தொடர்ந்த மழையினால் நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஜஸ்வந்த் சாகர்அணை இன்று விரிசல் ஏற்பட்டு உடைந்தது. இதனால் சுற்றுபுறத்தில் உள்ள 39 கிராமங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் வேலையில் உதவ இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. ஜெய்பூர்-ஜோத்பூர் சாலை போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
மேல் விவரங்களுக்கு...Mass evacuation as Rajasthan dam breaches- Hindustan Times
Saturday, July 7, 2007
இராஜஸ்தானில் அணை உடைந்து வெள்ளம்
Posted by மணியன் at 7:10 PM 0 comments
சிவகாசி வெடி விபத்தில் ஒருவர் பலி.
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். இன்னொரு ஊழியர் படுகாயமடைந்தார். சிவகாசி அருகே வடமல்லாபுரம் என்ற இடத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று காலை வெடிமருந்துக் கலவையை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் சேதமடைந்தது. விபத்தில் அமல்ராஜ் என்ற ஊழியர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். பைரவன் என்பவர் படுகாயமடைந்தார். கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Posted by Adirai Media at 3:24 PM 0 comments
ஓணத்திற்காக அதிக விமானசேவைகள் வேண்டும்: கேரளா
எதிர்வரும் ஓணம் பண்டிக்கைக்கு தங்கள் மாநிலத்திலிருந்து வளைகுடாநாடுகளுக்கு அதிக விமானசேவைகளை இயக்க வேண்டும் என்றும் பயணக்கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் நடுவண் அரசை வற்புறுத்தியிருப்பதாக மாநில முதல்வர் அச்சுதானந்தன் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் கூறினார்.
The Hindu News Update Service
Posted by மணியன் at 2:13 PM 0 comments
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீர்மட்டம் கர்நாடக ஆறுகளில் பெருகிவரும் அதிகப்படி நீர்வரத்தால் உய்ர்ந்து வருகிறது. இன்று காலை 120 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் 82 அடியாக இருந்தது.
The Hindu News Update Service
Posted by மணியன் at 2:08 PM 0 comments
இந்தியா ஆயுதப்போட்டியில் இறங்காது:பிரதமர்
பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவன (DRDO) விருதுகளை பாதுகாப்பு விஞ்ஞானிகளுக்கும் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சியின் பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா உலக நாடுகள சமூகத்தில்் ஒரு பொறுப்புள்ள உறுப்பினர் என்றும் நிலையான விதிகளை மதிக்கும் உலக அமைப்பு அமைவதில் பங்கேற்போம் என்றும் கூறினார். நமது அண்டை நாடுகளுடன் அமைதியும் வளமையும் கொண்ட சூழலை நமது பாதுகாப்பிற்கான முக்கிய அடிப்படையாகக் கருதுகிறோம் அவர்களுடன் போட்டிபோட்டு ஆயுதங்களை அதிகரிக்க மாட்டோம் எனவும் அவர் கூறினார்.
The அவரது முழுமையான பேச்சிற்கு....Hindu News Update Service
Posted by மணியன் at 1:35 PM 1 comments
முதல்வர் கருணாநிதி மூன்று நாள் பயணமாக பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
முதல்வர் கருணாநிதி மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் தனது மகள் செல்வி வீட்டில் தங்கியிருப்பார். ஓய்வெடுப்பதற்காக மகள் வீட்டுக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைமலை நகரில் டாஃபே நிறுவன விழாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் பங்கேற்றார். அங்கிருந்து திரும்புகையில் சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். மாலை 6.30 மணிக்கு அலையன்ஸ் ஏர் விமானம் மூலம் அவர் பெங்களூருக்குப் பயணமானார். முதல்வருடன் அவரது மனைவி தயாளு அம்மாள், முதல்வரின் மருத்துவர் கோபால், 2 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு தனிச் செயலர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர். அதே விமானத்தில் பொதுப்பணி மற்றம் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனும் தனி டிக்கெட் மூலம் பெங்களூருக்குச் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை, முதல்வர் சென்னை திரும்பக் கூடும். கடந்த ஆண்டு முதல்வராக பதவியேற்ற பிறகு ஒருவார காலம் பெங்களூர் சென்று ஓய்வெடுத்துத் திரும்பினார். அதற்குப் பிறகு தற்போது அவர் பெங்களூரு சென்றுள்ளார். முதல்வரின் தனிப்பட்ட பயணம் என்பதால், பயண விவரம் மற்றும் அவரது சந்திப்புகள் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
Posted by Adirai Media at 11:05 AM 0 comments
உலகின் 7 புதிய அதிசயங்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது.
Posted by Adirai Media at 10:55 AM 0 comments
ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு: ஜீவஜோதி கடத்தல் வழக்கு
நாகப்பட்டினம், ஜூலை 7: ஜீவஜோதி கடத்தல் வழக்கில் சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணைக்காக ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் நாகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர்.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கணவரை இழந்த ஜீவஜோதி, நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடியில் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 7.7.2003 -ம் தேதி ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் தேத்தாகுடிக்கு வந்து சாந்தகுமார் கொலை வழக்கில் தங்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு ஜீவஜோதியை வற்புறுத்தியுள்ளனர்.
ஜீவஜோதி மறுத்ததால் அவரை கடத்திச் செல்ல முயற்சித்தனர். தடுக்க முற்பட்ட கிராம மக்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதுடன் தாக்குதலிலும் ஈடுபட்டனர். தன்னை கடத்திச் சென்று கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதி புகார் மனு அளித்தார். கொலைமுயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தங்கராஜ் இந்த வழக்கை கொலைமுயற்சி பிரிவுக்குப் பதிலாக கொலை மிரட்டல் பிரிவாக மாற்றி விசாரணை மேற்கொண்டார்.
இதனை அரசு தரப்பில் ஆட்சேபித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொலைமுயற்சி பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் இந்த வழக்கு கடந்த ஏப். 27 -ம் தேதி நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நீதிபதி ரவீந்திரன் உத்தரவின் பேரில் இந்த வழக்கை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சேதுமாதவன் விசாரித்து வருகிறார்.
வரும் 23 -ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளதாகவும் அன்றைய தினத்தில் இருந்து சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் நீதிபதி சேதுமாதவன் அறிவித்தார்.
தினமணி
Posted by Boston Bala at 4:50 AM 0 comments
லெனின் தங்கப்பாவுக்கு சிற்பி இலக்கிய விருது
சிற்பி அறக்கட்டளையின் தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்தி:
கடந்த 12 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் இயங்கி வரும் இந்த அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் அளித்து வருகிறது. 2007-ம் ஆண்டுக்கான கவிதை இலக்கிய விருது ம.இ. லெனின் தங்கப்பாவுக்கு வழங்கப்படுகிறது.
'உயிர்ப்பின் அதிர்வுகள்' என்னும் அவருடைய நூல் விருதுக்கு உரியதெனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாவலர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர் என பல்துறை வல்லுநராகப் புதுவையில் பணியாற்றி வருபவர் தங்கப்பா. தமிழ் நலம், சுற்றுச் சூழல் மேம்பாடு, இளைஞர்களிடம் விழிப்புணர்வு முதலிய கொள்கைகளைப் பேணுவதும் வளர்ப்பதும் இவர் வாழ்வுப்பணி.
கவிஞர் சிற்பி கவிதைச் சிறப்புப் பரிசுக்கு கவிஞர் உமாமகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருடைய 'கற்பாவை' என்னும் நூல் பரிசு பெறுகிறது. பெண் கவிஞர்களில் ஒரு தனித்த பார்வையும் நடையும் இவருக்கு உண்டு.
ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கொண்டது இலக்கிய விருது. ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கொண்டது கவிதைச் சிறப்புப் பரிசு. பரிசளிப்பு விழா ஜூலை 29-ல் பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.
தினமணி
Posted by Boston Bala at 4:48 AM 0 comments
உ.பி. பேரவையில் பெரியார் பற்றி விவாதம்
உத்தரப்பிரதேச சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பெரியார் குறித்து விவாதம் நடைபெற்றது.
'பெரியார் பற்றி பட்ஜெட் உரையில் மாயாவதி குறிப்பிட்டிருக்கிறார்; பிராமணர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் பெரியார். அவரைத் துணை கொள்வது உத்தரப்பிரதேச மாநில பிராமணர்களின் நலனுக்கு ஆபத்தாக முடியும்' என்று எச்சரித்தார் லால்ஜி தாண்டன் (பாஜக).
'நாட்டின் தென் பகுதியில் பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதையே தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர் பெரியார். அவர் தீவிர பிராமண எதிர்ப்பாளர். பட்ஜெட் உரையில் பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர், நாராயண குரு, சாஹுஜி மகராஜ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறுவதில் ஆட்சேபம் இல்லை. இந்த விஷயத்தில் மாயாவதி தனது நிலை என்ன என்று விளக்க வேண்டும். உத்தரப்பிரதேச மாநில பிராமணர்கள் மாயாவதியை நம்பி வாக்களித்திருக்கிறார்கள்' என்றார் தாண்டன்.
மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ராகேஷ் தர் திரிபாடி இதை வன்மையாக ஆட்சேபித்தார். 'பிராமணர்களை பகுஜன் சமாஜ் கட்சி கௌரவப்படுத்தியிருப்பதால்தான் ஆளுங்கட்சியின் முதல் வரிசையில் இப்போது அமர்ந்திருக்கிறேன்' என்று அவர் சுட்டிக்காட்டினார். 'பாரதீய ஜனதாதான் பிராமண எதிர்ப்புக் கட்சி, அது உத்தரப்பிரதேசத்தில் இதுவரை எந்த பிராமணரையும் முதலமைச்சராகத் தேர்வு செய்ததே இல்லை' என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பிராமணர்களைத் தனது அரசியல் நோக்கத்துக்காகத்தான் பகுஜன் சமாஜ் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர அவர்களை உண்மையில் கௌரவப்படுத்த அல்ல என்று சுநீல் சர்மா (பாஜக) குறிப்பிட்டார். தலித் தலைவர்களுக்கு மாயாவதி மரியாதை தந்து பெருமைப்படுத்துவதைப் போல, பகுஜன் சமாஜ் கட்சியின் பிராமண உறுப்பினர்களும் தங்களுடைய சமூகத் தலைவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தினமணி
Posted by Boston Bala at 4:34 AM 0 comments
ஐ.மு.கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சி பிரதிபாவுக்கு ஆதரவளிக்க மறுப்பு
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள அலி மஜ்லிஸ் இட்டாஹூதுல் முஸ்லிமின் கட்சி, குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபாவுக்கு ஆதரவாக வாக்களிக்காது என வியாழக்கிழமை இரவு அறிவித்துள்ளது.
இக்கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு எம்பியின் வாக்கு உள்ளது. சமீபத்தில் பர்தா அணியும் முறை குறித்து பிரதிபா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பில் பங்கேற்பது இல்லை எனவும் அது அறிவித்துள்ளது.
டி.ஆர்.எஸ். புறக்கணிப்பு: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
தினமணி
All India Majilis-E-Itihadul Muslimeen (AIMIM), Telangana Rashtra Samiti (TRS) stay away from Patil's meet
Posted by Boston Bala at 4:28 AM 0 comments
பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடினார் பாஸ்வான்
பாட்னா, ஜூலை 7: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தனது 60-வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக வியாழக்கிழமை இரவு கொண்டாடினார். பிறந்தநாள் விருந்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Paswan Celebrates 61st Birthday - Patna Daily News
Posted by Boston Bala at 4:23 AM 0 comments
மருத்துவ கல்லூரிகளில் 300 மாணவர்கள் சேர்க்கைக்கு தடை வராது: கருணாநிதி அறிவிப்பு
முதல்- அமைச்சர் கருணாநிதி அளித்த கேள்வி பதில் விவரம் வருமாறு:-
கேள்வி :-"கட்சி பலத்தை ஊரறியக் காட்டி முண்டா தட்டுவதற்காக ஊர்வலம், பேரணி என்று நடத்தி போக்கு வரத்தை மூச்சுத் திணற வைத்து, கட்சித் தொண்டர்களையும், கட்சிக்கே சம்பந்தமில்லாத பொது ஜனங்களையும் ஒரு சேர மண்டை காய வைக்கிற தலைவர்கள் இனியாவது யோசிக்கலாமே!''என்று சென் னையில் நடைபெற்ற மகளிர் பேரணி பற்றி பா. சீனி வாசன் "விகடன்'' இதழில் தலையங்கம் தீட்டியுள்ளாரே?
பதில்:-அறுபது ஆண்டுக் காலசுதந்திரத்தில் முதன் முதலாக ஒரு பெண்மணி "ஜனாதிபதி'' பதவிக்கு வரப் போவதை முன்னிட்டு, தமிழ் நாட்டுத் தாய்க்குலம் நடத்திய பேரணியைப் பற்றி விகடன் சீனு; இப்படி எழுதி யிருக்கிறார். இந்தப் பேரணி யாவது மாலை 4 மணிக்கு நடந்தது.
தி.மு.க. ஆட்சியில் உலகத் தமிழ் மாநாட்டை முதன் முதலாக அண்ணா நடத்திய போது இந்த சீனுவின் பாட்டனார் எஸ்.எஸ். வாசன் முன் நின்று, பகல் 12 மணிக்கு அவ்வளவு பெரிய ஊர்வ லத்தை ஆரம்பித்து ஒத்திகை பார்த்து நடத்தினாரே; அப் போது லட்சக்கணக்கான மக்களின் மண்டைகளையும் வெயிலில் காய வைக்கும் அளவிற்கு -நமது பண்டையப் பெருமைகளைச் சொல்லும் பவனி நடத்தவில்லையாப இப்போதாவது மாலை வெயில்; மனிதருக்கு மருந்து போன்றது!
தம்பி சீனு; விநாயக சதுர்த் தியன்று சென்னை வீதிகளில் செல்லும் ஊர்வலங்களைப் பார்த்ததில்லை போலும்! தற்போது நடைபெற்ற பவனி கூட, சாலையில் ஒரு பக்கத் தில் வழி விட்டு அதுவும் மிகச் சிறிய தூரம் செல்வதற்கு மட்டுமே நடத்தப்பட்ட ஒன்றா கும். அதுவும் மாலை 5 மணி அளவில் ஆரம்பித்து 7.15 மணி அளவில் முடிந்து விட்டது. அதற்காக அந்த வார இதழில் முதல் பக்கத்தில் "வெயிலோடு போராடி, வியர்வை யில் நீராடி'' என்றெல் லாம் தலைப்பிட்டு அந்தப் பதிப்பாளர் இந்த எதிர்ப்பினை முழக்கியிருக்கிறார்.
கே:-ஜெயலலிதா நேற் றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. அரசின் அலட்சிய போக்கினால் தமிழ் நாட்டில் இந்த ஆண்டு மட் டும் 300 மருத்துவர்கள் உருவாவது தடை பட்டு விட்டதாகக் கூறி யிருக்கிறாரே?
ப:-ஜெயலலிதாவின் நேற்றைய அறிக்கைக்கு, நேற்றைய தினமே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் விரிவாக பதில் அளித்துள்ளார். தமிழ் நாட் டில் மூன்று அரசு மருத் துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிதாக 300 மாணவர் களைச் சேர்க்க மத்திய அரசு நிறுவனம் தடை செய்துள்ளதாக ஏடுகளில் செய்தி வந்தவுடன், அந்தத் துறையின் அமைச்சரை நான் அழைத்து உடனடியாக டெல்லி சென்று அங்கே அந்தத் துறையின் அமைச்சர் அன்புமணி ராமதாசிடம் விளக்கங்களை அளித்து மீண்டும் அதற் கான அனுமதியினை பெற்று வருமாறு தெரிவிக் கப்பட் டுள்ளது. அவரும் உடனடியாக டெல்லி சென்று, அமைச்சரிடம் விளக்கங்களை அளித்து சாதகமான பதிலைப் பெற்று வந்துள்ளார். எனவே இந்த ஆண்டு 300 மாணவர்களின் சேர்க்கை தடை பட்டு விடும் என்ற ஜெயலலிதாவின் கனவு பலிக்காது.
அது மாத்திரமல்ல, இப்படிப் பட்ட நேர்வுகள் கடந்த கால ஜெயலலிதா ஆட்சியிலும் எந்தெந்த ஆண்டுகளில் இவ் வாறு மத்திய அரசு நிறு வனத்திடமிருந்து அனுமதி மறுக்கப் பட்டன என்பதையும் ஆதாரத்தோடு ஏடுகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆட்சிக் காலத்திலே நடந் ததை அப்படியே மறந்து விட்டு, இந்த ஆட்சியில் தான் இப்படி நடைபெற்ற விட்டது போல கருதிக் கொண்டு, ஜெயலலிதா அவசர அவசரமாக அறிக்கை விடுத்துள்ளார்.
கே:-கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழையி னால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. இந்த அணை யிலிருந்து தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி வைத்து கர்நாடக துணை முதல்வர் எத்திïரப்பா உத்தரவிட்டுள்ளதாக ஏடு களில் செய்தி வந்துள்ளதே?
ப :-அந்தச் செய்தி உண்மை யானதாக இருக்கக் கூடாது.
அப்படி உண்மையாக இருக்குமேயானால் ஒரு மாநிலத்தின் துணை முதல் வர் அரசியல் சட்டத்தின்மீது கொண்டிருக்கும் மதிப்பை யும் கூட்டாட்சி தத்துவத் தில் அவருக்குள்ள நம்பிக்கை யையும் வெளிப் படுத்துவதாக இருக்காது.
கூட்டாட்சித் தத்துவத்திற்கு குழி தோண்டும் செயலாகவே ஆகிவிடும். இப்போதே மேட்டூர் அணை இன்னும் திறக்கப் படாத நிலைமை உள்ளது. எனவே இதிலே மத் திய அரசும், பிரதமரும் உடன டியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
கே:-கூட்டுறவு தேர்தலில் மாவட்டங்களில் ஆங்காங்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளனவே?
ப:-கூட்டுறவு தேர்தல்கள் அரசியல் அடிப்படையில் நடைபெறக் கூடாது என்ற எண்ணம் கொண்டதும் அதை செயல்படுத்துவதும் தான் அரசின் நடைமுறையாகும். இந்த அரசு. எனவே தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை யில் கழகத்தினர் ஜனநாயக மரபுகளை கடைப்பிடிக்க வேண்டு மென்றும், ஆங்காங்கு தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி, இரு தரப்பி னருக்கும் உள்ள வாய்ப் புகளின் அடிப்படையில் போட்டியிடுவது நல்லது என்றும் அதிலே ஏதாவது பிரச் சினைகள் இருக்கு மேயானால் அந்தந்த கட்சி களின் தலைமையோடு தொடர்பு கொண்டு பேசித் தீர்த் துக் கொள்ள முன் வர வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஏனென்றால் இந்தக் கூட்டுறவுத் தேர்தலைப் பயன் படுத்தி தோழமைக் கட்சிகள் இடையே பிரச்சினைகள் வராதா என்று எதிர்க்கட்சிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கே:-தமிழகத்திலே மாலை நேர நீதி மன்றங்கள் தொடங்கப் பட்டிருப்பது பற்றி?
ப :- வரவேற்கப்படவேண் டிய ஒன்றாகும். வழக்குகள் தேங்கு வதைத் தவிர்ப்பதற்காக சென்னை உட்பட ஆறு மாநகராட்சிகளில் பதினோரு மாலை நேர நீதி மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குஜ ராத் மாநிலத்திற்கு அடுத்த படியாக தமிழகத்திலே தான் இத்தகைய மாலை நேர நீதி மன்றங்கள் தொடங்கப்படு கின்றன.
கே:-தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும் என்றும், பொன்னான எதிர் காலம் காத்துக் கொண்டி ருக்கிறது என்றும் ஜெயலலிதா அறிக்கை விட்டிருப்பது பற்றி?
ப:-ஓடிக் கொண்டிருக்கும் கட்சித் தொண்டர்களை பிடித்து நிறுத்துவதற்கு வேறு வழி?
கே:-ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியக் குடியரசு தலைவர் பொறுப் புக்கு போட்டியிடும் பிரதீபா பட்டீல் குறித்து தொடர்ந்து எதிர் அணியினர் குற்றச் சாட்டுகளை சுமத்திக் கொண் டிருக்கிறார்களே?
ப:-உச்ச நீதி மன்றத்திலேயே வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் பிரதீபா பட் டில் மீது ஊழல் புகார்கள் உள்ளன என்றும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய தேர் தல் ஆணையத்திற்கு உத்தர விட வேண்டுமென்றும் கோரி வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கு உச்ச நீதி மன்ற நீதிபதிகள் பாலசுப்ர மணியம், தருண் சாட்டர்ஜி ஆகியோர் முன்பு விசார ணைக்கு வந்து, பிரதீபா அம்மையார் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்கள்.
அதற்குப் பிறகும் எதிர் தரப்பினர் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொண்டிருப்பதற்குக்கார ணம், அரசியல்தான்.
கே:-சேலத்தில் புதிதாக ரெயில்வே கோட்டம் அமைப் பது பற்றி தெற்கு ரயில்வே பொது மேலாளர் முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருகிறாரேப சேலத்தில் கோட்டம் அமைப்பதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதையும் ரெயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை என்றும் தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் அதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சொல்லியிருக்கிறாரே?
ப:-இதைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு மத்திய ரெயில்வே இணை அமைச்சர் வேலு திட்டவட்டமாக பதில் அளித் திருக்கிறார். அந்தப் பதிலில் "சேலம் கோட்டம் ஏற் கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று, இதற்கான எல்லைகளும் தீர் மானிக்கப்பட்டு விட்டன.
ரெயில்வே வாரியத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளில் ஒருவர், ரெயில்வே வாரிய முடிவுகள் குறித்து எதுவும் கூற முடியாது. அதுவும் வரும் 18ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள அவர், ஏன் இப்படி முரண்பாடாக பேசுகிறார் எனத் தெரியவில்லை. சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு தமிழக அரசு முழு ஆதர வளித்துள்ளது. இது தொடர் பாக தமிழக அரசு கேரள முதல்வருடன் பேச வேண் டிய அவசியமில்லை. திட்ட மிட்டபடி ஆகஸ்ட் மாதம் துவக்க விழா நடைபெறும்'' என்று தெரிவித்திருக்கிறார். எனவே சேலம் கோட்டம் அமைவது பற்றி நாம் எந்த ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை.
மாலைமலர்
Posted by Boston Bala at 2:20 AM 1 comments
இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய கணக்கெடுப்பின்படி குறைவு
இந்தியாவில் எய்ட்ஸ் அல்லது ஹெச் ஐ வியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கையினை விட பாதியாக இருக்கிறது என இந்தியா கூறியுள்ளது. ஐ.நா மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், இருபது லட்சம் முதல் 31 லட்சம் பேர் வரையில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக ஐம்பது லட்சம் பேர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. திறம்பட்ட வகையில் தகவல் திரட்டப்பட்டதால் இந்த வித்தியாசம் அறியப்பட்டிருப்பதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக எய்ட்ஸால் பாதிக்கப்பட்டபவர்களின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பீட்டு வருவதாக இந்தியா மீது குற்றம் சுமத்தப்பட்டது. புதிய கணக்கெடுப்பின்படி, தென்னாப்பரிக்கா, நைஜிரியாவிற்கு அடுத்தப்படியாக எய்ட்ஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கிறது.
- BBC Tamil
VOA News - India's AIDS Cases Less Than Half of Previous Estimates
Posted by Boston Bala at 12:14 AM 0 comments
இருவகையான எரிப்பொருளில் ஒடும் கார்களை உற்பத்திச் செய்யப் போவதாக இரான் அறிவிப்பு
பெட்ரோலில் ஓடும் கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்தப் போவதாகவும், அதற்குப் பதிலாக இரு வகையான எரிபொருட்களில் ஓடும் கார்களை, அதாவது எரிவாயுவிலும் ஓடும் கார்களை அதிகமாகத் தயாரிக்கப் போவதாக எவரும் எதிர்பாராதபடி இரான் அறிவித்துள்ளது. இன்னமும் இரு வாரங்களில், பெட்ரோலில் ஓடும் கார்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என்று அந்த நாட்டின் தொழில்வள அமைச்சர் அறிவித்துள்ளார்.
இவற்றுக்குப் போதுமான எரிவாயுவைத் தயாரிக்கவோ அல்லது எரிவாயுவை நிரப்பும் நிலையங்களுக்கு அவற்றை விநியோகிக்கவோ தேவையான உட்கட்டமைப்பு இருக்கிறதா என்பது தெளிவாகவில்லை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு வாரத்துக்கு முன்னர்தான் இரான் பெட்ரோலை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்க ஆரம்பித்தது.
- BBC Tamil
1. BBC NEWS | Middle East | Iran ends petrol-only car making
2. Iran, Low on Gasoline, to Be Supplied by Venezuela - New York Times
3. Iran: 80 Fuel Riot Suspects Arrested - washingtonpost.com
4. Oil rich and gasoline poor
5. Qatar :: Sanctions hurting oil industry: Iran
Posted by Boston Bala at 12:05 AM 0 comments
b r e a k i n g n e w s...