.

Thursday, June 21, 2007

ஆணுறையா பாலியல் கருவியா? (செக்ஸ் டாய்) - இந்துஸ்தான் லேடக்ஸ்

போபால், ஜூன் 22: இந்துஸ்தான் லேடக்ஸ் நிறுவனம் தயாரித்த வித்தியாச ஆணுறைக்கு மத்திய பிரதேச மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, அதன் விற்பனையை திரும்பப் பெற நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

ஆணுறை தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனமான இந்துஸ்தான் லேடக்ஸ், 6 மாதங்களுக்கு முன்பு புதிய ஆணுறை ரகத்தை அறிமுகம் செய்தது. உணர்ச்சியைத் தூண்டக்கூடிய வளையம் அதில் இடம்பெற்றுள்ளது.

வழக்கத்துக்கு மாறான இதுபோன்ற தயாரிப்பால், அது ஆணுறை என்ற நிலையில் இருந்து பாலியல் கருவி (செக்ஸ் டாய்) ஆகிவிடுகிறது. என மத்திய பிரதேச பொதுப் பணித் துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை ஆதரித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும், இந்திய கலாசாரத்துக்கு ஏற்புடையதாக இல்லாத எதுவும் ஏற்கப்படாது என்று கூறினார்.

மேலும் செய்திக்கு "தினகரன்"

கிரிக்கெட்: 'உள்விவகாரங்கள் வெளிப்படுத்தாதீர்' - BCCI

கிரிக்கெட் வீரர்களுக்கு வாரியம் அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சேப்பல் இருந்த போது, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கங்குலி மீது அவர் புகார் கூறி கிரிக்கெட் வாரியத்திற்கு ரகசியமாக அனுப்பிய 6 பக்க இ-மெயில், எப்படியோ கசிந்து விட்டது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் வெடித்தன. இதே போல் கடந்த உலக கோப்பை போட்டியின் போது டிரஸ்சிங் அறையில் நடந்த பல விவகாரங்கள் அம்பலமானதால், அணிக்குள் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டது. இது போன்ற சர்ச்சைகளை தவிர்க்க, இந்திய கிரிக்கெட் வாரியம் இப்போது கடுமையான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு 80 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று அதிகாலை மும்பையில் இருந்து புறப்பட்டது. அதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அலுவலர் ரத்னாகர் ஷெட்டி எழுதிய கடிதம் பற்றி இந்திய அணி வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த கடிதத்தில், வீரர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் கூறப்பட்டு இருந்தன.

குறிப்பாக போட்டி நடக்கும் போது மைதானத்தில் வீரர்கள் தங்கியிருக்கும் அறையிலும் (டிரஸ்சிங் அறை), அணி வீரர்கள் சந்திப்பு கூட்டங்களிலும் நடக்கும் விஷயங்கள் எந்த காரணத்தை கொண்டும் வெளியே கசிந்து விடாதபடி வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. மேலும், அணி நிர்வாகம் அனுமதி இல்லாமல் எந்த வீரரும் மீடியாவை சந்திக்க கூடாது என்ற கட்டுப்பாடு கடந்த சில தொடர்களை போல் இப்போதும் தொடர்ந்து நீடிக்கிறது.

ஆப்பிள் பழத்திலிருந்து எரிபொருள்.

காட்டாமணக்கு போன்ற தாவரங்களில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலை கழக நிபுணர்கள் ஆரஞ்சுபழம், ஆப்பிள் பழம் போன்றவற்றில் இருந்து உயிரிஎரிபொருள் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த பழங்களில் `பிரக்டோஸ்' என்ற சர்க்கரை சத்து உள்ளது. இந்த சர்க்கரை சத்தை எரிபொருளாக நிபுணர்கள் மாற்றி உள்ளனர். ஈத்தனாலை விட அதிக சக்தி கொண்ட எரிபொருளாக இது உள்ளது. இந்த எரிபொருளை கொண்டு கார்களையும் ஓட்டி சாதனை நடத்தி உள்ளனர். இதில் இருந்து அதிக அளவு கார்பன் புகை வெளிவருவது இல்லை.

ஏற்கனவே இங்கிலாந்து விஞ்ஞானிகள் கழிவுப்பொருள்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றில் இருந்து உயிரி எரிபொருளை தயாரித்துள்ளனர்.

வராதட்சணைக்குப் பதிலாக மனைவியின் கிட்னி!

வரதட்சணை தர மனைவி வீட்டார் தாமதம் செய்து வந்ததால், கோபமடைந்த கணவன், மனைவியின் சிறுநீரகத்தை எடுத்து ரூ. 80 ஆயிரத்திற்கு விற்று விட்டார். அந்த கொடூர கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள கருப்பண்ணார் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 1 மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

வரதராஜன் தறி வேலைக்குச் செல்கிறார். செல்வராணி நூல் போடும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் செல்வராணி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த வரதராஜன், கத்தியால் குத்த முயன்றார்.

அந்தப் பக்கமாக போனவர்கள் வரதராஜனைத் தடுத்து செல்வராணியைக் காப்பாற்றினர். காயமடைந்த செல்வராணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.



பள்ளிப்பாளையம் போலீஸார் விரைந்து வந்து வரதராஜனைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது.

அதாவது, மனைவி செல்வராணியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் வரதராஜன். ஆனால் வரதட்சணைப் பணத்தைத் தர முடியாமல் திணறியுள்ளனர் செல்வராணியின் பெற்றோர்.

இதனால் கோபமடைந்த வரதராஜன், மனைவியை கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று அவரது சிறுநீரகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்து ரூ. 80 ஆயிரத்திற்கு விற்று விட்டார்.

இது தொடர்பாகத்தான் வரதராஜனுக்கும், செல்வராணிக்கும் நடுத் தெருவில் சண்டை மூண்டுள்ளது. அப்போதுதான் செல்வராணியை கத்தியால் குத்தியுள்ளார் வரதராஜன்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு: மழை இரண்டு நாட்கள் நீடிக்கும்.

சென்னையில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறு சிறு தூறல் மழையும் பெய்தது. நேற்று இரவில் இருந்து விடிய விடிய மழைபெய்து வருகிறது. கோடையில் பருவ மழை போல் மழை கொட்டுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலையில் மீனம் பாக்கம், தாம்பரத்தில் தலா 3.6 மி.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 5.6 மி.மீட்டரும் மழை பெய்தது.

மத்திய வங்கடலில் ஆந்திரா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கன்னியா குமரி தூத்துக்குடி உள்பட கடலோர மாவட்டங்களில் அடைமழை பெய்து வருகிறது.

மாலைமலர்

பாமக பொதுச்செயலாளராக தலித் பெண்.

பாமகவின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஊட்டியில் உள்ள படுகர் அரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் பாமக தலைவராக மீண்டும் ஜி.கே.மணி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த தலித் பெண்மணி, பாலசுந்தரி தேர்வு செய்யப்பட்டார்.

பாமக நிர்வாகியாக ஒரு பெண் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாளராக மன்சூர் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார். அவர் கூறுகையில், பாமக மக்கள் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு போராட வேண்டும். கட்டப் பஞ்சாயத்து நமக்கு வேண்டாம்.

டெண்டர் எடுப்பவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை. அதேபோல மது காய்ச்சுபவர்கள், குடிப்பவர்களுக்கும் கட்சியில் இடம் இல்லை.

இங்கு வெளியிடப்பட்ட ஊட்டி பிரகடனத்தில், 2020ம் ஆண்டில் தமிழகத்தில் சமூகம், பொருளாதாரம், கல்வி, பண்பாடு, கலாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லியுள்ளோம்.

தமிழ் மக்கள் தமிழ் மொழிக்காகவும், தமிழக நலனுக்காகவும் பாடுபட வேண்டும். இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தைலாபுரத்தில் 5 நாட்களும், பிற ஊர்களில் 30 நாட்களும் பயிற்சி தரப்படும்.

தமிழகத்தில் தமிழர்களின் நிலங்கள் பிற மாநிலத்தவரால் அபகரிக்கப்படுகின்றன. இதைத் தடுக்க நம்மிடம் ஆட்சிப் ெபாறுப்பு இருக்க வேண்டும். 2011ம் ஆண்டு பாமக ஆட்சியைப் பிடிக்கும். இதுவரை இல்லாத சிறந்த ஆட்சியை பாமக வழங்கும்.

இப்படிச் சொல்வதை சிலர் கேலி செய்தாலும் நமக்குக் கவலை இல்லை. அப்படி கேலி செய்யும் தகுதியும் யாருக்கும் கிடையாது. எதிர்ப்பவர்கள் எப்போதும் எதிர்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

தமிழகம் எல்லா நிலையிலும் தற்போது பின்தங்கியுள்ளது. சினிமாவால் கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என்றார்.

பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் உள்ள மதுக் கடைகளைக் குறைக்க வேண்டும், பார்களை மூட வேண்டும், நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்,

சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களை நுழைய விடக் கூடாது, கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும், இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவு அளிப்பது எனவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை பெங்களூர் இரயில் எர்ணாகுளம் வரை.

கோவையிலிருந்து பெங்களூர் வரை பகல் நேரத்தில் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கோவையும், பெங்களூரும் தொழில் ரீதியில் மிகவும் நெருங்கிய நகரங்களாக இருப்பதால் இரு நகரங்களிலிருந்தும் ஏராளமான பேர் இந்த ரயிலில் பயணித்து வந்தனர்.

கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் கூடுதலாக ஒரு பகல் நேர ரயில் விட வேண்டும் என்று கோவையில் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. ஆனால் அதைச் செய்யாமல், கோவை-பெங்களூர் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை, கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை நீட்டித்து விட்டனர்.

பாலக்காடு கோட்டத்தின் கீழ் கோவை வருவதால், மலையாள அதிகாரிகள் இதைச் செய்துள்ளனர். இதனால் கோவை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எர்ணாகுளம் வரை இந்த ரயிலை நீட்டித்துள்ளதால் கோவை பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு 800 இருக்கைகளுக்கு கோவையிலேயே முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. எட்டு பெட்டிகளைக் கொண்டதாக இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது.

ஆனால் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவைக்கு தற்போது வெறும் 2 பெட்டி மட்டுமே கிடைத்துள்ளது. அதில் 200 பேர் மட்டுமே செல்ல முடியும். மற்ற பெட்டிகள் அனைத்தும் எர்ணாகுளத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மட்டுமே கோவையில் ரிசர்வ் செய்ய முடியும்.

கிடைத்துள்ள 200 இருக்கை வசதி கொண்ட பெட்டிகளிலும் கூட எர்ணாகுளத்திலேயே புக்கிங் செய்யப்பட்டு விடுவதால் கோவை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் அதிக கட்டணம் கொடுத்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கோவை பகுதி பயணிகளுக்கு உண்டாகியுள்ளது.

ஏற்கனவே எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு இரண்டு ரயில்கள் வாரத்திற்கு 2 நாட்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரயில்களை தினசரி ரயில்களாக மாற்றாமல், கோவை ரயிலை கேரள அதிகாரிகள் பறித்துள்ளனர்.

கோவை ரயிலை கேரளா பறித்துள்ள இந்த செயல் கோவை மக்களுக்கு பெரும் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் கிளப்பியுள்ளது. ஆனால் கோவையைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மகா அமைதியாக உள்ளனர்.

இதுவரை ஒரு வார்த்தை கூட அவர்கள் பேசவில்லை. இப்படியே இருந்தால் கோவையில் உள்ள அத்தனை ரயில்களும் கேரளாவுக்கே போனாலும் போய் விடும் என்று மக்கள் கொந்தளிப்புடன் கூறுகின்றனர்.

மதுரைமேற்கு: கருத்துக்கணிப்பு, வெளிஆட்கள் தடை!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மதுரை மேற்கு தொகுதியில் 26-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 (ன்படி 126-வது பிரிவின் கீழ் ஓட்டுப்பதிவு 48 மணி நேரத்துக்கு முன்னதாக பிரசாரம் ஓய வேண்டும். அதன்படி 24-ந்தேதி மாலை 5 மணியுடன் வேட்பாளர் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் அச்சமின்றி வாக்களித்து, தங்கள் பிரதிநிதியை தேர்வு செய்யலாம். மதுரை மேற்கு தொகுதிக்குள் வாக்களிக்க தகுதி இல்லாதவர்கள் தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பிரசார ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திர மாகவும் நடக்க ஒத்து ழைக்க வேண்டும்.

இதற்காக 24-ந்தேதி மாலை 5 மணிக்குப் பிறகு மதுரை மேற்கு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளிïர் நபர்கள் அனைவரும் வெளி யேற்றப்படுவார்கள். அவர்கள் மதுரை மேற்கு தொகுதிக்குள் தங்கி இருக்க தடை விதிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

24-ந்தேதி மாலை 5 மணிக்கு பிறகு மதுரை மேற்கு தொகுதியின் எல்லைகள் "சீல்'' வைக்கப்படும். இதனால் வெளி நபர்கள் தேவை இல்லாமல் மதுரை மேற்கு தொகுதிக்குள் நுழைய முடியாது.

அமைதியை சீர் குலைக்க முயற்சி செய்பவர்கள் தொகுதிக்குள் அனுமதிக்கப் பட மாட்டார்கள். மாநில அரசால் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தலை வர்களும் 24-ந்தேதிக்குப் பிறகு தொகுதிக்குள் தங்கி இருக்க அனுதிக்கப்படமாட்டார்கள்.

24-ந்தேதி மாலை 5 மணிக்குப் பிறகு கருத்துக் கணிப்புகள் வெளியிட பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. அது போல வாக்களித்து விட்டு வரும் வாக்காளர்களிடம் நடத்தப்படும் கருத்துக்கணிப்புக்கும் தடை விதிக்கப்படுகிறது.

ஓட்டு போட்டு விட்டு திரும்புபவர்களிடம் எடுக்கப்படும் கருத்துக்கணிப்பை எக்காரணம் கொண்டும் 26-ந்தேதி மாலை 5 மணி வரை வெளி யிடவோ, ஒளிபரப்பு செய்ய வோ கூடாது.

கருத்துக்கணிப்பை வெளியிடும் அமைப்புகள், அது எத்தகைய பரப்பளவில், எத்தனை பேரிடம் எப்படி எடுத்தனர் என்பதை தெரி விக்க வேண்டும். கருத்துக் கணிப்பில் தங்களுக்கு உள்ள அனுபவம், தவறு சதவீதம், தொழில் பின்புறம், ஆகியவற்றையும் தெளிவுபட சொல்ல வேண்டும்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

நன்றி: மாலைமலர்

இட ஒதுக்கீடு: முஸ்லிம்களிடையே 'சாதி' பிரிப்புக்கு எதிர்ப்பு.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் விதத்தில், முஸ்லிம்களிடையே பன்னிரு சாதிகளாகப் பிரிக்கும் ஆந்திர அரசிற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐக்கிய முஸ்லிம் செயற் குழுமம் (United Muslim Action Committee) வெளியிட்டுள்ள 'ஃபத்வா'வில் "இது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த 2004 தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக நிலை மேற்கொண்டிருந்தது

ஷியா சிந்தனைவாத அறிஞர் ஒருவரும், சன்னி பிரிவு அறிஞர் ஐவரும் கூட்டாக இந்த ஃபத்வாவை வெளியிட்டுள்ளனர். மேலும் நாட்டிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து ஃபத்வாக்களை கோரிப் பெற்று ஒருமித்த கருத்துருவாக்க இருப்பதாக இவ்வமைப்பு கூறுகிறது

மேலும் படிக்க....TOI

துர்காவாக சோனியாவை சித்தரிக்கும் ஓவியம்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை இந்துக்களின் துர்காதேவியாகச் சித்தரிக்கும் ஓவியம் உ.பி.மாநில மொராதாபாத் கட்சி அலுவலகத்தில் வரையப்பட்டுள்ளது.

"இதை ஒரு கலையாகக் கருதினால், இதில் தவறொன்றுமில்லை" என்று மாவட்ட காங்கிரஸ் தலைவர் A.S. சோனி கருத்தளிக்கையில், நகரத் தலைவர் அசாத் மவ்லயி "பல்வேறு மதத்தவர்களும் அங்கம் வகிக்கும் கட்சியில், இந்துக்கடவுளாக சோனியாவை உருவகிப்பது கண்டனத்துக்குரியது" என்றார். முன்னாள் எம்.பி. ஹஃபீஸ் சித்தீக்கியும் "இது மிகவும் ஆட்சேபகரமானது, இதுவரை இப்படி நடந்ததேயில்லை" என்று சொல்லியிருக்கிறார்.

உ.பி மாநில காங்கிரஸ் முன்னாள் மேலிடப்பொறுப்பாளர் பவான் கத்வார், இதுபற்றி கூறும்போது "இது மிகவும் துரதிருஷ்டவசமானது, எந்த அரசியல்வாதியும் கடவுள் உருவமாகச் சித்தரிக்கப்படக்கூடாது" என்றார்.

கடந்த மாதம் இராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தராவை கடவுள் உருவமாகச் சித்தரித்து, பா.ஜ.க விலும் சர்ச்சைகள் சுழன்றடித்தது நினைவிருக்கும்.

பிடிஐ

"கலாம் ஆடி முடித்துவிட்டார்": - பவார்

அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத்தலைவராக்க முயலும் மூன்றாவது அணிக்கு மேலும் ஒரு அடியாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், கிரிக்கெட் போர்ட் தலைவருமான சரத்பவார் பேட்டியளித்துள்ளார்.

"அவர் களத்தில் இல்லை, எனவே மீண்டும் ஆட வருகிறேன் என்று சொல்லக்கூடாது" என்றார் அவர். "அவரை எனக்கு மிக நன்றாகத்தெரியும், நாங்கள் இணைந்துப் பணியாற்றியிருக்கிறோம்" என்றார் பவார். சரத்பவார் மத்தியில் இராணுவத்துறை அமைச்சராகப்பணியாற்றியபோது, கலாம் அவருக்கு அறிவியல் ஆலோசகராகப் பணிபுரிந்தார்.

"நேர்மையான மனிதர்" என்று கலாமைப் புகழ்ந்த பவார், "தான் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு ஜெயிக்கும் வாய்ப்பிருந்தால் போட்டியிடுவதாக மிக உயர்ந்த பதவி வகிக்கும் அவர் சொல்வது பரிதாபத்திற்குரியது" என்றார்.

"ஜனநாயகத்தில், விரும்பும் தொகுதியில் நின்று வென்று பொதுவாழ்வுக்கு வரலாம், அதைவிடுத்து, வெல்லும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே போட்டியிடுவதாகச் சொல்லக்கூடாது" என்றார்.

பிடிஐ

சென்னைRSSஅலுவலகம் குண்டுவெடிப்பின் தீர்ப்பு.

சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலகம் குண்டு வெடிப்பின் தீர்ப்பு இன்று மாலை சரியாக 3.45. மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பலிக்கப்பட்டது இதில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் மூவருக்கு ஆயுல் தண்டனை வழங்கப்பட்டது.
விடுதையானவர்கள் விபரம்:
கோவை பாஷா
முக்தார்
அஸ்லாம்
அமீன்
ஆயுல் தண்டனைப்பெற்றவர்கள் விபரம்:
மேலப்பாளையம் அபூபக்கர்சித்திக்

இமாம் அலி கூட்டாளி ஹைதர்அலி
மேலப்பாளையம் முன்னால் கவுன்சிலர் ராஜாநஜ்முதீன்.
ஆகியோர்களூக்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பத்திரிக்கை யாளர்களும் பொதுமக்களும் திரளாககாத்திருந்தனர்.

சற்றுமுன்க்காக.கோர்ட்வளாகத்திலிருந்து.... அதிரைஹிதாயத்,

ச:சென்னை விமானநிலையத்தில் மனிதசங்கிலிப் போராட்டம்

சென்னை உள்நாட்டு விமானமையத்தின் முன்னர் நூற்றுக்கணக்கான உடலூனமுற்றவர்கள் ஏர் சகாராவில் மூளைகுறைவுற்ற ராஜனை ஏற்ற மறுத்த விவகாரத்தில் விமான சேவைகளில் உடல் ஊனமுற்றோருக்கு மற்றவர்களுக்கு இணையான சேவை வழங்கவேண்டும் என்று கோரிக்கை அட்டைகளை வைத்துக் கொண்டு தங்கள் சக்கரநாற்காலிகளில் இருந்தவாறே மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
மேலும்..The Hindu News Update Service

ச: கலாமிற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு இல்லை: இராம்தாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டா.இராம்தாஸ் நிருபர்களிடம் பேசுகையில் குடியரசுத்தலைவர் பதவிக்கு ஐக்கிய முன்னேற்றக் கூட்டணியின் வேட்பாளராக ஒரு பெண்மணியை அறிவித்தபின்னர் அவர் வெற்றிக்கு உழைப்பதை விட்டு மறுபரிசீலனை செய்ய முடியாது என்றார். கலாம் அவர்கள் கல்விப்பணியில் ஈடுபடப்போவதாகவும் இரண்டாம் முறை போட்டியிடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.அவரும் தன்முடிவை மாற்றிக் கொள்ளமாட்டார் என நம்புவதாகவும் அவர் கூறினார். நிருபர்கள் சிவாஜி திரைப்படம் பற்றியும் அப்படம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியிருப்பது பற்றியும் கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார்.
மேலும்...The Hindu News Update Service

ச:யுனெஸ்கோ பண்பாட்டு தேர்வில் உருக் வேதம்

பிற்கால சந்ததிகளுக்காக சேமிக்கப்படும் பண்பாட்டு தேர்வில் 38 புதிய விதயங்கள் சேர்க்கப் பட்டுள்ளன; அவற்றில் 30 கையெழுத்துப்பிரதிகளில் உள்ள உருக் வேதமும் அடங்கும். தவிர உலகின் முதல் திரைப்படம், நோபல் குடும்பத்தினரின் சேமிப்புக்கள், தென்னாப்பிரிக்காவின் அபார்தீட் எதிர்பாளர்களின் குற்ற விசாரணை ஆகியனவும் அடங்கும்.
இதுபற்றிய முழு விவரங்களுக்கு...The Hindu News Update Service

ச:வைஷ்ணவிதேவி கோவிலுக்கு பயணித்த பஸ் பள்ளத்தில் விழுந்து 12 பேர் பலி

தர்மசாலாவை சேர்ந்த கைன்சிமோட் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாதையிலிருந்து பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் மரணம், 21 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபத்து தனியார் பேருந்தின் ஓட்டுனர் வளைவொன்றை கடக்கையில் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்டதாக உதவி மாவட்ட அதிகாரி டிசி ரானா கூறினார். பேருந்திலிருந்த 34 பயணிகளும் வைஷ்ணவி தேவி குகைக் கோவிலுக்கு பயணித்துக் கொண்டிருந்தனர்.
The Hindu News Update Service

ச: கலாம் கண்ணியத்துடன் பதவி விலகவேண்டும்: லாலுபிரசாத்

மூன்றாம் அணியின் கருத்தொருமித்த முடிவிற்கான வேண்டுகோளை நிராகரித்த லாலுபிரசாத் யாதவ் அவர் கண்ணியமான முறையில் பதவி விலக வேண்டும் என தெரிவித்தார். பிரதிபா பாடிலின் தேர்தல் விண்ணப்பத்தை வழிமொழிந்து கைஒப்பமிட்ட அவர் முடிவுகளை பரிசீலிக்கும் காலம் முடிந்துவிட்டது எனக் கூறினார்.
மேலும்...The Hindu News Update Service

ச: இடதுசாரிக் கட்சிகளும் கலாமிற்கு ஆதரவு இல்லை

இன்று தன்னை சந்தித்த மூன்றாம் அணித் தலைவர்களிடம் சிபிஎம் பொது செயலர் பிரகாஷ் காரத் அப்துல் கலாமின் இரண்டாம் முறை பதவிவகிக்க ஆதரவு தர இயலாமையை தெரிவித்தார். சிபிஐ கட்சியும் பாடிலை ஆதரிக்கும் தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் எண்ணமே இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.
The Hindu News Update Service

ச: அருணாசலத்தில் தொலைக்காட்சி,வானொலியை சீனா தடுப்பு

இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை சீனா சத்தம் போடாமல் ஆக்கிரமித்து வருவது மட்டுமன்றி அம்மாநில மக்கள் இந்திய தொலைக்காட்சியையும் அகில இந்திய வானொலியையும் கேட்கவிடாது தனது அலைவரிசைகளால் மூழ்கடித்து வருகிறது. குறைந்த வலுவுள்ள இந்திய தொலைக்காட்சியினால் தலைநகர் இடாநகரை விட்டால் வேறெங்கும் சேவை அளிக்கமுடிவதில்லை. இந்திய அரசின் இந்த மெத்தனம் அம்மாநில மக்கள் மீது மைய அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது.

மேல் விவரங்களுக்கு....DNA - India - China jams AIR and DD in Arunachal Pradesh - Daily News & Analysis

கட் அவுட், பாலாபிஷேகம்: விஜய் கண்டிப்பு

நடிகர் விஜய் தனது பிறந்த நாளை ஜூன் 22-ம் தேதி கொண்டாடுகிறார். இதையொட்டி வடபழனியில் உள்ள ஷோபா திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாமுக்கும், ரத்த தான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 100 ஏழை மாணவர்களின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டுள்ள விஜய், இந்த ஆண்டு ஆறு லட்சம் நோட்டு புத்தகங்களையும் இலவசமாக வழங்குகிறார்.

மேலும் ஜூன் 22-ம் தேதி எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்தை பரிசாக வழங்குகிறார்.

பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு புதன்கிழமை விஜய் விடுத்துள்ள அறிக்கை:

ஜூன் 22-ம் தேதி 'அழகிய தமிழ்மகன்' படப்பிடிப்பில் இருப்பதால் என்னைக் காண ரசிகர்கள் யாரும் நேரில் வரவேண்டாம். அதே சமயம் என் பிறந்த நாளுக்கு கட் அவுட் வைப்பது, பேனர் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்ற தேவையில்லாத செலவுகளைச் செய்ய வேண்டாம்.

அதற்கு பதிலாக தங்கள் ஊரில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு சிறு உதவிகளைச் செய்தால் போதும். அவ்வாறு செய்வதையே ரசிகர்கள் எனக்குத் தரும் பிறந்த நாள் பரிசாக ஏற்றுக்கொள்வேன்.

தினமணி

பாமக தலைவராக ஜி.கே.மணி மீண்டும் தேர்வு

உதகையில் புதன்கிழமை நடைபெற்ற பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச் செயலர் மற்றும் பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் தலைவராக ஜி.கே.மணி, பொருளாளராக டி.எஸ்.மன்சூர் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுவரை பொதுச் செயலராக இருந்த தென்.சு.மூக்கையாவுக்கு பதிலாக நா.பாலசுந்தரி புதிய பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...