இந்தியாவின் மத்திய மாநிலமான சத்தீஸ்கரில், மாவோயிஸ்டுகளின் பதுங்கு தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்படையினர் 23 பேரின் சடலங்களை தாம் இப்போது கண்டெடுத்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
காட்டின் நடுவே மறைவான ஒரு இடத்தில், மாவோயிஸ முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திகளை விசாரிக்க நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட படை நடவடிக்கையின் போது, கொல்லப்பட்ட இந்தப் பாதுகாப்பு படையினரோடு தமக்கு இருந்தத் தொடர்பை அதிகாரிகள் இழந்ததாக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.
போலீசாரின் அறிக்கையின்படி கிளர்ச்சியாளர்கள் 500 பேர் வரை இப்பதுங்குத் தாக்குதலை நடத்தினார்கள் என்றும், கிளர்ச்சியாளர்கள் 40 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக இப்பகுதியில் நடந்துவரும் மாவோயிஸ சண்டைகளில் இதுவரை 6000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
- BBC Tamil
BBC NEWS | South Asia | Dozens die in India Maoist clash
Tuesday, July 10, 2007
இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 23 பாதுகாப்பு படையினர் பலி
Posted by Boston Bala at 11:44 PM 0 comments
கனடா உரிமை பாராட்டும் கடற்பகுதி
கனடாவிற்கு அருகே வடமேற்கு பாதை என்று விபரிக்கப்படும் வடதுருவ கடற்பகுதி கனடாவிற்கே சொந்தமானது என்று உரிமை பாராட்டும் ஒரு முயற்சியாக, ஆழ்கடற்துறை ஒன்றை தாம் அமைக்கப் போவதாக கனடிய அரசு திட்டங்களை வெளியிட்டுள்ளது.
ஆனால் அமெரிக்கா உட்பட வேறு பல நாடுகள் இந்தக் கடற்பகுதி அனைத்துலக கடற்பகுதி என்று அறிவித்துள்ளன. எவ்வாறாயினும் கனடாவின் பிரதம் ஸ்டீஃபன் ஹார்பர் தமது நாட்டின் தேசியப் பிராந்தியத்தை கனடா பாதுகாக்கும் என்றும் இதனை கண்காணிக்க பனிக்கட்டிகளைத் தகர்த்து பயணம் செய்யும் எட்டுக் கப்பல்களை தாம் வாங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகில் இன்ன்மும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் எரிவாயு மற்றும் எண்னை அளவில் காற்பங்கு இந்த ஆர்க்டிக் வடதுருவப் பகுதியில் இருக்கக் கூடும் என்று அமெரிக்க நிலவியில் மதிப்பீடுகள் காட்டுகின்றன.
- BBC Tamil
BBC NEWS | Americas | Canada 'to reclaim Arctic waters'
Canada to Patrol Arctic Ocean to Press Claim of Sovereignty - New York Times
Posted by Boston Bala at 11:40 PM 0 comments
பிரேசில் நாட்டில் கட்டப்படவுள்ள நீர்மின்நிலையங்கள் தொடர்பாக சர்ச்சை
பிரேசில் நாட்டு அரசாங்கம் அங்கு அமேசான் நதியின் நீளமான கிளை நதி மீது இரண்டு நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கான அடிப்படை ஒப்புதலை வழங்கியுள்ளது.
மடேரியா ஆற்றுத் திட்டம் என அழைக்கப்படும் இந்தத் திட்டமானது பிரேசிலில், அரசுக்குள்ளேயே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே பெரிய அளவில் உணர்வுபூர்வமான ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நதியில் பெருமளவிலான உலகின் பல பரந்துபட்ட மீனினிங்கள் வாழ்ந்து வருகின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவில் கட்டப்படவுள்ள இந்த நீர்மின் நிலையங்களானது, இந்த மீனினங்களை அழித்துவிடும் அபாயம் உள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள்.
இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக, பிரேசில் நாட்டின் சுற்றுச் சூழல் அமைப்பான இபாமா, இந்த திட்டத்திற்கு அடிப்படை அனுமதியளிப்பதற்கான முடிவடுக்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அதிலும் 33 வகையான கட்டுப்பாடுகளுடனேயே இந்த பூர்வாங்க அனுமதியை இபாமா வழங்கியுள்ளது.
அடிப்படை அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், மேற்கொண்டு பணிகளை தொடங்க இறுதி அனுமதி தேவைப்படும். இந்த திட்டமானது வளர்ச்சியா அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பா என்பது குறித்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் அரசிற்குள்ளேயும் வெளியேயும் இந்த திட்டம் ஏற்படுத்தியுள்ள ஆர்வம் மற்றும் பரபரப்பானது, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் அபிலாஷைகளுக்கும், அது போன்ற நாடுகளுக்கு, சுற்றுச் சூழலைக் காக்க இருக்கும் கடமைக்கும் இடையேயான விவாதம், மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் வளர்ச்சியை எவ்வாறு மேற்கொள்வது, இந்த இரண்டிற்கும் இடையே எவ்வாறு ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பன குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
- BBC Tamil
Brazil gives preliminary OK to Amazon dams criticized by environmentalists - International Herald Tribune
BBC NEWS | Americas | Brazil gives Amazon dams go-ahead
Posted by Boston Bala at 11:36 PM 1 comments
இந்தியா: ஓய்வு பெறும் வயது 62.
மத்திய அரசு, ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது முன்பு 58ஆக இருந்தது. 1990ம் ஆண்டு ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்பட்டது. அப்போது இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை மீறி மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62ஆக உயர்த்த முடிவு செய்து உள்ளது.
இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு மத்திய மந்திரிசபையும் ஒப்புதல் அளித்து விட்டது. விரைவில் இது சட்ட நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தான் 6-வது சம்பள ஆணையம் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த நிலையில் ஓய்வு வயது உயர்த்தப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்தியர்களின்ஆயுள் காலம் அதிகரித்து வருவதாக கூறப்பட்டாலும். ஓய்வு பெறுவர்களுக்கு பணபலன் வழங்குவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மாலைமலர்
Posted by வாசகன் at 8:44 PM 2 comments
கலர் டி.வி.க்கு ரூ.500 லைசென்ஸ் கட்டணம்: மத்திய அரசு புதிய திட்டம்
மத்திய அரசுக்கு சொந்த மான பிரசார் பாரதி கார்ப்ப ரேஷனுக்கு அதிகநிதி தேவைப்படுகிறது. இதற்கான நிதியை திரட்ட மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
இதன்படி புதிதாக கலர் டி.வி. வாங்குவோரிடம் இருந்து ரூ.500 உரிமம் கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. கறுப்பு வெள்ளை டி.வி.க்கு உரிமம் கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இது பற்றி நாளை நடைபெறும் மந்திரி கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
இது தவிர இன்னொரு திட்டம் ஒன்றும் உள்ளது. கலர் டி.வி.யின் விலையில் 10 சதவீதம் உரிமம் கட்டண மாக வசூலிப்பது பற்றியும் பரிசீலிக்கப்படுகிறது. ஒவ் வொரு கலர் டி.வி.யின் விலை யில் 10 சதவீதம் உரிமம் கட்ட ணமாக வசூலித்தால் பிரசார் பாரதி கார்ப்பரேசனுக்கு ஆண்டுக்கு ரூ.898 கோடி வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரின் உரிமம் கட்டணத்தை உற்பத்தி வரியில் சேர்த்தால் டி.வி.வாங்குவோர் அதை சுமையாக நினைக்க மாட்டார்கள். ஆனால் டி.வி. வாங்கிய பிறகு ரூ.500 உரிமம் கட்டணம் என்றால் கூடுதல் சுமையாக கருதக்கூடும். இதனால் உற்பத்தி வரியி லேயே ரூ.500 உரிமம் கட்ட ணத்தை சேர்க்கலாமாப என் பது பற்றியும் நாளைய மந் திரிகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இதே போல் ரேடியோ வுக்கும் உரிமம் கட்டணம் வசூலிக்கலாமா என்பது பற்றியும் முடிவு செய்யப்பபடுகிறது.
பிரசார் பாரதி கார்ப்ப ரேசனுக்கு ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை செலவாகிறது. ஆனால் தனியார் டி.வி.க்கள் ஆதிக்கத்தால் வருமானம் கணிசமான அளவுக்கு குறைந்து விட்டது. தற்போது ஆண்டுக்கு ரூ.1600 கோடி தான் வருமானமாக கிடைக் கிறது. டி.வி.க்கு உரிமம் கட் டணம் வசூலிக்கப்பட்டால் பிரசார் பாரதி கார்ப்பரேச னுக்கு ஏற்படும் நஷ்டம் குறைக்கப்படும்.
மாலைமலர்
Posted by Boston Bala at 7:19 PM 3 comments
இந்தியாவிற்கு திரு.ஆணுறை மனிதன் (Mr Condom) தேவை!
Mechai Viravaidya promotes the use of condoms in Thailand.
இந்திய மக்களிடம் ஆணுறையை பயனபடுத்தும் பழக்கத்தை அதிகமாக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டுவருகிறது.
தாய்லாந்து நாட்டின் ஆணுறை மனிதன் "மேச்சாய் விரவைத்தியா" போன்று இந்தியாவிற்கும் ஒருவர் தேவைப்படுகிறார் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுபாடு நிறுவனத்தின் தலைவர் சுஜாதா ராவ் கூறினார்.
மேலும் இந்திய அதிகாரிகள் செக்ஸ் பற்றியும் ஆணுறை பற்றியும் பேச தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும் செய்திக்கு "Reuters.."
Posted by சிவபாலன் at 7:19 PM 8 comments
போயிங்787- புதுவடிவ விமானம் அறிமுகம்
பிரபல அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், அறிமுகப்படுத்தியுள்ள போயிங்787 என்ற புது வடிவ விமானம் இது. அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் எவர்ரெட் என்ற இடத்தில் இருக்கும் அதன் தயாரிப்பு கூடத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. குறைந்த எரிபொருள் செலவில், குறைந்த பராமரிப்பு செலவில், அதிக மக்களை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்திற்கு இப்போதே
600 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளனவாம். இந்தியாவின் ஏர்-இந்தியா நிறுவனம் 27 விமானங்களையும் ஜெட்ஏர்வேஸ் 10 விமானங்களையும் வாங்க விண்ணப்பம் செய்திருக்கின்றனவாம்.
நன்றி: தினமலர்-வர்த்தகம்
Posted by வாசகன் at 3:44 PM 0 comments
பிறந்த குழந்தையை அடகுவைத்து மனைவி உடல் தகனம்.
பிரசவத்திற்கு அடுத்தநாளே, போதிய மருத்துவ வசதி இல்லாததால் இறந்துவிட்ட மனைவியின் சடலத்தை எடுத்துச்செல்வதற்கும் இறுதிக்காரியங்களுக்காகவும், பிறந்த பச்சிளம் குழந்தையை கொடுத்து ரூ.1200 பெற்றுள்ளார் இராஜஸ்தானைச் சேர்ந்த பழங்குடி மனிதர் ஒருவர்.
ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சாஹூபூர் கிராமத்தில் இது நடந்துள்ளது. தனது கடும் வறுமையால் இப்படி ஆகிவிட்டதாகவும், பணம் சேர்த்து குழந்தையை மீட்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பி டி ஐ செய்தி
Posted by வாசகன் at 3:06 PM 0 comments
'என்னை இடிக்க முடியாது' - விஜயகாந்த் ஆவேசப்பேச்சு.
பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் திருவேங்கடம் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில்,
திருமண மண்டபத்தை இடித்தாலும், வேறு எதை இடித்தாலும், என்னை மட்டும் இடிக்கவே முடியாது நேரமின்மை காரணமாக சமீப காலமாக பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணையும் நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை.என்றார் விஜயகாந்த்.
மேலும் கல்யாண மண்டபம் இடிப்பு காரணமாகவும் இது தாமதமாகி வந்தது. இனிமேல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பிற கட்சி தொண்டர்கள் தேமுதிகவில் இணைவார்கள்.
என் கல்யாண மண்டபத்தை இடித்தாலும் அல்லது வேறு எதை இடித்தாலும் என்னை மட்டும் இடிக்க முடியாது. நான் சற்று அவகாசம் கேட்டேன். கொடுக்கவில்லை, இடித்து விட்டார்கள். இப்போது பாலத்தை கட்டி முடித்து விட்டார்களா?.
மிரட்டிப் பணிய வைக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் எனது உடம்போடு ஊறிப் போன தைரியத்தை விலை கொடுத்து வாங்க அவர்களால் முடியாது.
கட்சி ஆரம்பித்த ஒன்னே முக்கால் வருடத்திலேயே மதுரை மேற்குத் தொகுதியில் சிறப்பான வாக்குகளைப் பெற்றுள்ளோம். வேறு எந்தக் கட்சியிடமும் இந்த சாதனை இல்லை.
இன்று தமிழகத்தில் தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. சிவகங்கையில் கார் குண்டு வைத்து கொல்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம், தைரியம்தான்.
ரூ. 10 ஆயிரம் கோடி மோசடியைக் கண்டுபிடித்து விட்டேன் என்கிறார் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா. அவருக்கு முன்பு இருந்தவர் யார், அவரும் திமுகதானே, இதையெல்லாம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பணம் கொடுத்து ஓட்டுக்களை வாங்குகிறார்கள். மதுரையில் அதுதான் நடந்தது. நாளை உங்களுக்கும் பணம் கொடுப்பார்கள். மறுக்காதீர்கள், நோட்டு உங்களுக்கு, ஓட்டு எனக்கு
நன்றி: தட்ஸ் தமிழ்
Posted by வாசகன் at 2:45 PM 1 comments
மூன்றாவது அணியில் பரூக் அப்துல்லா கட்சி
தட்ஸ் தமிழில் வெளிவந்துள்ள செய்தி:
3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைகிறது.
அதிமுக, தெலுங்குதேசம், சமாஜ்வாடிக் கட்சி உள்ளிட்ட 8 கட்சிகள் இணைந்து புதிதாக ஒரு அணியை உருவாக்கியுள்ளன. இந்த அணிக்கு ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த அணியில் 9வது கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி இணைகிறது. டெல்லியில், நேற்று நடந்த ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பரூக் அப்துல்லா கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பரூக் அப்துல்லா பேசுகையில், 3வது அணியில் இணைய தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, வரும் 14ம் தேதி டெல்லியில் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம் ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா வீட்டில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு குறித்து இறுதி செய்யப்படுகிறது.
இக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளில் பெரும்பாலானவை (சமாஜ்வாடி கட்சி தவிர்த்து) பாஜக கூட்டணியில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த புதிய அணியால் பாஜக தான் பெரும் கவலையடைந்துள்ளது.
மேலும் இவர்களோடு இடதுசாரிகள் கைகோர்த்து விடுவார்களோ என்ற பயத்தில் காங்கிரசும் உள்ளது.
Posted by வாசகன் at 2:41 PM 0 comments
ஜெ.தேர்தல் விதிமுறை மீறல்: உச்சநீதிமன்றம் 'அதேநிலை' ஆணை
முன்னாள் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் விதிமுறைகள் மீறலை ஒட்டி தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை 'அதே நிலையில்' வைத்திருக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வழக்குபதிந்ததை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த சிறப்பு ஈர்ப்பு மனுவை(SLP) விசாரித்த தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் உள்ளடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இவ்வாணையை பிறப்பித்தது.
மேலும்..The Hindu News Update Service
Posted by மணியன் at 2:01 PM 0 comments
பிலிப்பைன்ஸ் விமானவிபத்து: கேரள குடும்பம் துயரம்
இரண்டு நாட்களுக்கு முன்னர் நடுவானில் மோதிய பயிற்சி விமானங்களில் ஒன்றில் மரணித்த பதினேழு வயது வர்ஷா கோபிநாத்தின் கனவெல்லாம் தானும் கல்பனா சாவ்லா போல விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதே. அவரது மரணசெய்தி திருவனந்தபுரத்திலுள்ள அவரது பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. பள்ளியிறுதி முடித்தபின் கொச்சியில் சிலகாலம் பயிற்சி எடுத்தபின் ஐந்து மாதங்கள் முன்னர் பிலிப்பன்ஸ் நாட்டிற்கு சென்றார். அவரது உடல் இன்று கொண்டுவரப்படுவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இது பற்றி..The Hindu News Update Service
Posted by மணியன் at 1:50 PM 0 comments
சர்க்கரைநோயிற்கு பூசணி சிறந்த மருந்து: சீனா
சீன ஆய்வாளர்களின் கூற்றுப்படி பூசணியில் உள்ள வேதிப்பொருள்கள் சர்க்கரைநோய்காரர்களுக்கு அவர்கள் உட்கொள்ளும் இன்சுலின் அளவை குறைக்கவும் எடுத்துக்கொள்ளாமலே இருக்கவும்் செய்யும் குணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முழு விவரத்திற்கு...Pumpkins may make insulin history- Hindustan Times
Posted by மணியன் at 1:25 PM 0 comments
லால் மசூதியில் நுழைந்தது பாக். இராணுவம்:43 பேர் பலி
கடந்த ஒருவாரமாக முற்றுகையிடப்பட்டிருந்த இஸ்லாமாபாத்தின் லால் மசூதிக்குள் பாக்கிஸ்தான் இராணுவம் அதிரடியாக நுழைந்து நடத்திய தாக்குதலில் 40 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 3 இராணுவத்தினர் பலியாயினர் என்றும் தெரிகிறது. 50 போராளிகள் கைது செய்யப்பட்டுள்லனர். மசூதியின் பெரும்பகுதியை கைப்பற்றியபின்னும் பிணையாக வைக்கப்பட்டிருந்த பெண்களையும் சிறுவர்களையும் இன்னும் காணவில்லை. இந்த தாக்குதல் தொடர்கிறது.
மேல் விவரங்க்களுக்கு...Pakistani forces storm Lal Masjid; at least 43 dead | Reuters.com
Posted by மணியன் at 1:16 PM 0 comments
அதிமுகவுக்கு போவீங்களா?.. ராமதாஸ் விர்ர்ர்....
திமுக அரசுக்கு முழுப் பதவிக்காலமும் பாமக ஆதரவு கொடுக்கும். இந்த நிைலயில் அதிமுக கூட்டணிக்கு பாமக போகுமா என்ற கேள்வி தேவையற்றது, அதற்கு ஜெயலலிதா கொடுத்த பதிலும் தேவையற்றது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த நிருபர்கள், ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்பீர்களா என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, திமுக அணியிலிருந்து பாமக விலகி அதிமுக அணிக்கு வந்தால் பாசத்துடன் வரவேற்போம், கெளரவமாக நடத்துவோம் என்றார். இதுகுறித்து டாக்டர் ராமதாஸிடம் கேட்டபோது, நான் பலமுறை இதுகுறித்து தெளிவாக கூறியுள்ளேன். திமுக ஆட்சிக்கு பாமக முழு ஆதரவு அளிக்கும். திமுக அரசு தனது முழுப் பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய பாமக ஆதரவு தரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நிைலயில் தேவையில்லாத கேள்விகளும், தேவையில்லாத பதில்களும் எனக்கு வருத்தம் தருவதாக உள்ளது என்று கூறினார் ராமதாஸ்.
Posted by Adirai Media at 12:30 PM 0 comments
நீல பத்மநாபன் எழுதிய நாவலுக்கு ரங்கம்மாள் பரிசு
கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் நிர்வாக அறங்காவல் சரத் சந்திரன் வெளியிட்ட செய்தி:
கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் இரண்டாண்டுக்கொரு முறை இந்தியாவில் வெளியாகும் சிறந்த நாவலுக்கு ரொக்கப் பரிசை 'ரங்கம்மாள் பரிசு' என்ற பெயரில் வழங்கி வருகிறது. 2005, 2006-ம் ஆண்டுகளில் வெளியான 23 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வந்தன. அவற்றில் நீலபத்மநாபன் எழுதிய 'இலை உதிர் காலம்' என்ற நாவல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் நீலபத்மநாபனுக்கு பரிசுத்தொகையாக ரூ.15 ஆயிரமும், நாவலை வெளியிட்ட வானதி பதிப்பகத்தினருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. 'இலை உதிர் காலம்' நாவல் முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டுள்ளது.
தினமணி
Posted by Boston Bala at 2:34 AM 1 comments
b r e a k i n g n e w s...