.

Monday, April 2, 2007

இரத்த வகையை மாற்ற முடியும் - விஞ்ஞானிகள்

மனிதனின் இரத்த வகையை இனி மாற்ற முடியும் என விஞ்ஞானிகள் நிறுபித்துள்ளனர். எளிய முறையில் இதைச் செய்ய முடியும்.


"மேலும் செய்திக்கு The Hindu"

ச: உலக செஸ் தரவரிசையில் ஆனந்த் முதலிடம்!

லினாரஸில் நடைபெற்ற சூப்பர் கிராண்ட் மாஸ்டர் சர்வதேசப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்!

"வெப் உலகம்"

ச: இலங்கையில் பஸ் ஒன்றில் குண்டு வெடிப்பு

இலங்கையில் பஸ் ஒன்றில் குண்டு வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்;20 பேர் காயமடைந்தனர்.

கொழும்பிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அம்பாரா நகருக்கு வெளியே உள்ள ராணுவ சோதனை மையம் அருகில்,இன்று பஸ் ஒன்றில் இருந்து பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது.

இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர்.20 பேர் காயமடைந்தனர்.விடுதலைப்புலிகள்தான் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருப்பதாக இலங்கை போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

"Yahoo-Tamil"

ச: ஹீரோ ஹோண்டா 11% , மாருதி 14% விற்பனை உயர்வு

ஹீரோஹோண்டா நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த மார்ச் மாதம் 11.2 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை விற்பனையான ஹீரோஹோண்டா இரு சக்கர வாகன விற்பனையின் எண்ணிக்கை 2,77,915 ஆகும்.கடந்த ஆண்டு மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில்,இது 11.2 சதவீதம் அதிகமாகும்.

மொத்தத்தில் 2006-07 ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை 33,36,756 ஆகும்.

"Yahoo-Tamil"




மாருதி நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த மார்ச் மாதம் 13.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 63,196 வாகனங்கள் விற்பனையான நிலையில்,இந்த ஆண்டு மார்ச் மாதம் 71,772 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.அதேபோன்று உள்நாட்டு சந்தையில் கடந்த மார்ச் மாதம் 64,556 வாகனங்கள் விற்பனையாகி உள்ளது.

"Yahoo-Tamil"

ச: 2011ல் தமிழகத்தில் காங். ஆட்சி_ கிருஷ்ணசாமி

வரும் 2011ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


"Yahoo-Tamil"

ச: இட ஒதுக்கீடு:ஜெ.புகாருக்கு கருணாநிதி பதில்

இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மத்திய அரசு திறமையான வழக்கறிஞர்களை கொண்டு வாதாடவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,முந்தைய ஜெயலலிதா அரசு கொண்டுவந்த 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமல் பல இன்னல்களுக்கு உள்ளாக நேர்ந்தது என்றும்,இதற்கு ஜெயலலிதா அரசு நியமித்த வழக்கறிஞர்கள்தான் காரணம் என சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதுபோல நடித்துக் கொண்டு,அந்த கொள்கைக்கு மறைமுகமாக குழி தொண்டி கொண்டிருப்பவர்களை எப்போதுதான் இந்த நாடு அடையாளம் கண்டுகொள்ளப்போகிறதோ என்றும் அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.


"Yahoo-Tamil"

ச: உல்மர் கொலையில் திடீர் திருப்பம்

படுகொலை செய்யப்பட்ட பாக். பயிற்சியாளர் பாப் உல்மர் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உல்மருக்கு கொடிய ஆக்கனைட் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

உல்மர் கழுத்தை நெரித்து படு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடை பெற்று வருகிறது. இந்நிலையில் ஜமைக்கா போலீசாரின் வேண்டுகோளை ஏற்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் துப்பு கொடுத்திருப்பதாகவும், அதில் உல்மர், ஆக்கனைட் விஷத்தால் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப் பட்டிருப்பதாகவும் பிரிட்டன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியி ட்டுள்ளது.

"மேலும் செய்திக்கு மாலைச் சுடர்"

ச:மேலும் ஐந்து தகவல் தொழில்நுட்ப பூங்கா- கருணாநிதி

கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.


"
மேலும் செய்திக்கு மாலைச் சுடர்"

ச: 2 ரூபாய் நாணயத்தில் சிலுவை வடிவம்: சிவசேனா கண்டனம்



இந்திய ரிசர்வ் வங்கி சிலமாதங்களுக்கு முன்பு 2006 என்று பொறிக்கப்பட்ட புதிய 2 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. இதில் ஒரு புறத்தில் அசோகச் சின்னம், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்றும், 2 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சிலுவை வடிவம் ஒன்று பெரிய அளவில் காணப்படுகிறது.

நாணயத்தில் சிலுவை வடிவம் இடம் பெற்றிருப் பதற்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் நாக்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வழக்கமாக நம் நாட்டு நாணயத்தில் இந்திய வரைபடம் அசோக சின்னம்தான் பெரிதாகப் பொறிக்கப் பட்டிருக்கும். ஆனால் தற்போது அசோக சின்னத்தை சிறிதாகப் போட்டு விட்டு சிலுவை வடிவத்தை பெரிதாக பொறித்திருக்கிறார்கள்.இது இந்துக்களின் மனதைப்புண்படுத்துவதாக உள்ளது.அந்த நாணயங்களில் உள்ள சிலுவை அடையாளத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் நாங்கள் இந்து அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் போன்றவைகளுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

இதுபற்றி நான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனுடன் ஆலோசனை நடத்தினேன். அவரும் நாணயத்தில் சிலுவை பொறிக்கப்பட்டிருப்பதை சாதாரண விஷயமாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்து அமைப்புகள் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.ஏற்கனவே வெளியான நாணயங்களில் இந்திய வரைபடம்தான் பெரிய அளவில் இருந்தது. அந்த வரைபடத்தை நீக்கி விட்டு தீடீரென சிலுவை அடையாளத்தை பொறித்ததன் மர்மம் என்ன?

நாங்கள் இதுபற்றி பிரச்சினை எழுப்பினால் மதவாதிகள் இப்படித்தான் சொல்வார்கள் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனால் இது மதபிரச்சினை அல்ல. தேசிய பிரச்சினை.

- மாலை மலர்

ச: தமிழகத்தில் தடையற்ற மின்சப்ளை-ரூ.16 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்

தமிழகத்தில் தடையற்ற, நம்பகமான, தரமான மின்சாரம் கிடைப்பதற்கு ஐந்தாண்டு திட்டம் ஒன்றை தமிழக அரசும் தமிழ்நாடு மின்சார வாரியமும் நிறைவேற்ற உள்ளது. இதற்காக, ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கிறது. இதற்கான ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தின் எல்லா மின் நுகர்வோர்க்கும் தடையில்லாத, நம்பகமான, தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வடசென்னை, எண்ணு£ர், மேட்டூர், து£த்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் நிறுவுதிறனை 2500 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்க தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

இது தவிர நீலகிரி மாவட்டத்தில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற உள்ள இந்த நிறுவுதிறன் அதிகரிப்பு திட்டங்கள், அதிகளவு மின் உற்பத்தி செய்வது மட்டுமின்றி, மின் செலுத்துகை, வினியோகக் கட்டமைப்பு ஆகியவற்றை வலுவாக்கும். மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த திட்ட முதலீடு ரூ.16 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
-தினகரன்

நாமக்கல், ஈரோடு, களியக்காவிளையில் சரக்குகள் கோடிக்கணக்கில் தேக்கம்

நாமக்கல், ஏப். 2: கேரளத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, நாமக்கல், ஈரோடு மற்றும் குமரி மாவட்டங்களில் இருந்து இருந்து செல்லும் லாரிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் களியக்காவிளையில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால், கோடிக்கணக்கில் சரக்குகள் தேக்கமடைந்து உள்ளன.

கேரள மாநிலத்தில் இயக்கப்படும் அனைத்து லாரிகளிலும் ஏப்.1-ம் தேதி முதல் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

நாமக்கல்: கேரள மாநிலத்தில் லாரிகள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாமக்கல் பகுதியில் இருந்து கொண்டு செல்ல வேண்டிய 1.40 கோடி முட்டைகள், கறிக்கோழிகள், காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன.

நாமக்கல்லில் நாளொன்றுக்கு 2.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் கேரள மாநிலத்திற்கு மட்டும் 70 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

ஈரோடு: லாரிகள் ஸ்டிரைக்கால் ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரம் லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவே இங்கு லாரிகள் நிறுத்தப்பட்டன.

களியக்காவிளையில் சரக்குகள் தேக்கம்: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தினமும் 1500 சரக்கு லாரிகள் கேரளம் சென்று வருகின்றன. தற்போது லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், ரூ.50 லட்சம் மதிப்பிலான சரக்குகள் இங்கு தேங்கியுள்ளன.

காய்கறிகள், துணி வகைகள், முட்டைகள் என பல்வேறு பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிகள் கேரளம் செல்ல முடியாமல் வாளையார் சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக வாடகை கட்டணமாக மட்டும் தினமும் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் தெரிவித்தனர்.

திருப்பூரில் துணிகள் தேக்கம்: திருப்பூரில் இருந்து ஏற்றுமதி துணிவகைகள் கன்டெய்னர் லாரிகள் மூலம் கொச்சி துறைமுகம் வழியாக பெருமளவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். தினமும் 150 லாரிகள் வரை துணிகளை ஏற்றிச் செல்லும். இந்த ஏற்றுமதி பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் காய்கறிகள் தேக்கம்: கேரளத்தில் லாரி வேலைநிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. 100 டன்களுக்கு மேலாக காய்கறிகள் தேங்கியுள்ளன.

பொள்ளாச்சியில் லாரிகள் இயங்கவில்லை: பொள்ளாச்சியில் இருந்து தென்னை நார் பெரும்பகுதி கேரளம் வழியாக சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Dinamani

சத்தீஸ்கர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

ராய்ப்பூர், ஏப்.2 : சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவுன் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அந்த தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் தேவ்ராட் சிங், பாஜக வேட்பாளர் லீலாராம் போஜ்வானியைவிட 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராஜ்நந்தகாவுன் மக்களை தொகுதி பாரதீய ஜனதா வசமிருந்தது. அதை தற்போது காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

சற்றுமுன்: சென்னையில் தீவிபத்து

சென்னை ஏப்ரல் 2, 2007
சென்னை அண்ணாசாலையில் இருக்கும் ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் மராமத்துப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மூலம் தீப்பற்றிக் கொண்டது. தியேட்டர் வளாகத்திலிருந்த உமா ஆப்செட் ப்ரின்டர்ஸின் குடோனில் தீப்பிடித்து லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்து, தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தார் வந்து தீயை அணைத்தனர். உயிர்ச்சேதம் ஏதுவுமில்லை.

-- சற்றுமுன்னுக்காக லக்கிலுக்

ச:இடஒதுக்கீடு தீர்ப்பிற்கு எதிராக மும்பையில் சாலை மறியல்

உச்ச நீதிமன்றத்தின் உயர்கல்விஇடஒதுக்கீட்டை தள்ளிவைத்ததை எதிர்த்து மும்பையின் சமதா பரிஷத் தைச் சேர்ந்த 300 நபர்கள் மேற்கு விரைவு நெடுஞ்சாலையை மறித்து ஆர்பாட்டம் செய்தனர்.

Pro-quota activists storm Mumbai, block highway

ச:தொடர்ந்த விற்பனையால் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி

ஆட்டோ, வங்கிகள், கட்டுமானத்துறை பங்குகளின் விற்பனை நெருக்கடியை அடுத்து பங்குசந்தையின் எல்லா பங்குகளுமே இன்று விலை குறைந்துள்ளன. இன்று 2.01 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 504.77 புள்ளிகள் குறைந்து 12567.33ஆக இருந்தது. சென்செக்ஸின் 30 பங்குகளில் 29 விலை குறைந்திருந்தன.


Moneycontrol India :: News ::

ச: சாலமன் தீவுகளை சுனாமி தாக்கியது

தென் பசிபிக் நாடான சாலமன் தீவுகளை ரிக்டர் 8 அளவிலான கடலடி பூகம்பத்தினால் ஏற்பட்ட சுனாமி அலைகள் இன்று தாக்கியதில் ஒரு நகரம் அழிந்ததுடன் குறைந்தது மூவர் மரணமடைந்துள்ளனர்.் இதன் முன்னர் சுனாமி பற்றி கொடுக்கப் பட்டிருந்த அபாய அறிவிப்புக்கள் நேரம் கடந்ததை யொட்டி குறைந்த அபாயமானவையாக வெளியிடப் பட்டிருந்தது.



மேலும்.. Tsunami hits Solomon Islands, at least 3 killed | Jerusalem Post

ச:இருபது வருடங்களுக்குப் பிறகு ஆந்திராவில் மேலவை

இருபது வருடங்களுக்கு முன் ஒழிக்கப் பட்ட ஆந்திர மேலவை மீண்டும் புனரமைக்கப் பட்டு இன்று தனது முதல் நடப்பைத் துவங்கியது. சிபிஐ யைச் சேர்ந்த பி.நாகேஸ்வர ராவ் தற்காலிக அவைத்தலைவராக பொறுப்பேற்றதுடன் 90 அங்கத்தினர்கள் கொண்ட இந்த அவை அலுவலுக்கு வந்தது.


மேலும்...Zee News -

ச: வெய்யில்: கான் திரைப்படவிழாவிற்கு செல்லும் முதல் தமிழ்படம்

பசுபதி, பரத். பாவ்னா நடித்த இயக்குநர் வசந்தபாலனின் 'வெய்யில்' திரைப்படம் பிரான்ஸின் கான் நகர (Cannes Film Festival) திரைப்படவிழாவிற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மே 16-27 தேதிகளில் நடக்கவுள்ள இந்த விழாவில் உலக திரைப்படங்களுக்கான (Tous les cinemas du Monde) பகுதியில் திரையிடப்படும்.


Veyil: First Tamil film at Cannes

விண்டோஸ் அசைவூட்ட நிலை காட்டிகளில் ஆபத்து

விண்டோஸின் அசைவூட்ட நிலை காட்டிகள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்திருக்கிறது.

BBC NEWS | Technology | Users warned on Windows cursors: "Animated cursors could prove risky for Windows users, Microsoft has warned."

70 சூறாவளி, ஆறு மாகாணம், நால்வர் பலி - அமெரிக்கா



அமெரிக்காவின் டெக்சாஸ் உட்பட பல மாகாணங்கள் தொடர் சூறாவளித் தாக்குதலில் சிக்குண்டது. நான்கு பேர் இறந்தனர்.

70 tornados strike, killing 4 across US plains

பார்வையற்றவர்களுக்கான வீடியோ வசதி தயார்

கண் பார்வையில் குறையுடையவர்களும் இனிமேல் விழியங்களின் ஒலி மற்றும் ஒளித் தொகுப்புகளை மகிழுமாறு புதிய நுட்பத்தை ஐ.பி.எம் நிறுவனம் தயாரித்திருத்திக்கிறது. பார்வையற்ற ஆராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்து இருக்கிறார். விண்டோஸ் மீடியா ப்ளேயரிலும் ரியல் ப்ளேயரிலும் பார்க்கலாம். இது இலவசமாகக் கிடைக்கும்.

BBC NEWS | Technology | IBM helps blind 'see' web video: "Technology giant, IBM, is soon to launch a multimedia browser to make audio and video content accessible to people with vision impairments."

சிகரெட் விற்பனையில் சரிவு

சிகரெட்டுக்கான 33% வரி உயர்வினால், விற்பனை மந்தமாகி உள்ளது. மதிப்புக் கூட்டு வரியை 12.5 சதவிகிதமாக ஆக்கியதன் விளைவினால், புகை பிடித்தல் குறையும் என்று ஐடிசி கவலை தெரிவிதுள்ளது.

The Statesman :: ITC expects dip in cigarette sales

ரஷ்யக் கடைகளில் பணியாற்ற வெளிநாட்டவர்களுக்குத் தடை

ரஷ்யாவின் கடைகளிலும், சந்தைகளிலும் வெளி நாட்டவர் பணியாற்றுவதைத் தடை செய்யும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் மிகவும் அவசியமானது என்று ரஷ்ய அதிகாரிகள் வாதிட்டிருக்கிறார்கள்.

ரஷ்யர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கைகள் தேவையாக இருந்தன என்று அதிபர் பூட்டின் கூறியுள்ளார். ஆனால், இதனைக் கண்டனம் செய்வோர், அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில், மக்களைக் கவரும் ஒரு நடவடிக்கை இதுவென்று கூறியுள்ளனர்.

ரஷ்ய நடுவண் அரசின் வந்தேறு குடியேற்றப் பிரிவின் துணைத் தலைவர் பேசுகையில், ரஷ்யாவில் சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்க இந்தச் சட்டம் உதவும் என்றும், ஏற்கனவே குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுக்கு இது பாதுகாப்பு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

BBCTamil

நேபாள மாவோயிஸ்டுகள் அமைச்சரவையில் இணைந்தனர்

நேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்டு கிளர்ச்சியாளர்கள் இன்று அரசில் அமைச்சர்களாக பதிவியேற்றதை அடுத்து அங்கு நிலவி வந்த அரசியல் முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. அந்த நாட்டில் 10 ஆண்டுகளாக நிலவி வந்த இரத்தக் களரியான உள்நாட்டுப் போருக்கு முடிவு காண மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை அடுத்து, முன்னள் மாவோயிஸ்டுகள் ஐந்து பேர் இன்று அமைச்சர்களாகவும், ஒருவர் துணை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

அமைச்சு பொறுப்புகளை பங்கிட்டுக் கொள்வது குறித்து கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இருந்து வந்த இழுபறி காரணமாக புதிய அமைச்சரவை பொறுபேற்பது தாமதித்து வந்தது. நேபாளத்தில் உள்ள மொத்த 21 அமைச்சர்களில், மாவோயிஸ்டுகளுக்கு

  • செய்தித்துறை,
  • உள்ளூர் வளர்ச்சி,
  • திட்டமிடல்,
  • காடு வளர்ப்பு,
  • மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை
ஆகியன ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேபாளத்தில் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்கியுள்ளது என பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா கூறியுள்ளார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதவியேற்பிற்குப் பிறகு பேசிய மாவோயிஸ்டுகளின் தலைவர் பிரசண்டா அமெரிக்கவுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...