.

Tuesday, May 1, 2007

ச:வட இந்தியாவில் கோடைவெயிலுக்கு 8 பேர் பலி

வட இந்தியாவில் கோடைவெயில் அளவுக்கு அதிகமாக காய்கிறது. பஞ்சாபில் இன்று இறந்த இளைஞர் உட்பட மொத்தம் 8பேர் கோடை வெயிலில் துவண்டு பலியாகியுள்ளனர்.

இராஜஸ்தானில் தெருக்கள் காலியாக காணப்படுகின்றன. இங்குள்ள சுருவில் வெட்பம் 46.2 டிகிரியை எட்டியது.


N Karnataka sizzles in heat wave Deccan Herald
No respite from heat in North, one more dead Hindu
Ganganagar sizzles as mercury soars NDTV.com
all 31 news articles » Google News

ச:நிறுவனங்கள் ரூ.2500கோடி தொழிலாளர் வைப்புநிதி பாக்கி

பல்வேறு நிறுவனங்கள் ரூ. 2500 கோடி தொழிலலளர் வைப்பு நிதி(PF) பாக்கி வைத்திருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Over 2,500 crore due from establishments defaulting on PF

ச:தமிழக கேரள விமான நிலையங்கள் எச்சரிக்கை நிலையில்

தோகாவிலிருந்து சென்னை வந்த கத்தார் ஏர்லைன்சின் விமானத்தில் மனித வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் தமிழக மற்றும் கேரள விமானநிலையங்கள் அனைத்தும் எச்சரிக்கை நிலையில் இயங்கின.

குறிப்பிட்ட விமானத்தில் வந்த பயணிகள் அனைவரிடமும் சோதனை முடிந்தபின்னர். விமானம் முழுவதுமாக சோதனையிடப்பட்டது. பின்னர் மர்ம தொலைபேசிச் செய்தி புரளி என அறிவிக்கப்பட்டது.

Airports in TN, Kerala put on high alert

ச:சென்னையில் ரிலையன்ஸ் எதிர்ப்பு முற்றுகைப் போராட்டம்

இன்று காலை சென்னை, சின்மயா நகர், ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடிக்கு அருகே மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இவர்களின் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. சில்லறை வியாபாரிகள், கோயெம்பேடு தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டம் குறித்து ஏற்கனவே தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள், சுவரெழுத்துக்கள் மூலம் இந்த அமைப்புகள் விரிவாக பிரச்சாரம் செய்து அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சில்லறை வணிகத்தில் பன்னாட்டு, தரகு கம்பேனிகள் நுழைந்து உள்நாட்டு அண்ணாச்சிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தோராயமாக இரண்டாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டு கைதானதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்தான செய்திகள் சன், ஜெயா, மக்கள் தொலைக்காட்சிகளில் மகஇக வின் தலைவர் மருதையனின் பேட்டியுடன் ஒலி/ஒளி பரப்பப்பட்டது.

AIADMK leaders' charge against Speaker

தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதம் குறித்து, சமீபத்தில் தமிழக சட்ட சபையில் விவாதம் எழுந்திருக்கிறது.

ஆவுடையப்பனின் தனி உதவியாளர், ‘பார்’ நடத்த ஒப்பந்தத்துக்கு விண்ணப்பித்த ஒருவரைச் சிபாரிசு செய்து, சபாநாயகரின் லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்திக் கடிதம் அனுப்பியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதுகுறித்துச் சபாநாயகரின் விளக்கத்தையும் கோரியிருக்கிறார்.

அதையொட்டி, தம்மைப் போன்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தினமும் கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசுக் கடிதங்களில் கையெழுத்துப் போடுவதாகப் பேசியிருக்கிறார் ஆர்க்காடு வீராசாமி.

‘‘சபாநாயகர் பேரில் குற்றமில்லை; அவரது உதவியாளர் கடிதம் அனுப்பியதற்கு அவர் பொறுப்பாக முடியாது; மேலும், அந்தக் கடிதம் சிபாரிசு செய்த நபருக்கு ஒப்பந்தம் அளிக்கப்படவுமில்லை’’ என்பது வீராசாமியின் வாதம்.

- கல்கி | News Today

இன்று திரைக்கு வருகிறார் 'பெரியார்'

சென்னை, மே 1: "பெரியார்' திரைப்படம் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை திரையிடப்படுகிறது.

"மனிதனை மனிதனாக தன்மானத்தோடு வாழ்வதற்கு வழிவகுத்த சீர்திருத்தவாதியின் வாழ்க்கயை சித்தரிக்கும் இப்படத்தை திமுகவினர் அனைவரும் பார்வையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, தனது கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான "முரசொலி' மூலம் இத்தகைய வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். லிபர்டி கிரியேஷன்ஸ் தயாரிப்பான இப்படத்துக்கு தமிழக அரசு ரூ. 95 லட்சம் அளித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று திரைக்கு வரும் இத்திரைப்படத்தை அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, கே.என். நேரு, பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோரின் உறவினர்கள் முறையே சென்னை, திருச்சி, கோவையில் திரையிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர். இதேபோல பல திமுக பிரமுகர்களும், இத்திரைப்படத்தை வாங்கி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டதோடு, தேவையான ஆலோசனைகளையும் முதல்வர் வழங்கியுள்ளார்.

இத்திரைப்படம் தொடக்க விழாவிலிருந்து சர்ச்சைக்கு உள்ளாகி வந்துள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக 'குஷ்பு' நடிப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல இப்படத்தின் பாடலுக்குத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இத்தனை தடைகளையும் தாண்டி இத்திரைப்படம், செவ்வாய்க்கிழமை திரையிடப்பட உள்ளது.

பெரியார் பட ட்ரெயிலரை இங்குப் பார்க்கலாம்

-o❢o-

b r e a k i n g   n e w s...