.

Wednesday, August 8, 2007

கோவாவில் பலத்த மழை: உயிர்சேதம்

பிஹார், குஜராத், உ.பியை அடுத்து கோவாவில் பலத்தமழை பெய்து உயிர்சேதம் விளைவித்துள்ளது. மஹராஷ்ற்றாவின் சில இடங்களும் மத்திய பிரதேசத்தில் சில இடங்களும் பெரும் மழையால் பாதிப்படைந்துள்ளன.

Rain fury on in Goa, MP; scene in Bihar, UP improves - The Hindu

சிண்டிகேட் வங்கி: இந்தி தெரிந்தால் தான் வேலை

இந்தி மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்ற சிண்டிகேட் வங்கியின் அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

சிண்டிகேட் வங்கி நானூறு எழுத்தர்கள், முன்னூறு அதிகாரிகளை பணியமர்த்த அறிவிப்பு செய்தது. எழுத்துத் தேர்வு இல்லாமல், நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்களை தேர்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பில் இந்தியை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இந்தியை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. இது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது.

தினமணி

'நொறுக்குத் தீனி' விளம்பரங்களுக்குத் தடை: அன்புமணி யோசனை

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் திண் பண்டங்கள் (நொறுக்குத் தீனி) மற்றும் சில குளிர்பானங்கள் ஆகியவற்றின் விளம்பரங்களைத் தடை செய்வதற்கு கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி யோசனை தெரிவித்தார்.

இந்த விஷயம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பி.ஆர்.தாஸ்முன்ஷியுடன் விரைவில் பேச உள்ளதாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

திண்பண்டங்கள் தவிர வாசனை திரவியங்கள் குறிப்பாக முகப்பூச்சுக்கான கிரீம்கள் தொடர்பான விளம்பரங்கள் தொடர்பாகவும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

தினமணி

Chennai Online News Service - Anbumani seeks policy on junk food ads

மேட்டூர் அணை நிரம்பியது: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகம் பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணை நிரம்பியுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகமாயிருப்பதால் அதிக நீர் திறந்துவிடப்பட்டு வெள்ள அபாயம் ஏற்படாலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி தினமலர்

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 15 பேர் ஜாமீனில் விடுதலை

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறுகுற்றங்கள் செய்த 15 குற்றவாளிகளுக்கு அவர்களது தனிப்பட்ட ஜாமீனில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. நீதிபதி உத்திரபதி குற்றம் நிரூபணமான 158 பேரில் 26 பேர்களது மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அதில் 15 பேருக்கு இவ்வாறு ஜாமீன் வழங்கியுள்ளார். மேலும் ஒன்பது பேரின் மனுவும் புதிய மனுக்கள் பதிமூன்றும் நாளை விசாரிக்கப்படும். மிகுதி இருவரின் மனு ஆகஸ்ட் 17 அன்று விசாரிக்கப்படும்.

மொத்தம் 32பேர் இதுவரை ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர். இன்னும் 100 பேரின் மனுக்கள் பரிசீலிக்கபட வேண்டும்.

The Hindu News Update Service

உச்சநீதிமன்ற தீர்ப்பு: அரசிற்கு தோல்வி அல்ல : அர்ஜுன் சிங்

நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்க மறுத்தது அரசிற்கான தோல்வியல்ல என்று கூறினார். தமது அமைச்சு உடனடியாக நிதிசாரா கல்வியகங்களிலும் இடஒதுக்கீட்டை கடைபிடிக்கும் சட்டவரைவினை தயாரித்துள்ளது எனக் கூறினார். அரசு இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார். உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை நீக்காவிடினும் தனது இறுதி தீர்ப்பை விரைவில் வழங்கும் என எதிர்பார்ப்பதாக மற்றொரு கேள்விக்கு பதிலிறுத்தார்.
மேலும்...IBNLive.com > Arjun says SC order not a setback, new Bill ready :

2005க்கான தேசிய திரைப்பட விருதுகள்

Best feature film

Kaalpurush (Bengali), Director Buddhadeb Dasgupta

Indira Gandhi Award for Best First Film of a Director

Prodip Sarkar, Parineeta (Hindi)

Best Director

Rahul Dholakia, Parzania (English)

Best Actress

Sarika, Parzania

Best playback singer (Male)

Naresh Iyer, Roo ba roo, Rang De Basanti

Best playback singer (Female)

Shreya Ghoshal, Apne aansoo peene ke liye (Paheli)

Best music direction

Lalgudi Jayaraman (Sringaram)

Best Popular Film

Rang de Basanti (Hindi)

Nargis Dutt Award for Best Feature Film on National Integration

Daivanamathil (Malayalam)

Best Actor

Amitabh Bachchan, Black

Best supporting actor

Naseeruddin Shah, Iqbal

Best supporting actress

Urvashi, Achhuvinte Amma

Best child artiste

Sai Kumar, (Bommalata)

Best cinematography

Madhu Ambat, Sringaram

Special jury award

Anupam Kher, Maine Gandhi Ko Nahin Mara

நன்றி: Indian Express

புக்கர் ் பரிசு: பட்டியலில் இரண்டு இந்தியர்கள்

இங்கிலாந்தில் வழங்கப்படும் எழுத்தாளர்களுக்கான புக்கர் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் இருக்கும் 13 பேரில் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நிகிட்டா லால்வானியின் கிப்ஃடட்(Gifted) நாவலும் இந்த்ரா சின்ஹாவின் அனிமல்ஸ் பீப்பிள் (Animal's People) புத்தகமும் 50,000 பவுண்ட் பரிசுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தேர்வு முடிவுகள் அக்டோபரில் அறிவிக்கப்படும்.

Two Indian writers in 13-strong Booker Prize longlist - the Hindu

123 உடன்பாடு: மைய அரசு முன்னெடுத்துச் செல்லும்

பிஜேபியும் இடது கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையிலும் நடுவண் அரசு அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்பாட்டுடன் மேற்கொண்டு செல்வதென தீர்மானித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறவேண்டியதில்லை என்றும் அமெரிக்காவுடன் மேற்கொண்டு பேரம் பேசபோவதில்லை என்றும் பிரதமரின் அலுவலகம் CNN/IBN க்கு தெரிவித்துள்ளது. திங்களன்று பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் இதனை அறிவிப்பார் என்றும் அப்போது பிஜேபி மற்றும் இடது கட்சிகளின் கவலைகளுக்கு பதிலளிப்பார் என்றும் பிரதமர் அலுவலகத்தினர் கூறினர்.

மேலும்....IBNLive.com > UPA won't turn Left, says N-deal on right track :

இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடையை நீக்க மறுப்பு

உயர்கல்வி நிலையங்களில் இதர பிந்தங்கிய வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அமலாக்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி நடுவண் அரசு கொடுத்த மனுவை உச்சநீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய பெஞ்ச் இன்று நிராகரித்தது. இதுபற்றிய சட்டத்தினை எதிர்த்து இடப்பட்டுள்ள வழக்குகளை தீர்மானிக்காமல் சட்டத்தை அமலாக்க இயலாது என நீதிமன்றம் கூறியது. கடைசி நிமிட சலுகையாக அரசு OBC இடஒதுக்கீட்டில் கிரீமி மட்டத்தை விலக்கி வைக்கவும் முன்வந்தது.
முழு விவரங்களுக்கு...IBNLive.com > SC turns down govt plea, OBC quota stays frozen :

டென்னிஸ்: சானியா ஜொலிக்கிறார்

தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடருமுகமாக சானியா மிர்சா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் $ 6 இலக்கம் முதற்பரிசுள்ள ஈஸ்ட்வெஸ்ட் வங்கி கிளாசிக் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் மார்டினா ஹிங்கிஸை 6-2,2-6,6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளார். பல நல்ல வெற்றிகளைப் பெற்று தன் வாழ்நாளின் சிறந்த தரவரிசை எண் 30 ஐ அடைந்திருக்கும் சானியா ஆட்டம் ஜொலிக்கிறது.

கால் இறுதி ஆட்டத்தில் தனது இரட்டையர் கூட்டாளி பியரையோ அல்லது பிரெஞ்ச் ஆட்டக்காரர் விர்ஜின் ரஸ்ஸனோவையோ எதிர்த்து ஆடுவார்.

The Hindu News Update Service

குற்றாலம் சாரல் திருவிழா - வீடியோ



"வீடியோவை இங்கே சென்றும் பார்க்கலாம்"

சென்னை நகரை அழகுபடுத்த சித்திர வேலைப்பாடுகளுடன் 300 சாலையோர பூங்கா

சாலையோரங்களில் காலியாக கிடக்கும் இடங் களை குப்பை கொட்டி அசிங்கப்படுத்துதல் மற்றும் தனியார் ஆக்கிரமித்தலில் இருந்தும் தடுக்க அந்த மாதிரியான இடங்களை பூங்காக்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சாலையோர பூங்கா அமைக்க 300 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேயர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:-

பூங்காக்களை வடிவமைப் பது பற்றி 54 பேரிடம் இருந்து டிசைன்கள் வந்துள்ளன. அழகிய சித்திர வேலைப்பாடுகள், சிற்பங்கள் நிறைந்ததாக இந்த பூங்காக்கள் அமையும். மாதிரி வரை படங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு அரசு அனுமதி பெற்று பூங்காக்கள் உருவாக்கப்படும்.

பல்வேறு தலைவர்களின் பெயர்களில் பெரிய பூங்காக்கள் உள்ளன. அந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் 38 பூங்காக்களில் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு வைக்கப்படும்.

மகாத்மா காந்தி, நேரு, சர்தார் பட்டேல், சத்திய மூர்த்தி, திரு.வி.க., திருவள்ளு வர், பாரதியார், காமராஜர், அண்ணா, ராஜீவ், கருணாநிதி, சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற உள்ளது.

மாலைமலர்

ஊர்மக்கள் அனைவரையும் கூண்டோடு கொல்ல சதி: குடிநீர் கிணற்றில் விஷம்

குடிநீர் கிணற்றில் விஷத்தை கலந்ததுடன் பல்லிகளையும் கொன்று போட்ட மலைராஜை்(வயது 37) கைது செய்யப்பட்டார்.

போலீசில் அவர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள அரியகோட்டை பஞ்சாயத்தை சேர்ந்த அனிச்சகுடி காளியம்மன் கோவில் அருகே அந்த கோவிலுக்கு பூஜை நடத்தும் வேளார் வகுப்பை சேர்ந்த 15 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். என் தந்தை செல்வத்திற்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு நான் உள்பட 5 குழந்தைகளும், 2-வது மனைவிக்கு செந்தில், உடையான் உள்பட 4 குழந்தைகளும் உள்ளனர்.

நான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சவுதி அரேபியா சென்றேன். நான் வெளிநாட்டில் இருந்த போது உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு செந்திலும், உடையானும் என் மனைவியிடம் பணத்தையும், நகையையும் கடனாக வாங்கியுள்ளனர். ஆனால் இதுவரை அதை திருப்பி கொடுக்கவில்லை. 5 லட்சம் பணத்தையும் என் மனைவி ஏற்கனவே போட்டிருந்த 5 பவுன் நகை உள்பட 30 பவுன் நகையையும் அவர்கள் மோசடி செய்து விட்டார்கள்.

இதனால் அவர்களையும், அவர்களுக்கு ஆதரவாக பேசிய 15 குடும்பத்தினரையும் கூண்டோடு கொலை செய்ய வேண்டும் என்று எனக்கு வெறி ஏற்பட்டது.

தேவிபட்டினத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்த நான், அங்கு திரிந்த பல்லிகளை எல்லாம் கொன்று பாலிதீன் பையில் சேகரித்தேன். பின்பு ராமநாதபுரம் வந்து அரண்மனை அருகே உள்ள ஒரு பூச்சி மருந்து கடையில் அரை கிலோ போரோடாக்ஸ் என்ற குருணை மருந்தை வாங்கினேன். அதை கிணற்றில் ஊற்றி விட்டு என் மனைவி ஊரான சிறுவயலுக்கு வந்து விட்டேன். ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டேனே என்று இப்போது வருத்தமாக உள்ளது.

தினத்தந்தி

-o❢o-

b r e a k i n g   n e w s...