.

Monday, April 30, 2007

எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன்: விஜயகாந்த்

ஒசூர், ஏப். 30: எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்:

என்னுடைய திருமண மண்டபத்தை இடித்தார்கள். எனக்குப் பல வழிகளில் பொருளாதாரரீதியாக தொந்தரவு கொடுத்துப் பார்த்தார்கள். இப்படி எல்லாம் தொந்தரவு கொடுத்தால் இவன் கூட்டணியில் சேர மாட்டானா என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், எனக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன்.

மலை ஏறுவது கடினம்தான்; ஏறிய பிறகுதான் தெரியும் மலை நமது காலுக்கடியில் இருப்பது.

நான் பிழைப்பிற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு உழைப்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கின்றேன்.

சிலர் என்னை சீண்டி பார்க்கிறார்கள். இளைஞர்களை தூண்டிவிட்டால் தமிழ்நாடே பற்றி எரியும். ஆனால் இளைஞர்களை நல்வழியில் நடத்த வேண்டியது நம் கடமை. விஜயகாந்த்தை அழிக்கவும், அடிக்கவும், நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது.

சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு 8.33 சதவிகிதமாக இருந்த வாக்கு வங்கி தற்பொழுது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

படித்த இளைஞர்களுக்கும், படிக்காத இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.

எந்த அரசியல் தலைவரும் தனி மனித வருமானத்தைத் தெரிவிப்பதில்லை. மத்திய நிதி அமைச்சரை கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் நமக்குக் கிடைக்கவில்லை.

Dinamani

நந்திகிராமத்தில் நில பாதுகாப்பு அமைப்பினர் ஆளுங்கட்சியினர் இடையே தொடரும் வன்முறை தாக்குதல்

நந்திகிராமம், ஏப். 30: மேற்குவங்கத்தில் உள்ள நந்திகிராமத்தில் நில பாதுகாப்பு அமைப்பினருக்கும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை வன்முறைத் தாக்குதல் நடந்தது. ஹெஜுரியில் இருந்து திரண்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200 பேர் நந்திகிராமத்தில் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை நில பாதுகாப்பு அமைப்பினர் எதிர்த்தனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இரு தரப்பினரும் கையெறி குண்டுகளை மாறி மாறி வீசினர். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் ஒருவர் பலியானார். இருவர் காயம் அடைந்தனர். நந்திகிராமத்தைச் சுற்றியுள்ள பங்கபெரா, சதிங்கபரி, ஆதிகரிபரா மற்றும் சிமல்குந்து பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Dinamani

கலாமுக்கு மீண்டும் பதவி: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்வு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவிக்காது என்று தெரிகிறது.

அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி யாரை ஆதரிக்கும்; மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி அப்பதவிக்கு போட்டியிடுவாரா? என்று பிரகாஷ் காரத்திடம் கேட்கப்பட்டது.

அதற்கு, "கடந்த முறை குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணனை மீண்டும் தேர்வு செய்யலாம் என்று கேட்டபோது, பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. யாரையும் இரண்டாவது முறையாக அப்பதவிக்கு தேர்வு செய்யக் கூடாது என்று அக்கட்சியினர் வாதிட்டனர். இப்போது அவர்கள் எந்த வகையில் அதே கருத்தை அணுகப்போகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது' என்றார்.

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவடைந்ததும் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது குறித்து கட்சி விவாதித்து முடிவு எடுக்கும் என்றார் காரத்.

அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் ஆதரித்தால் மீண்டும் குடியரசுத் தலைவராக கலாம் சம்மதம்?

எலியின் மூளை செயல்பாடு கணினியின் மூலம் உருவகமானது

எலியின் மூளையை கணினியில் உருவகப்படுத்துவதில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அரைக்கிணறு தாண்டிவிட்டார்கள். எலி யோசிப்பது மாதிரியே கணினியையும் தன்னுடைய உருவகங்களில் சிந்திக்க வைப்பதிலும் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

புத்தி எவ்வாறு செயல்படும் என்பது மிகவும் சிக்கலான விஷயம். எட்டு மில்லியன் நியுரான் இணைப்புகளை 4,096 கணிச்செயலர்களை (processors) உள்ளடக்கிய சூப்பர்கம்ப்யூட்டர் மூலம் ஜேம்ஸ் ஃப்ரை (James Frye), ராஜகோபால் அனந்தநாராயணன், தர்மேந்திரா எஸ் மோதா ஆகியோர் இதை செயல்படுத்தியிருக்கிறார்கள்.

BBC NEWS | Technology | Mouse brain simulated on computer

சற்றுமுன் - சாலை உருகியது !

அமெரிக்கா வளைகுட பகுதியில் இருக்கும் பாலம் உருகியது. பெட்ரோல் எடுத்து சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய வாகனம்(லாரி)வெடித்து தீ பிடித்து எரிந்தததால் சான்fரான்சிச்கோ - ஓக்லாண்ட் பகுதியையும் மற்ற சாலைகளையும் இணைக்கும் இந்த பாலம் சேதம் அடைந்ததது. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உண்டாகியிருக்கிறது.

மேலும் படிக்க

http://www.msnbc.msn.com/id/18392684/

'பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக காவல்துறைக்கு மூன்று கோடி ரூபாய் செலவு

ஷில்பா ஷெட்டியினால் இந்தியாவிலும் கவனிக்கப்பட்ட 'பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சியினால் காவல்துறைக்கு ஏற்படும் செலவுகளின் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த ஆறு வருடங்களில் £350,000 செலவாகியுள்ளது.

BBC NEWS | UK | England | Beds/Bucks/Herts | Big Brother police costs revealed

ச:போதையில் மாப்பிள்ளை, தம்பிக்குத் திருமணம்

பிகாரில் திருமணத்தன்று குடித்துவிட்டு அதிக போதையில் பெண்வீட்டாரோடு சண்டைபோட்ட மாப்பிள்ளையை ஊரார் விரட்டிவிட்டு அவரின் தம்பிக்கு மணமகளை திருமணம் செய்துவைத்தனர்.

Bihar groom too drunk to wed, so brother steps in
"The groom was drunk and had reportedly misbehaved with guests when the bride's family and local villagers chased him away," Madho Singh, a senior police officer told Reuters after Sunday's marriage in a village in Bihar's Arwal district.

The younger brother readily agreed to take the groom's place beside the teenage bride at her family's invitation, witnesses said.

"The groom apologised for his behaviour, but has been crying that word will spread and he will never get a bride again," Singh said by phone.

ச: புலிகளும் அரசும் தமது தாக்குதல்களைப் "பதிலடி" என்கிறார்கள்

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகிலுள்ள எரிபொருட்கள் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலுக்கு பதிலடியாக தமது வான் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை அரசின் விமானப்படை கூறியுள்ளது.

ஆனால் இலங்கையின் வடக்கில் உள்ள தமது பிரதேசத்தில் விசுவமடு பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் அரச விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே தமது வான்படையினர், கொழும்பில் வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகளின் இராணுவத்துறை பேச்சாளர் இளந்திரையன் கூறியுள்ளார்.

29 ஏப்ரல் அதிகாலை சுமார் 1.45 மணியளவில் விடுதலைப் புலிகளின் இரண்டு இலகுரக விமானங்கள் தலைநகர் கொழும்பிலுள்ள கொலன்னாவ மற்றும் புறநகர்பகுதியான முத்துராஜவெல போன்ற இடங்களிலுள்ள எண்ணெய் சேகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றன.

கொழும்பில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தை திறந்தவெளி திரைகளில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் இந்த வான் தாக்குதலை நடத்தினர். விமான எதிர்ப்பு எறிகணைகள் சுடப்பட்டத்தின் வானத்தில் செந்நிற நெருப்பு கீற்றுகள் காணப்பட்டன.

இந்தத்தாக்குதலினால் எண்ணெய் சேகரிப்பு நிலையங்கள் எவற்றிற்கும் எவ்வித தாக்குதலும் இல்லை என்று பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்த அரசாங்கப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா புலிகளின் விமானங்களைத் தாக்கியழிப்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.

புலிகளின் தாக்குதலை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவுக்கு கிழக்கே உள்ள விசுவமடு பகுதியில் அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்கு ஒன்றின் மீது அரச விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இரணைமடுவுக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதைப் பகுதியில் இன்று காலை 5.35 மணியளவில் மீண்டும் ஒரு விமானக் குண்டுத் தாக்குதலை விமானப்படையினர் நடத்தியிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.

கடந்த மாதம் தான் விடுதலைப் புலிகள் முதல் முறையாக தமது இலகுரக விமானம் மூலம் இலங்கை அரசின் நிலைகள் மீது வான் தாக்குதலை நடத்தினர்.


இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ் செவ்வி

இதன் மூலம் புலிகள் சொல்ல வருவது ஓர் ஆணித்தரமான அரசியல் ராணுவ செய்தி. இலங்கை அரசாங்கம் சொல்லிவருவது போல நாங்கள் ஓரங்கட்டப்படவில்லை, ஓரங்கட்டப்படவும் மாட்டோம் என்பது தான் அந்தச் செய்தி என்கிறார் இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ்.

செவ்வி:

அரசாங்கம் கிழக்கில் படையினர் கண்ட வெற்றிகளை வைத்துக் கொண்டு தென்னிலங்கை மக்கள் மத்தியில் தாங்கள் புலிகளை ஓரங்கட்டி விட்டோமென்றும், புலிகள் வசம் ஓரிரு சிறு விமானங்கள் தான் உள்ளன, அவற்றை நாங்கள் விரைவில் இரண்டிலொன்று பார்த்து விடுவோம் என்றும் சொல்லி வரும் வேளையில் அதற்கான புலிகளின் பதில் தான் இது என்று படுகிறது.

புலிகளின் விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள், இழப்புகள் சிறிதா பெரிதா என்பதை விட, புலிகளின் வான்தாக்குதல்கள் தொடருகின்றன என்ற செய்தி தான் முக்கியமாக தென்னிலங்கை மக்கள் மத்தியில் சென்று சேரப் போகிறது.

அரசும் புலிகளும் ஒரே மொழி
வான் தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் பேசும் அதே மொழியை அதே நியாயத்தைத் தான் புலிகளும் பேசுகிறார்கள். ஏனென்றாhல் சில குண்டுகள் மக்கள் குடியிருப்புப் பகுதியில் வீழ்ந்த போதிலும் அது ராணுவ ரீதியிலான தமது பதில் தாக்குதல் என்று அரசாங்கம் கூறிவருகிறது. அதை எவரும் பெரிதாக கண்டிக்க முன்வரவில்லை. புலிகளும் தங்களுடைய இந்த மூன்றாவது தாக்குதல் ராணுவ ரீதியிலானது என்கிறார்கள். எனவே புலிகளின் இந்த வான் தாக்குதல்களை கண்டிக்கக் கூடிய தார்மீக நிலையில் எவரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அரசின் போக்கில் மாற்றம் வராது
சர்வதேச நாடுகள் கேட்பது போல இலங்கை அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பலப்படுத்தி, ஒரு உண்மையான யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வந்து, மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த தாக்குதல் நடந்து சில மணி நேரத்தில் புலிகளின் விசுவமடுப் பகுதியில் அரசு வான் தாக்குதல் நடத்தியதை வைத்துப் பார்த்தால் அடிக்கு அடி, பல்லுக்கு பல்லு என்று தான் அரசு நிற்கிறது என்று படுகிறது. இருப்பினும் -

ஊடகங்களிலும் அரசாங்கப் பேச்சாளர் மூலமாகவும் பல கருத்துக்கள் வந்து கொண்டிருந்தாலும் அவற்றை உற்று நோக்கும் போது தெரிவது என்னவென்றால் புலிகளிடம் எத்தனை விமானங்கள் உள்ளன என்றோ, எத்தகைய விமானங்கள் உள்ளன என்றோ, அல்லது அவை எங்கே வைக்கப்பட்டிருக்கினறன என்றோ அரசாங்கத்துக்கோ எவருக்குமோ எதுவுமே தெரியாது என்பது தான் உண்மை. ஆனால் -

அரசு அல்லாத ஓர் அமைப்பிடம் இத்தகைய வான் படை வலு இருப்பதை எந்த நாடும் விரும்பாது, குறிப்பாக மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இத்தகைய நிலையை விரும்ப மாட்டா.

செய்தி: பிபிசி - தமிழ்

ச:இன்பத்தமிழன் சரணடைந்தார்

முன்னாள் அ.தி.மு.க மந்திரி இன்பத் தமிழன் இன்று மதுரை கீழ் கோர்ட்டில் சரணடைந்தார். முனிசிபல் சேர்மேனின் கணவரைக்கொன்ற வழக்கில் அவர் தேடப்பட்டார்.

Ex-AIADMK Minister surrenders in court

நந்திகிராம் விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

நந்திகிராம் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மக்களவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தன.

மேலதிக விபரங்களுக்கு...

http://content.msn.co.in/Tamil/News/National/0704-30-11.htm

"மே தினம்" தலைவர்கள் வாழ்த்து.

மே தினம்' என்றழைக்கப்படும் தொழிலாளர் தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், தொழிலாளர்களுக்கு தடையின்றி தாராளமாக போனஸ், ஊக்கத் தொகை, நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி, திமுக அரசு தொழிலாளர் நலம் பெற தொடர்ந்து பாடுபட்டு வருவதை சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில், உரிமைகள் மறுக்கப்பட்டு அதன் பயன் ஒரு சிலருக்கு மட்டுமே உடைமையாக்கப்பட்டபோது, அடங்கி ஒடுங்கிக் கிடந்த தொழிலாளர்கள் ஆர்ப்பரித்து எழுந்து தங்கள் உரிமையை பெற்ற நாள் என்று மே தினத்தைக் குறிப்பிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மே தின நன்னாளில் அனைவருக்கும் வேலை கிடைக்கவும், கண்ணியமான வாழ்வு அமையவும் புதியதோர் சமுதாயம் அமைவதற்கு சூளுரை மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விசாகப்பட்டிணம் காவல் கண்காணிப்பாளர் ஊழல் குற்றச்சாட்டில்்டில் கைது

விசாகப் பட்டிணத்தின் காவல் கண்காணிப்பாளர் ஜே ஜி முரளி ஞாயிறன்று ஊழல் தடுப்பு காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ1.5 இலட்சம் பணம், 22 தோலா தங்கம், மற்றும் 64 இலட்சம் பெறுமான சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளது.

மேலும்..NDTV.com

-o❢o-

b r e a k i n g   n e w s...