சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களின் தரம் குறித்த கவலைகள் தற்போது அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கும் பரவியுள்ளன. சீனாவில் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகளில், அதிக அளவு ஃபார்மால்டிஹைட் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆராயும் புலனாய்வு தற்போது நியூசிலாந்தில் துவங்கியுள்ளது.
துணி பூஞ்ஞைக்காளானால் பாதிக்கப்படாமல் இருக்க இந்த ரசாயனப் பொருள் உதவுகிறது. இருந்தும் இது தோலிலும், கண்ணிலும், தொண்டையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொம்மைகள், டயர்கள், உணவுப் பொருட்கள், பற்பசைகள் போன்ற பொருட்களால் உடலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் குறித்த அச்சங்களைத் தொடர்ந்து தற்போது இந்தப் பிரச்சனை வந்துள்ளது.
இது போன்ற அச்சங்கள், வர்த்தக பாதுகாப்புக்கான புதிய உத்தி என்று சீனா வர்ணித்திருப்பது முற்றிலும் தவறானது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் பீட்டர் மெண்டல்சன் கூறியுள்ளார்.
தமிழ் பிபிசி
China reports quality problems with U.S. soybean imports - International Herald Tribune
Chinese-made blankets recalled over formaldehyde content in Australia, New Zealand - International Herald Tribune
FT.com / In depth - Poison clothes add to China export scares
Wednesday, August 22, 2007
சீனாவின் ஏற்றுமதிகள் குறித்து தொடர்ந்து கவலைகள்
Posted by
Boston Bala
at
9:25 PM
0
comments
மருத்துவர் ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியா செல்கிறார்
லண்டன் மற்றும் கிளாஸ்கோ விமான நிலைய கார் குண்டு சம்பவங்களைத் தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் ஹனீப் கைது செய்யப்பட்டார்.அவரது ஆஸ்திரேலிய நுழைமதியும் தடை செய்யப்பட்டது. ஒரு மாத கால சிறைவாசத்துக்கு பிறகு ஹனீப் குற்றமற்றவர் என்று கூறி அவரை ஆஸ்திரேலிய நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதைத்தொடர்ந்து இந்தியா வந்த ஹனீப், தான் மீண்டும் ஆஸ்திரேலியா சென்று பணியாற்ற விரும்புவதாகவும், தடை செய்யப்பட்ட தனது நுழைமதியை மீண்டும் தர வேண்டும் என்றும் கோரினார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஹனீப் தொடர்ந்த வழக்கில் ஹனீப்புக்கு மீண்டும் நுழைமதி வழங்குமாறு உத்தரவானது. இதையடுத்து அவர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்சன் உறுதிபடுத்தியுள்ளார்.
Posted by
வாசகன்
at
3:29 PM
0
comments
Tuesday, August 21, 2007
ஆஸி. நீதிமன்றத்தில் நீதி நிலைத்தது
ஆஸ்திரேலிய அரசிற்கு ஒரு பெருத்த தர்மசங்கடமாக பிரிஸ்பேன் நீதிமன்றம் இந்திய மருத்துவர் முகமது ஹனிஃபிற்கு கொடுத்திருந்த வேலைக்கான விசாவை முடக்கியதை தள்ளுபடி செய்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்தது.குடியேற்ற அமைச்சர் தமது எல்லைக்கு புறம்பாக முடிவெடுத்ததாக மாநில நீதிபதி ஜெஃப் ஸ்பெண்டர் கூறினார். இருப்பினும் அமைச்சர் மேல்முறையீடு செய்ய 21 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளதால் ஹனிஃப் ஆசிக்கு திரும்ப சற்று தாமதமாகலாம்.ஹனிஃபின் சட்டமுறையீட்டின் செலவுகளையும் அரசு வழங்க உத்திரவிட்டுள்ளார்.
Aus Court reinstates Haneef’s visa
Posted by
மணியன்
at
11:42 AM
0
comments
Monday, August 6, 2007
காமன்வெல்த் வாலிபால் இந்தியாவுக்கு 2-ம் இடம்
காமன்வெல்த் வாலிபால் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 25-18, 25-16, 24-26, 20-25, 15-11 என்ற கணக்கில் இந்தியாவை வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை 25-10, 23-25, 25-21, 25-21 என்ற கணக்கில் வென்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
ஆஸ்திரேலியா பரிசுத் தொகையாக ரூ. 4 லட்சத்தைப் பெற்றது. இந்தியாவுக்குப் பரிசுத் தொகையாக ரூ. 2 லட்சம் கிடைத்தது. இந்திய அணிக்கு மேற்கு வங்க விளையாட்டு ஆணையம் ரூ. 5 லட்சம் வழங்கியது.
தினமணி
The Hindu News :: Australia overcomes fighting India to clinch volleyball title
India go down fighting in final - Other Sports - Sections - Indiatimes Sports
Posted by
Boston Bala
at
11:54 PM
0
comments
Friday, August 3, 2007
காமன்வெல்த் வாலிபால்: ஆஸி.க்கு இந்தியா அதிர்ச்சி
கோல்கத்தாவில் வியாழக்கிழமை நடந்த 2-வது காமன்வெல்த் சீனியர் வாலிபால் போட்டியில் இந்திய அணியினர் 19-25, 25-21, 25-23, 27-25 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர்களின் சவாலை அடக்கி, 'ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா விளையாட உள்ளது.
அதே சமயம் "பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ள பாகிஸ்தானுடன் ஆஸ்திரேலியா மற்றொரு அரையிறுதியில் விளையாடுகிறது.
தினமணி
Zee News - India, Australia reach Commonwealth Volleyball semis
The Hindu : Sport : India finally in semifinals
Posted by
Boston Bala
at
1:36 AM
3
comments
Friday, July 27, 2007
ஹனீஃப் மீது குற்றம் எதுவுமில்லை: ஆசி. காவல்
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த மூன்று வாரங்களாக காவல்துறையினரால் 'விசாரிக்கப்'பட்டு வந்த இந்திய மருத்துவர்ஹனீஃப் மீது சாட்டப்பட்டிருந்த தீவிரவாதிகளுக்கு உதவியவர் என்ற குற்றசாட்டை விலக்கிக் கொள்வதாக அரசுவக்கீல் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். இவ்வழக்கை காமன்வெல்த் அரசு குற்றத்துறை இயக்குனர் (Commonwealth Director of Public Prosecution) மீள் ஆய்வு செய்து 'தவறு' நடந்திருப்பதாகக் கூறி வழக்கை விலக்கிக் கொண்டதாகக் கூறினார்.
இனி அவரது பணிவிசா இரத்து செய்யப்பட்டதும் விலக்கிக் கொள்லப்படுமா என தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை முற்றிலும் சரிசெய்துகொண்டே திரும்ப உறுதியாக உள்ளனர்.
Terrorism charges against Haneef dropped
Posted by
மணியன்
at
12:21 PM
1 comments
Monday, July 23, 2007
டாக்டர் ஹனீஃப் விவகாரம்: இட்டுக்கட்டியதா காவல்துறை?
இதுபற்றி தினமலர் செய்தி பின்வருமாறு:
ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் முகமது அனீப் விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. முகமது அனீப்பின் டைரியில் பயங்கரவாதிகள் சிலர் பற்றிய தகவல்களை ஆஸ்திரேலிய போலீசாரே எழுதியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் உள்ள பயங்கரவாத அமைப்பை சேர்ந்த கபில் அகமதுவுக்கு மொபைல் போன் சிம் கார்டு கொடுத்ததாக முகமது அனீப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையம் மீது ஜீப்பை மோதி பெரிய அளவில் விபத்தை ஏற்படுத்த முயற்சித்தவர் கபில் அகமது. அந்த ஜீப்பில் இருந்து தான் சிம் கார்டு கிடைத்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர், கபில் அகமது வீட்டில் இருந்து சிம் கார்டை கைப்பற்றியதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்தனர். இது ஆஸ்திரேலிய போலீசாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இத்துடன் புதிய தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. பிரிஸ்பேன் விமான நிலையத்தில் கடந்த 2ம் தேதி முகமது அனீப் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரிடம் குயின்ஸ்லாண்டு புலனாய்வு சார்ஜென்ட் ஆதம் சிம்ஸ் மற்றும் பெடரல் போலீஸ் அதிகாரி நீல் தாம்சன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது முகமது அனீப்பின் டைரியில் பயங்கரவாதிகள் சிலரது பெயர்கள், முகவரி உள்ளிட்ட தகவல்களை போலீசாரே எழுதியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முகமது அனீப்பிடம் நடத்திய விசாரணை தொடர்பாக 142 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை உள்ளூர் பத்திரிகைகளிடம் கிடைத்துள்ளன. அதில் இருந்தே போலீசார் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விஷயம் ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் தொழிலாளர் கட்சி எம்.பி.,க்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டவ்னரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். முகமது அனீப் விவகாரத்தில் சர்வதேச அளவில் நகைப்பு செயலை செய்து விட்டதாக போலீசாருக்கு ஆஸ்திரேலிய பசுமை கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்துடன் முகமது அனீப்புக்கு தற்காலிக விசா வழங்க வேண்டும் என ஆஸ்திரேலிய சட்ட கவுன்சில், குடியேற்ற அமைச்சர் கெவின் ஆன்ட்ரூசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தினமலர்
Posted by
வாசகன்
at
6:31 PM
0
comments
Friday, July 20, 2007
ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பொய்யாக இருக்கலாம்
லண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தகர்ப்புத் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்த பெங்களூரூவைச் சேர்ந்த டாக்டர் ஹனீஃப் முகமது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கிளாஸ்கோ விமான நிலைய பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ஆஸ்திரேலிய போலீசார் குற்றம் சாட்டினார். ஆனால் அவருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. அதனால் அனீப் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக அனீப் மீது ஆஸ்திரேலிய போலீசார் குற்றம் சுமத்தினர். தற்போது இக்குற்றச்சாட்டும் பொய்யானதாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அதனால் ஹனீஃப் விரைவில் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
Posted by
Adirai Media
at
9:52 AM
0
comments
Monday, July 16, 2007
ஹனீஃப்பிற்கு ஜாமீன் கிடைத்தது:மனைவி மகிழ்ச்சி
பிரிஸ்பேனில் உள்ல நீதிமன்றமொன்று டாக்டர் முகமது ஹனீஃப்பிற்கு ஜாமீன் வழங்கியது. பிணைத்தொகையாக $10,000 கட்டவேண்டும் என்றும் வாரத்திற்கு மூன்றுமுறை காவல்நிலையத்தில் வந்துசெல்ல வேண்டுமெனவும் ஆனையிட்டார். அரசுத்தரப்பில் அவர் விமானமேறி தப்பிவிடும் வாய்ப்பிருப்பதாகக் கூறியதை, அவருக்கும் எந்த ஒரு தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பில்லை என்பதை சுட்டிக்காட்டி ஏற்க மறுத்தார்.அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் அவர் பொறுப்பின்றி தனது சிம் அட்டையை தனது உறவுமுறை உடன்பிறப்பிறப்பான சபீல் அஹமதிற்கு கொடுத்ததே ஆகும்.
பிணைவிதிகளை நிறைவேற்றும் வரை ஹனீஃப் இரண்டொருநாள் காவலிலேயே இருப்பார் எனவும் இந்த இடைவெளியில் அரசு மேல்முறையீடு செய்யுமா என தான் அறியவில்லை என அவரது வக்கீல் பீட்டர் ரூஸ்ஸோ கூறினார். அங்கு சென்றுள்ள ஹனீஃபின் மனைவி பிர்துஸ் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதில் தலையிட்ட பிரதமருக்கும் தனது கணவருக்காக பிரார்த்தித்த இந்திய மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
NDTV.com: Haneef granted bail
Posted by
மணியன்
at
10:55 AM
1 comments
Monday, June 11, 2007
வெள்ள அபாயம் ஆஸ்தராலியாவில்.
வெள்ள அபாயம் ஆஸ்தராலியாவில்.
இதுவரை 5000 மக்கள் வெள்ளம் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர். கடந்த 35 வருசங்களில் இதுபோல நடக்கலையாம்.
புயல் மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 9.
மேற்கொண்டு தகவல்கள் இங்கே.
அண்டைநாடான நியூஸியில் இருந்து
துளசி.
Posted by
துளசி கோபால்
at
2:27 AM
0
comments
Tuesday, June 5, 2007
ச: ஆஸ்திரேலியாவில் இரயில்- ட்ரக் மோதல்: 11 மரணம்
ஒரு சாலை-இரயில் சந்திப்பில் பயணிகள் இரயிலொன்றும் ட்ரக்கொன்றும் மோதிக்கொண்டதில் பதினோருபேர்வரை மரணித்திருக்கலாம் என்றும் 22 பேர் காயமடைந்திருப்பதாகவும் பி டிஐ செய்திக்குறிப்பு கூறுகிறது. இதுதவிர 13 பேரைக் காணவில்லை என்றும் அச்செய்தி கூறுகிறது.
மேல் விவரங்களுக்கு ...The Hindu News Update Service
Posted by
மணியன்
at
6:22 PM
0
comments
Tuesday, April 3, 2007
ச: ஆஸ்திரேலிய கடற்கரைத் தீவுகளில் திடீர் சுனாமி
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாலமன் தீவுகளில் திங்கள் காலை உள்ளூர் நேரம் காலை 7:30 மணிக்கு, திடீரென தாக்கிய பசிபிக் பெருங்கடல் ஆழிப்பேரலையால், கிட்டத்தட்ட பதின்மூன்று பேர் மரணமடைந்தனர். முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் அலையில் அடித்துச் செல்லப்பட்டதால், இறந்தவர் எண்ணிக்கை இன்னும் கூடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து நிமிடங்களுக்குள் பதினாறடி உயரத்திற்கு எழுந்த நீர்ச்சுவரானது, சிட்னி நகரின் பாண்டி (Bondy beach) கடற்கரை முழுவதும் நிறைந்துவிட்டது. ஹவாய் நகரத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தில் சாலமன் தீவுகளுக்கான சுனாமி அபாயம் பதிவாகி இருந்தது. ஆழிப் பேரலைத் தாக்குதலுக்குப் பின்னர் தொடர்ச்சியாக ஆறு ரிக்டர் அளவிலான நில நடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன
Posted by
பொன்ஸ்~~Poorna
at
12:09 PM
0
comments
Wednesday, March 14, 2007
ஆஸ்திரேலியா 334/6
ஸ்காட்லாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி
334 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் பாண்டிங் 113 ரன்கள் அடித்தார். இந்த உலகக்கோப்பையின் முதல் சதத்தை அவர் 85 பந்துகளில் அடித்தார். இன்று அவர் 9 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடித்தார். இதுவரை உலகக்கோப்பையில் அதிக ஸிக்ஸ்கள் அடித்த பெருமையை உடையவர் கங்கூலி (23 ஸிக்ஸ்கள்). இன்று 5 ஸிக்ஸ்கள் அடித்ததன் மூலம் பாண்டிங் அந்த சாதனையை முறியடித்தார் (24 ஸிக்ஸ்கள்). ஆஸ்திரேலியாவின் ஹெய்டன் 60 ரன்களும் கில்கிறிஸ்ட் 46 ரன்களும் அடித்தனர். மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. 300 ரன்களை 48.3 ஓவர்களில் அடைந்த ஆஸ்திரேலியா கடைசி 9 பந்துகளில் 34 ரன்கள் அடித்தது! அவ்வணியின் ஹாக் மின்னல் வேகத்தில் 15 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார்.
விரிவான ஸ்கோர்கார்ட்.
இன்று நடந்த மற்றொரு போட்டியில் கனடா அணி கென்யாவுக்கு எதிராக 199 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இப்போட்டியின் ஸ்கோர்கார்ட்
Posted by
மணிகண்டன்
at
11:12 PM
0
comments
b r e a k i n g n e w s...
