பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் சென்ற விமானத்தை குறிவைத்து நடந்த ராக்கெட் தாக்குதலில், அவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப், இன்று ராவல்பிண்டியில் உள்ள விமான நிலையத்திலிருந்து பலுச்சிஸ்தான் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காக விமானம் ஒன்றிள் புறப்பட்டு சென்றார்.
அவரது விமானம் பறக்க தொடங்கிய சில விநாடிகளில், அவரது விமானத்தை குறிவைத்து அவரது விமானத்தை குறிவைத்து ராக்கெட் மட்டுமல்லாது விமான எதிர்ப்பு துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடைபெற்றதாகவும்,இத்தாக்குதல் விமான ஓடு தளத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த தாக்குதல் விமானத்தை எட்டமுடியாமல் தப்பித்தார். இந்த செய்தியை இராணுவம் மறுத்தபோதிலும் அதிகாரியொருவர் இதனை தனிமையில் உறுதி செய்தார்.
இஸ்லாமாபாத்தின் லால்மசூதியில் தஞ்சம் அடைந்துள்ள மதகுருவும் அவரது ஆதரவாளர்களும் தாங்கள் இறந்தாலும் இறப்போம் ஆனால் சரண் அடையமாட்டோம் என சூளுரைத்துள்ளனர்.அவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
Shots fired at Pakistani leader; mosque siege drags on - Yahoo! India News
Friday, July 6, 2007
முஷாரப்பைக் கொல்ல முயற்சி
Posted by மணியன் at 7:03 PM 0 comments
திருவள்ளூரில் ரயில் பயணிகள் திடீர் மறியல்!
சென்னையில் இருந்து புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் புறநகர் பயணிகள் ரயில் நேரம் மாற்றப்பட்டதால் அரக்கோணம் மற்றும் திருவள்ளூரில் இன்று பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து மதியம் 12:30 மணி வரை பாதித்தது. ரயில்களின் நேரம் மாற்றப்பட்டதை ரத்து செய்து விட்டு, பழையபடியே இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். இந்த மறியல் காரணமாக சென்னையில் இருந்து காலையில் புறப்பட வேண்டிய ரயில்கள் புறப்பட முடியாமல் போனது. ஏலகிரி மற்றும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted by Adirai Media at 3:14 PM 0 comments
மருத்துவக் கல்வி இடங்கள் குறைப்பு: அதிமுக போராட்டம் நடத்தும்
மாநிலத்தில் மருத்துவக் கல்விக்கான மொத்த இடங்களில் தமிழக அரசின் மெத்தனப் போக்கால் 300 இடங்கள் குறையுமாறு தேனி, கன்னியாகுமரி, வேலூர் மருத்துவக்கல்லூரிகளுக்கு தகுந்த அளவில் பேராசிரியர்கள் இல்லை என இந்திய மருத்துவக் கழக அங்கீகாரம் மறுக்கப் பட்டிருப்பதாக எதிர்கட்சி அதிமுக தலைவர் ஜெயலலிதா கூறினார். இன்று வெளியிட்ட அவரது அறிக்கையில் அதிமுக அந்த மூன்று மருத்துவக்கல்லூரிகளின் முன் ஆர்பாட்டம் நடத்தும் எனவும் இதில் மாணவ சமுதாயத்தினர் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுவதாகவும்் குறிப்பிட்டுள்ளார்.
The Hindu News Update Service
Posted by மணியன் at 2:39 PM 0 comments
சுற்றுலா வளர்க்க ஹெலிகாப்டர் சேவை:தமிழக அரசு பரிசீலனை
முக்கிய சுற்றுலாத்தலங்களான ஊட்டி,இராமேஸ்வரம்,கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு கோவை,மதுரை நகரங்களிலிருந்து ஹெலிகாப்டர் சேவை நடத்த சுற்றுலாத் துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் புதனன்று தனது துறை அதிகாரிகளுடன் விவாதித்ததாக அரசுக்குறிப்பு கூறுகிறது.
The Hindu News Update Service
Posted by மணியன் at 12:30 PM 0 comments
லண்டன் கார் குண்டு சம்பவம்:குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை.
லண்டன் கார் குண்டு சம்பவம் தொடர்பாக பெங்களூரை சேர்ந்த சபீல் அகமது என்ற டாக்டர் மற்றும் அவரது சகோதரர் கபில் அகமது ஆகியோர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஆஸ்திரேலிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரில் உள்ள டாக்டரின் குடும்பத்தினரிடம் பெங்களூர் போலீசார் இன்று காலை 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் விசாரணை விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.
Posted by Adirai Media at 12:25 PM 0 comments
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தீவிராவதி முத்திரை குத்தக்கூடாது - பிரதமர்
எந்த ஒரு சமூகத்தையும், நாட்டையும் தீவிரவாத முத்திரை குத்திப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். லண்டன், கிளாஸ்கோ தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்து அரசுக்கு இந்தியா முழு உதவிகளையும் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். லண்டன், கிளாஸ்கோ தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனைத் தொடர்பு கொண்டு மன்மோகன் சிங் பேசினார். அப்போது, இதுதொடர்பான விசாரணையில் இந்தியா முழு உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்கும் என்று உறுதியளித்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்த ஒரு சமூகத்தையும், நாட்டையும் தீவிரவாத முத்திரை குத்திப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது, பல சிக்கல்களை அது உருவாக்கி விடும். எந்த ஒரு சமூகத்தையும், நாட்டையும் தீவிரவாத முத்திரை குத்திப் பார்ப்பது தவறானதாகும். முஸ்லீம்கள், முஸ்லீம் அல்லாதவர்கள் என்று நாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. தீவிரவாதி, தீவிரவாதிதான். அவனுக்கு எந்த மதமும் கிடையாது, நாடும் கிடையாது. இந்தியாவைச் சேர்ந்த சிலர் தீவிரவாத செயலில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த இந்தியர்களையும் தீவிரவாதிகள் என்று கூறி விட முடியாது. கூறவும் கூடாது. எல்லா சமூகத்திலும் சிலர் தவறான பாதையில் போகிறார்கள். இதற்கு அந்த சமூகம் காரணமில்லை, தவறான பாதையை தேர்ந்தெடுத்தவர்கள்தான் அந்தத் தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டும். நான் ஒரு சீக்கியர் என்பதால், தீவிரவாத முத்திரையால் எவ்வளவு பாதிப்புகள் வரும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன் என்றார் சிங்.
Posted by Adirai Media at 12:06 PM 2 comments
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உமாபாரதி போராட்டம்.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து பாரதீய ஜனசக்தி தலைவர் உமாபாரதி தலைமையில் இன்று ராமேஸ்வரத்தில் போராட்டம் நடைபெறவுள்ளது. ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது, சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரி வரும் உமாபாரதி, இன்று ராமேஸ்வரத்தில் சத்யாகிரகப் போராட்டத்தை நடத்தவுள்ளார். இதற்காக ராமேஸ்வரம் செல்லும் வழியில் நேற்று மதுரைக்கு வந்த உமாபாரதி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது. இதனால் இந்துக்களின் மனம் புண்படும். சேது சமுத்திரத் திட்ட பணிகளால் ஏராளமான மீனவர்கள் வேலையிழந்து ஆதரவற்று நிற்கின்றனர். ராமர் பாலம் இந்துக்களின் வரலாற்று சின்னமாக திகழ்கிறது. இந்தப் பாலம் அழிவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பழமையான வரலாற்று சின்னத்தை அழித்து விட்டு, இந்த அரசு ஒரு திட்டத்தை நிறைவேற்றுகிறது என்றால் அதை கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இது சம்பந்தமாக புவியியல் ஆய்வு மையத்திற்கு சென்று ராமர் பாலம் பற்றிய தகவல்களை சேகரித்தார். அவர் சேகரித்த தகவல்களை அறிக்கையாக தயாரித்து, அனைத்து மக்களும் காணும் வகையில் தரச் சொல்லுங்கள் பார்ப்போம் என்றார் உமாபாரதி.
Posted by Adirai Media at 10:23 AM 0 comments
தமிழில் பேசினால், கம்ப்யூட்டரில் பதிவாகும் சாஃப்ட்வேர் : எஸ்எஸ்என் கல்லூரி மாணவர்கள் முயற்சி
தமிழில் பேசினால், அதை கம்ப்யூட்டர் பதிவு செய்யும் சாஃப்ட்வேரை எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி வடிவமைத்து வருகிறது. அக்கல்லூரியின் சார்பில் கம்ப்யூட்டரை அதி உயர் திறனுள்ளதாக்குவது குறித்த சர்வதேச கருத்தரங்கு வரும் 12, 13 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து எஸ்.எஸ்.என். கல்விக் குழுமத் தலைவர் கலா விஜயகுமார் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழ்ப் பேச்சைப் பதிவு செய்யும் ஆய்வுப் பணியில் கம்ப்யூட்டர் சயன்ஸ் பேராசிரியர் சி.அரவிந்தன் தலைமையில் 8 மாணவர்கள் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. இதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) ரூ.3 லட்சம் மானியம் அளித்துள்ளது.
இதற்கான பணி 6 மாதத்தில் நிறைவடையும் என்று தெரிகிறது. முதல் கட்டப் பணி 2008-ல் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே சொல்லை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் உச்சரிக்கிறார்கள் என்பது கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின், கார்னகி மெலன் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் ரெட்டி தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணை இயக்குநர் என்.பாலகிருஷ்ணன் தொடங்கிவைக்கிறார். அமெரிக்க விஞ்ஞானி சாமி முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இக்கருத்தரங்குக்கு எச்.சி.எல். நிறுவனமும் இந்திய எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிகல் பொறியியல் அமைப்பும் (ஐ.இ.இ.இ.) ஆதரவு தருகின்றன என்றார் கலா விஜயகுமார்.
கல்விக் குழும இயக்குநர் சஷிகாந்த் ஆல்பல் கூறியதாவது:
கம்ப்யூட்டர் சாதனங்களை ஒயர்லெஸ் முறையில் பயன்படுத்துவது குறித்தும் இக்கருத்தரங்கில் ஆராயப்படும். இதில் பங்கேற்க 330 பேர் ஆய்வுரைகளை அனுப்பினர். அதில், 36 ஆய்வுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 125 பேர் இக்கருத்தரங்கில் பங்கேற்கிறார்கள்.
மாணவர்கள் தங்களது ஆய்வுரைகளை அளிக்க ரூ.1,000 கட்டணம். மற்றவர்களுக்கு ரூ.2,000.
Dinamani
Posted by Boston Bala at 7:31 AM 4 comments
இந்துக்களிடம் ஆந்திர அரசு பாரபட்சம்: பாஜக
ஆந்திரத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்துக்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ், நிருபர்களிடம் கூறியதாவது:
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இந்து மதத்தைச் சேர்ந்த மேலும் 36 ஜாதிகளைச் சேர்க்கலாம் என்று பிற்படுத்தப்பட்டோருக்கான ஆந்திர மாநில கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அதனை ஆந்திர அரசு புறக்கணித்து விட்டது. இது ஆந்திர அரசு இந்துக்களுக்கு எதிராக இழைந்துள்ள மிகப்பெரிய அநீதியாகும்.
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம்களுக்கு மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு அளிக்க அவசரச் சட்டம் இயற்றுவது என ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது.
மத ரீதியில் அல்லாமல் சமூக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பதால் இதை உயர் நீதிமன்றமோ, வேறு நீதிமன்றங்களோ நிராகரிக்கும் வாய்ப்பும் இருக்காது என ஆந்திர அரசு கருதுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக ஆந்திர அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
முஸ்லிம்களுக்கு ஏற்கெனவே 5 சதவீத இடங்களை ஒதுக்கி ஆந்திர அரசு அவசரச் சட்டம் இயற்றியது. ஆனால் அதனை ஆந்திர உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்திய அரசியல் சட்டப்படி, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை இல்லாததை அப்போது உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஆந்திர அரசு தற்போது தந்திரமாகச் செயல்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்த முயலும் ஆந்திர அரசின் போக்கை முஸ்லிம்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
இதனிடையே, ஆந்திரத்தில் முஸ்லிம்களில் 15 பிரிவினர் சமூக, பொருளாதார, கல்வி ரீதியில் மிகவும் பின்தங்கியிருப்பதாகவும் அவர்கள் இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என்றும் ஆந்திர அரசு கண்டறிந்துள்ளது என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
முந்தைய சற்றுமுன்...: ஆந்திராவில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு
தினமணி
Posted by Boston Bala at 1:35 AM 0 comments
பாக். லால் மசூதியில் தொடர்ந்து குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் லால் மசூதியில் தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் இன்று நீடித்தது. பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்த மசூதிக்குள் நுழையும்பொருட்டு, இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மசூதியைச் சுற்றி நின்ற பாதுகாப்புப் படையினர், சரண் அடையுமாறு மசூதிக்குள் உள்ள தீவிரவாதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் யாரும் சரண் அடையவில்லை என்று தெரிகிறது. இதுவரை 1,200 க்கும் மேற்பட்டோர் சரண் அடைந்துள்ள நிலையில், மற்றவர்களையும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
- MSN INDIA
BBC NEWS | South Asia | Blasts at radical Pakistan mosque: "There have been two large explosions in the buildings of a rebellious mosque in the Pakistani capital, Islamabad, which is being besieged by security forces."
Posted by Boston Bala at 12:05 AM 0 comments
b r e a k i n g n e w s...