கேரள மாநில திருச்சூரில் இன்று நடந்த பூரம் திருவிழாவில் திரண்டிருந்த யானைகளில் ஒன்று முரண்டுபிடித்து ஓடியதால் மக்கள் கூட்டம் மிரண்டு இங்குமங்கும் ஓடினர். 'இளஞ்சிதாரா' மேளம் வாசிக்கும் போது உன்னிக்கிருஷ்ணன் என்ற யானை தனது இரும்புசங்கிலியிலிருந்து தப்பி ஓடியதை கண்ட அஞ்சிய மக்கள் பின்னர் அது அடக்கப் பட்டபிறகு மீண்டும் கூடி பூரத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 'குடை மாற்றம்' நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
DNA - India - Elephant turns violent at Thrissur pooram - Daily News & Analysis
Friday, April 27, 2007
திருச்சூர் பூரத்தில் ஆனை மிரண்டது
Posted by
மணியன்
at
6:25 PM
0
comments
Monday, April 9, 2007
அரசியின் ஆலய தரிசனம்
இந்தியாவில் பிரபலமான விஷ்ணு ஆலயங்களில் ஒன்று பூரி ஜனன்நாதர் ஆலயம். ஒரிசா மாநிலத்தில் இது அமைந்துள்ளது. இன்று அந்த ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரு முக்கிய நிகழ்வுக்காகக் கூடினார்கள்.
அதாவது, பூரியின் மகாராணியார் தனது வாழ் நாளில் அந்த ஆலயத்துக்கு பிரத்தியேகமாக ஒரு தடவைதான் விஜயம் செய்ய முடியுமாம். அந்த தினம் இன்று; அதற்காகத்தான் பக்தர்கள் எல்லாம் இன்று அங்கு கூடியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்துக்கு பல லட்சக் கணக்கான இந்துக்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். ஆனால் பூரி ராஜகுடும்ப வழமைப் படி மகாராணியார், தனது வாழ் நாளில் ஒரு தடவை மாத்திரந்தான் அந்த ஆலயத்துக்குச் செல்ல முடியும்.
இந்த ஜகன்நாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 200 மீற்றர்கள் தூரத்தில் உள்ள தனது மாளிகையில்தான், பூரியின் மகாராணியான லீலாவதி பட்டமஹாதேவி கடந்த மூன்று தசாப்தமாக வாழ்ந்து வருகிறார்.
ஆனால் இன்றுவரை அவர் அந்த ஆலயத்தில் காலடி வைத்தது கிடையாது.
மகாராணியும், பூரியின் மஹாராஜாவான கஜபதி திவ்யசிங் தேவ் அவர்களும், இன்று, 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயத்துக்கு விஜயம் செய்யும் போது, அவர்களுடன் இந்தியாவெங்கிலும் இருந்து வந்த இரண்டு டஜன் அரச குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்து கொள்வார்கள்.
கோயிலுக்குள் சென்றவுடன் மஹாராஜா ராணிக்கு ஒரு பட்டுச் சேலையைச் தலையைச் சுற்றிவிட, அதன் பின்னர் அங்கு ஒரு சிறுவயதான அர்ச்சகர் மற்றும் ஒரு திருமணமான பிராமண குலப் பெண் ஆகியோரின் உதவியுடன் மஹாராணியார் அங்கு விளக்கை ஏற்றி வழிபாடு செய்வார் என்று கோயில் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பர்தா அணிந்த மஹாராணியின் இந்த விஜயத்தின் போது பொதுமக்கள் பார்வையில் அவர் படக் கூடாது என்பதற்காக, அவர் அங்கு விஜயம் செய்த 3 மணி நேரத்துக்கு, அந்த ஆலயம் பொதுமக்களுக்கு மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினார்கள்.
ஏனைய அர்ச்சகர்களுக்கும் அப்போது அங்கு அனுமதி கிடையாது.
கடைசி மஹாராணி ஜகன்னாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்தது 1966 ஆம் ஆண்டாம்.
BBC-Tamil
Posted by
Boston Bala
at
3:26 AM
2
comments
Wednesday, March 28, 2007
சற்றுமுன்:இராம நவமி கொண்டாடிய இஸ்லாமியர்கள்
ஒரிசாவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இராம நவமியை கொண்டாடினர். இராமரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இராம நவமி விழழ அமைந்துள்ளது. இதில் இஸ்லாமியர் பலர் இந்துக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து விழாவில் பங்கெடுத்துள்ளனர்.
Muslims celebrate Ram Navami in Orrisa
Posted by
சிறில் அலெக்ஸ்
at
8:18 PM
0
comments
Saturday, March 3, 2007
இன்று ஆற்றுக்கால் அம்மன் பொங்கலா கொண்டாட்டம்
திருவனந்தபுரத்திலிருக்கும் ஆற்றுக்கால் பகவதி கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து கும்பிட்டனர். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு மாசிமகம் அன்று ஒரே நாளில் இலட்சக்கணக்கானவர் வருகை தருவது ஆண்டுதோறும் நிகழும் நிகழ்ச்சியாகும். கோவிலிலிருந்து 5 கி.மீ தூரத்திற்கு கேரளாவிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் பெண்கள் வரிசையாக அரிசியும் வெல்லமும் கலந்து பொங்கல் பொங்குவது அருமையானக் காட்சியாகும். சென்ற வருடம் அதிகமான பெண்கள் குழுமிய விழாவாக கின்னஸ் சாதனை படைத்தது. இதுபற்றிய NDTV.com - News
Posted by
மணியன்
at
7:31 PM
2
comments
b r e a k i n g n e w s...
