.

Thursday, July 5, 2007

உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

இந்தியாவில் மட்டும் 650 தியேட்டர்களில் திரையிடப்பட்ட 'சிவாஜி' அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமில்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இப்படம் வசூல் சாதனை செய்துள்ளது. 'சிவாஜி' படம் மகராஷ்டிராவில் 18 தியேட்டர்களில் நேரடி தமிழ்ப்படமாகவே திரையிடப்பட்டது.

தற்போது இந்தியில் 'ஜூம் பராபர் ஜூம்' என்ற படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும் நேரடி தமிழ்ப்படமாக திரையிடப்பட்ட சிவாஜிக்கு இப்போதும் இருக்கும் வரவேற்பை பார்த்து வினியோகஸ்தர்களே வியப்படைந்துள்ளனர்.

மேலும் பல மாநிலங்களில் சிவாஜியின் வசூல் வேட்டை தொடர்வதால் புதிய படங்களை திரையிட வினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இப்படம் ஆந்திராவில் மட்டும் ரூ.18 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தியாவில் மட்டுல்லாது வெளிநாடுகளிலும் 'சிவாஜி' படம் வசூலை குவித்துள்ளது. அமெரிக்காவில் ரூ.4.5 கோடி, இங்கிலாந்தில் ரூ.2.75 கோடி, மலேசியாவில் ரூ.7.8 கோடி என வசூலை அள்ளியது 'சிவாஜி' படம். சிங்கப்பூரில் எந்தவொரு தமிழ்ப்படமும் இதுவரை காணாத வசூலை கண்டுள்ளது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகமெங்கும் திரையிடப்பட்ட 'சிவாஜி' படம் 3 வாரங்களில் மட்டும் ரூ.95 கோடியை வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.

மாலைமலர்

Distributors confident film will break even before 50-days

சிவகங்கை: சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடித்து அழிப்பு

சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றபோது குண்டு வெடித்து பலியான அதிர்ச்சியிலிருந்து இன்னும் சிவகங்கை மக்கள் மீளவில்லை. இந்த கொடூர கொலையில் கவுன்சிலர் உள்பட 2 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை சிவகங்கை பையூர்பிள்ளைவயலில் பேருந்து நிலையம் அருகே கண்மாய் ஒன்றில் 5 பயங்கர வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சக்தி வாய்ந்த குண்டுகளை கைப்பற்றிய காவல்துறையினர் அவற்றை வெடிகுண்டு நிபுணர்களிடம் ஒப்படைத்துள்ளனர். உடனடியாக அவை செயலிழக்கச் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் வேறு குண்டுகள் இருக்கிறதா என்பதை அறிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

நகராட்சி தலைவர் குண்டுவீசி கொல்லப்பட்டுள்ள நிலையில் இப்போது பேருந்து நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

தீவிரவாதம் பற்றி மன்மோகன்சிங்.

இங்கிலாந்து பிரதமர் கோர்டன் ப்ரவுனிடம் லண்டன் சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

லண்டன் குண்டு வெடிப்பின் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு கண்டிக்கத் தக்கது. பாகிஸ்தான் லால் மசூதி சம்பவத்தின் மூலம் தீவிரவாதத்தின் கொடூரத்தை உணர்ந்து விட்டது. .தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் குரல் கொடுக்கும்
என்று மேலும் தெரிவித்தார்.

துணை குடியரசுத்தலைவர் தேர்தல்: ஆகஸ்ட் 10

துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அட்டவணையை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

வேட்பு மனு தாக்கல் - ஜூலை 9.
மனுதாக்கலுக்கு கடைசி நாள் - ஜூலை 23.
வேட்பு மனு பரிசீலனை - ஜூலை 24.
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - ஜூலை 26.
தேர்தல் நாள் - ஆகஸ்ட் 10.

போட்டி இருந்தால் ஆகஸ்ட் 10ம் தேதி மாலையே ஓட்டுக்கள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவை உறுப்பினர்கள் 543 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேரும் துணை குடியரசுத் தலைவர் தேரத்லில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

இவர்கள் தவிர மாநிலங்களவையைச் சேர்ந்த 12 நியமன உறுப்பினர்கள் மற்றும் மக்களவையைச் சேர்ந்த 2 நியமன உறுப்பினர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும். மொத்தம் 790 எம்.பிக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

துணை குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக, மாநிலங்களவை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷெகாவத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ் தமிழ்

சிறுபான்மையோர் இட ஒதுக்கீடு உறுதி - கருணாநிதி.

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். " திமுக அரசு இம்முயற்சியை கைவிட்டுவிட்டதாகக் கூறப்படும் அரசியல் பிரசாரங்களுக்கு யாரும் ஆளாகி விட வேண்டாம்" என்றார் அவர்.

மேலும்,ஆந்திர அரசு முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இதுதொடர்பாக அவரச சட்டம் கொண்டு வரவும் அது ஆலோசித்து வருகிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக சட்டப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக தி.க.தலைவர் கி.வீரமணி சிறப்பான, சரியான கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அவசரப்பட்டு எந்த சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்து, அந்த சட்டத் திருத்தத்திற்கு கோர்ட்டுகள் மூலம் தடையுத்தரவு பெறப்பட்டு விடும் சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி விடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

எனவே இதை மனதில் கொண்டு, இதுதொடர்பான சட்டப் பிரச்சினைகளை ஆராய குழு ஒன்றை நான் அமைத்துள்ளேன். இதனால்தான் தனி இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி இந்த விவகாரத்தை திமுக அரசு கைவிட்டு விட்டதாக யாரும் நினைத்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தட்ஸ்தமிழ்

மூணாறு :கையகப்படுத்தியது டாடா நிலமா, அரசு நிலமா ?

கேரளாவின் இடது முன்னணி அரசிற்கு சங்கடம் விளைவிக்குமாறு இன்று சட்டமன்றத்தில் வருவாய்துறை அமைச்சர் கேபி இராஜேந்திரன் அரசு டாடா டீ நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்திய நிலம் உண்மையில் அரசின் வனத்துறையைச் சேர்ந்ததே என அறிவித்தார்.முதலமைச்சர் விந்ஸ் அச்சுதானந்தன் தலைமையில் சென்ற குழுவொன்று மூணாறு மறையூரில் உள்ள 316.53 ஏக்கரா நிலத்தை டாடா நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக கைப்பற்றினர். இந்த அறிக்கை எதிர்கட்சிகளுக்கு கேரள அரசை சங்கடப்படுத்த வாய்ப்பேற்படுத்திக் கொடுத்துள்ளது.

Munnar muddle: It's CM vs Revenue Minister

இலண்டன் ட்யூப் இரயில் தடம் புரண்டது


இலண்டனில் பாதாள இரயில்வண்டியொன்று இன்று மதியம் தடம் புரண்டதில் நூற்றுக்கணக்கான பயணிகள் அடைபட்டனர். இலண்டனின் சென்ட்ரல் லைனில் மேற்கு நோக்கிசெல்லும் வண்டியொன்று மைல் எண்டிற்கும் பெத்னல் கிரீன் நிலையத்திற்கும் இடையே மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.
மேலும்...BBC NEWS | UK | England | London | Hundreds stuck in Tube derailment

இலண்டன் தீவிரவாதம்: கைது செய்த எண்மரில் மூவர் இந்தியர்

பிரித்தானியாவில் தோல்வியடைந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் கைதான எட்டு பேரில் இன்னொருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு வேலைக்குச் செல்லும் இந்திய மருத்துவர்களுக்கு இனி விசா கிடைப்பது கடினமாகிவிடும் என ஆங்கில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.இது பற்றிய செய்தியுரை..Third Indian suspect in London bombings- Hindustan Times

தேர்தலோடு திமுகவுடன் உறவு முடிந்துவிட்டது.

ராமதாஸ் திடீர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலோடு திமுகவுடனான உறவு முடிந்து விட்டது. திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே ஏற்பட்டது தேர்தல் கூட்டணிதான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.டாக்டர் ராமதாஸுக்கும், திமுக அரசுக்கும் இடையே சமீப காலமாக பல்வேறு விவகாங்களில் மோதல் வெடித்து வருகிறது. லேட்டஸ்டாக, உயர் கல்வித்துறை குறித்து ராமதாஸ் கடுமையாக விமர்சிக்க, அதற்கு படு சூடாக பதிலடி கொடுத்தார் அத்துறை அமைச்சர் பொன்முடி.இந்த நிலையில், பிரதீபா பாட்டீலுக்கு சென்னையில் திமுக நடத்திய பேரணியில் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக குமுறினார் ராமதாஸ். இதற்கு முதல்வர் கருணாநிதி விரிவான, விளக்கமான பதிலை அளித்து, ராமதாஸின் பேச்சுக்கள் கூட்டணியின் நல்லுறவைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக சற்று காட்டமாகவே பதிலளித்தார்.

மணிசங்கர் அய்யருக்கு 67 வயதில் பிறப்புசான்றிதழ்

பாகிஸ்தானில் லாகூரில் பிறந்த மணிசங்கர அய்யரின் தற்போதைய வரவின்போது கேட்ட சில மணித்துளிகளுக்குள்ளேயே லாகூர் நகராட்சி அதிகாரிகள் அவரது பிறப்புச்சான்றிதழை கொடுத்து வியப்பில் ஆழ்த்தினர்.
இதே விதயம் அதிபர் முஷாரப்பிற்கு தில்லியில் அவரது வருக்கையின் போது நம்மால் கொடுக்கமுடியாது போயிற்று.
மேலும்...Mani Shankar Aiyar gets birth certificate at 67 - Yahoo! India News

பாகிஸ்தானில் சற்றுமுன் நிகழ்ந்த பஸ் விபத்தில் 18 பேர் பலி.

பாகிஸ்தானில் உள்ள மன்ஷரா மாவட்டத்தில் மலைப் பகுதியில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 18 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலர் காயமடைந்து அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகளுடன் தொடர்பில்லை: இந்திய தூதரிடம் பெங்களூர் டாக்டர் உருக்கம்.

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் முகமது ஹனீப்பிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் டாக்டர் ஹனீப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் வினோத்குமார் ஹனீப்பை சந்தித்து பேசினார். அப்போது, தனக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை. கிளாஸ்கோ விமான நிலைய சம்பவத்திலும் எனக்கு தொடர்பு இல்லை என்று உருக்கமாக கூறியுள்ளார். ஆனால் போதிய ஆதாரங்கள் இருப்பதால்தான் ஹனீப்பை கைது செய்துள்ளோம் என்று ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்தனர்.

வக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்.

அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு.


இந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார். மும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது. கடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார். மொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும். 8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. 19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும். மற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. மராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர். அரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

பிரிட்டன் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்துள்ள ஹனிபா ஒரு மிதவாத இஸ்லாமியரே.

பிரிட்டன் கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் ஹனிபா ஒரு மிதவாத இஸ்லாமியரே என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் கார் குண்டுவெடிப்பு சதித்திட்டம் மற்றும் கிளோஸ்கோ விமான நிலையத்தின்மீதான தாக்குதல் ஆகியவற்றில் தொடர்புடையவராக கைதுசெய்யப்பட்டுள்ள பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஹனிபா ஒரு மிதவாத இஸ்லாமியர்தான் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் ஒரு சிறந்த மாணவர் என்று அவர் பயின்ற அம்பேத்கார் மருத்துவ பல்கலைக்கழக பேராசியர்களும் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் தலைநகர் லண்டனில் கடந்த சனிக்கிழமை வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்றை சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் விடுதி ஒன்றின் அருகே விட்டுவிட்டுச் சென்றார். மர்ம நபர் நிறுத்திச் சென்ற காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட மேலும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்காட்லாந்தின் கிளாக்ஸ்கோ விமான நிலையத்தில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதி தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இச்சம்பவங்கள் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 2 டாக்டர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். லண்டன் கார் குண்டுவெடிப்பு சதித்திட்டம் மற்றும் ஸ்காட்லாந்து விமான நிலைய கார் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பு உள்ளதாக பெங்களூரைச் சேர்ந்த இந்திய டாக்டர் ஹனிபா கடந்த திங்கள் அன்று இரவு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். 27 வயதாகும் ஹனிபா தற்காலிக விசா பெற்று குவின்ஸ்லாந்தில் உள்ள கோல்டுகோஸ்ட் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது பணியை ராஜினாமா செய்யாமல் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்ஞீர் வழியாக ஆஸ்திரேலியா திரும்ப விமான டிக்கெட் இல்லாமல் இந்தியா வர முயற்சிக்கும்போது கைதுசெய்யப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஹோவார்டு நேற்றுமுன்தினம் தெரிவித்தார். ஹனிபா ஆஸ்திரேலியா வருவதற்குமுன் அவருடன் இங்கிலாந்தில் உள்ள லிவர்ஞீல் மருத்துவமனையில் பணிபுரிந்த முகமது ஆசிப் அலி என்ற மற்றொரு மருத்துவரிடமும் இதுதொடர்பாக ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு லண்டன் கார் குண்டுவெடிப்பு சதித்திட்டத்தில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவரை நேற்று விடுதலை செய்தனர். ஆனால் ஹனிபாவை மேலும் 2 நாட்கள் தொடர்ந்து விசாரிக்க அந்நாட்டு ஞிதிமன்றம் உத்தரவு அளித்துள்ளதை அடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலிய போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டுவரும் ஹனிபாவின் குடும்பத்தார் இந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹனிபா மற்ற இந்திய இஸ்லாமியர்களைப்போலவே இஸ்லாமிய மத வழிமுறைகளை பின்பற்றும் மிதவாத இஸ்லாமியர்தான். அவர் நாள்தோறும் 5 முறை தொழுகை செய்வார். மற்றவர்களைப் போலவே மசூதிக்கு சென்று வருவார் என்று அவரது இளைய சகோதிரி சுமையா தெரிவித்தார். அதேபோல் எங்கள் குடும்பமும் அடிப்படை இஸ்லாமிய பழக்கவழக்கங்களை கடைபிடிக்கும் குடும்பம்தான். ஹனிபா இஸ்லாமிய பழமைவாத கொள்கைகளை கடைபிடித்தவர் என்று கூறப்படுவது தவறு. அவருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றும் தெரிவித்தார். ஹனிபா டாக்டர் பட்டம் பயின்ற அம்பேத்கார் பல்கலைக்கழக பேராசிரியர்களும் இந்த செய்தியை அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். ஹனிபா ஒரு மிகச்சிறந்த மாணவர். கூர்மையான அறிவாற்றலும், அமைதியான குணமும் உடையவர் என்று தெரிவித்தனர்.

நிமிட்ஸ்க்கு டாட்டா...

பல்வேறு தரப்பு எதிர்ப்புகளை மீறி கடந்த 2ம் தேதி சென்னை வந்த நிமிட்ஸ் கப்பல் இன்று புறப்பட்டுச் செல்கிறது. அமெரிக்காவுக்கு சொந்தமான அணுசக்தி கப்பலான நிமிட்சில் 6000 வீரர்கள் வந்திருந்தனர். அவர்கள் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சுற்றிப் பார்த்தனர். இதையடுத்து அமெரிக்க கப்பல் இன்று புறப்பட்டுச் செல்லவிருப்பதாக சென்தனயில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இடஒதுக்கீடு: முஸ்லிம்கள் போராட்டம்

கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகம் முழுவதும் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மகளிர், சிறுவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

'இட ஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவீதத்தினரும், அகில இந்திய அளவில் 20 சதவீதத்தினரும் உள்ளனர். எனவே, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் விகிதாசாரத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்.

மத்தியிலுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசும், தமிழகத்தில் உள்ள திமுக அரசும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பொருந்தாத காரணங்களைக் கூறி காலம் கடத்துவதை கைவிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல், தனி இட ஒதுக்கீடு பெறும் வரை தீவிர போராட்டம் நடைபெறும்' என்று மாநிலச் செயலர் சுலைமான் தெரிவித்தார்.

நெல்லையில்...: திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில் சுமார் 400 குழந்தைகள் உள்பட 3,400 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி, மேலப்பாளையத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சேலம்: சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 213 பெண்கள் உள்படட 787 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருச்சி: திருச்சியில் நடந்த போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 6,124 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி

Zee News - Over 1500 court arrest in TN

பரத முனிவருக்கு கோயில் கட்ட ரூ. 27 லட்சம்: ஜெயலலிதா வழங்கினார்

பரதமுனி ஆசிய கலாசார அறக்கட்டளை சார்பில் பரத முனிவருக்குக் கோயில் கட்டுவதற்கு ரூ.27 லட்சத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழங்கினார். பரதமுனி ஆசிய கலாசார அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பத்மா சுப்ரமணியத்திடம் இதற்கான காசோலையை புதன்கிழமை அவர் வழங்கினார். இது குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2003-ம் ஆண்டு நிருத்யோதயாவின் 'வைர விழா'வை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போது பத்மா சுப்ரமணியம் பரத முனிவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தார்.

இந்தியாவில் பரதக் கலையைத் தோற்றுவித்த பரத முனிவருக்கு எங்குமே கோயில் இல்லை என்றும் முதல்முறையாக தமிழ்நாட்டில் கோயில் கட்டுவதற்கு நிலம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அதன்படி, 2006-ம் ஆண்டு ஜனவரியில் கிழக்குக் கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிபுலம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை பரதமுனி ஆசிய கலாசார அறக்கட்டளைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக ரூ.27 லட்சத்தை தனிப்பட்ட முறையில் நன்கொடையாக பத்மா சுப்ரமணியத்திடம் ஜெயலலிதா வழங்கினார்.

தினமணி

DNA - India - Jayalalitha donates Re 27 lakh for building temple - Daily News & Analysis

எம்.பி.பி.எஸ். படிப்புக் காலத்தை ஆறரை ஆண்டாக அதிகரிக்க தில்லி முடிவு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்புக் காலத்தை அடுத்த கல்வி ஆண்டு முதல் (2008-09) ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கிராமப்புறங்கள் உள்பட மருத்துவ சேவை கிடைக்காத இடங்களில் ஓர் ஆண்டு பணியாற்றினால்தான் ஒரு மாணவர் எம்.பி.பி.எஸ். படிப்பு முடித்த பிறகு டாக்டராகப் பதிவு செய்து கொள்ள முடியும் என்ற நிபந்தனையுடன் படிப்புக் காலத்தை ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்க அது முடிவு செய்துள்ளது.

தற்போது நான்கரை ஆண்டுகள் மற்றும் மருத்துவ பயிற்சிக் காலம் ஓர் ஆண்டு சேர்த்து மொத்தம் ஐந்தரை ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ். படிப்புக் காலம் உள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேறும் நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்புக் காலம் ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். கிராமப்புற மருத்துவ சேவையில் ஈடுபடும் டாக்டர்களுக்கு மாதம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தினமணி

எனது அடுத்த நாவலும் சர்ச்சைக்குள்ளாகும்: தஸ்லிமா நஸ்ரின்

நாடுகடத்தப்பட்ட வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் 'லஜ்ஜா' என்ற நாவல் 1994-ல் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து அவர் தற்போது 'சரம்' என்ற நாவலை எழுதத் தொடங்கியுள்ளார்.

1994-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பின் வங்கதேச ஹிந்து மக்களுக்கு நடந்த வன்முறை குறித்து தனது 'லஜ்ஜா' என்ற புதினத்தில் வெளிப்படையாக எழுதியிருந்தார். இது குறித்து அப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் அவர் நாடுகடத்தப்பட்டார்.

சர்ச்சைக்குள்ளான லஜ்ஜாவுக்குப் பிறகு அதே சம்பவங்களை மையமாக கொண்டு மதவெறியாளர்களை குறித்தும் தற்போது 'சரம்' நாவலில் எழுதி வருவதாக தெரிவித்துள்ளார்.

கோல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியது:

நான் எழுதி வரும் "சரம்' நாவலுக்கும் நிச்சயமாக எதிர்ப்புகள் கிளம்பும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இந்த ஆண்டு துர்கா பூஜை பண்டிகைக்குள் இந்த நாவலை முடித்து விடுவேன்.

என்னுடைய சுயசரிதையையும் எழுதி வருகிறேன். தற்போது அதன் ஏழாவது பாகத்தை எழுத தொடங்கியுள்ளேன். மேலும் பத்திரிகைகளுக்கு சிறுகதைகளும், கட்டூரைகளும் எழுதி வருவதால் ஓய்வுக்கு நேரமில்லை.

1994-ல் வங்கதேசத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட நான் ஸ்வீடன், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வசித்தேன். 2005-லிருந்து கோல்கத்தாவில் இருந்து வருகிறேன்.

இந்தியாவில் வசிப்பதற்கான குடியுரிமையை ஒவ்வொரு 6 மாதத்துக்குப் பிறகும் புதுப்பித்து வருகிறேன். ஆகஸ்ட் 17-ம் தேதியில் முடிவடைவதால் இந்தியாவில் தொடர்ந்து குடியிருப்பதற்காக மீண்டும் விண்ணப்பித்திருக்கிறேன். இந்திய அரசாங்கம் அனுமதி அளித்தால் வேறு எந்த இடத்துக்கும் செல்ல மாட்டேன். வங்கதேச அரசாங்கம் என்னை அனுமதிக்காது. அதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும் மீண்டும் என்னால் செல்ல முடியாது என 45 வயதாகும் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா கூறினார்.

தினமணி

The Hindu :: Taslima penning sequel to Lajja

இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதியின் தலைமை குரு கைது

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள, தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்ட செம்மசூதியின் தலைமை மதகுரு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மசூதியிலுள்ள தீவிரவாத கொள்கைகளையுடைய மாணவர்களுக்கும் பாகிஸ்தானின் அரச படையினருக்கும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. செம்மசூதியைச் சுற்றி பாதுகாப்பு படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இஸ்லாமாபாத் போலீசின் துணை ஆணையாளர், அந்த மசூதியின் தலைமை மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ், இஸ்லாமியப் பெண்கள் அணியும் உடையான பர்க்காவை அணிந்து தப்பிக்க முயன்றதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது அடையாளத்தை அவர் மறைக்க முயன்றதாகவும், ஆனால் பணியில் இருந்த பெண் காவலர்களிடம் அவர் சிக்கியதாகவும் துணை போலீஸ் ஆணையாளர் தெரிவிக்கிறார்.

இதுவரை அந்த மசூதியிலிருந்த 700 பேருக்கும் அதிகமானவர்கள் சரணடைந்திருந்தாலும், ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இன்னமும் அந்த செம்மசூதியினுள்ளே இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

-BBC Tamil

Pakistani mosque chief caught as troops lay siege | Reuters.com

-o❢o-

b r e a k i n g   n e w s...