.

Thursday, August 23, 2007

இம்ரான் கானுக்கு மீண்டும் திருமணம்.

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் இம்ரான்கான் ஜெமிமா என்ற வெள்ளைக்காரப் பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர் மூலம் சுலைமான், காசிம் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

அவர்களுக்குள் கருத்து வேருபாடு ஏற்பட்டது. இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர்.

இதையடுத்து இம்ரான்கான் இப்போது மீண்டும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார். இந்தத் தடவை பாக்கிஸ்தான் பெண்ணையே மணக்க அவர் விரும்புகிறார். இதற்காக பெண் தேடும் படலம் நடந்து வருகிறது. விரைவில் திருமணம் நடைபெறும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

மாலைமலர்

அமெரிக்க ஓபன்: சானியாவுக்கு தரவரிசையில் 26ம் இடம்





அமெரிக்க ஓபன் டென்னிஸ்தொடருக்கான தரவரிசையில் சானியாவுக்கு 26வது இடம் அளிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றின் தரவரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.

ஆந்திராவில் யுரேனிய சுரங்கம்.

ஆந்திராவில் 1,106 கோடி ரூபாய் செலவில் யுரேனிய சுரங்கம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், அணு உலைகளின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். கட்டுமானங்கள் 30 மாதங்களில் முடிக்கப்பட்டு, சுரங்கம் 36 மாதங்களில் தனது உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் வருகிறது அமெரிக்கப் போர் கப்பல் 'நிமிட்ஸ்'

"அமெரிக்க போர்க்கப்பல் "நிமிட்ஸ்', அடுத்த மாதம் மீண்டும் இந்தியாவுக்கு வரும்' என்று அக்கப்பலின் கமாண்டர் ஜான் டெரேன்ஸ் பிளேக் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த "நிமிட்ஸ்' கப்பல், உலகின் பெரிய போர்க்கப்பல்களில் ஒன்று. அணுசக்தியால் இயங்கும் இந்த கப்பலில் இருந்து கதிர் வீச்சு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. அதனால், இக்கப்பல் இந்தியாவுக்கு வருவதற்கு, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், கடந்த மாதம் சென்னை துறைமுகம் அருகே, இந்தக் கப்பல் நான்கு நாட்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் கிளம்பிச் சென்றது.இந்நிலையில், "தற்போது ஹாங்காங்கில் முகாமிட்டுள்ள நிமிட்ஸ் கப்பல், அடுத்த மாதம் முதல் வாரத்தில், வங்காள விரிகுடா கடலில், இந்திய எல்லைப் பகுதியில் நிறுத்தப்படும். அங்கு, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 25 கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடும். இந்த பயிற்சி வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். இதன் மூலம், சம்பந்தப்பட்ட நாடுகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த அமெரிக்கா உதவும்' என்று அக்கப்பலின் கமாண்டர் ஜான் டெரேன்ஸ் பிளேக் தெரிவித்தார்.

தினமலர்

பாராளுமன்றம்: அமளியில் ஈடுபட்டால் தினப்படி இனி கிடையாது

பாராளுமன்ற அவைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தினமும் ஏதாவது ஒரு காரணத்துக்காக அமளியில் ஈடுபடுவதும், கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவதும், சபையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதுமாக இருந்து வருகின்றனர். இதனால், கேள்வி நேரம் உட்பட சபை அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. லோக்சபா சபாநாயகராக முன்பு பாலயோகி இருந்த போது, இப்பிரச்னை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. சபையின் மையப் பகுதிக்குள் எம்.பி.,க்கள் நுழைந்தாலே அவர்கள், "இடைநிறுத்தம்' செய்யப்பட்டதாக கருதப்படுவர் என்ற நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ இது கைவிடப்பட்டது.

தற்போது, சபாநாயகராக இருக்கும் சோம்நாத் சட்டர்ஜி, தினம் தினம் சபை அலுவல்கள் பாதிக்கப்படுவதால், கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளார். சபையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாவிடில், சபையை நடத்துவதற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள 10 மூத்த உறுப்பினர்களுடன் கடந்த ஜூன் மாதம் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. "பணி இல்லாவிடில் பணமும் இல்லை' என்ற அடிப்படையில், கூட்டத் தொடர் நடக்கும் போது உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் தினப்படியை, அமளி ஏற்படும் நாட்களில் பிடித்தம் செய்யலாம் என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.

பா.உறுப்பினர்களுக்கு தற்போது தினப்படியாக ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. அமளியால் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டு விட்டாலும், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டால், இந்த பணம் கிடைத்து விடும். ஆனால், இனிமேல் அமளியில் ஈடுபடுவோருக்கு ஆயிரம் ரூபாய் தினப்படியை பிடித்தம் செய்வது என்ற முடிவில் சோம்நாத் சட்டர்ஜி உறுதியாக உள்ளார்.

சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவது அவரை கடுமையாக கவலை அடைய செய்துள்ளது. இதுநாள் வரை, அமைதியாக இருக்கும்படி அன்பாக வேண்டுகோள் விடுத்தபடி இருந்த சோம்நாத் சட்டர்ஜி, சில நாட்களுக்கு முன் கேரள எம்.பி., தாமஸ் மீது நடவடிக்கை எடுத்தே விட்டார். ஒரு பிரச்னைக்காக அரசிடம் விளக்கம் கேட்டு தாமஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அரசு பின்னர் விளக்கம் அளிக்கும் என்று சபாநாயகர் கூறிய பிறகும், தாமஸ் இருக்கையில் அமராமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர், 373 விதியை பயன்படுத்தி, தாமசை சபையில் இருந்து வெளியேற்றினார்.

ஒழுங்கீனமாக நடக்கும் எம்.பி.,க்களை சபையில் இருந்து வெளியேற்றும் அதிகாரம் 373 விதியின் கீழ் சபாநாயகருக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 374 ஏ விதியின் கீழ் அமளியில் ஈடுபடும் எம்.பி.,க்களை நாள் முழுவதும், "சஸ்பெண்ட்' செய்யவும் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரங்களை பயன்படுத்த சோம்நாத் சட்டர்ஜி முடிவு செய்துள்ளார். இதற்காக அவரது ஆலோசனையின்படி இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. இதில், சபையை அமைதியாக எப்படி நடத்துவது, ஒழுங்கீனமாக செயல்படும் எம்.பி.,க்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளது.

தினமலர்

தனி இரயில்வே மண்டலம் கோருகிறது கேரளா

தெற்கு இரயில்வேயை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு தனி மண்டலம் அமைக்க வேண்டும் என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலுவிடம் கேரள முதல்வர் அச்சுதானந்தன் திடீர் கோரிக்கை வைத்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு ரயில்வே கோட்டத்தை இரண்டாக பிரித்து சேலம் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்கப்படும் என்று பார்லிமென்ட்டில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது தற்காலிக அலுவலகம், சிக்னல்கள் அமைப்பது போன்ற பணிகளுக்காக ரூ.மூன்று கோடியில் பணிகள் முடிந்துள்ளன.

புதிய கோட்டத்தை வரும் செப்டம்பர் 14ம்தேதி தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கேரள எம்.பி.,க்கள் பார்லிமென்ட்டில் அமளி செய்தனர். இதைத்தொடர்ந்து பேசிய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் "இரு மாநில முதல்வர்களுடன் பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்று கூறினார். இதற்கு தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதற்கிடையில் டில்லியில் இன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தை கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் சேலத்தில் ரயில்வே கோட்டம் தொடங்கப்பட்டால், தெற்கு ரயில்வேயை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு என்று தனி ரயில்வே மண்டலம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்து கூறிய லாலு, இரு மாநில முதல்வர்களுடன் பேச்சு நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.

தினமலர்

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கிளை அலுவலகம் : சென்னையில் துவங்கப்படுகிறது

சென்னை : வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கிளை அலுவலகம் வரும் சனிக்கிழமை சென்னையில் தொடங்கப்படுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் துவக்க விழாவில் பங்குபெறுகின்றனர். டெல்லியைத் தவிர்த்து நாட்டின் மூன்றாவது கிளை அலுவலகமான இதன் மூலம் தென்மாநிலங்களில் உள்ளோர் வெளியுறவு அமைச்சகத்தை சிறப்பான முறையில் தொடர்பு கொண்டு சேவையை பெற முடியும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திக்கு "தினமலர்" செல்லவும்.

தலையில் விழுந்த சூட்கேஸ்-ரூ.1 லட்சம் நஷ்டஈடு தர ஏர்-இந்தியாவுக்கு உத்தரவு

விமானம் தரையிறங்கும் போது லக்கேஜ் பகுதியில் இருந்து பெட்டி ஒன்று பயணியின் தலையில் விழுந்ததற்காக அவருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு கொடுக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம், 7 வருடங்களுக்கு பின்பு தற்போது உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் தலையில் பெட்டி விழுந்ததற்கு இதுவரை ரூ.45,000 செலவழித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

விமானத்திற்குள் பயணிகள் எடுத்து செல்லும் ஹேண்ட் லக்கேஜ் 5 கிலோவுக்குள் இருக்குமாறு விமான நிறுவனங்கள் பார்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இது மாதிரியான அசம்பாவிதங்கள் நிகழ்வதை தவிர்க்கமுடியும் என்று அறிவுரை கூறி தீர்ப்பளித்தனர்.

தட்ஸ்தமிழ்: Passenger to get 'damage' money from Air-India

வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்


வங்கதேசதில் ராணுவ ஆதரவுடன் செயற்பட்டுவரும் அரசாங்கம், தலைநகர் டாக்காவிலும் நாட்டிலிருக்கும் வேறு ஐந்து நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி போராடிவரும் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை மோதல்களுக்கு நடுவே இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் நேரப்படி எட்டு மணிக்கு துவங்கும் இந்த ஊரடங்கு சட்டம் காலவறையறையின்றி நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு நகரங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் காலவரையறையின்றி மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக, ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய இந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் நூறுபேர் வரை காயமடைந்திருக்கிறார்கள்.

செய்தி: தமிழ் பிபிசி
படம்: New York Times

Curfew in Bangladesh quells street violence - International Herald Tribune

மாயாவதி அதிரடி: ரிலையன்ஸ் கடைகள் மூட ஆணை

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பத்து சூப்பர்மார்கெட்களையும் உடனடியாக மூடும்படி உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார். சிறுவணிகர்களின் கடந்தவார போராட்டங்களையடுத்து உபி அரசு இம்முடிவெடுத்துள்ளது.தான் அமைத்திருக்கும் உயர்மட்டக் குழு சிறுவணிகத்தை தாராளமயமாக்கும் பிரச்சினையை ஆய்ந்து முடிவு கூறும்வரை ரிலையன்ஸ் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று முதல்வர் கூறினார்.

Uttar Pradesh orders Reliance retail stores to close | Top News | Reuters

பள்ளி விடுமுறைக்காக கொலை செய்த மாணவர்கள்

மஹாராட்டிர மாநிலத்தில் பர்தூரில் பழங்குடி மக்களுக்காக சிறுவர் பள்ளி/விடுதி ஒன்றில் மூன்று பதின்ம வயது மாண்வர்கள் தங்கள் இளைய பள்ளித்தோழர்களை விடுமுறை கிடைக்கும் என்பதற்காக கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. ஜிப்யா காலே,வல்லப் காலே, நாம்தேவ் காலே ஆகிய மூவரும் 8 வயது அஷோக் காலே மற்றும் அவன் தம்பி ஐந்து வயது மங்கல் காலே இருவரையும் செவ்வாய் இரவு பக்கத்தில் இருந்த பண்ணைக்கு அழைத்துச் சென்று அவர்கள் மூச்சை நிறுத்தி கொன்றிருக்கிறார்கள். அங்கேயே படிக்கும் இறந்தவர்களின் சகோதரியின் புகாரின் பேரில் தேடத்தொடங்கிய ஆஸ்ரமமசாலை மேலாளர்கள் இருவரின் உடலையும் பள்ளி கழிவறையொன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பழங்குடி சிறுவர்களுக்காக நடத்தப்படும் அந்த விடுதியில் யாரேனும் இல்லவாசிகள் இறந்தால் 15 நாட்கள் விடுமுறை விடுவது பழக்கமாயிருந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவரும் இந்த விடுமுறைக்காகவே இக்கொலையை செய்ததாக கூறினர். காவலர்கள் பாலியல் குற்றங்களுக்காக கொலை நடக்கவில்லை என உறுதிப்படுத்தினர். பிரேத பரிசோதனையும் அதனை உறுதிசெய்துள்ளது.

இக்குழந்தைகளின் பெற்றொர் மும்பையில் கூலிவேலை செய்கின்றனர். தங்களால் ஆஸ்ரமத்தில் கிடைக்கும் வசதியை கொடுக்கமுடியாது என்பதால் சகோதரி இந்திராவை அங்கேயே வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

Khabrein.info

சஞ்சய்தத் ஜாமீனில் விடுதலை ஆனார்.

சஞ்சய் தத் இன்று காலை ஜாமீனில் விடுதலை ஆனார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக சஞ்சய்தத்தை ஜாமீனில் விடுதலை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சஞ்சய் தத்திற்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் நகலை தயார் செய்ய தாமதமானதால் நேற்று விடுதலை ஆக வேண்டிய அவர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் அவரை சிறை வாசலில் வந்து அழைத்து சென்றனர். இன்னும் ஒருமாத காலத்திற்கு அவர் வெளியே இருப்பார் என தெரிகிறது.

தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருது 2007

தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருது 2007


தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருதை இந்திய அரசு நிறுவியுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ( என்.ஜி.ஓ ) அல்லது மனித உரிமை போராளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோர் சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் அல்லது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் வன்கொடுமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை நிலைநாட்ட பணிபுரிந்த்திருக்க வேண்டும்.

ஆண்டுக்கு நான்கு விருதுகள் வழங்கப்படும். போராளிக்கு வழங்கப்படும் விருத்துதொகை இரண்டு இலட்சம். நிறுவனத்துக்கு வழங்கப்படும் தொகை ஐந்து இலட்சம்.

மேற்கண்ட துறைகளில் தீவிரமாக சேவை புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது மனித உரிமைப் போராளி என யாராவது ஒருவருக்கு வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதிகளை கணக்கில் கொண்டு மொத்தம் நான்கு விருதுகள் வழங்கப்படும். ஒரே பகுதியைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த விருது பகிர்ந்து கொடுக்கப்படலாம்.

இந்த விருது 2007 ஆம் ஆண்டு நிறுவப்படுகிறது. தொடர்ந்து ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்படும். இனம், பால், ஜாதி, மத அடிப்படையில் ஒடுக்குதல், வேறுபாடுகளைக் கடந்து இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை போராளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். சம்பந்தப்பட்ட அமைப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கும் அல்லது பரிந்துரை செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது மனித உரிமைப் போராளிகளின் முக்கிய பணிகளை ஒரு தேர்வுக் குழுவும், நீதிபதிகள் குழுவும் தீவிரமாக பரிசீலனை செய்யும்.

கூடுதல் விளக்கங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்

Shri R K Meena
Under Secretary
Room No 721 A
Shastry Bhawan
New Delhi
Tel : 011 23386981 / 23384918
www.socialjustice.nic.in

கடைசி தேதி : அக்டோபர் 31, 2007

-o❢o-

b r e a k i n g   n e w s...