.

Friday, February 23, 2007

எம்பி3 காப்புரிமை வழக்கு - மைக்ரோசாஃப்ட் நஷ்ட ஈடு தர வேண்டும்

தமிழ்ப்பட பாடல்களை காப்புரிமை கவலை இல்லாமல், எம்பி3-ஆக ஐ-பாடில் இறக்கிக் கொள்ளலாம். ஆனால், அந்த எம்பி3 நுட்பம் குறித்த காப்புரிமை வழக்கில் மைக்ரோசாஃப்டுக்கு எதிராக 'நடுவர் மன்றம்' தீர்ப்பளித்திருக்கிறது. இன்னும் மேல் முறையீடு பாக்கி இருக்கிறது.

மைக்ரோசாஃப்டில் இருந்து ஒன்றரை பில்லியன் (4500 கோடி) வாங்கிய கையோடு, எம்பி3-ஐ பயன்படுத்தும் ஆப்பிள், இண்டெல், போன்ற மற்ற பெருந்தலைகளையும் அல்காடெல்-லூசெண்ட் வழக்குத் தொடுக்கலாம்.

Microsoft hit with $1.5 billion patent verdict | CNET News.com

உலகக்கோப்பையில் Bowl-Out முறை

நடக்கவிருக்கும் உலகக்கோப்பையில் அரை-இறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் 'டை'யில் முடியுமானால், Bowl-Out முறையில் வெற்றி தீர்மானிக்கப்படும்.

Bowl-Out முறையில் ஒவ்வொரு அணியிலிருந்தும் 5 பந்துவீச்சாளர்கள், தலா இரண்டு பந்துகளை ஸ்டம்பை நோக்கி வீசவேண்டும். எந்த அணி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 பந்துகளில் அதிகமுறை விக்கெட்டை வீழ்த்துகிறதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 10 பந்துகளில் இரு அணிகளும் சமமான அளவு விக்கெட்டை வீழ்த்தியிருந்தால், Sudden-Death முறையில் முதலில் முன்னனி பெறும் அணி வெற்றிபெறும்.

மேல் விவரங்களுக்கு

Bowl-Out பற்றிய மேல்விவரங்களுக்கு

பிற்பட்டோர் பட்டியலில் மேலும் சில சாதிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினமணி: புதுவை, கர்நாடகம், மகாராஷ்டிரம், டாமன் -டையூ, அந்தமான் -நிக்கோபார் தீவுகள், திரிபுரா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சில சாதிகளையும், சமூகங்களையும் மத்திய பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. சாதிகள் மற்றும் சமூகங்களின் பெயர்களை சரிசெய்வது அல்லது திருத்துவதும் இதில் அடங்கும்.

The Hindu :: Cabinet approves inclusion in Central OBCs list: The castes which would be made part of the OBC central list include Rana in Daman & Diu and Kareng (Andman & Nicobar Islands). The Cabinet also approved the inclusion of additional areas of Jharkhand in the Scheduled Areas provided in the Fifth Schedule of the Constitution. He said the areas of Udhwa and Mandro Block in Sahebgunj district and two panchayats of Rabda and Bakoria of Satbarwa block in Palamu district were "inadvertently left out" in the earlier inclusion process.

'சிகாகோ' இசைநாடகத்தில் நடிக்க ஷில்பாவிற்கு அழைப்பு

'பிக் ப்ரதருக்குப்'பின் ஷில்பா உலகளாவிய பெயர்பெற்றவராகிவிட்டார். இப்போது புகழ்பெற்ற 'சிகாகோ' இசை நாடகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது, பாடுவது ஷில்பாவின் பலமான திறமையில்லை என்றபோதும்.

'சிகாகோ' திரைப் படமாக வந்திருந்ததும் அதில் ரெனே, காத்தரின் ஜீட்டா ஜோன்ஸ், குயின் லத்திஃபா, ரிச்சர்ட் கியர் என புகழ்பெற்ற கலைஞர்கள் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

டயனாவின் நினைவில் நடக்கவிருக்கும் இசைவிழாவில் சிறப்பு விருந்தினராக ஷில்பா கலந்துகொள்ள உள்ளார்.

NDTV

Shilpa has apparently been invited to the July 1 concert because Prince William and Harry were impressed with the way she handled herself on the scandal-packed reality TV show."William and Harry thought Shilpa was amazing in Celebrity Big Brother and very much hope she will take part on the big day," a source told the tabloid.According to the report, she is also being lined up to become the first ever face on the new Indian version of fashion magazine Vogue.

போபோர்ஸ்: குட்ரோச்சி அர்ஜென்டினாவில் கைது

போபோர்ஸ் பீரங்கி வழக்கில் தொடர்புடைய குட்ரோச்சி அர்ஜெண்டினாவில் பிடிபட்டார். அவரை விசாராணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி சி.பி.ஐ அர்ஜெண்டினாவை கேட்டுள்ளது.

the Hindu

தினமலர்.

"Legal formalities as required under Argentine Extradition Act are being fulfilled on the basis of reciprocity as there is no treaty extradition treaty between India and Argentina," it said.

The agency said after observing mandatory legal and diplomatic formalities, extradition request to extradite Quattrocchi shall be presented through diplomatic channel to the designated Argentine court.

"It is mandatory that the formal extradition request is presented within 30 days of the detention of Quattrocchi," it said.

விஜயகாந்த் மனு தள்ளுபடி

விஜயகாந்த் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி ஷா, இந்த வழக்கில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், இழப்பீட்டிற்கான நஷ்டஈடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் மண்டபத்தை ஒப்படைக்க 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

that's tamil (தமிழில்)

அமெரிக்கா செல்ல குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை

தொடங்கும் ஜனவரி 2008 முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அமெரிக்கா செல்ல பிறப்பு சான்றிதழ் மட்டுமே போதுமானது.

ஆனால் ஆகாய வழியாக செல்லபவர்களுக்கு இப்பொழுது இருக்கும் நடைமுறை தொடரும்.

CNN-IBN

தட்ஸ்தமிழ் யூனிகோடுக்கு மாறுகிறது

தமிழ் செய்தித்தளமான தட்ஸ்தமிழ் யூனிகோடுக்கு மாறவிருக்கிறது. யாகூ,MSN, சிஃபி போன்ற தளங்கள் யூனிகோடில் இருந்தாலும் உள்ளூர் செய்திகளுக்கும் அடிக்கடி புதுப்பித்தலும் இயலாத்தாக இருந்தது. தட்ஸ் தமிழ் யூனிகோடுக்கு மாறுவதன் மூலம் பரவலான செய்திகள் உடனுக்குடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எகிப்திய பதிவருக்கு சிறைதண்டனை

எகிப்த்தின் அலெக்சாண்டிரியா நீதிமன்றம் அப்துல்கரீம் சுலைமான் என்ற எகிப்திய பதிவருக்கு இஸ்லாத்தையும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கையும் அவமதித்து பதிவு எழுதியதற்காகநான்கு வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது

இந்தோனேஷிய கப்பலில் தீ: 36 பேர் உயிரிழப்பு


ஜகாதா, பிப். 23-

இந்தோனேஷியாவின் ஜகார்தாவில் இருந்து 350க் கும் மேற்பட்ட பயணிகள், 42 லாரிகள், 8 கார்களும் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட `லெவினா-1' என்ற கப்பல் நடுக்கடலில் தீ பிடித்து 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயில் கருகி 17 பயணிகள் பலியாயினர். கடலில் மூழ்கி 19 பேர் பலியா னார்கள். மற்ற பயணிகளை கடற் படையினர் பத்திரமாக மீட்டனர்.

source: மாலைமலர்

இந்டெல்லின் இந்திய அங்கத்தின் சாதனை

கணினி சில்லுகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்டெல் நிறுவனத்தின் இந்திய மேம்பாட்டு மையம் அடுத்த தலைமுறைக்கான உயர்நிலைக் கணினிகளுக்கான அதிசக்தி வாய்ந்த சில்லை உருவாக்கியுள்ளனர்.இந்திய மையமும் ஒரெகானிலுள்ள மையமும் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

வாழ்த்துக்கள்!!

உ.பியில் சட்டசபை கலைக்கப் படும் ?

நேற்றைய அரசு கலைப்பு அச்சங்கள் தேர்தல் ஆணையரின் அறிவிப்பால் விலகியபோதும் சமாஜ்வாடி கட்சியின் அச்சங்கள் இன்னும் முழுவதும் தீரவில்லை.

உ.பியில் சட்டசபை 2002 வருடம் பிப்ரவரி 25 அன்று அமைக்கப்பட்டது. ஆனால் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததினால் புதிய அரசு அமைப்பதில் தடங்கல் ஏற்பட்டது. 'தற்காலிக விலக்கலில்' (suspended animation)் இருந்த அவை மே 14 அன்றே முதல் கூட்டத்திற்கு அமர்ந்தது. தேர்தல் ஆனையம் இதனைக் கருத்தில் கொண்டே மே 14க்குள் அடுத்த அவை கூடும்படியாக தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் பிப்.25யுடன் அவையின் ஆயுட்காலம் முடிகிறது என்று அவையை கலைத்து, முலாயம்சிங் தன் பெரும்பான்மையை காட்டவிடாமல் செய்ய வாய்ப்பிருக்கிறது. இதனால் சமாஜ்வாடியின் அமர்சிங் இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்திருக்கிறார் என்கிறது செய்தி.

ப்ரெட் லீ உலகக்கோப்பையில் பங்கேற்கமாட்டார்

காயம் காரணமாக உலகக்கோப்பையில் விளையாடுவாரா இல்லையா என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரரான ப்ரெட் லீ, பங்கேற்கமாட்டார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்களுக்கு

பெரியது கேட்கின்........

Largest Colossal Squid

பிரமாண்டமான ஸ்க்விட்( தமிழில் பேர் தெரிஞ்சவுங்க சொல்லுங்க) பிடிபட்டுருக்கு,
இங்கே நியூஸியின் கடலில் தெந்துருவத்தின் அருகே.

இது 450 கிலோ எடை இருக்காம். உலகில் இதுவரை பிடிபட்டவைகளில்
இதுவே பெரியது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இன்னிக்கு எங்க ஊர் டிவிக்கு செய்தி கிடைச்சிருச்சு:-)))))

மேல் விவரங்கள் இங்கே.

இதற்கு முன்பு பிடிபட்டவைகளைப்பற்றி மற்ற விவரங்கள் பார்க்கணுமா?

அது இங்கே.

அமெரிக்க படைவீரருக்கு 100 வருடம் சிறை

ஈரக்கில் 14 வயதுப் பெண்ணை கற்பழித்து அவளது குடும்பத்தார் 3பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்க படை வீரருக்கு 100 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Fox News

CNN Breaking news

சற்றுமுன்னின் 50வது பதிவு இது. உங்கள் கருத்தை சொல்லுங்க சிறந்த சேவையைப் பெறுங்கள்.

ATM ல் கள்ள நோட்டுகள ் - RBI எச்சரிக்கை.

ATM ல் எடுக்கும் பணத்தில் சில கள்ள நோட்டுகள் இருப்பதாக RBI எச்சரிக்கை விடுத்துள்ளது.

The Times of India

விம்பிள்டனில் ஆண், பெண் சமமான பரிசுத்தொகை

விம்பிள்டன் போட்டிகளில் இதுவரை இருந்துவந்த ஆண், பெண் வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகை வித்தியாசம் சமன்படுத்தப்படவுள்ளது.

Google News 300+ articles

It has been a long time coming — 39 years to be exact — but women's tennis players will receive prize money equal to the men's at Wimbledon this year.

Under increasing pressure from female stars like Venus Williams and Maria Sharapova and from society at large, the club announced Thursday that it would put an end to a practice that had proved ever more divisive.

In truth, the gap in prize money had become more symbolic than substantive. The women's singles champion last year, Amélie Mauresmo earned 95 percent of what mens' champion Roger Federer earned, with Mauresmo receiving £625,000 to Federer's £655,000.

-o❢o-

b r e a k i n g   n e w s...