.

Tuesday, July 24, 2007

உணவு எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின ஒரு பகுதியாக உணவு எண்ணெய் இறக்குமதிக்கான வரியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 5 முதல் 10 சதவீதம் வரை வரி விலக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த வரி விலக்கினால் சில்லரை விலையில் உணவு எண்ணெய் கிலோவுக்கு ரூ. 4 வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுத்திகரிக்கப்படாத பாமாயில் மீதான சுங்க வரி 50 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெய்யின் மீதான சுங்கவரி 57.5 சதவீதத்தில் இருந்து 52.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

MSN Tamil

The Hindu : Front Page : Government cuts import duty on edible oil
Edible oil prices seen stable as crop prospect brightens :: Economic Times

முதல்வருடன் உலக வங்கி இயக்குநர்(இந்தியா) சந்திப்பு.

முதல்-அமைச்சர் கருணாநிதியை இன்று இந்தி யாவிற்கான உலக வங்கியின் புதிய இயக்குநர் இசபெல் குரேரோ சந்தித்தார். அப்போது நிதி அமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலாளர் திரி பாதி, நிதித் துறைச்செய லாளர் ஞானதேசிகன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

அப்போது உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழகத்தில் செயல் படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத் தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் 9 திட்டங்கள் ரூ.10 ஆயிரத்து 635 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ரூ.2 ஆயிரத்து 160 கோடி மதிப்பீட்டில் செயல் படுத் தப்பட்டு வரும் தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், ரூ.597 கோடி மதிப்பீட் டில் செயல் படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம், ரூ.717 கோடி மதிப்பீட்டில் செயல் படுத்தப்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து உலக வங்கியின் இயக் குநர் தமிழக அரசுக்கு தனது பாராட்டுதல்களைத் தெரிவித் தார்.

இவர் நமது நாட்டில் பொறுப்பேற்றுள்ள உலக வங்கி யின் முதல் பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: மாலைமலர்

ஆந்திரா: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு - சட்டசபை ஒப்புதல்.

கல்வி மற்றும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா ஆந்திர சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக, மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்தினருக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்தை நிறைவேற்ற ஆந்திர அரசு கடந்த 2004ம் ஆண்டு முடிவு செய்தது. ஆனால், அரசுத் துறைகளில் 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை நான்கு சதவீதமாக குறைத்து ஆந்திர அமைச்சரவை சமீபத்தில் குறைத்தது. இதையடுத்து, இந்த மசோதா நேற்றிரவு சட்டபையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ. எம்.எல்.ஏ.,க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


நன்றி: தினமலர்

அஸ்ஸாம்: வெள்ளத்திலிருந்து 40,000 பேர் மீட்பு

துடிப்புமிக்க இளம் இ.ஆ.ப அதிகாரி ஒருவரின் முயற்சியால் அஸ்ஸாமில் வெள்ளத்தால் சூழப்பட்ட 40,000 கிராம மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றிய தினமலர் செய்தி:

இளம் துடிப்பான ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் அதிரடி முயற்சியால் வெள்ளத்தில் சிக்கிய 40 ஆயிரம் கிராம மக்கள் மீட்கப்பட்டனர்.

சமீபத்தில், அசாமில் பெய்த பேய் மழையால், தேமாஜி மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஜியாதோல் நதியின் உபநதியான குமோடியா நதியில் திடீர் வெள்ளப் பெருக்கும், உடைப்பும் ஏற்பட்டது. இதனால், தேசிய நெடுஞ்சாலை 52ல் ஆயிரத்து 500 மீட்டர் துõர சாலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் இருந்து தேமாஜி மாவட்டம் துண்டிக்கப்பட்டது.

நதிநீர் புகுந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த 50 கிராமங்களில் வசிக்கும் 40 ஆயிரம் பேர் வெள்ளத்தால் சூழப்பட்டனர். வெள்ளத்தால் சூழப்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்பது தான் மாவட்ட நிர்வாகத்தின் முதல் பணியாக இருந்தது. இதனால், மாவட்ட நிர்வாக அதிகாரியான இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்களின் உதவியை கேட்டார்.ஆனால், அந்த கிராமப் பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மரங்கள், ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறப்பதற்கு தடையாக இருந்தன. அதுமட்டுமின்றி, தரையிறங்க எங்கும் இடமே கிடைக்கவில்லை. இதனால், ஹெலிகாப்டர்கள் மூலம் கிராம மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது.இதையடுத்து, ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. அந்த கிராமங்களை சென்றடைவது கடினம் என்று ராணுவத்தினரும் கைவிரித்து விட்டனர்.தானாக உதவிக்கு முன்வர துடிப்பான இளைஞர்களுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி அழைப்பு விடுத்தார். ஏராளமான இளைஞர்கள், வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதில் உதவுவதற்கு முன் வந்தனர்.அவர்கள், நாட்டுப்படகை பயன்படுத்தி, வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த கிராமங்களுக்கு சென்றனர். அங்கிருந்த அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரப்பட்டனர். துடிப்புடனும், தீரத்துடன் உதவிய இளைஞர்களை ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாராட்டினார்.மீட்கப்பட்ட கிராம மக்கள், அதிகாரியின் அதிரடி நடவடிக்கைக்கு பெரிதும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்காக ஆடிய 'மழை'

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளின் முதலாவது ஐந்துநாள் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தின் நாலாவது நாளில் இங்கிலாந்து வெல்வதற்கு இந்தியாவின் ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில் மழை குறுக்கிட்டு இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை கவிழ்த்தது.

சுருக்கமான ஓட்ட எண்ணிக்கை:

இங்கிலாந்து (முதல் பகுதியாட்டம்): 298
இந்தியா: 201
இங்கிலாந்து (இரண்டாவது பகுதியாட்டம்) 282
இந்தியா: 282/9

அடுத்த போட்டி 27ந்தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது

புதிய குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழா: தமிழக முதல்வர் டெல்லி வருகை

புதிய குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க உள்ள பிரதீபா பாட்டீலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி டில்லி புறப்பட்டுச் சென்றார்.
நாட்டின் 13வது குடியரசுத்தலைவராக பிரதீபா பாட்டீல் நாளை பதவி ஏற்றுக் கொள்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி புறப்பட்டார். அவருடன் துணைவியார் ராஜாத்தியம்மாள், அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் சென்றனர். அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் முதல்வரை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

குடியரசு துணைதலைவர் தேர்தல்: வேட்புமனு ஆய்வு முடிந்தது

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு வந்த 33 வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டு மூன்று மட்டுமே நெறிப்படி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 10 அன்று மும்முனைப் போட்டி முகமது அன்சாரி, நஜ்மா ஹெப்துல்லா, ரஷீத் மசூத் ஆகியோரிடையே நடக்கும். வேட்புமனுவை திரும்பப் பெற கடைசிநாள் வெள்ளிக்கிழமையாகும்.

Scrutiny over, three in fray for vice presidential poll - Yahoo! India News

திமுக,பாமக அறிக்கை போர் தொடர்கிறது

நேற்று முதல்வர் கருணாநிதி ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியை விமரிசிப்பது முறையல்ல, எதற்கும் ஒரு எல்லை உண்டு எனக் கூறியதற்கு இன்று பாமக நிறுவனர் ராம்தாஸ் பதில் அறிக்கை விடுத்துள்ளார்.ஜனநாயக அமைப்பில் அரசியல் கட்சிகள் மக்களின் குறைகளை அரசிடம் எடுத்துச் செல்ல வேண்டியது அவர்களின் கடமையாகும், இதற்கு எந்த எல்லையும் இல்லை,நான் எந்த எல்லையையும் மீறவும் இல்லை என அவர் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி ஒரு மூத்த அரசியல்வாதி, ஜனநாயக வாதி. அவருக்கு அரசியல் கட்சிகளின் கடமைகள் பற்றி தெரியும். கட்சிகளின் வாயை அடைக்க முடியாதென்பதும் அவர் அறிவார் என கேள்விகளுக்கு பதில் கூறுகையில் கூறினார்.தங்கள் கட்சி திமுகவிற்கு நட்புடைய கட்சி, எந்தவொரு அரசின் செயலும் தவறென்றால் மக்களின் துயர்நீக்க அதனை அரசிடம் கொண்டுசெல்கிறோம்,அந்த ஜனநாயக கடமையைதொடர்ந்து நிறைவேற்றுவோம் எனவும் கூறினார்.

The Hindu News Update Service

சந்திரபாபு நாயுடுவிடம் மன்னிப்பு கோரினார் ஆந்திர முதல்வர்

ஆந்திர சட்டமன்றத்தையே உலுக்கிய நிகழ்ச்சிக்கு காரணமான தனது பேச்சிற்கு அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி சந்திரபாபு நாயுடுவிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மன்னிப்பைக் கோரினார். திங்களன்று சட்டமன்றத்தில் தன்னை அவமதித்ததாக நாயுடு கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக 35 எம் எல் ஏக்கள் சட்டமன்றத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தி இன்று கைதாயினர். சட்டமன்றத்திலும் அவை நடவடிக்கைகளை நடக்கவிடாமல் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

NDTV.com: Andhra CM apologises to Naidu

ஹைதராபாத்்:சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பொது மேலாளர் கடத்தப்பட்டார்

சத்யம் கம்ப்யூட்டரின் பொதுமேலாளர் சத்யா வெதுளா இன்று தனது குழந்தைகளை செகந்திராபாத்தில் உள்ள பள்ளியில் இறக்கிவிட்டு வரும்வழியில் இரு நபர்களால் கடத்தப் பட்டுள்ளார். அவரின் குடும்பத்தினரை இதுவரை பிணையத்தொகை் கோரி யாரும் தொடர்பு கொள்ளவில்லை. காவலர்கள் இது தனிப்பட்ட சொத்து அல்லது நிலப் பிரச்சினையாக இருக்கக்கூடும் எனத் தெரிவித்தனர்.

IBNLive.com > Gen Manager of Satyam Computers kidnapped : satyam computers, general manager, kidnap

சென்னை திரும்பும் அப்துல் கலாமுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு!!
குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து சென்னை வரும் அப்துல்கலாமுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று மாலை அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதன் பின்னர் நாளை மாலை விமானம் மூலம் சென்னை வரும் அப்துல்கலாமுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அண்ணாபல்கலைக்கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து அப்துல்கலாமை வரவேற்று அண்ணா பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்துக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு தங்கியிருந்து அவர் மாணவர்களுக்கு பாடம் எடுப்பார் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

3ஆம் வகுப்பு மாணவி பாலியல்பலாத்காரம்

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு துணைபோன பள்ளியின் உதவி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் சென்னையில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அசோக்நகரில் உள்ள கேந்திர்யா வித்யாலயா பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவியை பள்ளியின் லேப்டெக்னீஷியன் செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்றும், இச்சம்பவத்திற்கு துணைபோன உதவி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஞானம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை இன்று முற்றுகையிட்டனர். தி.நகர் துணை ஆணையர் லட்சுமி நேரில் வந்து பெற்றோர்களின் சார்பில் பள்ளி முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தமினார். சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்ததாக செய்தியாளர்களிடம் துணை ஆணையர் லட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன்பின்னர் பெற்றோர்கள் கலைந்துசென்றனர்

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் சஸ்பெண்டு!

பிரதிபா பட்டேலுக்கு வாக்களித்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 19ந்தேதி நடைபெற்றது. இதில் குஜராத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தனர். பாஜக கூட்டணி வேட்பாளர் செகாவத்துக்கு வாக்களிக்காமல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதிபா பட்டேலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். நரேந்திரமோடிக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்கள்தான் கட்சி மாறி வாக்களித்தது தெரியவந்தது. இந்தநிலையில் பிரதிபா பட்டேலுக்கு வாக்களித்த கோர்கான், ஜடாபியா, பலுபாய்தாண்டி, பெசர்பாய்பதானி, பவுக்பாய்உகந்த், திருபாய் சுஜீரா ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இச்சம்பவம் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாஜக செய்தித்தொடர்பாளர் கட்சி ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்டதால் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடு 'சஸ்பெண்ட்'

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் இருந்து திங்கள்கிழமை கேள்வி நேரம் முடியும்வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்களும் அவருடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும், கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் ஜனார்த்தன் ரெட்டிக்குச் சொந்தமான இரும்புத் தாது சுரங்கத்தில் சட்டவிரோதமான செயல்கள் நடப்பதாகக் கூறி தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரும்புத் தாது சுரங்கம் இருக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றதாக அவர்களைப் காவல்துறையினர் கைது செய்தனர்.

திங்கள்கிழமை சட்டப் பேரவை கூடியதும் இந்த விவகாரத்தை தெலுங்குதேச உறுப்பினர்கள் அவையில் எழுப்பினர். இது தொடர்பாக அவர்கள் கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு இடதுசாரி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். எனினும், இந்த தீர்மானத்துக்கு பேரவைத் தலைவர் கே.ஆர். சுரேஷ் ரெட்டி அனுமதியளிக்கவில்லை.

இதையடுத்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்துக்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதாக முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உறுதியளித்ததையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொருட்படுத்தவில்லை.

அரசுக்கு எதிராகவும், பேரவைத் தலைவருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு பேரவையின் மையப்பகுதியில் அவர்கள் கூடினர். இதையடுத்து 10 நிமிடங்களுக்கு அவையை பேரவைத் தலைவர் ஒத்திவைத்தார்.

அவை மீண்டும் கூடியபோதும், அமளி தொடர்ந்ததால், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 21 தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை வேளாண்துறை அமைச்சர் என். ரகுவீர ரெட்டி கொண்டுவந்தார். இதையடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைக் கேட்டதும், மிகவும் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு, தனது கையில் இருந்த காகிதங்களை மேஜை மீது வீசி எறிந்தார். இதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவைக் காவலர்களின் உதவியோடு வெளியேற்றப் பட்டனர்.

தினமணி

Bedlam in Andhra House over CM's remark against Naidu - India - The Times of India
The Hindu News :: 21 TDP members suspended for stalling House proceedings
Telugu Desam MLAs stay put in police station - Newindpress.com

-o❢o-

b r e a k i n g   n e w s...