மத்திய மின்சக்தி ஆணையம் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் அல்ட்ரா மெகா மின் திட்டங்களை அமைக்க ஒன்பது இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அவை தமிழ்நாட்டில் செய்யூர், மத்திய பிரதேசத்தில் சாசன், குஜராத்தில் முந்த்ரா, ஆந்திராவில் கிருஷ்ணபட்டினம், ஜார்கண்டில் திலையா, ஒரிசாவில் சுந்தர்கர், கர்நாடகாவில் தாத்ரி, சட்டீஸ்கரில் அகல்தரா, மகாராஷ்டிராவில் கிர்யி ஆகிய இடங்கள் ஆகும்.
இந்த 4000 மெகாவாட் திறன் கொண்ட அல்ட்ரா மெகா மின் திட்டங்கள் உருவாக்கி இயக்கும் திட்டத்தின் அடிப்படையில் யுனிட் விலை போட்டி ஏல முறையில் செயல்படுத்தப்படும்.
அனைவருக்கும் மின்சாரம் என்ற இலக்கை நோக்கிச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மின் அமைச்சகத்தை நாடாளுமன்ற ஆலோசனைக் குழு பாராட்டியதோடு திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் போது, பொது மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் ஒரே மாதிரியான நிவாரணக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
தமிழ்சிஃபி யிலிருந்து..
Wednesday, August 29, 2007
மத்திய மெகா மின் திட்டம் செய்யூரில் வருகிறது.
Posted by
வாசகன்
at
10:32 PM
0
comments
Wednesday, August 22, 2007
சீனாவின் ஏற்றுமதிகள் குறித்து தொடர்ந்து கவலைகள்
சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களின் தரம் குறித்த கவலைகள் தற்போது அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கும் பரவியுள்ளன. சீனாவில் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகளில், அதிக அளவு ஃபார்மால்டிஹைட் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆராயும் புலனாய்வு தற்போது நியூசிலாந்தில் துவங்கியுள்ளது.
துணி பூஞ்ஞைக்காளானால் பாதிக்கப்படாமல் இருக்க இந்த ரசாயனப் பொருள் உதவுகிறது. இருந்தும் இது தோலிலும், கண்ணிலும், தொண்டையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொம்மைகள், டயர்கள், உணவுப் பொருட்கள், பற்பசைகள் போன்ற பொருட்களால் உடலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் குறித்த அச்சங்களைத் தொடர்ந்து தற்போது இந்தப் பிரச்சனை வந்துள்ளது.
இது போன்ற அச்சங்கள், வர்த்தக பாதுகாப்புக்கான புதிய உத்தி என்று சீனா வர்ணித்திருப்பது முற்றிலும் தவறானது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் பீட்டர் மெண்டல்சன் கூறியுள்ளார்.
தமிழ் பிபிசி
China reports quality problems with U.S. soybean imports - International Herald Tribune
Chinese-made blankets recalled over formaldehyde content in Australia, New Zealand - International Herald Tribune
FT.com / In depth - Poison clothes add to China export scares
Posted by
Boston Bala
at
9:25 PM
0
comments
Friday, August 10, 2007
'முதல்வர் சொல்வதில் உண்மையில்லை' - இராமதாஸ்
விழுப்புரம், ஆக. 10: டாடா டைட்டானியம் டை ஆக்ûஸடு ஆலை அமைவதால் பாதிப்பு ஏற்படாது என்று முதல்வர் கருணாநிதி கூறுவதில் எள்முனை அளவும் உண்மையில்லை, இதனால் பாதிப்பு ஏற்படுமென ஏற்கெனவே அரசு அதிகாரிகள் அறிக்கை சமர்பித்துள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.
தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
அரசின் பொதுத்துறை நிறுவனம் மூலமாக கேபிள் டி.வி நடத்தலாம் என்று முதல்வர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடந்ததாக செய்தி வந்துள்ளது. இதனை வரவேற்கிறேன். இந்த ஆலோசனையை முதலில் கூறியவன் என்ற முறையில் முதல்வரின் முடிவை பாராட்டுகிறேன்.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்குச் சென்று மக்களின் கருத்தை நேரில் அறிந்து வந்தேன். நான் அங்கு செல்வதற்கு முன் பாமகவைச் சேர்ந்த மூவர் குழுவை அங்கு அனுப்பி ஓர் அறிக்கை கேட்டேன். இந்த அறிக்கையையும் மக்களிடம் இருந்து பெற்ற கருத்தையும் கொண்டு நான் ஒரு அறிக்கை தயாரித்துள்ளேன். இந்த அறிக்கை தமிழக முதல்வரிடம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) கொடுக்கப்படும்.
டைட்டானியம் தொழிற்சாலை தொடர்பாக கருணாநிதி தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிடுகிறார். இன்றும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே அங்குள்ள நிலம் பலருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார். டாடாவை ஒப்பிடும்போது இந்த நிறுவனங்கள் மிகச் சிறியவை. இவற்றினால் ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த நிறுவனங்களின் முறைகேடு தடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றை முன்னுதாரணமாக காட்டக்கூடாது.
கனிம வளங்களைப் பிரித்தெடுத்தால் அங்குள்ள நிலம் பாலைவனம் ஆகிவிடும் என்பதில் எள்முனை அளவும் உண்மையில்லை என்கிறார் கருணாநிதி. அவர் கூறுவதில் உண்மையில்லை என்று நான் சொல்கிறேன்.
கனிம வளங்களைப் பிரித்தெடுத்தால் இப் பகுதி பாலைவனம் ஆகிவிடும் என்று திருச்செந்தூர் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பழனியாண்டிக்கு 26-9-2006-ல் அறிக்கை அனுப்பியுள்ளனர்.
இந்த அறிக்கையை அரசு செயலருக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் அப் பகுதி மக்களின் அச்சத்தையும், உண்மை நிலையையும் உணர்த்தும் விதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரங்கப் பணிகளை 8 மீட்டர் ஆழத்துக்கு மேற்கொண்டால் வேளாண்மை முற்றிலும் அழிந்து இப் பகுதி பாலைவனமாகி பஞ்ச நிலை ஏற்படும், இப் பகுதி மக்கள் பிழைக்க அகதிகளாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமை இவ்வாறு இருக்க மக்களின் கருத்தறிய தமிழக அரசு மூன்று அமைச்சர்களை அங்கு அனுப்பியுள்ளது. இந்த அமைச்சர்கள் டாடா தொழிற்சாலைக்கு ஆதரவாகப் பிரசாரம் நடத்துவதோடு, போட்டி போட்டுக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கின்றனர்.
ஏற்கெனவே திருச்செந்தூர் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் சாத்தான் குளத்தில் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். ஆகவே கருத்தறியும் ஆய்வுக் குழு தேவையில்லை.
ஏற்கெனவே இந்த நிலங்கள் எதற்கும் பயன்படாது என்றனர். ஆனால் அங்குள்ள பட்டா நிலங்களில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள். அதில் புளி, மா, முந்திரி, பனை, தென்னை என எல்லா வகை மரங்களும் உள்ளன.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு கழக உறுப்பினர் -செயலர் சேகர், மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் 6 மீட்டர் ஆழத்துக்கு நிலங்களைத் தோண்டும்போது மரங்கள், தாவரங்கள் மற்றும் இயற்கையானவை அழிந்து போகும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த நிலங்களைப் பாதுகாக்க காற்று அரிப்பு கட்டுப்பாட்டு திட்டம் 1978-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. "டேனிடா' உதவியோடு ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் ரூ.6.25கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மரம் வளர்ப்புத் திட்டம் ரூ.41.72 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலையில்லாத காலத்தில் பனை ஏறும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் வேலை செய்துள்ளனர். ஆகவே மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலை இங்கு அமைவது ஏற்றதல்ல.
ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வால்மார்ட் என்னும் பன்னாட்டு நிறுவனம், பார்த்தி நிறுவனத்திடம் இணைந்து சில்லரை மற்றும் மொத்த வணிகத்தில் ஈடுபட உள்ளது. மாநில அரசுக்கு இதைத் தடுக்க அதிகாரம் இல்லை என்று கூறுவதை ஏற்க இயலாது. இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றார் ராமதாஸ்.
தினமணியிலிருந்து நேரடி பதிப்பு செய்யப்பட்டுள்ளது
Posted by
சிறில் அலெக்ஸ்
at
8:24 PM
0
comments
Wednesday, August 1, 2007
பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், தனது பயணச்சீட்டு விலைகளில் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஐநூற்று ஐம்பது மில்லியன் டாலர்கள் அபராதமாக கட்டவேண்டும் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஒழுங்குமுறை ஆணையங்கள் தீர்ப்பளித்துள்ளன.
இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள வான்போக்குவரத்து போட்டி விதிமுறைகளில், இதுவே மிக மோசமான விதிமீறல் என்று இவர்கள் இதை வர்ணித்துள்ளன.
கொரியாவின் தேசிய வானூர்தி நிறுவனமான கொரியன் ஏர் நிறுவனத்தின் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் முன்னூறு மில்லியன் டாலர் அபராதத்தை விதித்திருந்தது.
பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களின் கட்டணங்களில் கூடுதல் விலையை வசூலித்ததாக கொரியன் ஏர் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
2004 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தோடு சேர்ந்து, கூடுதல் கட்டணங்களை வசூலித்ததாக ஒப்புகொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் நடந்த பெட்ரோலிய விலையேற்றம் காரணமாகவே இந்த கூடுதல் கட்டணங்களை வசூலித்ததாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூறியுள்ளது.
BBC Tamil
British Airways fined $550 million for ripping off passengers - TIME
How Branson got out of a pickle | Special reports | Guardian Unlimited: "If only British Airways, instead of Virgin Atlantic, had picked up the phone to inform the authorities of the illegal price fixing activities, it might have escaped scot-free. But its arch-rival Virgin Atlantic got there first and, as whistleblower, earned itself immunity from penalties on both sides of the Atlantic."
Posted by
Boston Bala
at
10:55 PM
0
comments
டாடா ஆலைக்கு ஆதரவாகப் பேரணி
திருநெல்வேலி, ஆக. 1: டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலையை நிறுவ வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை பேரணி நடைபெற உள்ளது.
இந்த பேரணியில் ஆலைக்கு நிலம் கொடுக்க தயாராக உள்ள விவசாயிகளும், வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்களும், பெண்களும் கலந்து கொள்வார்கள் என சட்டப்பேரவை உறுப்பினர் என். மாலைராஜா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து திருநெல்வேலியில் அவர் அளித்த பேட்டி:
சாத்தான்குளத்தில் டாடா தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தொழில்வளம் பெருகும் என்பதோடு சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
எனவே, இந்தத் தொழிற்சாலைக்கு ஆதரவு தெரிவித்து, நிலம் கொடுக்க தயாராக உள்ள சுமார் 2,500 விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்களும், பெண்களும் கலந்து கொள்ளும் பேரணியை நடத்த உள்ளோம்.
இந்த பேரணி வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தை சென்றடையும். அங்கு தொழிற்சாலைக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், நிலம் கொடுக்க தயாராக உள்ளவர்களும் ஆட்சியரிடம் மனுக்களை அளிப்பார்கள் என்றார் அவர்.
தினமணியிலிருந்து நேரடி பதிப்பு
Posted by
சிறில் அலெக்ஸ்
at
3:17 AM
3
comments
Tuesday, July 31, 2007
டாடா தொழிற்சாலை: அறிக்கை போர் தொடர்கிறது
திருநெல்வேலி மாவட்டத்தில் டாடாவின் டைடானியம் டை ஆக்சைட் தொழிற்சாலையை மக்களின் கருத்தறிவதற்காக தள்ளிவைத்துள்ளதை நேற்று அறிவிக்கையில் முதல்வர் கருணாநிதி முந்தய ஆட்சியில் ஜெயலலிதா தனக்கு 'வேண்டிய ஒருவருக்கு' 1000 ஏக்கராவில் தாது பிரித்தெடுக்கும் உரிமையை வழங்கியதே டாடாவிற்கு அனுமதி வழங்காமல் இருந்ததிற்கு காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். இதனை ஜெயலலிதா 'கற்பனை' என்று கூறி மானநட்ட வழக்குப் போடப் போவதாகக் கூறியிருந்தார். இன்று மீண்டும் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் 'அந்தக் குறிப்பிட்ட நபர்' தொழில் அமைச்சர் நயனார் நாகேந்திரன் நவம்பர்22,2005 இல் கூட்டிய கூட்டத்திற்கும் வந்திருந்ததாகக் கூறியுள்ளார். டாடா ஸ்டீல் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அவருக்கு என்ன வேலை எனவும் வினவியுள்ளார்.
முழு விவரங்களுக்கு...The Hindu News Update Service
Posted by
மணியன்
at
4:59 PM
0
comments
Monday, July 30, 2007
டைட்டானியம் தொழிற்சாலை திட்டம் நிறுத்திவைப்பு - கருணாநிதி
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனம் அமைக்கவிருந்த டைட்டானியம் தொழிற்சாலை திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், அத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து தொழிற்சாலை அமைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால், விவசாயிகளின் நலன் கருதி இந்த தொழிற்சாலை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் வெளியான அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அப்பகுதி மக்களின் கருத்தறிந்த பிறகே இந்த தொழிற்சாலை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
MSN Tamil
Karunanidhi to take final call on Tata project
The Hindu News :: Govt. decision, a victory for AIADMK: Jayalalithaa
Posted by
Boston Bala
at
7:09 PM
0
comments
Wednesday, July 25, 2007
சாத்தான்குளத்தில் 'டாடா' தொழிற்சாலை வருகிறது.
சாத்தான் குளத்தில் டாடா நிறுவனம் கனிமத்தொழிற்சாலை நிறுவ உள்ளதாக தினமலர் செய்தியொன்று தெரிவிக்கிறது:
சாத்தான்குளம் பகுதியில் "இல்மனைட்', "மோனாசைட்' போன்ற கனிமப் படிவங்கள் இயற்கையாகவும் பெருவாரியான அளவிலும் உள்ளன. தற்போது ஒரு சில நிறுவனங்கள் இதை வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்து வருகின்றன. இக்கனிமங்கள் சில தனியார் நிறுவனங்களால் சட்ட விரோதமாகவும், அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமலும், உரிய அரசு அனுமதி ஏதுமின்றியும் கடத்தப்படுவதாக தெரியவந்தது.
அணுசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கனிமங்களைச் சட்டவிரோதமாக சிலர் வெட்டி எடுப்பதும் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இத்தகைய சட்டவிரோத ஏற்றுமதியால் அப்பகுதி மக்களுக்கு எவ்வித பொருளாதார பயனும் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு "இல்மனைட்' கனிமத்தை அப்பகுதியிலேயே சுத்திகரித்து, மதிப்பூட்டி, "டைட்டானியம் டை ஆக்சைட்' என்ற விலை உயர்ந்த வேதிப் பொருளாக மாற்ற இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய டாடா நிறுவனம் முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், மூவாயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.என அரசு குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சாத்தான்குளத்தில் "டாடா' நிறுவனம் துவங்க உள்ள "டைட்டானியம் டை ஆக்சைட்' தொழிற்சாலையால் பல பயன்கள் கிடைக்க உள்ளன. இதற்கு தடையாக இருந்தால் நாடு வளர முடியாத நிலையில் வறண்டு கிடக்க நேரிடும்' எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
Posted by
வாசகன்
at
1:12 AM
2
comments
Sunday, July 22, 2007
இந்தியா: நீர் சுத்திகரிப்பு தொழிலுக்கு நல்ல வாய்ப்பு
இந்தியாவில் நீர் சுத்திகரிப்பு தொழிலில் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இதுபற்றிய தினமலர் செய்தி:
இந்தியாவில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு கம்பெனிகள் கருதுகின்றன.5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இந்த தொழிலில் முதலீடு செய்யவும் பல நாட்டு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இந்தியாவில் பல நகரங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவ, பல வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதி கேட்டு வரிசையில் நிற்கின்றன. சமீபத்தில் கூட பிரான்சை சேர்ந்த தேகிரேமோன்ட் என்ற நிறுவனம், சென்னையில் ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திருக்கிறது. இவர்களுடன் சுவிஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கம்பெனிகள் இதற்கான டென்டருக்காக போட்டி போடுகின்றன.
Posted by
வாசகன்
at
10:42 PM
0
comments
Friday, July 20, 2007
தமிழக அரசு தொடங்கும் புதிய `கேபிள் டி.வி.'- கருணாநிதி அறிவிப்பு
தமிழ்நாட்டில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் கேபிள் டி.வி. தொழிலில் கடும் போட்டி உருவாகி உள்ளது. இதில் சிலர் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக சமீபத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். எனவே அரசே கேபிள் டி.வி.யை ஏற்று நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தியதால் கேபிள் டி.வி. தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்த தொழில் நுட்பத் துறை அதிகாரிகளை முதல்- அமைச்சர் கருணாநிதி அனுப்பி வைத்தார்.
அப்போது டாக்டர்ராமதாஸ் "தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. தொழிலை ஒழுங்கு படுத்த வேண்டுமானால் எல்லா கேபிள் டி.வி.க்களையும் அரசே கையகப்படுத்தி அவற்றை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்'' என்று ஆலோசனை தெரிவித்தார்.
தனியார் கேபிள் டி.வி.க் களை கையகப்படுத்தும் பட்சத்தில் அதில்சட்ட சிக்கல்கள் எழலாம் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
புதிய கேபிள் டி.வி.யை தமிழக அரசு சொந்தமாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த கேபிள் டி.வி.யையும் அரசு கையகப்படுத்த முடியாது. அது தேவை இல்லாத சட்ட பிரச்சினைகளை உருவாக் கலாம். எனவே தான் அரசே சொந்தமாக கேபிள் டி.வி.தொழிலில் ஈடுபடுகிறது.
'டாஸ்மாக்' போல கேபிள் டி.வி.யும் தமிழக அரசுக்கு அதிக வருமானத்தை பெற்றுத் தரும். முதல் கட்டமாக கேபிள் டி.வி. தொழில் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த வருமானம் அரசின் மேம்பாட்டு பணிகளுக்கும், சமூக நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். இந்த திட்டம் தற்போது முதல் கட்ட அளவில் தான் உள்ளது.
புதிய கேபிள் டி.வி.யை அமல்படுத்த கால நிர்ணயம் எதுவும் செய்யவில்லை. அரசின் கேபிள் டி.வி.யை சிறப்பாக கூடுதல் லாபத்துடன் இயங்க வைக்கும் வழிகள் குறித்து தகவல் தொழில் நுட்ப நிபுணர்களுடன் நாங்கள் கருத்து கேட்டு இருக்கிறோம்.
நிபுணர்களின் முழுமை யான ஆலோசனை கிடைத்த தும் அரசின் புதிய கேபிள் டி.வி. நடைமுறைக்கு வரும் முதலிலேயே தமிழ்நாடு முழுவதிலும் அரசின் கேபிள் டி.வி.யை கொண்டு வர இயலாது. படிப்படியாக அரசின் கேபிள் டி.வி. தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.
முந்தைய சற்றுமுன்...: டிடீஎச் கட்டணங்களை ட்ராய் கட்டுப்படுத்தாது
மாலைமலர்
The Hindu : Front Page : Government-run cable TV service coming
Posted by
Boston Bala
at
10:14 PM
2
comments
Saturday, July 14, 2007
60 ஆயிரம் கோடி முதலீடு: ரிலையன்ஸ் எனர்ஜி திட்டம்
அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ரிலையன்ஸ் எனர்ஜி திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.
நிலக்கரி, எரிவாயு, நீர் மற்றும் இதர எரிபொருளை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்க ரிலையன்ஸ் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தனது மின்சார உற்பத்தித் திறனை கூடுதலாக 15,000 மெகாவாட் அளவுக்கு அது உயர்த்த உள்ளது.
இதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய அது திட்டமிட்டுள்ளது. விரைவில் வளர்ச்சியை எட்டும் வகையில் தற்போது முதலீடுகளை அதிகரிக்க அது உத்தேசித்துள்ளது.
தமிழ் MSN INDIA
Reliance Energy Plans $15B Power Surge - Forbes.com
The Hindu : Business : REL plans Rs. 60,000 cr. investment
Posted by
Boston Bala
at
1:59 AM
0
comments
Thursday, June 28, 2007
தமிழ்நாடு: 2500 கோடியில் டாடா தொழிற்சாலை
தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 2500 கோடி மதிப்பில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலையை அமைக்கும் ஒப்பந்தத்தில் தமிழக அரசுடன், இன்று டாடா நிறுவனம் கையெழுத்திட்டது.
தென் தமிழகத்தில் அமையவிருக்கும் மிகப் பெரிய நிறுவனத்தின் தொழிற்சாலை இது என்பதால் இந்த ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முத்துராமனும், தமிழக அரசின் தொழிற்துறை செயலாளர் சக்தி கந்ததாஸும் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தம் குறித்து ரத்தன் டாடா கூறுகையில், ரூ. 2,500 கோடியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்ளில் டைட்டானியம் டை ஆக்ஸைடு நிறுவனம் நிறுவப்படும்.
இதன் உற்பத்தித் திறன் 1 லட்சம் டன்னாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் 1000 பேருக்கு நேரடியாகவும், 3000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதுத் தவிர 10,000 பேருக்கு விவசாயத் தொழில் துறையில் வேலை கிடைக்கும் என்றார்.
இந்தத் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தைத் தர முன்வந்து நிலம் கொடுக்க விரும்புபவர்களுக்கு, அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Posted by
வாசகன்
at
7:14 PM
0
comments
Monday, June 11, 2007
ச: தென்னிந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை: ஆந்திரா முதல்வர் அடிக்கல் இட்டார்
ஆந்திரப்பிரதேச முதல்வர் இராஜசேகர ரெட்டி நேற்று தனது கடப்பா மாவட்டத்தில் ஜம்மலமடகு என்ற இடத்தில் தென்னிந்தியாவிலேயே தனியார் துறையில் மிகப்பெரிய இரும்பு உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார். 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் ரூ12500 கோடி செலவில் அமையவிருக்கும் இந்த ஆலை ஆண்டிற்கு 4.3மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்யும்.
Foundation stone laid for mega steel plant in Andhra
Posted by
மணியன்
at
2:00 PM
0
comments
Sunday, May 27, 2007
முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் ட்ரில்லியனர்.
ஒரு இலட்சம் கோடி சொத்துக்களை பங்குகளின் மூலம் அடைந்துள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் ட்ரில்லியனராகிறார். பல்வேறுபட்ட தொழில்களிலும், நிறுவனங்களிலும் அவருடைய பங்கு மதிப்பு 111,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
90,000 கோடி சொத்துக்களுடன் அவர் தம்பி அனில் அவரைப் பின் தொடர்கிறார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
Posted by
வாசகன்
at
9:36 PM
0
comments
Wednesday, March 21, 2007
கனரா வங்கியில் 49% நெதர்லாந்து நிறுவனம் வாங்குகிறது
நெதர்லாந்தின் ரொபெக்கோ (Robeco) குழுமம் கனரா வங்கியின் CIMS-ல் 49 சதவிகித முதலீடு செய்கிறது. கனராவின் 'Canara Investment Management Services' என்னும் பரஸ்பர நிதிப் (mutual fund) பிரிவை 115 கோடிக்கு மதிப்பிட்டிருக்கிறார்கள். கனரா வங்கியில் தற்போது 73% அரசு வசம் உள்ளது.
மொத்தம் 3,50,000 கோடி ரூபாய் புழங்கும் சந்தையில், அடுத்த ஐந்தாண்டுக்குள் ஐந்து சதவிகித வாடிக்கையாளர்களைக் கவர்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ளார்கள்.
Robeco picks up 49% stake in Canara Bank’s MF arm
Posted by
Boston Bala
at
2:01 AM
0
comments
Thursday, March 8, 2007
தமிழகத்தில் ரூ.300 கோடி செலவில் விமான உதிரிபாக தொழிற்சாலை
சென்னைக்கு அருகிலுள்ள சிப்காட் ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளாகத்தில் ரூ.300 கோடிக்கும் கூடுதலான முதலீட்டில், மோட்டார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றினை ஏற்கனவே இங்கி லாந்தை சேர்ந்த கெபாரோ நிறுவனம் அமைத்து வருகிறது.
முதலீடுக்கான சாதகமான சூழ்நிலை, தமிழ்நாடு அரசு அளித்த ஆதரவு ஆகியவை தந்த ஊக்கத்தினால், தற்போது ரூ.300 கோடிக்கு மேலான முதலீட்டில், கெபாரோ வாகனப் பொருட்கள் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் மூலமாக மோட்டார் வாகனம் மற்றும் ஏரோஸ்பேஸ் ஆகிய வற்றுக்குத் தேவையான ட்ïபுலர் பாகங்கள், மோட்டார் வாகன ப்ரேக்கிங் ஸிஸ்டம், பாசனர்ஸ், ஒருங்கிணைந்த பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கும், பரிசோதனைகள் செய்வதற்காகவும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் புதிய திட்டம் ஒன்றினை செயல்படுத்த கெபாரோ கருதியுள்ளது.
இதனால் 850 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு உள் ளிட்டு மொத்தம் சுமார் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இதற்கான புரிந்துணர் ஒப்பந் தம் கையெழுத்தானது.
- மாலை மலர்
Posted by
சிவபாலன்
at
7:54 PM
1 comments
தமிழகத்தில் ரூ.1500 கோடி ஜவுளி பூங்கா - மேலும் 10 பூங்காக்கள்
்
தமிழகத்தில் மேலும் 10 இடங்களில் உயர்தொழில்நுட்ப ஜவுளிப்பூங்கா அமைய உள்ளதாக தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலாளர் விஸ்வநாத் ஷெகாங்கர் கூறினார்.
தமிழகம் முழுவதும் ரூ.1500 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் ரூ.300 கோடியில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே இருங்காட்டுகோட்டையில் ரூ.300 கோடியில் அமையும் பூங்காவின் பணி 70 சதவீதம் முடிந்துவிட்டது. பல்லடத்தில் ரூ.150 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இது தவிர குமாரபாளையம், வைகை, ஆண்டிப்பட்டி, கரூர், ஈரோடு, ஆகிய இடங்களிலும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கடலூரில் ரூ.120 கோடி செலவில் ஜவுளி உற்பத்தி பூங்கா அமைக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
இது தவிர மேலும் 10 உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
- மாலை முரசு
Posted by
சிவபாலன்
at
7:39 PM
1 comments
Monday, March 5, 2007
டிடீஎச் கட்டணங்களை ட்ராய் கட்டுப்படுத்தாது
வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி சேவை அளிக்கும் டிடீஎச் கட்டணங்களை தொலைதொடர்பு வரன்முறை ஆணையம் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளது.
டிடீஎச்கள் கேபிள் தொலைக்காட்சியில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை ட்ராய் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தை சரியாக செயல்படாமல் இருந்தாலோ போட்டி குறைவாக காணப்பட்டாலோ மட்டும்தான் கட்டுப்பாடுகள் அவசியம் என்று ட்ராய் கூறியுள்ளது.
MSN -Tamil்
Posted by
சிவபாலன்
at
8:47 PM
0
comments
Sunday, March 4, 2007
கோவையில் ரூ.7350 கோடி முதலீடு
கோவை மாவட்டத்தில் ஜவுளி, இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 82 திட்டங்களுக்கு ரூ.7 ஆயிரத்து 350 கோடி முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன, என்று மாநில தொழில்துறையின் வழிகாட்டும் பிரிவு இயக்குநர் வேல்முருகன் கூறினார்.
தமிழ் முரசு
Posted by
சிவபாலன்
at
9:13 PM
0
comments
Saturday, March 3, 2007
லாயிட்ஸின் இந்திய அவுட்சோர்சிங் நிப்பாட்டம்
Powergen போன்ற நிறுவனங்களைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் புகழ்பெற்ற வங்கியான லாயிட்ஸ் (Lloyds TSB), இந்தியாவில் இருக்கும் நுகர்வோர் அழைப்பு மையத்தை மூடப் போகிறது. முன்பு, இங்கிலாந்து பணியாளர்கள் பிஸியாக இருந்தால், தொலைபேசி அழைப்புகள், மும்பைக்கு சென்றது. பிரிட்டனில் இருக்கும் பத்து உள்ளூர் சேவை மையங்கள் மட்டுமே இனி இயங்கும்.
இந்தியாவில் பணியாற்றும் பார்க்கும் 2,800 ஊழியர்களுக்கும் மாற்று வேலை தரப்படும்.
BBC
Posted by
Boston Bala
at
12:44 AM
0
comments
b r e a k i n g n e w s...
