.

Monday, April 2, 2007

ச: இட ஒதுக்கீடு:ஜெ.புகாருக்கு கருணாநிதி பதில்

இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மத்திய அரசு திறமையான வழக்கறிஞர்களை கொண்டு வாதாடவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,முந்தைய ஜெயலலிதா அரசு கொண்டுவந்த 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமல் பல இன்னல்களுக்கு உள்ளாக நேர்ந்தது என்றும்,இதற்கு ஜெயலலிதா அரசு நியமித்த வழக்கறிஞர்கள்தான் காரணம் என சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதுபோல நடித்துக் கொண்டு,அந்த கொள்கைக்கு மறைமுகமாக குழி தொண்டி கொண்டிருப்பவர்களை எப்போதுதான் இந்த நாடு அடையாளம் கண்டுகொள்ளப்போகிறதோ என்றும் அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.


"Yahoo-Tamil"

2 comments:

Anonymous said...

அடுத்து ஜே என்ன சொல்லப்போறாங்களோ.

அறிக்கை போர் ஜாலியாத்தான் இருக்கு.

Anonymous said...

குஜராத்தின் ஹிட்லர் நிரந்தர கேடி நரேந்திர மோடிக்கு பூக்கொத்து கொடுத்து வாழ்தியவர்தான் இந்த ஜெ... குரு வழியில் தான் சிஷ்யனும்...

இப்படிக்கு.
விடுதலை முருகன்.

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.