.

Sunday, July 22, 2007

இந்தியா: நீர் சுத்திகரிப்பு தொழிலுக்கு நல்ல வாய்ப்பு

இந்தியாவில் நீர் சுத்திகரிப்பு தொழிலில் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இதுபற்றிய தினமலர் செய்தி:

இந்தியாவில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு கம்பெனிகள் கருதுகின்றன.5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இந்த தொழிலில் முதலீடு செய்யவும் பல நாட்டு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இந்தியாவில் பல நகரங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவ, பல வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதி கேட்டு வரிசையில் நிற்கின்றன. சமீபத்தில் கூட பிரான்சை சேர்ந்த தேகிரேமோன்ட் என்ற நிறுவனம், சென்னையில் ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திருக்கிறது. இவர்களுடன் சுவிஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கம்பெனிகள் இதற்கான டென்டருக்காக போட்டி போடுகின்றன.

சவூதி: எண்ணை கிணறு தீ விபத்தில் இந்தியர் பலி

சவுதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற 'அராம்கோ' நிறுவன எண்ணை கிணறு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இந்தியர் உள்பட 4 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர் ஒருவர். மற்ற 2 பேரும் பிலிப்பைன்சை சேர்ந்தவர்கள்.

மேலும் 6 இந்தியர்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

மக்கள் தொ.கா
மாலைமலர்

நடிகர் சஞ்சய்தத்-துக்கு 27ந்தேதி தீர்ப்பு.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை வரும் 27ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி மும்பை தடா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்று அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் நுõறு பேருக்கான தண்டனை விவரங்களை, சிறப்பு தடா கோர்ட் பகுதி பகுதியாக அறிவித்து வருகிறது. இதுவரை 87 பேருக்கு தடா கோர்ட் நீதிபதி பி.டி.கோடே தண்டனைகளை வழங்கியுள்ளார். ஏழு பேருக்கு துõக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது; 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக சஞ்சய்தத் மீது குற்றச்சாட்டு

தினமலர்

ஆப்ரிக்க ஊழியர்களை இந்திய மற்றும் சீன முதலீட்டாளர்கள் மோசமாக நடத்துவதாக குற்றச்சாட்டு

இந்திய மற்றும் சீன முதலீட்டாளர்கள், தமது ஆப்ரிக்க ஊழியர்களை மோசமாக நடத்துவதாக சாம்பியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆயர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெளிநாட்டுக் கம்பெனிகள் மிகவும் குறைவான ஊதியத்தை வழங்குவதாகவும், போதுமான ஊழியர் பாதுகாப்பு நடைமுறைகள் எதனையும் பேணாமல், அவர்களை நீண்ட நேரம் வேலை செய்யப் பணிப்பதாகவும் ஆயர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டின் மூலம் கிடைக்கின்ற வேலை வாய்ப்புகளை தாம் வரவேற்கின்ற அதேவேளை, அது சாம்பிய தொழிலாளர்களைப் பாதிப்பதாக அமையக் கூடாது என்று அதிபர் லெவி மெவனவச அவர்களுக்கு அனுப்பிய எதிர்ப்பு மனு ஒன்றில் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

BBC Tamil

ZAMBIA: Local textile workers should not be abused

இத்தாலியில் "இஸ்லாமிய தீவிரவாதிகளை" கைது செய்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்

(c) Washingtom Postஇத்தாலியின் பெருகியா நகரத்தில் மசூதி ஒன்றில் இருந்த தீவிரவாத பயிற்சிக்கூடத்தை மூடியிருப்பதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இமாம் ஒருவர் உட்பட மொரக்கோவை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரக்கோவை சேர்ந்த நான்காவது நபர் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மசூதிக்குள் ஆயுதப்பயிற்சி மற்றும் இதரப்பயிற்சிகள் நடைபெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர். அத்தோடு போயிங் 747 ரக விமானத்தை எவ்வாறு இயக்குவது, விஷங்கள் மற்றும் வெடிப்பொருட்களை எவ்வாறு கையாள்வது போன்ற தகவல்கள் இணையத்தில் இருந்து தருவிக்கப்பட்டதும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கட்டிடத்தில் இருந்து சில இரசாயனங்களும் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

BBC Tamil

The Hindu News :: Italian police arrest 3 Moroccans they say used local mosque as terror training camp
Italian police arrest imam, aides - The Boston Globe

நேபாளம்: மன்னர் கட்டவேண்டிய மின்கட்டணம்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மன்னர் ஞானேந்திராவும், அவரது உறவினர்களும் நேபாள மின்சார ஆணையத்திற்கு ரூ. 3.6 கோடி மின்சார கட்டண பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் நடந்த உள்நாட்டு கலவரம் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து மன்னர் ஞானேந்திரா அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கான மானியங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வரும் நவம்பர் மாதம் அங்கு பொதுத் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேபாள பத்திரிகை ஒன்றில் வெளியான தகவல் வருமாறு: கடந்த 2005 பிப்ரவரியில் இருந்து ஞானேந்திராவும், அவரது உறவினர்களும் நேபாள மின்சார ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தவில்லை. கடந்த மாதம் 14ம் தேதி வரை நேபாள அரண்மனையில் மட்டும் ரூ. 2.6 கோடிக்கு கட்டண பாக்கி வைத்துள்ளனர். இளவரசர் பரசின் வீட்டிற்கான மின்சார கட்டண பாக்கி ரூ. 20 லட்சம். ஞானேந்திராவின் சகோதரர் தீரேந்திரா ஷாவின் மூன்று மகள்கள் ரூ. 20 லட்சம் பாக்கித் தொகையை செலுத்தவில்லை. இதுதவிர அவரது உறவினர்கள் பலரும் மின்சார கட்டண பாக்கி வைத்துள்ளனர். மொத்தத்தில் ஞானேந்திராவும், அவரது உறவினர்களும் ரூ. 3.6 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

சென்னை: மீண்டும் ரவுடி வேட்டை.

சென்னை நகரில் போலீசார் கடந்த 2 நாட்களாக நடத்தி வரும் அதிரடி சோதனையில் 700க்கும் அதிகமான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய ரவுடிகள் வேட்டை நேற்று இரவும் நீடித்தது. நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது ரவுடிகள், கேடிகள் என 700க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர்

சின்சினாட்டி டென்னிஸ்: சானியா போராடித் தோல்வி.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டிகளின் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்தியாவின் சானியா மிர்சா, இன்று காலை நடந்த அரையிறுதிப்போட்டியில் கடுமையாகப்போராடியும் தோல்வியடைந்தார்.
அரையிறுதி போட்டியில், ரஷ்யாவின் அன்னா சாக்வெட்சை சானியா எதிர்த்து ஆடினார். 2 - 6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த சானியா, 7 - 5 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார். இருவருமே தலா ஒரு செட்டை கைப்பற்றியதால், மூன்றாவது செட் ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் சானியா 3-6 என்ற செட் கணக்கில் போராடித் தோற்றார்

ச: தே.ஜ. கூட்டணி துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் - நஜ்மா ஹெப்துல்லா!

நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நஜ்மா ஹெப்துல்லா தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

காங் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரியும் 3வது அணி சார்பில் ரஷீத் மசூத்தும் போட்டியிடுகின்றனர்.

-o❢o-

b r e a k i n g   n e w s...