.

Showing posts with label *சற்றுமுன். Show all posts
Showing posts with label *சற்றுமுன். Show all posts

Tuesday, September 4, 2007

நாளை முதல் satrumun.com

சற்றுமுன் செய்தித் தளம் நாளை காலை இந்திய நேரம் 6 மணி முதல் ப்ளாகர் சேவையிலிருந்து விலகி satrumun.com எனும் தனித் தளத்திலிருந்து இயங்கவிருக்கிறது. satrumun.com பல மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் இயங்கும். விரைவில் ஒவ்வொன்றாக இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.

சற்றுமுன்னின் Blogger செய்தி ஓடையைப் (Feed) பயன்படுத்தி வந்தவர்கள் புதிய ஓடைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். புதிய ஓடை http://feeds.feedburner.com/satrumun

சற்றுமுன் மின்னஞ்சல் சேவை தொடர்ந்து கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புதிய தளத்தில் பதிந்துகொள்ள வேண்டுகிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்.

புதிய தளத்தில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்ட உறுப்பினர்கள் மட்டுமே பின்னூட்டமிட இயலும் என்பதால் உங்கள் பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம். பயனர் கணக்கு உருவாக்க இங்கு செல்லுங்கள்.

புதிய தளம் குறித்த கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

சற்றுமுன்.com தமிழ்மணம் திரட்டியில் தெரிவதில் தாமதம் இருப்பதால் தமிழ்மணம் பயனர்கள் நேரடியாக சற்றுமுன் தளத்தைப் பார்வையிடக் கேட்டுக் கொள்கிறோம்.

சற்றுமுன் குழுவில் இணைந்து செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் பதிவர்களை சற்றுமுன் அன்புடன் வரவேற்கிறது. satrumun at gmail dot com என்ற முகவரிக்கு மடல் செய்யவும்.

satrumun.comல் சந்திப்போம்.

Friday, August 31, 2007

சேதுசமுத்திரம் திட்டத்திற்கு இடைக்கால தடை

உச்சநீதிமன்றத்தில் இன்று சேது சமுத்திரம் திட்டத்தில் ராம் சேது எனப்படும் மணற்பரப்பை பாதிக்காமல்
அகழ்வுப் பணி தொடரலாம் என்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தடை செப்.14வரை இருக்கும். முழுவிவரம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறது இந்த ரீடிஃப் செய்தி

Saturday, August 18, 2007

திருமணம் வாழ்த்து !!!

தமிழூற்று மாஹிர் திருமணம்இன்று மாலை 4 மணியளவில் அவரது சொந்த ஊரான அதிராம்பட்டினத்தில் நடைபெறுகிறது.


இவர் மறைந்த தேனி உமர்தம்பி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் எல்லா வளங்களும் நலமுடன் பெற்று வளமுடன் வாழ சற்றுமுன் குழு மனதாரவாழ்த்துகிறது.


மாஹிர் அலைப்பேசி எண் : 9444289450

Wednesday, August 15, 2007

சற்றுமுன் 1000 போட்டி முடிவுகள்்

சுதந்திர தின சிறப்புக் கொண்டாட்டமாக சற்றுமுன் போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

போட்டி முடிந்து பல நாட்கள் கழிந்துவிட்டன. சற்றுமுன் 2500 பதிவுகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தாமதமானாலும்.. இதோ போட்டி முடிவுகள் வந்துவிட்டன.

எதிர்பார்த்த அளவுக்கு பங்களிப்பு இல்லை என்றே நினைத்தோம். செய்திவிமர்சனம் என்பது பதிவர்களுக்கு எளிதாய் வரவேண்டிய ஒன்று. ஒரு மாத காலத்தில் ஏதேனும் ஒரு செய்தி நம்மை பாதிக்கும். அதுகுறித்து குறைந்தது இரண்டு கருத்துக்களாவது நமக்குத் தோன்றும். அதை உங்கள் பாணியிலே எழுத வேண்டியதுதான் மிச்சம். உலக அரங்கில் வலைப்பதிவர்களில் பெரிதாக கவனிக்கப்படும் விதயங்களி ஒன்று செய்தி விமர்சனம்.

அதிக பங்கெடுப்பு இல்லை என்பதால் பரிசு அறிவிப்பில் சில (நல்ல) மாற்றங்களைக் கொண்டு வந்து எல்லோருக்கும் சிறப்பான பரிசுகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.


முதல் பரிசு சேவியர் - தலைமுறையை முடமாக்கும் குளிர்பானங்கள்
ரூ. 2500 மதிப்புள்ள புத்தகங்கள்



இரண்டாம் பரிசு வெயிலான் கனியா கனி்களும், கண்ணாடி கனவுகளும்…..
ரூ. 1750 மதிப்புள்ள புத்தகங்கள்



மூன்றாம் பரிசு 1 சி.வி.ஆர் வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4
ரூ. 1000 மதிப்புள்ள புத்தகங்கள்




மூன்றாம் பரிசு 2 உண்மைத் தமிழன் அடுத்த ஜனாதிபதி யார்? கட்சிகள் போடும் ஜிங்சாங்.. ஜிங்சாங்..
ரூ. 1000 மதிப்புள்ள புத்தகங்கள



ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் இரண்டு படைப்புக்களுக்கு ரூ500 வீதம் பரிசுக்கள் அறிவித்திருந்தோம். போட்டி வலுவாயில்லாததாலும் இந்த முயற்சியில் தனித்தன்மையோடு வந்து பங்களித்தவர்கள் எல்லோருமே வெற்றியாளர்கள் என்கிற உண்மையை விளக்கவும் பங்களித்த எல்லோருக்குமே ரூ. 400 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு.

போட்டியில் பங்கெடுத்து பரிசுபெறுபவர்கள்.
பெனாத்தல் சுரேஷ்(விக்கி பசங்க சார்பில்)
நாகை சிவா
லோகேஷ்
கதிரவன்
வெட்டிப்பயல்
ஷைலஜா
சந்தோஷ்
சத்தியா
வவ்வால்
தென்றல்
இலவசக் கொத்தனார்
மகேஷ்
உலகம் சுற்றும் வாலிபி
ஜீ
அருண பாரதி
இளா

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டி சிறக்க முயற்சிகள் மேற்கொண்ட சற்றுமுன் குழு நண்பர்களுக்கு நன்றி. எங்களோடு பரிசுகளை வழங்க முன்வந்த மாற்று குழுவுக்கு நன்றி. புத்தகங்களை வழங்க முன்வந்திருக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கும் நன்றி.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Sunday, August 5, 2007

ச: சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஆரம்பமானது.

சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆதரவுடன் நடைபெறும் தமிழ்வலைப்பதிவர் பட்டறையில். ஆர்வமுடன் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களும் வலைப்பதிவாளர்களுமாக பட்டறை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கீழ் அரங்கில் கலந்துரையாடல்களும் மேல்மாடியில் பட்டறை பயிற்சிகளும் நடைபெறுகின்றன.

பட்டறை நிகழ்வு புகைப்படங்கள்(அரங்கிலிருந்து பாலபாரதி...)



Wednesday, August 1, 2007

ச: சென்னை கமிஷனராகிறார் நாஞ்சில் குமரன்.

சென்னை கமிஷனராக இருந்த லதிகா சரண் திடீரென மாற்றப் பட்டு நாஞ்சில் குமரன் ஐபிஎஸ் புதிய கமிஷனதாக நியமிக்கப் பட்டுள்ளார்.

நீதிமன்றத்தினுள் கைதிகள் தர்ணா..

கோவையில் பரபரப்பு.
கோவையில் நீதி மன்றத்திற்கு விசாரணைக்காக கொண்டுவரப்பட்ட கோவை குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட கைதிகள் இன்று நீதி மன்றத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்ல மறுத்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 103 வது எதிரியாக கடந்த எட்டு வருடங்களாக சிறையில் உள்ள ஷெரிஃப் (வயது 26) என்பவருக்கு கோவை கலவரத்தில் முழங்காலில் குண்டுத்துகள்கள் பாய்ந்ததால் கடந்த எட்டு வருடங்களாக சிறையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் நிலைமை மோசமானதை அடுத்து, கோவை கங்கா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் உடனடியாக காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும், தவறினால் கால் அழுகி காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்ததால் கடந்த 31-05-2006 அன்று உடனடி சிகிச்சை மேற்கொள்ள விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசு தரப்பு இவருக்கு சிகிச்சை அளிக்க கூடாது என்று தடை உத்தரவு பெற்றது.

ஏற்கனவே முந்தைய அரசின் உதாசீனத்தாலும் சரியான சிகிச்சை அளிக்காததாலும் ஏற்கனவே கைதி ஒருவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் கைதிகளின் மருத்துவ சிகிச்சைக்கு எதிராக அரசு தரப்பு மனிதாபிமான அடிப்படையில்கூட செயல்படாமல் தடை உத்தரவுகளை பெற்றுள்ளதால் பல கைதிகள் உடல் உறுப்புக்களையும் உயிரையும் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று விசாரணைக்காக நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் சுமார் ஐம்பது பேர், அல் உம்மா சிறைவாசி கோவை முகம்மது அன்சாரி என்பவரின் தலைமையில் நீதி மன்றத்தை விட்டு சிறை திரும்ப மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோவையெங்கும் பரபரப்பாக காணப்பட்டது, காவல் துறையின் உயர் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் தொடர்நது கைதிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் கடந்த அரசின் அதே மெத்தனப்போக்கும், காழ்ப்புணர்ச்சியும் இப்போதும் தொடர்வதாகவும் இந்நிலை மாறவேன்டும் என்றும் மற்றும் கடந்த எட்டு வருடங்களாக தகுந்த சிகிச்சையில்லாமல் வாடிவரும் கைதிகளுக்கு உடனடி சிகிச்சையும் மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளும் வழங்க வேன்டும் என்றும் ஷெரிஃப் என்பவருக்கு உடனடியா விசாரனை நீதிபதியின் பரிந்துறையின்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வெளியேற மறுத்தனர்.

இரவு பத்தரை மணி வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையின் முடிவாக தாசில்தாரும் காவல்துறை அதிகாரிகளும் இரண்டு நாட்களில் இதுகுறித்து சரியான தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் கைதிகள் சிறைக்கு திரும்பினர். காலையில் இருந்து இரவு பத்தரை மணி வரை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாலும், கைதிகளின் உறவினர்களும் பொதுமக்களும் அதிக அளவில் கூடியதாலும் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.

Tuesday, July 31, 2007

சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 1993இல் மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்களின் போது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப் பட்டிருந்த வழக்கில் ஆறாண்டுகள் சிரைதண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. மும்பையின் தடா நீதிமன்றத்தின் நீதிபதி கோடே இந்திய ஆயுதங்கள் சட்டப்படி அவர் AK-56 மற்றும் பிஸ்தால் வைத்திருந்தது குற்றமாகும் என தண்டனை வழங்கினார். தனது நன்னடத்தையைக் கணக்கில் கொண்டு தண்டனையை தள்ளிவைக்க அவர் கொடுத்த மனுவை நிராகரித்து அவர் அடுத்தடுத்து குற்றம் புரிந்திருக்கிறார், அவர்மீது நான் பரிதாபப் பட்டாலும் சட்ட மேன்மைக்கே என் முன்னுரிமை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

DNA - Mumbai - Dutt sentenced to six years in jail - Daily News & Analysis

Friday, July 27, 2007

ஹனீஃப் மீது குற்றம் எதுவுமில்லை: ஆசி. காவல்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த மூன்று வாரங்களாக காவல்துறையினரால் 'விசாரிக்கப்'பட்டு வந்த இந்திய மருத்துவர்ஹனீஃப் மீது சாட்டப்பட்டிருந்த தீவிரவாதிகளுக்கு உதவியவர் என்ற குற்றசாட்டை விலக்கிக் கொள்வதாக அரசுவக்கீல் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். இவ்வழக்கை காமன்வெல்த் அரசு குற்றத்துறை இயக்குனர் (Commonwealth Director of Public Prosecution) மீள் ஆய்வு செய்து 'தவறு' நடந்திருப்பதாகக் கூறி வழக்கை விலக்கிக் கொண்டதாகக் கூறினார்.

இனி அவரது பணிவிசா இரத்து செய்யப்பட்டதும் விலக்கிக் கொள்லப்படுமா என தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை முற்றிலும் சரிசெய்துகொண்டே திரும்ப உறுதியாக உள்ளனர்.

Terrorism charges against Haneef dropped

Wednesday, July 18, 2007

சற்றுமுன்: பிரேசில் விமான விபத்தில் 176 பேர் பலி?

பிரேசிலில் சம்பவித்த விமான விபத்தில், விமானப்பயணிகள் 176 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குறுகிய ஓடுபாதை கொண்ட Congonhas விமான நிலையத்தில் இத்துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு.... யாஹு

மேலும்: தினமலர் செய்தி

Wednesday, July 4, 2007

இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம்.

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் சென்னை திருச்சி திருநெல்வேலி மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துக்கொண்டு இடஒதுகீடு வலியுறுத்தி கோஷமிட்டனர் இதனால் போராட்டம் நடைப்பெரும் பகுதிகளில் ஏராளமான போலிசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அலைப்பேசி வாயிலாக... ராஜீக்

Tuesday, July 3, 2007

த மு மு க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

அமெரிக்க போர் கப்பலின் (நிமிட்ஸ்) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை சரியாக 4மணியளவில் சென்னை துறைமுகம் எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இவ் ஆர்பாட்டத்தில் 500க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர் ஆர்பாட்டத்திற்க்கு மாநில தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமைவகித்தார் பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி துனைத்தலைவர் அப்துல்ஜலீல் மாநில செயலாளர் ஜே. எஸ். ரிஃபாய், அ. சாதிக் பாஷா, எஸ். முஹம்மது ஜைனுலாப்தீன், எம். தமீமுன் அன்சாரி,பி. அப்துஸ் சமது, துனை செயலாளர்கள் எஸ் எஸ். ஹாரூன் ரஷீது ஜெ. ஹாஜா கனி மற்றும் ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்துக்கொண்டனர் பின்னர் செதியாளர்களுக்கு அதன் தலைவர் அளித்த பேட்டியில்...... அமெரிக்காவின் நேச நாடுகளான ஆஸ்த்திரேலியா ஜப்பான் போன்ற நாடுகள் கூட தங்கள் மக்களின் பாதுக்காப்பை கருதி இந்தக்கப்பலை தங்கள் கடல் எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. அமெரிக்க போர்கப்பலில் வருபவர்களை மகிழ்விக்க சென்னைக்கு ஆயிரக்கணக்கான விலை மாதர்களை வரவழைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி நம்மையெல்லாம் வெட்கி தலைகுனிய வைத்துள்ளது என்றார்.

சற்று முன்க்காக.... நண்பர் அதிரை ரவூஃப்.

Thursday, June 21, 2007

சென்னைRSSஅலுவலகம் குண்டுவெடிப்பின் தீர்ப்பு.

சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலகம் குண்டு வெடிப்பின் தீர்ப்பு இன்று மாலை சரியாக 3.45. மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பலிக்கப்பட்டது இதில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் மூவருக்கு ஆயுல் தண்டனை வழங்கப்பட்டது.
விடுதையானவர்கள் விபரம்:
கோவை பாஷா
முக்தார்
அஸ்லாம்
அமீன்
ஆயுல் தண்டனைப்பெற்றவர்கள் விபரம்:
மேலப்பாளையம் அபூபக்கர்சித்திக்

இமாம் அலி கூட்டாளி ஹைதர்அலி
மேலப்பாளையம் முன்னால் கவுன்சிலர் ராஜாநஜ்முதீன்.
ஆகியோர்களூக்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பத்திரிக்கை யாளர்களும் பொதுமக்களும் திரளாககாத்திருந்தனர்.

சற்றுமுன்க்காக.கோர்ட்வளாகத்திலிருந்து.... அதிரைஹிதாயத்,

Wednesday, June 13, 2007

ஜெ மீது நடவடிக்கை : நீதி மன்றம் உத்தரவு

2001ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு இடத்தில் போட்டியிட்டதற்காக அ.இ.அ.தி.மு.கவின் பொதுச்செயலாளார் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 'சற்றுமுன்' உத்தரவிட்டிருக்கிறது.

Thursday, June 7, 2007

சற்றுமுன் -1500

பிப்ரவரி 15 - சற்றுமுன் பிறந்த நாள்
மே 8 - ஆயிரம் பதிவுகளை எட்டிய 83 வது நாள்
மே 25 - 1250 பதிவுகளைக் கடந்த 100 வது நாள்
ஜூன் 7 - 1500 பதிவுகளை எட்டிய 113 வது நாள்

Wednesday, June 6, 2007

சற்றுமுன் 1000 போட்டி மாற்றங்கள் - அறிவிப்பு

அதிகம்பேர்் பங்கேற்கும் வகையில் சற்றுமுன் 1000 போட்டி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.

செய்தி விமர்சனக் 'கட்டுரை' என்பதற்குப் பதில் கவிதை, கதை, குறும்படம், குரல்பதிவு(Pod casting) என எல்லா வடிவங்களிலும் செய்தியின் அடிப்படையில் பின்னப்பட்ட படைப்புக்களை வரவேற்கிறோம்்கிறோம். படைப்புக்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வகைபபாடுகளின்்டுகளின் கீழ் வரவேண்டும்.

போட்டிக்கான வகைகள்:-

அரசியல்
சமூகம்
அறிவியல் /நுட்பம்
விளையாட்டு
பொருளாதாரம்/வணிகம்

பரிசுத் தொகை மாற்றங்கள்.

மொத்தபரிசுகள்: -

1. மொத்தத்தில் முதல் பரிசு ரூ . 2500/- மதிப்புள்ள புத்தகங்கள் (முன்பு 1500)

2. மொத்தத்தில் இரண்டாம் பரிசு ரூ . 1750/- மதிப்புள்ள புத்தகங்கள்.(முன்பு 1000)

3. மொத்தத்தில் மூன்றாம் பரிசு ரூ . 1000/- மதிப்புள்ள புத்தகங்கள்.(முன்பு 500)

ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் பரிசுகள் :-

இதன் கீழ் மொத்தம் 10 பரிசுகள், ஒவ்வொன்றும், ரூ.500/- மதிப்புள்ள புத்தகங்கள். (முன்பு 15 பரிசுகளாக இருந்தது)

வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு ரூ. 750/- பரிசு (இது வலைப்பதிவர்களுக்கு மட்டுமான பரிசு) - (முன்பு 500)

போட்டியில் பங்கேற்கும் முதல் 50 பேருக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது.
போட்டிக்கு படைப்புக்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 30.

மேற்கூறிய மாற்றங்கள் அல்லாத மற்ற விதிகள் முன்பு அறிவித்தவாறே இருக்கும்.

Monday, June 4, 2007

சர்வதேச தொழிலாளர் மாநாடு - சற்றுமுன் நேரடிச் செய்தி!

சிலி நாட்டு அரச அதிபர் மாண்புமிகு. Ms. Michelle Bachelet அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்து உரையாற்றினார்.

ஜெனிவா நகரில் ஐக்கிய நாட்டு சபை வளாகத்தில் நடந்து வருகிற சர்வதேச தொழிலாளர் மாநாடு பொது அமர்வில் இன்று இந்திய நேரம் மதியம் 02.00 மணிக்கு சிலி நாட்டு தலைவர் வருகை தந்தார். அவரது உரையில் "சம உரிமையுடன் கூடிய வளர்ச்சி, சமூகநீதியுடன் கூடிய முன்னேற்றம்" நமக்கு தேவை என குறிப்பிட்டார்.

மேலும் விவரங்கள் இன்னும் சில நிமிடங்களில்.

இன்னும் சில நிமிடங்களில் கானா நாட்டு அதிபர் வருகை தருகிறார்.

=திரு=

Sunday, June 3, 2007

ச: தினமலரில் சற்றுமுன்....& சென்னையில் "போட்காஸ்டிங்' கலந்துரையாடல்

வெப்சைட்களில் எழுதி போரடித்துப் போனவர்கள்... இப்போது தங்கள் குரல் ஒலிபரப்பவும், பதிவு செய்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் விருப்பப்படுகின்றனர்.

ஒரு ரேடியோ ஸ்டேஷன் செய்ய வேண்டிய வேலையை இப்போது இன்டர்நெட் எளிதில் செய்துவிடுகிறது. ஒவ்வொரு வரும் தங்களது நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப (போட்காஸ்டிங்) அல்லது ஒளிபரப்ப (வீடியோ பிளாக்) இன்டர்நெட் உதவியை நாடுகிறார்கள். இலவசமாக எளிதில் ஒவ்வொருவருவரும் ஒரு வெப்ரேடியோ உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு சென்னையில் ஜூன் 910ம் தேதிகளில் டைடல் பார்க்கில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் போட்காஸ்டிங் தொடர்பான சந்தேகங்களை தெளி வாக்கிக் கொள்ளவும், விவாதித்துக் கொள்ளவும் முடியும். நாலெட்ஜ் பவுண்டேஷன் சார்பில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு: http://podworks.in/

[இந்தச் செய்தி தினமலர் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த செய்தியுடன் பின்வரும் சற்றுமுன் குறித்த செய்தியும் அதே பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.]

"சற்றுமுன்' செய்திகள்

இப்போது பத்திரிகைகள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் இதுபோன்ற பிளாக்கர்கள் வலைப்பதிவர்களும் செய்யத் துவங்கிவிட்டனர். பத்திரிகையாளர்களுக்கு இணை யாக போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு நாளும் செய்தி, கட்டுரைகள் எழுதுவோர் அதிகரித்துவிட்டனர். http://satrumun. blogspot.com இந்த தளத்தில் ஹெல்மட் போன்ற அன்றாட நாட்டு நடப்பு முதல் அரசியல் வரை அலசப்படுகிறது.

Tuesday, May 29, 2007

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு,

சென்னை மாணவிகள் சாதனை.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான்-நிகோபர் தீவுகள், டாமன்-டையூ, லட்சத்தீவுகள் ஆகியவை உள்ளன. சென்னை மண்டலத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் சென்னை மாணவ, மாணவிகள் இரண்டாவது, மூன்றாவது இடங்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.சென்னை கோபாலபுரம் டிஏவி பெண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவி ச.திவ்யா 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மண்டலத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். இதே பள்ளியில் படிக்கும் ச.ராஜேஸ்வரி 489 மதிப்பெண்கள் பெற்று நான்காவது இடம் பிடித்தார்.சென்னை முகப்பேர் டிஏவி பெண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவி பா.சவுமியா 491 மதிப்பெண்கள் பெற்று மண்டலத்தில் மூன்றாம் இடம் பெற்றார். இதேபோல், சென்னை கோபாலபுரம் டிஏவி ஆண்கள் முதுநிலை மேனிலைப்பள்ளி மாணவர் நவனீத் நாயர் 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை சற்றுமுன் மனதார பாராட்டுகிறது. சிறந்த துறைகளை தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அதேசமயம், தேர்ச்சிபெறாமல் போன மற்ற மாணவ/மாணவிகள் தொடர்ந்து தங்கள் கல்வி கற்கவும் பெற்றோர்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து கல்வி புகட்ட சற்றுமுன் கேட்டுக்கொள்கிறது.

Sunday, May 20, 2007

சற்றுமுன்: கோவை சந்திப்பு படங்கள்


மாண்டலின் ஆறுமுகம் அய்யாவை நேர்காணல் செய்யும் பதிவர்பாமரன்.


பட்டறையில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி.




பட்டறையில் கலந்து கொண்டவர்களில் இன்னொரு பகுதி.

-o❢o-

b r e a k i n g   n e w s...