறையாக பஞ்சாப்பின் முதல்வராகிறார் சிரோன்மணி அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல். மேலும் , அமிர்தசரஸ் லோக்சபா இடைத் தேர்தலில் பா.ஜ., கட்சியின் நவ்ஜோத் சித்து வெற்றி பெற்றார்.

உத்தராஞ்சலில் 69 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 55 சதவீதம் முதல் 60 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இதில் 36 இடங்களில் பாரதிய ஜனதாவும் 20 இடங்களில் காங்கிரசும், பிறகட்சிகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு என்.டி.திவாரி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்கிறது .இதனையடுத்து அம்மாநிலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சி. கந்தூரி முதல்வராக தேர்வுசெய்யப்படலாம் என தெரிகிறது.

மேலும்...

தமிழர்களுக்கு சம உரிமை இலங்கைக்கு ஜெ. கோரிக்கை

சிங்கள மொழி பேசுகிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை தலைமுறை தலைமுறையாக இருக்கும் தமிழர்களுக்கும் உண்டு என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழர் பிரச்னை 40 ஆண்டு காலமாக லால்பகதூர் சாஸ்திரி - சிரிமாவோ பண்டாரநாயகே ஒப்பந்தத்துக்கு முன்பே இருந்து வருகிறது.

இதற்கிடையில், இலங்கையில் இருந்து தமிழர் பகுதிகளை விடுவித்து தனி ஈழம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிஎல்ஓடி, டிஈஎல்ஓ, ஈபிஆர்எல்எப், ஈஆர்ஓஎஸ், ஈஎன்எல்எப் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய போராட்டக் குழுக்கள் உருவாயின. ஆனால், ஒற்றுமையில்லாததால் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் போராடிக் கொண்டிருக்கிற சூழ்நிலை உருவானது.

இலங்கை தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில் இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு அந்த பிரச்னையை தீர்க்க வேண்டும். புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்ற ஒரு சிலரின் கருத்தை அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை.

- தினகரன்

ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது : ஜெ.

ரயில்வே பட்ஜெட் எல்லா தரப்பிலும் ஏமாற்றம் அளிக்கிறது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


* ஏழைகளுக்கென எந்த சிறப்புத் திட்டமும் இல்லை

* தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான மின்மயமாக்கல், இரட்டை ரயில் பாதை போன்ற கோரிக்கைகள் நிலுவையில்தான் உள்ளது

* இரண்டாம் வகுப்பு மற்றும, பொது வகுப்பு கட்டணத்தை குறிப்பிட்ட அளவு குறைத்திருக்க வேண்டும்.

* மொத்தத்தில் ஏழைகளுக்கு பாதகமான பட்ஜெட்




YAHOO INDIA - TAMIL

குட்ரோச்சி குழப்பம்

குட்ரோச்சி கைதாகி பின் பெயிலில் விடுதலை செய்யப்பட்டிருப்பது வரையிலான திருப்பங்கள், செய்திகள் மற்றும் அலசல்கள்.

Google News

'க்ரீமி லேயரை தெரிந்தெடுப்பது கடினம்': தமிழக அரசு

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கொன்றிற்கு பதிலளிக்கையில் தமிழக அரசு சார்பில் க்ரீமி லேயரை தெரிந்தெடுப்பது கடினம் என்றும் இதற்கு சரியான ஃபார்முலா எதுவும் இல்லை எனவும், இதனால் க்ரீமி லேயருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை தவிர்க்க இயலாது எனவும் வாதாடப் பட்டது.

TN govt. opposes exclusion of creamy layer for quota: The Hindu

ஷில்பாவை திட்டியவர் இந்தியா வருகை

'பிக் ப்ரதர்' நிகழ்சியில் ஷில்பாவை இழிவாய் பேசிய ஜேட் குடி(Jade Goody) 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

Hindustan Times.

'பாக்கிஸ்தான் அல் கொய்தாவை ஒடுக்க உதவவேண்டும்': டிக் சேனி

அமெரிக்க துணை அதிபர் டிக் சேனி பாக்கிஸ்தான் அதிபரை சந்தித்து பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் அல் கொய்தா மீண்டும் வளர்ந்துவருவதாக வரும் செய்திகளைக் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
'பாக்கிஸ்தான் அல் கொய்தாவை அடக்கவேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Google News 600+ articles

சற்றுமுன்னின் 100வது பதிவு.

சங்கரராமன் கொலை வழக்கு - மார்ச் 20க்கு ஒத்திவைப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 13 பேர் மட்டுமே ஆஜரானார்கள்.

ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இன்று ஆஜராகவில்லை.


MSN INDIA - TAMIL்

-o❢o-

b r e a k i n g   n e w s...