Tuesday, August 14, 2007
89% பேர் மீண்டும் இந்தியர்களாகப் பிறக்க விருப்பம்
தேசத்தின் அறுபதாவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களை முன்வத்து ஏ.சி. நீல்சன் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பின்படி 89% இந்தியர்கள் வாய்ப்பிருந்தால் மீண்ட்டும் தாய்நாட்டிலேயே பிறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பிறக்க விருப்பமில்லை எனத் தெரிவித்த 11% பேர் 15-25 வயதுக்குட்பட்டவர்கள்.
15% மட்டுமே இந்தியாவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வியாபாரம் உயர்ந்துள்ளது 57%
அறிவியல் தொழில் நுட்பம் உயர்ந்துள்ளது 43%
கல்வி உயர்ந்துள்ளது 19%
அரசியலில் முன்னேற்றமில்லை 39%
மொத்தம் பங்கெடுத்தவர்கள் 380பேர்.
9/10 Indians want to be reborn as Indians
Indians perceive most growth in biz & commerce sector: Nielsen Study
்
Posted by சிறில் அலெக்ஸ் at 8:34 PM 4 comments
வட கொரியாவில் வெள்ளத்தால் பெருத்த சேதம்
வட கொரியாவில் தொடர் மழையால் பெருக்கெடுத்த வெல்ளத்தால் பலத்த உயிர், பொருள் சேதம் ஏற்பட்டிருப்பதாக செஞ்சிலுவை சேவை நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. குறைந்தது 200 பேராவது இறந்தோ காணாமலோ போயிருக்கிறார்கள்.
ஒரு லட்சம் ஹெக்டேர் அளவுள்ள விவசாய நிலங்கள் வெள்ளத்தால் அழிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே ஏழைநாடான வட கொரியா தன் மக்களுக்கு உணவளிக்க ஒரு வருடத்திற்காவது சிரமப்படவேண்டியிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Red Cross: 200 dead or missing in North Korea floods - The Hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 5:50 PM 0 comments
மும்பை அவுட்லுக் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது
பால் தாக்ரேயை வில்லன்களின் பட்டியலில் சேர்த்து கட்டுரை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெர்வித்து சிவ சேனாவினர் மும்பை நரிமன் பாயிண்ட்டில் இருக்கும் அவுட்லுக் அலுவலகத்தை தாக்கினர்.
அவுட்லுக் வெளியிட்டிருக்கும் வில்லங்கள் பட்டியலில் காந்தியைக் கொன்ற கோட்சே, நரேந்த்ர மோடி, முன்னாள் கிரிக்கட் வீரர் முகமது அசாருதீன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். பால் தாக்ரே ஹிட்லர் போல சித்தரிக்கப்பட்டிருந்தார்.
Shiv Sena activists ransack Outlook office in Mumbai The Hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 5:38 PM 0 comments
தென்காசியில் திடீர் கலவரம்.
நெல்லை மாவட்டம் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்து கோவில் அருகே மசூதி கட்டக்கூடாது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதையடுத்து எதிர் தரப்பை சேர்ந்த மைதீன் சேட்கான் என்பவர் வெட்டப்பட்டார்.
இவ்வாறு மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று நடந்த சண்டையில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் இன்று காலை 10 மணி அளவில் தென்காசி போலீஸ் நிலையத்துக்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். முத்தாரம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்தரப்பை சேர்ந்த சிலர் காரில் வந்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி (35), ரவி, சேகர் (குமார் பாண்டியனின் தம்பி) ஆகிய 3 பேர் ரத்தவெள்ளத்தில் பிண மானார்கள். படுகாயம் அடைந்த நசீர் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குமார் பாண்டியனின் தம்பி செந்தில், நாகூர்மீரான் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மோதலில் சையது அலி (25), அப்துல்லா (30), அபு (27), ராஜா (36), மீரான் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடைகள் அடைக்கப்பட்டன வியாபாரிகளும், பொது மக்களும் பதறியடித்துக் கொண்டு ஓடினர். வீடுகளில் இருந்தனர்கள் கதவை பூட்டிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அசம்பாதங்கள் ஏற்படாமல் இருக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்-ஆட்டோக் களும் ஓடவில்லை. இதனால் வெளிவூர் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் தென்காசி விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Posted by Adirai Media at 5:08 PM 2 comments
மக்களவையில் அமளி: தெற்கு இரயில்வே பிரிவினை
இன்று கேரள எம்பிக்கள் மக்களவையில் தெற்கு இரயில்வேயின் நிர்வாக சீரமைப்பு குறித்து ஏற்படுத்திய அமளியை அடுத்து அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை 20 நிமிடங்களுக்கு தள்ளிவைத்தார். கேள்விநேரத்தை இரத்து செய்து இப்பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் எழுப்பிய கோரிக்கையை நிராகரித்த அவைத்தலைவர் அவர்களது நடத்தையை கடுமையாக விமரிசித்தார்.
மேலும் ...The Hindu News Update Service
Posted by மணியன் at 2:31 PM 3 comments
முன்னாள் தினமணி ஆசிரியர் சம்பந்தம் மறைவு
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் செய்தித்துறை தலைவராகவும் தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய ஆர் எம் டி சம்பந்தம் இன்று காலை தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த மூன்று வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார்.
தனது இதழியல் பணியை அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு நாளிதழில் துவங்கினார். பின் இந்தியன் எக்ச்பிரஸ் நாளிதழிற்கு மாறினார். அக்குழுமத்தின் நாளிதழான தினமணியின் ஆசீரியராகவும் பணியாற்றினார். தன் பணிக்காலத்தில் அரசியல் தலைவர்களான கு.காமராஜ், பெரியார் ஈ வெரா, அண்ணாதுரை, தற்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
அவரது விருப்பப்படி அவரது உடல் ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்படுவதாக குடும்பத்தினர் கூறினர்.
The Hindu News Update Service
Posted by மணியன் at 2:20 PM 2 comments
மாரத்தான் சிறுவனின் பயிற்சியாளர் கைது
மாரத்தான் சிறுவன் புத்தியா சிங்கின் பயிற்சியாளர், தன்னை கொடுமைக்குள்ளாக்கினார் என அவன்ன் தந்த புகாரின் எதிரொலியாக பயிற்சியாளர் பிரஞ்சி தாஸ் கைது செய்யப்பட்டார்.
தாஸ் புத்தியாவும் அவன் தாயும் பிறர் தூண்டுதலின்பேரில் இந்தப் புகாரைக் ஏழுப்பியுள்ளதாகவும் இதுவரை கிடைத்த நன்கொடை ரூ1.32 இலட்சத்தில் பெரும்பகுதி புத்தியா சிங்க்குக்கே செலவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Budhia’s coach arrested on charges of torture - The Hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 2:21 AM 0 comments
தொடரை வென்றது இந்தியா - மூன்றாவது போட்டி சமன்
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து சமன் செய்தது. 1-0 வெற்றியுடன் இந்தியா தொடரை வென்றது.
England offer stubborn resistance - Rediff
Posted by சிறில் அலெக்ஸ் at 2:03 AM 0 comments
b r e a k i n g n e w s...