முதல்வர் கருணாநிதி தொகுதியில் உள்ள தமிழ்நாடு கிரிகெட் அசோசியேசன் கிளபிற்கு (TNCA CLUB) விரிவுரை செய்ய வேட்டி கட்டி சென்ற மத்திய அரசு அலோசகர் திரு.நாரயணன் உறுப்பினர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்.
மேலும் செய்திக்கு "IBNLIVE.COM"
Thursday, June 7, 2007
சென்னை TNCA Clubல் வேட்டி கட்டி சென்ற மத்திய அரசு ஆலோசகர் விரட்டியடிப்பு - வீடியோ
Posted by சிவபாலன் at 10:27 PM 4 comments
உலக செய்தித்தாள் விற்பனை உயர்வு
தொலைக்காட்சி, இணையம் என பல செய்தி ஆதாரங்கள் இருந்தபோதிலும் கையில் தேநீர் கோப்பையுடன் செய்தித்தாளை படிப்பதன் சுகமே தனிதான். உலக செய்தித்தாள் (வெளியீட்டாளர்) சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி உலக செய்தித்தாள் பயன்பாடு 2.3% அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி இந்தியா, சீனாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி விகிதத்தாலேயே சாத்தியமாயுள்ளது.
இந்தியாவில் 2006ல் செய்தித்தாள் விற்பனை 12.93% வளர்ச்சிகண்டுள்ளது. 2006ல் முடிந்த 5 ஆண்டுகளில் 53.63% வளர்ச்சி கணக்கிடப்பட்டுள்ளது.
சைனாவில் தினமும் 98.7மில்லியனும் இந்தியாவில் 88.9 மில்லியனும், ஜப்பானில் 69.1 மில்லியனும் அமெரிக்காவில் 52.3 மில்லியனும் செய்தித்தாள்கள் விற்கப்படுகின்றன.
World newspaper sales up 2.3%; India grows 13% in 2006: WAN Hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 10:18 PM 0 comments
உலகின் முதல் சூரியசக்தி கைப்பேசி!
உலகின் முதல் சூரியசக்தியில் இயங்கவல்ல கைப்பேசியை சீன நிறுவனம் கண்டறிந்துள்ளது.
சூரியஒளியை கிரகித்துக்கொள்ளும் வகையில் சிறு அளவுப்பட்டை(Scale) ஒன்று அக்கைப்பேசியின் முகப்பில் பொருத்தப்பட்டிருக்கும். ஒருமணி நேரம் சக்தியேற்றத்துக்கு 40 நிமிடங்கள் பேசத்தக்க அளவில் தற்போது உள்ளதாம்.
இதன் விலைவிபரம் தெரிவிக்கப்படவில்லை.
மேலும்..
Posted by வாசகன் at 9:03 PM 4 comments
தமிழகமெங்கும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம், கைது
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சட்டமன்ற பதவியை ரத்து செய்யக் கோர எண்ணுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்ததர்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தமிழகத்திலும் புதுவையிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கருணாநிதியின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.
விழுப்புரத்தில் போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் கொடும்பாவி எரிப்பை தடுக்கையில் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விழுப்புரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கணபதி மற்றும் அதிமுகவினர் மீது காவல்துறை ஜவகரைத் தாக்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் எம்.எல்.ஏக்கள் அன்பழகன் மற்றும் ஓ.எஸ். சாகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
AIADMK workers stage protests over Karunanidhi's remarks India eNews.com, India
AIADMK cadres hurt in lathicharge; many taken into custody Frontline, India
Posted by சிறில் அலெக்ஸ் at 9:00 PM 0 comments
இடஒதுக்கீடுக்கு விஜயகாந்த எதிர்ப்பு
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கிடுக்கு விஜயகாந்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திக்கு "THE HINDU.."
Posted by சிவபாலன் at 8:52 PM 8 comments
தலித் எழுத்தாளர் ரவிக்குமாருக்கு பிடிவாரண்ட்
கடலூர் அருகே வீடுகளுக்கு தீ வைப்பு, போலீஸ் மீது தாக்குதல் வழக்கு தொடர்பாக காட்டுமன்னார்கோயில் விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ ரவிக்குமார், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வார்டு பாபு ஆகியோருக்கு கடலூர் மாஜிஸ்திரேட் வாரண்ட் பிறப்பித்து உள்ளார்.
கடலூரை அடுத்த சேடப்பாளையம் அருகே எஸ்.என்.நகர் காலனி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிவா (25), ஒரு கோஷ்டியினரால் தாக்கப்பட்டு 2-1-2007-ல் இறந்தார். சிவாவின் இறுதி ஊர்வலத்தில் சேடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 10 வீடுகள், தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. காவல்துறையினர் தாக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ ரவிக்குமார், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வார்டு பாபு, கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன், செல்வன், அமுதன், குணசேகரன், ஞானம், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு கடலூர் 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எம்எல்ஏ ரவிக்குமார், கெய்க்வார்டு பாபு ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், திங்கள்கிழமை பிடிவாரண்ட் பிறப்பித்து, மாஜிஸ்திரேட் கலைமதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தாமரைச்செல்வன் செவ்வாய்க்கிழமை 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் விடுதலை ஆனார்.
தினமணி
Posted by Boston Bala at 8:11 PM 0 comments
சவூதி: மேலும் 750 இந்தியர்கள் வெளியேற்றம்!
அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்த 1000 இந்தியர்களை கடந்த வாரம் சவூதி அரேபிய அரசு வெளியேற்றியிருந்தது. அவ்வகையில் மேலும் 750 இந்தியர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர் என்று தெரிகிறது.
உம்ரா,ஹஜ் போன்ற புனிதப்பயண நுழைமதியில் வந்து அக்காலகட்டத்திற்கு மேலும் அனுமதியின்றி தங்கிய வெளிநாட்டவர்கள் வெளியேற ஏப்ரல் 2 தொடங்கி ஜூன் 1 வரை பொதுமன்னிப்பு காலத்தை சவூதி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அச்சமயம் 1000 இந்தியர்கள் வரை வெளியேற்றப்பட்டிருந்தனர். மேலும் 750 இந்தியர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று ஜெத்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்பெசல் உம்ரா ஓவர்ஸ்டேயர்ஸ் செல் ஒன்றைத் தொடங்கி 24 மணி நேர உதவித் தொலைபேசி சேவையையும் அறிவித்துள்ள துணை தூதரகம், இந்தியர்,உம்ரா விசா என்பதற்கான சான்றாதாரங்களுடனும் பயண ஏற்பாடுகளுடனும் வருவோர் இம்மையத்தை தொடர்பு கொண்டால், சவூதி அதிகாரிகளுடன் இணைந்து அவர்களை நாட்டுக்கு அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியத் துணை தூதரக ஸ்தானிகர் அவுசாஃப் சயீத் இத்தகவலை பி.டி.ஐ-க்கு அளித்துள்ளார்.
Posted by வாசகன் at 7:34 PM 0 comments
பயணியை உதைத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
விமானம் தாமதம் என்று பயணிகள் பலமுறை அலைக்கழிக்கப்பட, எரிச்சலுற்ற தமிழகப் பயணி ஒருவர் "மாற்று ஏற்பாடு செய்யக்கூடாதா?" என்று கேட்டதற்கு அவருக்கு 'மாத்து' கொடுத்துள்ளனர் ஸ்ரீலங்கா ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள்.
நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர்.
விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது.
ஆனால் கிளம்பிய சில விநாடிகளிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் பயணிகளை தரை இறக்கிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான நிலையத்திலேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் 11 மணிக்கு பயணிகளை விமானத்தில் ஏறுமாறு கூறினர். இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின்னர் மீண்டும் அனைவரையும் கீழே இறங்கி விமான நிலையத்தில் அமருமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் என்ன பிரச்சினை என்று ஆவேசமாக கேட்டனர்.
அப்போது ஜாகிர் உசேன், சற்று கோபமாக, வேறு ஏதாவது ஏற்பாடு செய்யக் கூடாதா என்று கேட்டுள்ளார்.ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர்.
ஆனால் ஜாகிர் உசேனை மட்டும் இறங்க விடாமல் தடுத்த பாதுகாவலர்கள் அவரை விமானத்திலேயே அமர வைத்தனர். பின்னர் கைவிலங்கிட்டு புகைப்படம் எடுத்தனர். பிறகு சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.
வலி தாங்க முடியாமல் ஜாகிர் உசேன் போட்ட கூச்சலால், கீழே இறங்கிக் கொண்டிருந்த பயணிகள் வேகமாக விமானத்திற்குள் வந்தனர். அனைவரும் பாதுகாவலர்களைத் தடுத்து நிறுத்தி ஜாகிர் உசேனைக் காப்பாற்றி கீழே அழைத்துச் சென்றனர்.
தட்ஸ் தமிழ்
Posted by வாசகன் at 6:58 PM 0 comments
ச: அருணாச்சல் ஒப்பந்தம்:சீனா பேச்சு மாறுகிறது
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் டவாங் மற்றும் சர்ச்சைக்குள்ளான பகுதிகளைக் குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்னால் இந்தியாவும் சீனாவும் மக்கள் வாழும் இடங்களை குறித்து ஒப்புக் கொண்டதை அங்கீகரிக்க சீனா மறுத்துள்ளது. சென்ற வாரம் ஜெர்மனியில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் சீன அமைச்சர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். மக்கள் வாழ்வதாலேயே அந்த பகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த விதயம் தற்சமயம் G8 மாநாட்டிற்காக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் சீன அதிபரை சந்திக்கும் போது மேலும் விவாதிக்கப் படலாம்.
Arunachal accord: China backtracks - Yahoo! India News
Posted by மணியன் at 6:37 PM 0 comments
சற்றுமுன் -1500
பிப்ரவரி 15 - சற்றுமுன் பிறந்த நாள்
மே 8 - ஆயிரம் பதிவுகளை எட்டிய 83 வது நாள்
மே 25 - 1250 பதிவுகளைக் கடந்த 100 வது நாள்
ஜூன் 7 - 1500 பதிவுகளை எட்டிய 113 வது நாள்
Posted by ✪சிந்தாநதி at 6:25 PM 3 comments
மதுரை: காங். வேட்பாளர் ராஜேந்திரன் தேமுதிக-சிவமுத்துக்குமார்: பாஜக-சசிராமன்
மதுரை: காங். வேட்பாளர் ராஜேந்திரன் தேமுதிக-சிவமுத்துக்குமார்: பாஜக-சசிராமன்
ஜூன் 07, 2007
மதுரை: மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.கே.ராஜேந்திரன் போட்டியிடுவார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
மேலும்...
Posted by ✪சிந்தாநதி at 6:21 PM 2 comments
ச:பாரத ஸ்டேட் வங்கியில் நாளை வேலைநிறுத்தம்
நாளை இந்தியாமுழுமையும் உள்ள அனைத்து பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளிலும் அனைத்துப் பணிகளும் அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும். கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு எதிராகவும் போதுமான ஆட்களை வேலைக்கெடுக்க வேண்டும் என்றும் அவர்களது அதிகாரிகளின் சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளது.
The Hindu News Update Service
Posted by மணியன் at 6:13 PM 0 comments
கொழும்புவிலிருந்து தமிழர்கள் கட்டாய வெளியேற்றம்
இலங்கை போலிஸ் இன்றுமுதல் தலைநகர் கொழும்புவிலிருந்து தமிழர்களை கட்டாயமாக வெளியேற்றத் துவங்கியுள்ளது. தமிழ் ஈழப் புலிகளின் ஆதரவாளர்களாக சந்தேகிக்கப் படுபவர்களை கண்டறிய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இரவு துவங்கி இலங்கை போலீஸ் 'ரெய்ட்' நடத்தி நூற்றுக்கணக்கில் தமிழர்களை பஸ்களில் ஏற்றி வடக்கு அல்லது கிழக்கு மகாணங்களை நோக்கி அனுப்பிவைத்தது. 'போதிய காரணமின்றி' கொழும்புவில் தங்கியிருக்கும் தமிழர்களை திருப்பி அனுப்புவதாக இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.
குறைந்த விலை லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்கள் பலரும், தற்காலிகமாக தங்கியிருப்பவர்களுமாக மொத்தம் 376பேர் இதுவரை வெளியேர்றப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளன. 'இனச் சுத்தீகரிப்பு நடவடிக்கை இது' என அவர்கள் வர்ணித்துள்ளனர்.
Police evict Tamils from Colombo BBC News, UK
Sri Lanka begins forced eviction of Tamils from Colombo
Police evict Tamils from temporary lodges in Colombo
Posted by சிறில் அலெக்ஸ் at 5:33 PM 3 comments
ஓமனில் சூறாவளி - இந்தியர் பலி
நேற்று ஓமனில் நிகழ்ந்த கடுமையான சூறாவளிப் புயலில் சிக்கி கேரளாவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார். மேலும் கேரளா ஆந்திரா பஞ்சாபைச் சார்ந்த மொத்தம் 8 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள விரும்புபவர்கள் 00968-24813838 அல்லது 00968-24812936. (fax number is 00968-24811607).
தில்லியில் இருக்கும் கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்புகொள்ள. 011-23015300. (fax number is 011-23018158. )
Posted by சிறில் அலெக்ஸ் at 5:18 PM 1 comments
மதுரை:மதிமுக பிரமுகர் திடீர் வேட்பு மனு.
மதுரை மேற்குத் தொகுதியில் மதிமுகவைச் சேர்ந்த மகுடபதி என்பவர் திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கி வைகோ உத்தரவிட்டார். மதுரை மேற்குத் தொகுதியில், நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. அதிமுக சார்பில் செல்லூர் ராஜு, தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமரன், பாஜக சார்பில் சீத்தாராமன் ஆகியோர் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளராக இன்று ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டார். இத் தொகுதியில் அதிமுகவை மதிமுக ஆதரிக்கிறது. இந் நிலையில் இன்று காலை மதிமுகவைச் சேர்ந்த மகுடபதி என்பவர் திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. மகுடபதி மனு தாக்கல் செய்தி அறிந்ததும் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மகுடபதி கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய வகையிலும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
Posted by Adirai Media at 4:13 PM 0 comments
கரூரில் பதற்றம்.
கரூரில் முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்த அதிமுகவினர் மீது திமுகவினர் சோடா பாட்டில்கள், உருட்டுக் கட்டைகளுடன் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பிலும் பலருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டது. பல அதிமுகவினரின் மண்டை உடைந்தது. அதிமுக அலுவலகத்தை இடிக்கப் போவதாகவும், ஜெயலலிதா வீட்டில் சோதனை நடக்கப் பேவாதாகவும் வெளியான தகவல்களை கண்டித்தும், கொடநாடு எஸ்டேட்டில் சோதனை நடந்ததை எதிர்த்தும், ஜெயலலிதா மது அருந்துவதாக இரட்டை அர்த்தத்தில் கருணாநிதி அறிக்கை விட்டதை கண்டித்தும் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் பேராட்டம் மற்றும் வன்முறையில் இறங்கியுள்ளனர். இன்று காலை கரூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட அதிமுகவினர் முதல்வர் கருணாநிதியை திட்டி கோஷம் எழுப்பினர். மேலும் அவரது கொடும்பாவியையும் எரித்தனர். கொடும்பாவி எரிந்து கொண்டிருந்த நிலையில் அந்தக் கூட்டத்தினர் மீது சோடா பாட்டில் வந்து விழுந்து சிதறின. இதையடுத்து அதிமுகவினர் அதிர்ந்தனர். அடுத்து உருட்டுக் கட்டைகளுடன் அங்கு வந்த திமுகவினர் அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அதிமுகவினர் சிதறி ஓடினர். பல அதிமுகவினருக்கு மண்டை பிளந்தது.
கலைந்து ஓடிய அதிமுகவினரும் விரட்டி விரட்டி அடித்த திமுகவினரும் கடைகள் மீதும், அந்த வழியே வந்த பஸ்கள் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். பல இரு சக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து அப் பகுதியில் கடைகள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர் பள்ளிகளை நோக்கி படையெடுத்தனர்.
இவர்களது சண்டையால் பொது மக்கள் பீதியில் அலறியபடி ஓடினர்.
இந்த மோதலால் கரூரில் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.
பேராட்டத்துக்கு தலைமை தாங்கிய அதிமுக முன்னாள் எம்பியும் மாஜி மந்திரியுமான சின்னச்சாமியையயும் கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜியையும் போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் நாகராஜன், மாவட்ட மாணவரணிச் செயலாளர் பிரபு ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டதற்கு பதிலடியாக ஜெயலலிதாவின் கொடும்பாவியை திமுகவினர் எரித்து வருகின்றனர்.
Posted by Adirai Media at 2:34 PM 1 comments
ச: காவல் ஆய்வாளருக்கு தீ வைத்துக் கொளுத்தினர்: அதிமுக எம்.எல்.ஏ கைது
விழுப்புரம் கோட்டக்குப்பம் பகுதியில் திருசிற்றம்பலம் கூட்டுச்சாலையில் அதிமுகவினர் வானூர் எம் எல் ஏ கணபதி தலைமையில் முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆய்வாளர் ஜவஹர் அந்தத் தீயை அணைக்க முயன்றபோது கணபதியும் அவரது ஆதரவாளர்களும் ஜவஹர் மீது பெட் ரோல் ஊற்றி தீ வைத்தனர். இருகால்களும் தீயினால் கருகிய நிலையில் ஜவஹர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இது சம்பந்தமாக கணபதி உட்பட ஐம்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
DNA - India - Cop set ablaze; AIADMK man arrested - Daily News & Analysis
Posted by மணியன் at 12:43 PM 2 comments
சவூதி: வெளிநாட்டவருக்கான புதிய முதலீட்டு வழிகள்.
தனது நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கான புதிய முதலீட்டு வழிகளைத் திறப்பது பற்றி சவூதி அரேபிய அரசு ஆலோசித்து வருகிறது.
பத்திரிக்கை குறிப்புகளின் படி, இந்நாட்டில் பணிபுரியும் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வருடம் ஒன்றுக்கு சவூதி ரியால் 100 பில்லியன் ($26.6 பில்லியன்) என்ற அளவில் தத்தம் நாட்டுக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
உழைத்து சம்பாதிக்கிற பணத்தை விருப்பப்படி செய்யும் உரிமையை மதித்தும், பரஸ்பர பயன்களை கணக்கில் கொண்டும், முதலீட்டு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று சவூதி அரேபிய வணிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்கள் சவூதி பங்குச்சந்தையில் ஈடுபடலாம் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவூதியிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட தொகை பத்து சதவீதம் அளவு குறைக்கப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
"தேவையான வாய்ப்பும், ஊக்கமும் அளிக்கப்பட்டால், வெளிநாட்டவர்கள் மகிழ்ச்சியுடன் சவூதியில் முதலீடு செய்வர்" என்று ஏர் இந்தியாவின் சவூதி அரேபிய மக்கள் தொடர்பாளர் விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
Posted by வாசகன் at 12:20 PM 0 comments
முன்னாள் அதிமுக எம்.பி.(விஐடி)யில் வருமான வரி சோதனை.
முன்னாள் அதிமுக எம்.பி. விஸ்வநாதனுக்குச் சொந்தமான வேலூர் தொழில்நுட்பக் கழக நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் (விஐடி) நேற்று வருமான வரி சோதனை நடந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் எம்.பியாக இருந்தவர் விஸ்வநாதன். இவர் தற்போது வேலூரில், வேலூர் தொழில்நுட்பக் கழகம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) என்ற பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார். தமிழகத்தின் தலைசிறந்த தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்த நிலையில் வி.ஐ.டியில் நேற்று அதிரடியாக வருமான வரி சோதனை நடந்தது. நேற்று காலை தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. சென்னையிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் என்ன கிடைத்தது என்பது குறித்து அதிகாரிகள் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதேபோல வேலூரில் உள்ள 2 ஹோட்டல்கள், மின்னணு பொருட்கள் விற்பனை நிலையம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஊர்களிலும் வருமான வரி சோதனை நடந்தது.
Posted by Adirai Media at 10:42 AM 0 comments
ச: கூகிள் எர்த்: பாதுகாப்பு உடைப்பு பற்றி உள்துறை அமைச்சு மீள் ஆய்வு
அமெரிக்காவின் JFK விமானதளத்தின் எண்ணெய் கிடங்கிகளை குறிபார்த்த தீவிரவாதிகளுக்கு துணைபுரிந்த கூகிள் எர்த் படங்களைப் பற்றிய செய்திகளின் பின்னணியில் நடுவண் அரசு இந்த மென்பொருளால் ஏற்படும் பாதுகாப்பு கேடுகளை எதிர்கொள்ள உறுதியான பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறது. உள்துறை அமச்சின் செயலரின் தலைமையில் மூத்த அதிகாரிகள், புலனாய்வு துறை மற்றும் RAW அமைப்பினர் நேற்று இரவு கூடி இதனை விவாதித்தது.
DNA - India - Home ministry reviews threat from Google Earth - Daily News & Analysis
Posted by மணியன் at 8:48 AM 0 comments
திருமாவளவன் படத்துக்கு தடை
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் 'அன்புத்தோழி' படத்தில் விடுதலைப் புலிகளைப் போல சீருடை அணிந்து புரட்சியாளர் வேடத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது.
படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும், இது தேச ஒற்றுமைக்கு எதிரானது என்றும் திருமாவளவன் நடித்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கினால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் படக்குழுவினர் அதற்கு மறுக்கவே படத்தை வெளியிட சென்சார் போர்டு தடை விதித்துள்ளது. தற்போது மேல்முறையீட்டுக்காக படம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Dinamani.com
Posted by Boston Bala at 3:16 AM 0 comments
கூடா ஒழுக்கத்திற்காக நான்கு பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
திருமணத்துக்கப்பாற்பட்ட பாலுறவு கொண்டதற்காக பெண்ணொருவருக்கும் மூன்று ஆண்களுக்கும் பாகிஸ்தானிய கிராமத்தின் பழங்குடி மூத்தகுடியினர், ஊர் முன்னிலையில் கொல்வதற்கு தீர்ப்பளித்தனர். நான்கு பேரும் இறப்பதை அறுநூறு மக்கள் பார்த்தனர்.
வன்புணர்வுக்கும் விபசாரத்துக்குமான சட்டதிருத்தங்களை பாகிஸ்தானிய நாடாளுமன்றம் கடந்த வருடம் நிறைவேற்றியிருந்தது. புதிய சட்டத்தின்படி மணமுடிப்பிற்கு அப்பால் உடலுறவு வைத்துக்கொள்பவர்களின் மரண தண்டனை நீக்கப்பட்டது.
BBC NEWS | South Asia | Pakistanis executed for adultery
Posted by Boston Bala at 2:53 AM 0 comments
அரசுப் பணத்தில் கோயில் கட்ட பணம் கொடுத்த எம்.பி.
சண்டிகர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பவன்குமார் பன்சால். காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் நிதித்துறைத் துணை அமைச்சராகவும் இருக்கிறார். நாடாளுமன்ற உறுப் பினர் எனும் முறையில் தொகுதி மேம்பாட்டுக்குச் செலவு செய்திட ஒதுக்கப் பட்ட தொகை இரண்டு கோடி ரூபாயில் விதிமுறைகளை மீறிக் கோயில் கட்ட எட்டு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்தக் காரியங்களுக்கு இந்த நிதியைப் பயன் படுத்தக்கூடாது என்பதே இணைப்பு II-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியலின் 13 ஆம் வரிசை எண் "மத வழிபாட்டு இடங்களில் அல்லது மத நம் பிக்கைக் குழுவுக்குச் சொந்தமான இடங்களில் எந்தப் பணியும் மேற்கொள்ளப்படக் கூடாது" என்று தெளிவாக வரையறை செய்துள்ளது.
இதைமீறி இவர், சாமுண்டா தேவி எனும் கோயிலின் மதில் சுவரை வலுப்படுத்துவதற்காகச் செலவு செய்திட ஒதுக்கினார்.
இதோ, ஒரு திருமங்கை ஆழ்வார்; மற்றுமொரு மாணிக்க வாசகர் - விடுதலை
Posted by Boston Bala at 2:13 AM 0 comments
ஜெயலலிதாவின் பதவியை ரத்து செய்ய மனு: திமுக யோசனை
ஜெயலலிதாவின் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யவும், இனிவரும் தேர்தலில் அவர் நிற்க முடியாமல் செய்யவும் நடவடிக்கையாக மனு ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க திமுக யோசிப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.
(கோடநாடு மாளிகை) சொத்துக் கணக்கை 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் செய்த நேரத்தில் ஜெயலலிதா குறிப்பிடவில்லை என்றும், அது மறைக்கப்பட்டிருப்பதாகவும் தனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்ட கருணாநிதி, 'இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஜெயலலிதா தேர்தலில் நிற்கவும் முடியாது; ஏற்கெனவே வென்றிருப்பதும் செல்லாது' என்று தெரிவித்தார்.
Tamil Yahoo.com
Posted by Boston Bala at 1:45 AM 0 comments
b r e a k i n g n e w s...