கணினியும் இணையமும் ஒப்பீட்டளவில் குறைவாகப் புழக்கத்தில் இருந்தாலும் இந்தியாவில் கடந்த ஓராண்டில் விமானப்பயணச்சீட்டுகள் மின்னணு முறையில் பெறப்படுவது பெருவளர்ச்சி அடைந்துள்ளது.
இதுபற்றி தினமலரின் இச்செய்தியில்,
விமான நிறுவனங்கள் இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நேரில் சென்று டிக்கெட் வாங்குவதைத் தவிர்த்து, இணையதளத்தின் மூலம் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து, பிரின்ட் அவுட் டிக்கெட் மூலம் விமானங்களில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது.கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் மட்டும் எல்லா விமான நிறுவனங்களின் விமானங்களில் 81 சதவீத டிக்கெட்கள் முறைப்படி பெறப் பட்ட டிக்கெட்கள். 27 சதவீத டிக்கெட்கள் இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட இ-டிக் கெட்கள்.இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து, முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விமான நிறுவன டிராவல் ஏஜென்சிகளில் விமான டிக்கெட் பெறுவோரில், பலரும் முறைப்படியான டிக்கெட்டுக்கு பதிலாக இ-டிக்கெட் வழங்கப் பட்டால் வியப்படைவது இல்லை.
சாதாரண முறையில் வழங்கப்படும் டிக்கெட்களுக்கு ரூ.320 வசூலிக்கப் பட்டால், இ-டிக்கெட்களுக்கு ரூ.80 வசூலிக்கப்படுகிறது. இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் அல்லது விமான நிறுவன அலுவலகங்களை தேடிச் சென்று வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே, அல்லது அருகில் உள்ள பிரவுசிங் மையத்தில் இருந்தபடி விமான டிக்கெட்களை முன்பதிவு செய்து இ-டிக்கெட்டின் பிரின்ட் அவுட்டை பெறுவது எளிது.மொபைல் போனில் கூட இ-டிக்கெட் பெற முடிகிறது.
வெறும் பி.என்.ஆர்., எண்கள் மற்றும் புகைப்பட அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதும். விமான நிலையத்தில் உள்ள விமான நிறுவனங்களின் அலுவலகத்துக்கு சென்று இ-டிக்கெட்டின் பிரின்ட் அவுட் பெற்று விமானத்தில் பறக்கலாம்.ஏர்-டெக்கான் விமான நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2003ம் ஆண்டு நூறு சதவீத இ-டிக்கெட் முறையை அமலுக்கு கொண்டு வந்தது. இ-டிக்கெட் பெறுவது, மற்ற எதையும் விட மிக எளிதானது.முன்பெல்லாம் வெளிநாட்டில் இருந்து ஒருவர் விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், அதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கும். இப்போது இ-டிக்கெட் முறை வந்து விட்டதால், அந்த தேவை ஏற்படுவது இல்லை.