.

Monday, June 18, 2007

திடீர் திருப்பம்: இரண்டை பின்னுக்குத்தள்ளும் மூன்று.

குடியரசுத்தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளான தே.ஜ.கூ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும், துணை குடியரசுத்தலைவருமான பைரோன்சிங் ஷெகாவத், மூன்றாவது அணியின் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின் தாம் பின் வாங்கக்கூடும் என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

'மூன்றாவது அணியினரின் கோரிக்கைக்கு அப்துல்கலாம் இணங்கி இத்தேர்தலில் நிற்பாரானால், அதைவிட தமக்கு மகிழ்ச்சி வேறில்லை' என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய முடிவு இன்னும் மீதமிருக்கிறது என்றார்.
"கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்களிடையே எவ்வித கருத்து வேறுபாடும் ஏற்பட்டதே இல்லை" என்றார் அவர்.

இதற்கிடையில், பா.ஜ.க கூட்டணியிலிருக்கும் சிவசேனா கட்சி, அப்துல்கலாம் பற்றி 'அதிருப்தி' தெரிவித்துள்ளது. 'நந்திகிராம்' உள்ளிட்ட சம்பவங்களுக்காக அவருடைய 'ஆட்சிக்காலத்தை' திருப்தி என்று சொல்ல முடியவில்லை என்று சிவசேனா கூறியுள்ளது. ஷெகாவத் பற்றி அக்கட்சி இதுவரை கருத்தளிக்கவில்லை.


Shekhawat hints at withdrawing from Prez race


Sena mum on Shekhawat, disfavours Kalam's re-election

சிவாஜி: 1000 பேருக்கு இலவசமாக - துபாயில்

கடைநிலைத்தொழிலாளர்கள், வீட்டுப்பணிப்பெண்கள் ஆகிய ஆயிரம் பேருக்கு 'சிவாஜி' திரைப்படத்தை இலவசமாகக் காண்பித்து தர 40 பேர் கொண்ட புலர்பெயர்ந்த இந்தியர் அமைப்பு ஒன்று துபாயில் பொதுநிதிவசூலில் இறங்கியுள்ளதாம்.

இதைப்படிங்க

தொழில்நுட்பக்கோளாறு: இந்தியன் விமானம் தரையிறக்கம்.

IC 860 என்கிற 'இந்தியன்' விமானம் ஒன்று 109 பயணிகளுடன் தில்லிக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. வானில் பறந்த 30 நிமிடங்களில் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறை கண்டுணர்ந்த விமானி, புறப்பட்ட சிங்கப்பூர் நிலையத்துக்கே தரையிறங்க வைத்தார். இது ஏர்பஸ் A-320 வகை வானூர்தியாகும்.

மேலும் படிக்க...

சகோதரியின் மகளை ரூ.60,000க்கு விற்றவர்.

சொந்த சகோதரியின் மகளை ரூ.60,000க்கு விற்ற தாய்மாமன் ஒருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சஹாரன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பாக்பாத் மாவட்ட மாஉ கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


16 வயதான அப்பெண்ணை தேடிவருகின்றனர்

மேலும் படிக்க.. பி.டி.ஐ

குடியரசுத்தலைவர் தேர்தல்: கருணாநிதி வசன கவிதை.

குடியரசுத்தலைவர் தேர்தலில் வெல்லும் வாய்ப்புள்ள பெண் வேட்பாளரைத் தானே தேர்ந்தெடுத்த மகிழ்வில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஒரு வசன கவிதை எழுதியுள்ளார்.

அது:
நூறு கோடியைத் தாண்டுகிற மக்கள் வெள்ளத்தில்
வீறு கொண்ட ஆடவர் எண்ணிக்கை சரி பாதியாகும்!

சீறுகின்ற பாம்புகள் முன்னே சிறு தவளைக் கூட்டம் போல்-
ஆறுவது சினம் படித்து அடங்கிடும் பெண் குலமோ மறு பாதியாகும்

நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி;
நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு என நாலு வேத வழி நடக்கும் பெட்டையாகி;

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்பதுடன் நிறுத்தாமல்
அவள் ஆளன் மறைந்த பின்னர் அவளுக்கு வாழ்வுதான் எதற்கு -என்று

அனலிடை அவளைக் கருக்கி ஆர்த்தெழும் கொடிய சாத்திரப்
புனலிடை அவள் உடலைக் கழுவி

அந்த உயிரிலா சிலைக்குப் பொட்டிட்டு பூ முடித்து
அம்மன் அவள்தான் என்று பூசை புனஸ்காரம் செய்து

ஆண் வர்க்கம் புரிகின்ற தந்திரங்களைத் தோலுரித்து
அறியாமை நீக்கி ஆர்த்தெழுவீர் அரிவரையரே என

அய்யா பெரியாரும் அறிஞர் அண்ணாவும் ஒலித்திட்ட முழக்கத்தை
தமிழகம் மட்டுமின்றி தரணியே அறியும் வண்ணம்

பாரதிப் பெண்ணின் பெருமைதனைப் பாருக்குயர்த்த
பார் இதோ; பாரத தலைநகர் எடுத்த முடிவு -

இந்தியக் குடியரசுத் தலைவராக;
இதோ ஒரு பெண்மணி!

இனி பெண்ணுரிமை தலைவராக;
இதோ ஒரு பெண்மணி!

இனி பெண்ணுரிமை போற்றுவதே;
இனிய சுதந்திரத்தின் கண்மணி!

கனிமொழியின் தகுதி: ஜெ.க்கு திமுக பதில்

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளார், அவரை பற்றி பேச அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு என்ன தகுதியுள்ளது என திமுக மகளிரணி பிரமுகரான கவிஞர் விஜயா தாயன்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு மாநிலங்களை உறுப்பினர் பதவி பெற என்ன தகுதியிருக்கிறது என அதிமுக பொதுசெயலாளர் கேட்டுள்ளார்.

எம்ஜிஆர் படங்களில் நடித்த ஒரே தகுதியை வைத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அந்த பொறுப்பிலிருந்து கொண்டு கட்சிக்காக நீங்கள் செய்தீர்கள். திமுகவிற்காக கனிமொழி என்ன செய்திருக்கிறார் என கேட்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது.

அதிமுகவின் தலைவர் பதவியிலுள்ள நீங்கள் கட்சிக்காக என்ன தியாகம் செய்தீர்கள். எத்தனை முறை போராட்டத்தின் மூலம் சிறைக்கு சென்றீர்கள். சசிகலாவின் உறவினரான தினகரனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவரை விட திறமைசாலிகள், தியாகம் செய்தவர்கள் கட்சியில் இல்லாமல் போய்விட்டார்களா.

திமுக கனிமொழிக்கு பதவி வழங்கியுள்ளது. கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

முதல்வர் கருணாநிதி, தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், திராவிட இயக்கத்திற்கும் செய்த தியாகமும், உழைப்பும் அளவிட முடியாதது.

அதனால் முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற தகுதி மட்டும் கனிமொழிக்கு போதுமானது என்றாலும், அவர் நன்கு படித்தவர், நல்ல கவிஞர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.


தட்ஸ் தமிழ்

மீண்டும் அப்துல்கலாம்? - மூன்றாவது அணி முடிவு!

குடியரசுத்தலைவர் தேர்தலில் மூன்றாவது அணியின் சார்பில், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அல்லது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் தமிழக ஆளுநருமான பாத்திமா பீபி ஆகியோரில் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதை சற்றுமுன் வாசகர்கள் அறிவார்கள்

டான்சி வழக்கில் ஜெயலலிதா மீது நீதிமன்றமே குற்றம் சாட்டிய நிலையிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஏதோ காரணத்துக்காக, ஜெயலலிதாவையே முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் பாத்திமா பீவி என்பது நினைவிருக்கலாம்.

ஆனால், பாத்திமா பீவிக்கு பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. அதே போல பரூக் அப்துப்லாவுக்கும் கூட்டணியில் பெரும்பாலானவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

இதையடுத்து பெண் வேட்பாளரை நிறுத்தி தங்களுக்கு செக் வைத்த காங்கிரசுக்கு பதிலடி தரும் வகையில் அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தக் கோருவது என முடிவெடுக்கப்பட்டது.

இதன்மூலம் தேசிய அளவில் தங்களது கூட்டணிக்கு புதிய மரியாதை கிடைக்கும் என ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. ஆனால், கலாம் அதை ஏற்காவிட்டால் இந்தக் கூட்டணி யாரை ஆதரிக்கும் என்று தெரியலில்லை.
ஆனால், எக்காரணம் கொண்டும் பைரான் சிங் ஷெகாவத்தை ஆதரிப்பதில்லை என மூன்றாவது அணியின் முக்கிய கட்சியான முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி முடிவு செய்துள்ளது.

அக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் ஆதரவை இழந்ததால் தான் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சி தோல்வியடைந்தது. இந் நிலையில் இஸ்லாமியர்களின் வாக்குகளை மனதில் வைத்து இந்த முடிவுக்கு அந்தக் கட்சி வந்துள்ளது.

அதே போல சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் பாஜக வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இல்லை.

தட்ஸ்தமிழ்

சிவாஜி: சந்திரபாபு நாயுடு முதலீடு? - காங்கிரஸ்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திற்கு சந்திரபாபு நாயுடு திடீரென தாங்குவது ஏன்?. அவர் இப்படத் தயாரிப்பில் முதலீடு செய்துள்ளாரா? என்று ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.
ஹைதராபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரகுவீர ரெட்டி,பிரதாப ரெட்டி, காடே வெங்கட ரெட்டி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அவர்களிடம் செய்தியாளர்கள் பேசுகையில், சிவாஜி படத்தை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நாயுடு கூறியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.

மாவட்ட நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் அழைத்து, கண்டிப்பாக ஒவ்வொரு தொண்டரும் சிவாஜியைப் பார்க்க வேண்டும் என நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் எங்களுக்கு சில கேள்விகள் எழுகின்றன. ஒன்று, சிவாஜி படத்தில் சந்திரபாபு நாயுடு, மறைமுகமாக முதலீடு செய்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த அளவுக்கு படத்துக்காக மெனக்கெடுகிறார்.

தட்ஸ் தமிழ்

அல்லது, ரஜினி மூலம் தனது தலையெழுத்து மாறுமா என்று அவர் முயற்சித்துப் பார்ப்பதாக இருக்கலாம். காரணம், காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் மேலும் வலுப்பெற்று வருகிறது. இப்படியே நிலைமை நீடித்தால் இன்னும் 10 வருடங்களுக்கு அவரால் ஆட்சிக்கு வரவே முடியாது.

ஆந்திர அரசியலில் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் நிலவும் லஞ்ச ஊழல் கருப்புப் பணம் குறித்து சிவாஜி படம் பிரதிபலிப்பதாக உள்ளதால், தெலுங்கு தேசம் தொண்டர்கள் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று நாயுடு கூறியுள்ளது கேலிக்கூத்தாக உள்ளது.

ஆந்திர அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பல லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூறினார் நாயுடு. ஆனால் ஒரு புகாரைக் கூட அவரால் நிரூபிக்க முடியவில்லை. நாயுடு விரும்பும் விசாரணைக் கமிஷனை அமைக்கத் தயார் என்று முதல்வர் ராஜசேகர ரெட்டி முன்வந்தும் கூட ஆதாரங்களைத் தர முடியவில்லை நாயுடுவால் என்று அவர்கள் கூறினர்.

சர்ச்சையில் பிரதீபா பட்டீல்.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக ராஜஸ்தான் கவர்னர் பிரதீபாபட்டீல் போட்டியிடுகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெண்கள் பர்தா அணிவது பற்றி குறிப் பிட்டார். அவர்பேசும் போது பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணிய தேவை இல்லை. எத்தனையோ ஆண்டுகளாக இருந்து வந்த இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில் பெண்கள் பர்தா அணியும் பழக்கம் முகலாயர் ஆட்சி காலத்தில்தான் ஏற்பட்டது. படையெடுத்து வந்த முகலாயர் களிடம் இருந்து பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர் என்றும் குறிப்பிட்டார். பிரதீபா பட்டீலின் இந்த பேச்சு அவரை சர்ச்சையில் தள்ளி இருக்கிறது. முஸ்லிம்கள் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே போல் சரித்திர வல்லுனர்களும் பிரதீபா பட்டீலின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் ஃபாத்திமா பீவி ?

ஜெ தலைமையில் ஏழு கட்ச்சி ஆலோசனை.

ஜனாதிபதி தேர்தலில் தங்கள் நிலையை முடிவு செய்வதற்காக 7 மாநில கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை யில் சென்னையில் நடை பெற்றது. பரூக் அப்துல்லா, பாத்திமா பீவி, இரா.செழியன் ஆகியோரில் ஒருவரை தங்கள் அணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தலாமா என்றும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. தங்கள் அணிக்கு தேசிய முன்னேற்ற முன்னணி அல்லது தேசிய மக்கள் முன்னணி என்று பெயரிடுவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரத்தம் தேவையா? உதவுது வெப்சைட்.

முக்கியமான ஆபரேசன், விபத்து போன்ற நேரங்களில் ரத்தம் தேவைப்படும்போது, அது கிடைக்காமல் பலரும் தடுமாறுவது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு உதவுகிறது ஒரு
இணையதளம்.www.indianblooddonors.comஎன்ற அந்த இணையதளத்தில், நமக்கு என்ன குரூப் ரத்தம் தேவை என பதிவு செய்தால் போதும். உடனடியாக ரத்த தானம் செய்ய விரும்புபவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் நோயாளியின் இருப்பிடம் தேடி வருவார்கள். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.எந்த பகுதியாக இருந்தாலும் சரி, எவ்வளவு அரிய குரூப் ரத்தம் தேவைப்பட்டாலும் சரி... தகவல் கிடைத்த 30 நிமிடத்தில் ரத்த தானம் செய்வோர் வருவார்கள் என்கிறார் இந்த இணையதளத்தை நடத்தும் குஷ்ரூ போச்சா. நாக்பூரை சேர்ந்த இவர் 2000ம் ஆண்டில் இந்த இணையதளத்தை தொடங்கினார்.இந்த இணையதளத்தில் ரத்த தானம் செய்ய விரும்பும் 45 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும் இதில் யார் வேண்டுமானாலும் தங்கள் பெயர், ரத்த குரூப், தொலைபேசி எண் போன்ற விவரங்களை தந்து பதிவு செய்து கொள்ளலாம்.யாராவது ரத்தம் தேவை என இந்த இணைய தளத்தை தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகே உள்ள ரத்த தான விரும்பிகளுக்கு தகவல் தரப்படும். அவர்கள் உடனே நோயாளியின் இருப்பிடத்துக்கு சென்று ரத்தம் தருவார்கள். யார் வரப் போகிறார்கள் என்ற விவரம், நோயாளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

ஜாதி ஒழிய வேண்டும்: கருணாநிதி

தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேறாததற்கு காரணம் அவர்களுக்காகப் போராடுபவர்களை அவர்கள் உணர்ந்து கொள்ளாததுதான் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்ணுரிமை மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:

இங்கே பல கோரிக்கைகளை வாசித்து, அவற்றை நிறைவேற்ற வழி காணுங்கள் என்றார் திருமாவளவன். இந்த கோரிக்கைகள் சில ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பின்பு இதுபோன்ற மண்ணுரிமை மாநாட்டில் அமைக்கப்படும் மேடை குடிசையாக இல்லாமல் மாளிகையாக அமைய வேண்டும். மாளிகை என்றால் அது கொடநாடு மாளிகை அல்ல. அது நமது உழைப்பில் உருவான மாளிகையாக அமையும். அதற்கு என்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்வேன். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் படைக்கும் நானே தலைமை தாங்குவேன்.

ஜாதி ஒழிய வேண்டும்:

இங்கே நிறைவேற்றின 23 தீர்மானங்களின் சுருக்கமே ஜாதி ஒழிய வேண்டும் என்பதுதான். ஜாதியை ஒழித்துவிட்டால் 23 தீர்மானங்களையும் நிறைவேற்றி விடலாம். என்னுடைய 70 ஆண்டு பொதுவாழ்வில், ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தில் இருந்து கிஞ்சித்தும் நான் விலகியது கிடையாது.

திருமாவளவன் பேச்சு

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை மீட்டு எடுக்கும் ஆளுமைத் திறன் கருணாநிதியிடம் மட்டும்தான் உள்ளது என்றார் திருமாவளவன். இந்த மண்ணின் சொந்தக்காரர்கள், ஒடுக்கப்பட்டகளாக சமுதாயத்தின் விளிம்பில் உள்ளனர். அவர்களை மீட்டெடுக்கக் கூடிய ஆளுமைத் திறன் முதல்வர் கருணாநிதியிடம்தான் உள்ளது.

தினமணி

பிரென்ச் தேர்தல் முடிவுகள்

ஃபிரான்சில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி சர்கோசியின் கட்சி வெற்றிபெற்றது.

விவரங்கள் (அடைப்புக் குறிக்குள் முந்தைய மன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கை)
சர்கோசியின் UMP மற்றும் கூட்டணி கட்சிகள் - 341-357 (359)
சோஷலிஸ்ட்கள் - 233 (149)
மொத்தம் - 577

தோற்றவர்களில் முக்கியமான சிலர்:
* மெரின் லெ பென் (Marine Le Pen) - தீவிர வலதுசாரியும் குடிபுகல் கொள்கைகளில் இனவெறி காட்டியதுமாக கருதப்படும் லெ பென்னின் மகள்
* முன்னாள் பிரதம மந்திரியும் எரிபொருள் & சுற்றுசூழல் மந்திரியுமான அலென் (Alain Juppe)

1. BBC NEWS | Europe | Sarkozy party wins in French poll
2. France's legislative elections | Blue landslide | Economist.com

-o❢o-

b r e a k i n g   n e w s...