முன்னாள் அதிமுக எம்பி டா.மைத்ரேயனும் இளவரசனும் அதிமுக வின் சார்பில் ஜூன் 15 நடைபெறவுள்ள மாநிலங்களைவை தேர்தலுக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
மேலும்..The Hindu News Update Service
Sunday, May 27, 2007
ச: மாநிலங்களவைக்கு அதிமுக வேட்பாளர்கள்: மைத்ரேயன், இளவரசன்
Posted by மணியன் at 11:02 PM 0 comments
ச: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு : தமிழக அரசு அவசர ஆணை பிறப்பிக்கும்
முஸ்லிம்களுக்கு கல்வியிலும் அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அவசர ஆணை இன்னும் ஒருவாரத்திற்குள் பிறப்பிக்கப்படும் என்று முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார். இன்றிரவு ஏழாவது அனைத்துலக இஸ்லாமிக் இலக்கிய மாநாட்டில் பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் ரஹ்மான் கான் கேரள,கர்நாடக மாநிலங்களில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு போல தமிழகத்திலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த ஒதுக்கீடு 69% உள்ளேயே இருக்கும் என்று முதல்வர் கூறினார்.
முன்னதாக முதல்வருக்கு உமறு புலவர் விருது வழங்கி ஒரு இலட்ச ரூபய் சம்மானமும் ஒரு நினைவுப் பொருளும் வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
DNA - India - TN to provide reservation for Muslims - Daily News & Analysis
Posted by மணியன் at 10:54 PM 5 comments
ச: மணிரத்தினம் சகோதரர் ஜி சீனிவாசன் மரணம்
தமிழகத்தின் பிரபல படதயாரிப்பாளரும் இயக்குனர் மணிரத்தினத்தின் சகோதரருமான ஜி. சீனிவாசன் ஞாயிறன்று ஹிமாச்சலின் மணாலி அருகே மலைப்பாதையில் செல்லும்போது தடுக்கி 50 அடி பள்ளத்தில் விழுந்து மரணமடைந்தார். 49 வயதான சீனிவாசன் அவரது மனைவி சந்தியா லக்க்ஷ்மண், மகள் ஷ்ரேயா ஆகியோருடன் விடுமுறைக்காக சென்றவிடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்து மூன்றுமனிநேரம் கழித்தே அவரது உடலை மீட்க முடிந்தது. அவருக்கு ஷ்ரேயா தவிர திவ்யா, அக்ஷயா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
அவரது தயாரிப்பில் வெளியான இருவர் (1997), ஆயுத எழுத்து (யுவா) ( 2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2202), குரு (2007) யாவையுமே மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து பிரபலமானவை.
DNA - India - Mani Ratnam's brother dead - Daily News & Analysis
Posted by மணியன் at 10:41 PM 2 comments
ச: கிரிக்கெட்: இந்தியா பங்களாதேச டெஸ்ட் தொடரை வென்றது
இந்தியா இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்றே பங்களாதேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆட்டத்தொடரையும் 1-0 என்ற கணக்கில் வென்றது. சிட்டகாங்கில் ஆடிய முதல் ஆட்டம் மழையினால் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.
58/5 இல் நேற்றைய ஆட்டத்தை தொடர்ந்த பங்களாதேசம் 118 ஓட்டங்களில் சுருண்டது. மீண்டும் அவர்களையே தொடரச் செய்த இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸிலும் அவர்களை 253 ஓட்டங்களில் வென்றதால் தாங்கள் தங்களுக்குண்டான இரண்டாம் இன்னிங்ஸை ஆடாமலே 239 ஓட்டங்களில் வென்றனர்.
ஸ்கோர்: பங்களாதேசம் 118 (ஜாகீர்கான் 5-34, கும்ப்லே 3-32) & 253 (மொஹம்மத் அஷ்ராஃபுல் 67, மொர்டசா 70, ரமேஷ் பவார் 3-33)
இந்தியா 610-3 அறிவிப்பு (D.கார்த்திக் 129,ஜாஃபர் 138 அடிபட்டு ஓய்வு, திராவிட் 129, டெண்டுல்கர் 122 ஆட்டமிழக்காது, தோனி 51 ஆட்டமிழக்காது)
Posted by மணியன் at 10:11 PM 0 comments
மாநிலங்களவைக்கான அ தி மு க வேட்பாளர்கள் -
ஜூன் 15ல் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கான அ தி மு க வேட்பாளர்களாக மைத்ரேயனும், இளவரசனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1999ல் பா ஜ க விலிருந்து தி மு க கூட்டணியை எதிர்த்து வெளியேறி அ தி மு க வில் சேர்ந்த மைத்ரேயன் 2002ல் அ தி மு க சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர்.
இளவரசன் என்பவர் பெரம்பலூர் மாவட்ட கட்சி செயலாளர்.
உதகையிலிருந்து திரும்பியுள்ள ஜெயலலிதா இதை அறிவித்துள்ளார்.
முன்னதாக, கனிமொழியை வேட்பாளராக அறிவித்துள்ள தி மு க வின் முடிவைப் பற்றி பிறகு கருத்து சொல்வதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
The hindu News updation
Posted by வாசகன் at 9:56 PM 0 comments
முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் ட்ரில்லியனர்.
ஒரு இலட்சம் கோடி சொத்துக்களை பங்குகளின் மூலம் அடைந்துள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் ட்ரில்லியனராகிறார். பல்வேறுபட்ட தொழில்களிலும், நிறுவனங்களிலும் அவருடைய பங்கு மதிப்பு 111,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
90,000 கோடி சொத்துக்களுடன் அவர் தம்பி அனில் அவரைப் பின் தொடர்கிறார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
Posted by வாசகன் at 9:36 PM 0 comments
சந்திரஜித் யாதவ் காலமானார்
புதுதில்லி, மே 27: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சோசலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சந்திரஜித் யாதவ் (80) வெள்ளிக்கிழமை இரவு தில்லியில் காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த சந்திரஜித் யாதவ், கடந்த 21-ம் தேதி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவரது உடல் வாராணசிக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டு, திங்கள்கிழமை நண்பகலில் சொந்த ஊரான அசம்காரில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று யாதவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உ.பி. அரசியலில் நீண்ட காலம் கோலோச்சிய யாதவ், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
Dinamani
Posted by Boston Bala at 8:35 PM 0 comments
சொத்து குவிப்பு வழக்கு: சிக்கிம் முன்னாள் முதல்வர் குற்றவாளி: சிபிஐ
காங்டாக், மே 27: சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிம் முன்னாள் முதல்வர் நார்பகதூர் பண்டாரி குற்றவாளி என்று சிபிஐ கோர்ட்டு சனிக்கிழமை தீர்ப்பளித்தது. காங்டாக் நகரில் பண்டாரி ரூ.15.22 லட்சம் மதிப்பில் 5 மாடி கட்டடம் கட்டியிருந்தார்.
கணக்கில் காட்டப்படாத பணத்தில் அந்த கட்டடம் கட்டப்பட்டதாக கூறப்பட்டதை விசாரிக்க கடந்த 1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஐ கோர்ட்டு ஏற்படுத்தப்பட்டது. சிக்கிம் முதல்வராக பண்டாரி கடந்த 1979 முதல் 1994 வரை இருந்துள்ளார். தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிக்கிறார்.
Dinamani
Posted by Boston Bala at 8:31 PM 0 comments
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் குண்டுவெடிப்பு
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஜனநெருக்கடியான சந்தைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் குறைந்தப்பட்சம் ஏழு பேர் கொல்லப்பட்டு, பதினெட்டு பேர் காயமடைந்திருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த குண்டு ரிக்சா ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கடந்த சில மாதமாக அசாம் முழுவதும் தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது. இதில் இந்தி மொழி பேசும் மற்ற மாநிலத்தவர்களை கூறி வைத்து பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்துகின்றனர்.
- பிபிசி தமிழ்
BBC NEWS | South Asia | Seven killed in Assam bomb blast
Posted by Boston Bala at 7:48 PM 3 comments
தீவிரவாத 'குறி'யில் திராவிட், டோனி
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் திராவிட், விக்கெட்கீப்பர் டோனி ஆகியோரைக்கொல்ல தீவிரவாதிகள் தற்கொலைப்படையை அனுப்பியுள்ள செய்தியொன்றை மாலைமலர் வெளியிட்டுள்ளது.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் நக்ஸலைட் தீவிரவாதிகளை ஒடுக்க காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் சிக்கியது.
பி.சி.சி.ஐ தலைவரும், மத்தியமந்திரியுமான சரத்பவாரும் தீவிரவாதிகளின் 'குறி'ப்பேட்டில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சாதாரண மக்களின் பணத்தில் இவர்கள் செல்வந்தர்களாக வாழ்வதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையொட்டி உரியவர்களுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.
Posted by வாசகன் at 1:08 PM 5 comments
இந்தியாவுக்கு மிக முக்கியத்துவம் - பிரிட்டன்
'வேகமான வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவுடன் வலிமையான, ஆழமான நட்புறவுக்கு மிக அதிக முன்னுரிமை தரப்படும் என்று வருங்கால பிரிட்டிஷ் பிரதமர் ஜேம்ஸ் கோர்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
பதவி விலகும் டோனி பிளேய்ரினை அடுத்து இன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்தில் பதவி ஏற்க உள்ள அவர் தன்னுடைய அரசு பின்பற்றவிருக்கும் பிற 'திட்டங்கள்' குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் பாரம்பரிய வரலாறு, அதன் போராட்டங்கள், சாதனைகள், அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி கேட்டறிந்தவாறே தான் வளர்ந்ததாக 56 வயதாகும் ஜேம்ஸ் மேலும் பெருமிதப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க
Posted by வாசகன் at 12:12 PM 0 comments
தினமலரின் வேண்டுகோள்!
அனனத்து இந்திய தமிழ்ச் சங்கங்களுக்கும் அன்பான வேண்டுகோள்
இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்கள் தொடர்பாகவும் தினமலர் இணைய தளத்தில் செய்திகள் வெளியிட இருக்கிறோம். எனவே டில்லி, மும்பை, புனே, நாக்பூர், கோல்கட்டா, திருவனந்தபுரம், பெங்களூர், ஐதராபாத், புவனேஸ்வர், போபால், இந்துர், ராஞ்சி, ரெய்ப்பூர், ஜெய்ப்பூர், ஆமதாபாத், பரோடா, சூரத், சண்டிகர், லக்னோ, டேராடூன், சிம்லா, கவுகாத்தி, இம்பால், காங்க்டாக், ஷில்லாங், இடாநகர், அய்ஜால், அகர்தாலா, கொகிமா மற்றும் இதர முக்கிய நகரங்களில் அமைந்துள்ள தமிழ்ச்சஙகங்கள் தங்கள் செய்திகளை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். சங்கங்களின் நிர்வாகிகள் விவரம், சங்க நடவடிக்கைகள், உங்கள் பகுதிகளில் உள்ள தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் போன்ற செய்திகளை படத்துடன் அனுப்பி வையுங்கள். தமிழர்களுக்கு இடையேயான ஒரு இணைப்பு பாலமாக விளங்க தினமலர் இணைய தளம் விரும்புகிறது. அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.
Posted by சிவபாலன் at 11:29 AM 3 comments
b r e a k i n g n e w s...