.

Friday, April 27, 2007

இந்தியாவின் நாட்டு உற்பத்தி ட்ரில்லியன் டாலர் !

உலகநாடுகளில் தங்களது மொத்த உற்பத்தி ( GDP) ஒரு ட்ரில்லியன் டாலர்களை மிஞ்சிய ஒரு சிலநாடுகளுடன் ( 12 நாடுகள்) இந்தியா இன்று சேர்ந்து கொண்டது. இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு 41ரூ. வாக உயர்ந்ததும் ஒரு முக்கிய காரணமாகும். இந்திய பங்குசந்தையில் சந்தையாக்கப்பட்ட பங்குகளின் மதிப்பும் இன்று ஒரு ட்ரில்லியனை எட்டியது குறிப்பிடத் தக்கது. இது ரூபாயின் மதிப்பைப் பொறுத்து தற்காலிகமானது என்றாலும் இந்த கணக்காண்டில் நிரந்தரமாக இவ்வெல்லையை கடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


DNA - Money - Cheers! India is now a trillion dollar economy - Daily News & Analysis

ச: முடிந்தது சிவாஜி-இமயமலை கிளம்பினார் ரஜினி

சிவாஜி படம் சம்பந்தமான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால் ஓய்வுக்காக இமயமலைக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார் ரஜினிகாந்த்.

செய்தி...

முன்னதாக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

விவரம்

திருச்சூர் பூரத்தில் ஆனை மிரண்டது

கேரள மாநில திருச்சூரில் இன்று நடந்த பூரம் திருவிழாவில் திரண்டிருந்த யானைகளில் ஒன்று முரண்டுபிடித்து ஓடியதால் மக்கள் கூட்டம் மிரண்டு இங்குமங்கும் ஓடினர். 'இளஞ்சிதாரா' மேளம் வாசிக்கும் போது உன்னிக்கிருஷ்ணன் என்ற யானை தனது இரும்புசங்கிலியிலிருந்து தப்பி ஓடியதை கண்ட அஞ்சிய மக்கள் பின்னர் அது அடக்கப் பட்டபிறகு மீண்டும் கூடி பூரத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 'குடை மாற்றம்' நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.


DNA - India - Elephant turns violent at Thrissur pooram - Daily News & Analysis

உலகப்போர் இந்திய வீரர்களுக்கு கலாம் அஞ்சலி

இரண்டாம் உலகப்போரில் கிரேக்க நாட்டில் பணிபுரிந்து வீரமரணமடைந்த இந்திய வீரர்களுக்கு அறுபது வருடங்களுக்குப் பிறகு இந்திய குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் ஏதென்ஸில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.இதுவரை சென்ற இந்திய தலைவர்கள் எவரும் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. ஆங்கிலேயர்களுக்காக தங்கள் தாயகத்திலிருந்து போர் புரிந்த பஞ்சாப் ், சென்னை வீரர்களுக்கு திரு கலாம் நம் நன்றியறிதலை வெளிபடுத்தினார்.


மேலும்..The Hindu News Update Service

காஷ்மீர்: கிலானி கைது

காஷ்மீர் ஹுரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர் சையத் அலி ஷா கிலானி இன்று வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். நேற்று அவரது ஆறு துணைவர்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேச முற்படும் போது கைது செய்யப் பட்டனர். ஏப்ரல் 22 அன்று நடந்த ஒரு பேரணியில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக எழுப்பிய கோஷங்களைத் தொடர்ந்து அவர்மீதும் மற்ற நான்கு தலைவர்கள் மீதும் குற்றம் பதியப் பட்டது.
மேலும் விவரங்களுக்கு..
NDTV.com

பாரதி ஏர்டெல்லின் நான்காம் பருவ இலாபம் இருமடங்கானது

முக்கியமான இந்திய செல்பேசி சேவையாளர்களில் ஒன்றான பாரதி நிறுவனம் இன்று வெளியிட்ட நான்காம் பருவ முடிவுகளில் அதன் இலாபம் இருமடங்காக அதிகரித்துள்ளது.
மேல்விவரங்களுக்கு..Business-The Times of India

குஜராத்:போலி துப்பாக்கிசூட்டில் இறந்தவரின் மனைவியும் கொலை ?

இன்று உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு ் துப்பாகிச் சூட்டில் மரணமடைந்த ஷேக்கின் மனைவி கசூர் பீயை நேரில் ஆஜர் படுத்தமுடியாததிற்கு அவரும் கொலையுண்டிருக்கலாம் என்று அறிக்கை சமர்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்...- Hindustan Times

கருணாநிதி பிறந்த நாள்: சாலை ஓரங்களில் 2 லட்சம் மரக் கன்றுகள்

சென்னை, ஏப். 26: முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி சாலை ஓரங்களில் 2 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறினார்.

சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் பேசும்போது இத் தகவலை வெளியிட்டார். ஜூன் 3-ம் தேதி முதல்வர் கருணாநிதி பிறந்த நாள். அன்று தமிழகத்தின் பிரதான சாலைகளின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடப்படும் என்று அவர் கூறினார்.

இந்த மரக் கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படும். ஆக்கிரமிப்புகளைத் தடுக்க சாலை எல்லையில் கற்கள் நடப்படும் என்றார்.

Dinamani

-o❢o-

b r e a k i n g   n e w s...