பல்வேறு மட்டங்களிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு காரணமாக நந்திகிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிடுவது என்றும்,போலீஸ் படையை அங்கிருந்து வாபஸ் பெறுவது என்றும் ஆளும் இடது சாரி கூட்டணி முடிவு செய்துள்ளது.
நந்திகிராமத்தில் நிலங்களை கையகப்படுத்த அவ்வூர் மக்களிடையேகடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,கடந்த14 ம் தேதியன்று அங்கு நிகழ்ந்த போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரி கூட்டணிக்கும் இச்சம்பவம் பெரும் அவப்பெயரைஏற்படுத்திவிட்டது.
Yahoo Tamil
Wednesday, March 21, 2007
சற்றுமுன்- நந்திகிராம்:மே.வங்க அரசு பணிந்தது
Posted by சிவபாலன் at 11:36 PM 0 comments
சற்றுமுன்:நொய்டா - பெண்போலிஸ் கைது
நொய்டா கொலையாளிகளிடம் லஞ்சம் வாங்கிவிட்டு தடயங்கலை மறைத்ததாக பெண்போலிஸ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Policewoman arrested in Noida child murders case
Posted by சிறில் அலெக்ஸ் at 10:25 PM 0 comments
சற்றுமுன்:'உல்மரின் மரணத்தில் சந்தேகமில்லை' - மனைவி கில்
பாப் உல்மரின் மரணத்தில் foulplay இருப்பதாக தான் நம்பவிலை என அவரின் மனைவி கில் பேட்டியில் கூறியுள்ளார்.
போலீசார் இதை சந்தேகத்துக்குரிய இறப்பாக்க எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்பது தனக்குத் தெரியும் என்றும் அயர்லாந்துடனான தோல்விக்குப் பின் அவர் மன அழுத்தத்துடனும் ஊக்கம் குன்றியும் இருப்பதாக தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் தெரிவுத்துள்ளார்.
தொடர்புள்ள செய்தி: I can't believe anyone would kill Woolmer, says Imran
Wife Gill does not suspect foul play in Woolmer's death
"I don't see any conspiracy in his death," Gill told an Indian television news channel."
I am aware that his death is being viewed as a suspicious death."He had nothing to do with the match-fixing controversy and any such person being involved is highly unlikely. We never got any threats as far as I know," she told NDTV India in a telephone interview.
Jamaican police said on Tuesday it is now treating Woolmer's death as "suspicious" and have collected sufficient information to continue a full investigation into the circumstances surrounding his death."
I didn't speak to him after the match but he emailed me the following morning," Gill said, referring to the defeat to Ireland.
"He did mention that he was really depressed and could not believe how this could have happened. We discussed some personal issues apart from this."
Posted by சிறில் அலெக்ஸ் at 10:16 PM 2 comments
சற்றுமுன்:'பெரியார் படத்தில் சர்ச்சைக்குரியதாய் எதுவுமில்லை' உயர்நீதிமன்றம்
பெரியார் படப் பாடல் வரிகள் இந்துக்களின் உணர்வை காயப்படுத்துவதாக போடப்பட்ட வழக்கில் இன்று அதில் எதுவும் சர்ச்சைக்குரியதாயில்லை(nothing objectionable) எனவும் 'சாதாரணமாக' சென்சார் போர்ட் அனுமதி வழங்கிய திரைப்படத்தின் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என்றும் உயர்நீதிமன்ற பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.
வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.
Madras HC feels nothing objectionable in 'Periyar' - The Hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 9:54 PM 1 comments
தே மு தி க . சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் ஆற்பாட்டம்!
சென்னை மார்ச் 21.
தே மு தி க சார்பில் இன்று காலை 11 மணியளவில் விலை வாசி உயர்வை கண்டித்து அதன் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் சென்னை துறைமுகம் அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆற்பாட்டம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான கட்சித்தொண்டர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தின் காரணமாக சென்னை துறைமுகம் பகுதியில் போக்குவரத்து சில மனி நேரம் ஸ்த்தம்பித்தது.
Posted by hassan at 7:41 PM 0 comments
சற்றுமுன்:மகாமும்பை SEZஇல் பணபட்டுவாடா தகராறு
மகாராட்டிரத்தில் நிறுவப்படவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நில கொள்முதலுக்காக பணம் வினியோகிக்க சென்ற ரிலையன்ஸ் அலுவலர்களை கோபமடைந்த பெண்கள் அடித்து விரட்டினர்.
Trouble in Maha Mumbai SEZ as women beat officers
Posted by மணியன் at 7:33 PM 0 comments
சற்றுமுன்: உலகக்கோப்பை -வங்கதேசம் x இல்ங்கை
வங்கதேசத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உலகக்கோப்பை முதல் சுற்று ஆட்டம் இப்போது நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இலங்கை அணி பேட்டிங் செய்கிறது.
Posted by ✪சிந்தாநதி at 7:15 PM 31 comments
சற்றுமுன்: கங்கை நதி வற்றுகிறது - WWF
நதிநீர் பிரச்சினைக்கு தீர்வாகச் சொல்லப் படுகிற கங்கை காவிரி இணைப்பிற்கு முன்னால் கங்கை நதிநீர்வரத்து குறைந்து வருவதை கவனிக்க வேண்டும் என உலகின் முதல் பத்து நதிகள் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளைப் பற்றிய இயற்கைக்கான உலகளாவிய நிதிநிறுவனத்தின் ( World Wide Fund for Nature ) ஆய்வறிக்கை கூறுகிறது. அதீத பாசனம், வானிலை மாறுதல்கள், தொழிற்சாலை மற்றும் சமய நடவடிக்கைகள் இதற்கான காரணங்களாக அறியப் படுகின்றன.
DNA - India -
Posted by மணியன் at 7:02 PM 0 comments
சற்றுமுன்: விமானப் பயணியின் குடியாட்டம் - அவசர தரையிறக்கம்
பாங்காக்கிலிருந்து தில்லி வந்த இந்தியன் விமானத்தில் பயணித்த மெக்ஸிகோ 'குடி'மகனின் 'குண்டு வெடிக்கும்' மிரட்டலைத் தொடர்ந்து 87 பயணிகளுடன் விமானத்தை அதன் பைலட் அவசரநிலையில் கொல்கொத்தா விமானநிலையத்தில் தரையிறக்கினார்.
மேலும் ...DNA - India - Daily News & Analysis
Posted by மணியன் at 6:51 PM 0 comments
சற்றுமுன்: இஸ்ரேலில் பொது வேலைநிறுத்தம்
இஸ் ரேலின் அரசிற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே நிகழ்ந்த பேச்சுவார்த்தை முறிவுர்றதை அடுத்து புதன் காலை 0700 மணிமுதல் பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. பேருந்துகள், இரயில்கள், விமானக் கூடங்கள், அரசு அலுவலங்கள் முடக்கப் படும் என தொழிற்சங்க தலைவர் ஹிஸ்டாருத் கூறினார். அங்கு நடக்கவுள்ள யூரோ 2008 கால்பந்து விளையாட்டிற்கு 4000 ஆங்கிலேயர்கள் வருவது கேள்விக்குறியாகியுள்ளது.
Israeli union says general strike to go ahead - washingtonpost.com
Posted by மணியன் at 5:22 PM 0 comments
சற்றுமுன்: பாப் உல்மரின் மரணத்தில் மர்மம்
பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணம் சந்தேகத்திற்குறியது என ஜமைகா காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை அறிக்கையில் உல்மரின் குடும்பத்தினருக்கு இந்த செய்தி அறிவிக்கப் பட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் குழு, உலகக் கோப்பை மற்றும் ஐசிசி குழுமங்கள் முழுமையான ஒத்துழைப்புக் கொடுப்பதாகவும் கூறுகிறது. காவல் அதிகாரி ஷீல்ட் தற்சமயம் இதனை ஒரு கொலை என்று சொல்லவில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.
பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ள பாக் கிரிக்கெட் குழு முதலில் இன்றைய கடைசி ஆட்டத்தில் பங்கேற்க தயக்கம் என்ற செய்தி வந்த போதிலும் கடைசியாக வந்த செய்தியின் படி காப்டன் இன்சமாம் இன்று வென்று அவ்வெற்றியை உல்மருக்கு காணிக்கையாக்குவோம் என சூளுரைத்துள்ளார்.
தொடர்புடைய இணைப்புக்கள்:
The Hindu News Update Service
Hinesberg Journal
Manchester.com - News - Inzy targets win for Woolmer
Posted by மணியன் at 5:07 PM 0 comments
மனசைவிட்டு மவுசைத் தட்டு !
சிங்கப்பூர்: இன்டர்நெட்டில் நடிகையின் படத்தைப் போட்டு, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அமெரிக்காவில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜீனியரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியப் பெண் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் மல்லிகா ராமு (36). திருமணமான இவர், இன்டர்நெட்டில் நடிகை காயத்ரி ஜோஷி என்பவரின் புகைப்படத்தைப் போட்டு, சஞ்சனா பரேக் என்ற பெயரில் தனது புரொஃபைலை உலவ விட்டிருந்தார்.
அதைப் பார்த்து விட்டு அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றும் பரணிஇந்திரன் (32) என்ற வாலிபர் மல்லிகாவுடன் தொடர்பு ஏற்படுத்தினார். பரணியுடன் நெருக்கமான நட்பு ஏற்படுத்திக் கொண்ட மல்லிகா, அவரைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.
இருவரும் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் முதல் சாட்டிங் மூலம் நெருக்கமான நட்பை வளர்த்து வந்தனர். இந்த நட்பைப் பயன்படுத்தி பரணியிடமிருந்து 68 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் பணத்தை கறந்துள்ளார் மல்லிகா.
2004 நவம்பரில் 19,175 அமெரிக்க டாலர்கள், கடந்த கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி தனது அம்மா இறந்து விட்டதாக கூறி 25 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் வாங்கியுள்ளார் மல்லிகா. ஆனால் அவரது அம்மா அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போய் விட்டாராம்.
இதையடுத்து 2005ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 15,400 அமெரிக்க டாலர்கள், 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் மேலும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் தருமாறு கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் கேட்டுள்ளார் மல்லிகா. அப்போது பரணிக்கு சந்தேகம் வந்து விட்டது. இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி மல்லிகாவைக் கைது செய்தனர்.
தனது மனைவியின் மோசடிச் செயலை அறிந்து அவரது கணவர் (அவருக்கு 41 வயதாகிறது) அதிர்ந்து போய் விட்டார். மல்லிகா மீதான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மல்லிகாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி அமி டுங் தீர்ப்பளித்தார். கைது செய்யப்பட்டவுடன், பரணியிடமிந்து தான் கறந்த பணத்திலிருந்த 36 ஆயிரம் அமெரிக்க டாலர்களைத் திருப்பிக் கொடுத்து விட்டார் மல்லிகா.
செய்தி : நன்றி தட்ஸ் தமிழ்
Posted by கோவி.கண்ணன் [GK] at 9:10 AM 1 comments
ச:➣சென்னை விமான நிலையத்தில் கட்டிடம் இடிந்து 8 பேர் படுகாயம்
சென்னை விமான நிலையத்தில் கட்டிடம் இடிந்து 8 பேர் படுகாயம்
தினத்தந்தி flash
Posted by ✪சிந்தாநதி at 8:22 AM 0 comments
கனரா வங்கியில் 49% நெதர்லாந்து நிறுவனம் வாங்குகிறது
நெதர்லாந்தின் ரொபெக்கோ (Robeco) குழுமம் கனரா வங்கியின் CIMS-ல் 49 சதவிகித முதலீடு செய்கிறது. கனராவின் 'Canara Investment Management Services' என்னும் பரஸ்பர நிதிப் (mutual fund) பிரிவை 115 கோடிக்கு மதிப்பிட்டிருக்கிறார்கள். கனரா வங்கியில் தற்போது 73% அரசு வசம் உள்ளது.
மொத்தம் 3,50,000 கோடி ரூபாய் புழங்கும் சந்தையில், அடுத்த ஐந்தாண்டுக்குள் ஐந்து சதவிகித வாடிக்கையாளர்களைக் கவர்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ளார்கள்.
Robeco picks up 49% stake in Canara Bank’s MF arm
Posted by Boston Bala at 2:01 AM 0 comments
ஏழை மாணவருக்கு தமிழக முதலமைச்சர் நிதி உதவி
நாகர்கோயில், அனந்தபத்மனாபபுரத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் திரு.ஆர்.சிவராமனுக்கு சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் பயில உதவித் தொகையாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ரூ.25,000/-க்கான காசோலையை, இன்று (20.03.2007) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கினார்கள்.
சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செராமிக் கலை படித்து வருகிறார் சிவராமன். தாய் தந்தையர் கூலித் தொழில் செய்கிறார்கள். ஏழ்மையின் காரணமாக, மேற்படிப்பைத் தொடர முடியாத நிலை. படிப்பிற்கு நிதி உதவி செய்யுமாறு முதலமைச்சரிடம் மார்ச் 13 அன்று விண்ணப்பித்திருந்தார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை.
Posted by Boston Bala at 1:26 AM 3 comments
b r e a k i n g n e w s...