செளதி அரேபியாவில் அல் ஹயாத் அரபி நாளிதழுக்கு தடை
செளதி அரேபியாவில் வெளியாகிவரும் அரபி நாளிதழ் அல் ஹயாத். லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும் இந்நாளிதழ் செளதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிலும் பதிப்புகளைக் கொண்டுள்ளது. செளதி அரேபியாவில் அதிக பட்ச விற்பனையை இந்நாளிதழ் கொண்டுள்ளது.
சமீபகாலமாக இந்நாளிதழ் செளதி அரேபிய அரசின் கொள்கைகள் மற்றும் நாட்டின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதமாக செய்திகள் வெளியிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் இயாத் மதானி பலமுறை இதுகுறித்து எச்சரித்தும் இந்நாளிதழ் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் சமிப்பத்தில் வெளியான ஈராக் குண்டுவெடிப்பு குறித்த செய்தியில் செளதி அரேபியாவில் உள்ள குழுவினருக்கு தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அல் ஹயாத் நாளிதழுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் தடை விதிக்கப்பட்ட காரணம் எதனால் என்பது முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.
http://archive.gulfnews.com/articles/07/08/30/10150147.html
Saudis ban distribution of Al Hayat indefinitely
Friday, August 31, 2007
செளதி அரேபியாவில் அல் ஹயாத் அரபி நாளிதழுக்கு தடை
Posted by
முதுவை ஹிதாயத்
at
9:36 AM
0
comments
Friday, August 24, 2007
இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
இந்த்னோஷிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு பணிப்பெண்கள் இறந்தைக் கண்டித்தும் மற்றும் இரண்டு பணிப்பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் இறந்த பணிப்பெண்களது உடலை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்பி வைக்கக் கோரினர்.
எனினும் சவுதி அரேபியாவில் உள்ள இந்தோனேஷிய தூதரக அதிகாரிகள் இறந்தவர்களது உடல்களையும், காயமடைந்தவர்களையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
http://www.arabnews.com/?page=1§ion=0&article=100381&d=24&m=8&y=2007
Indonesians Protest Outside Saudi Embassy in Jakarta
Posted by
முதுவை ஹிதாயத்
at
12:10 PM
0
comments
Wednesday, August 15, 2007
சவூதி: இன்று இந்தியாவுக்கு 50% தொலைபேசி கட்டணச்சலுகை.
இந்தியாவின் இனிய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சவூதிஅரேபிய தொலைதொடர்புத்துறை
இன்று 24 மணி நேரத்துக்கு இந்தியாவுக்கான தொலை அழைப்புகளுக்கு 50% கட்டணக்குறைப்பு செய்து தன்னுடைய சுதந்திரதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
இதே போன்ற சலுகை ஆகஸ்ட் 14ல் பாக்கிஸ்தானுக்கும், ஆகஸ்ட் 17ல் இந்தோனேசியாவுக்கும் வழங்கப்படுகிறது.
Posted by
வாசகன்
at
1:47 PM
0
comments
Monday, July 23, 2007
டாக்டர் ஹமீத் அன்சாரி: சவூதி வாழ் இந்தியர்கள் பெருமிதம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சிறுபான்மையோர் ஆணையத்தின் தலைவரும், சவூதி அரேபியாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதருமான டாக்டர் ஹமீத் அன்சாரி பற்றி சவூதி வாழ் இந்தியர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.
முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த ஜாகீர் ஹுசைனைப்போலவே சிறந்த கல்வியாளரான டாக்டர் முஹம்மத் ஹமீத் அன்சாரி, அன்னாரைப்போலவே துணைவேந்தராகவும் பணியாற்றியவர்.
இந்தியா-சவூதிஅரேபியா இடையே அரசியல் மற்றும் பொருளாதார தொடர்புகளை அன்சாரி தனது காலத்தில் மேம்படுத்தியிருந்தார்.
"ஒவ்வொரு இந்தியரும் டாக்டர் அன்சாரியின் புதிய பதவி குறித்து பெருமிப்படைவர். சவூதியில் தூதரக உயர் அதிகாரியாகவும், பின்னர் தூதராகவும் அவர் செயலாற்றிய காலங்களிலிருந்தே அவரை நன்கு அறிந்துள்ளேன். சவூதி அரேபிய நகரங்களில் இந்தியத்தூதரகப் பள்ளிக்கூடங்களை நிறுவியதில் டாக்டர் அன்சாரியும் அவர் துணைவியார் சல்மா அவர்களும் கொண்டிருந்த பங்கு அளப்பரியது" என்றார் இந்தியா ஃபாரம் அமைப்பின் பொதுச்செயலாளர் S.A. ஜெயசீலன்.
"நேர்மைக்கும், அர்ப்பணிப்புணர்வுக்கும் அவரோர் உதாரணம்" என்ற சாம் மாத்யூ, இராக்-குவைத் போர்க்காலத்தில், ஒரு தூதராகவும், சக இந்தியராகவும், டாக்டர் அன்சாரியின் உத்வேகமான செயலாற்றலைப் புகழ்ந்தார். "இந்திய நிதி அமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கை ரியாத்துக்கு வரவழைத்தவரும் டாக்டர் அன்சாரி" என்றார்.
சவூதி அரேபியாவின் பெரும்பாலான இந்தியர் அமைப்புகள் தமது பெருமிதத்தையும், டாக்டர் ஹமீத் அன்சாரிக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்காக ஐ.மு.கூட்டணிக்கு நன்றியையும் வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியா தவிர ஆஸ்திரேலியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் தூதராகப் பணியாற்றியுள்ளார்.
Posted by
வாசகன்
at
6:39 PM
0
comments
Sunday, July 22, 2007
சவூதி: எண்ணை கிணறு தீ விபத்தில் இந்தியர் பலி
சவுதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற 'அராம்கோ' நிறுவன எண்ணை கிணறு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இந்தியர் உள்பட 4 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர் ஒருவர். மற்ற 2 பேரும் பிலிப்பைன்சை சேர்ந்தவர்கள்.
மேலும் 6 இந்தியர்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
மக்கள் தொ.கா
மாலைமலர்
Posted by
வாசகன்
at
10:11 PM
1 comments
Sunday, July 8, 2007
எட்டு வயதில் தந்தையை பிரிந்து 23 வருடத்துக்குப்பின் கண்டுபிடித்த பெண்.
எட்டு வயதில் தந்தையைப் பிரிந்த பெண் 23 வருடங்களுக்குப்பிறகு தந்தையை துப்பறியும் நிறுவனம் உதவியுடன் கண்டு பிடித்து மகிழ்ந்தார்.
காஞ்சீபுரத்தை அடுத்த ஊரிகை அண்ணா நகரைச் சேர்ந்தவர் நஜிமா (வயது32) இவர் சவுதிஅரேபியாவில் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து வசதியான வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இவரது இளமை காலத்தில் தந்தை சகோதரிகளுடன் கஷ் டப்பட்டு வாழ்க்கை நடத்தினார். சென்னையில் பல வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து பிழைத்தார். கடைசியாக ஒரு பிராமணர் வீட்டில் வேலைக்கு சேர்ந்த நஜிமா அவர்கள் மூலம் சவுதிஅரேபியாவைச் சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்தார். 2குழந்தைகள் உள்ளனர். சவுதியிலேயே வசித்து வருகிறார்.
தற்போது நஜிமாவுக்கு 32வயதுஆகிறது. இவருக்கு நீண்ட நாட்களாக தந்தையையும், சகோதரிகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை. இதற்காக பிரார்த்தனை நடத்தினார். அது வீண்போகவில்லை. தந்தையை கண்டுபிடித்து விட்டார்.
சென்னையைச் சேர்ந்த சன் டிடெக்டிவ் நிறுவனம் பற்றி கேள்விப்பட்டு போன் மூலம் தந்தையை பற்றிய விவரங்களை தெரிவித்து தேடும் பணியில் ஈடுபட்டார். தந்தையின் பெயர் இப்ராகிம்செரீப், வாய் பேச முடியாத ஊமை என்று மட்டும் தெரியும். 2சகோதரிகள் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
ஊர் பெயர் காஞ்சீபுரம் அருகே உள்ள அண்ணாநகர் என்றும் கூறினார்.
இந்த தகவல்களை வைத்து துப்பறியும் நிறுவனம் நஜிமாவின் தந்தையை தேடும் பணியில் இறங்கியது. ஒரே வாரத்தில் அவரை தேடிகண்டு பிடித்து விட்டனர்.
தந்தை இப்ராகிம் செரீப் ஆற்காட்டில் உள்ள ஒரு ஓட் டலில் வேலை பார்த்து வந் தார். அங்கு துப்பறியும்நிறுவ னத்தினர் சென்று மகள் நஜிமா சவுதியில் இருப் பதாக தெரிவித்தனர்.இதை கேட்டு அவர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
இப்ராகிம் செரீப் முதலில் பீடிசுற்றும் தொழில் செய்து வந்தார். இவரதுமனைவி ரொக்காயா பீ இறந்து விட்டதால் 3 மகள்களுடன் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத் தினார்.
3 மகள்களும் வெவ்வேறு இடத்தில் வீட்டு வேலை செய்தனர். நஜிமாவுக்கு 8வயதான போது தந்தை சகோதரிகளை சந்திக்க முடி யாதபடி பிரிந்து விட்டார்.
முதலில் போலீஸ்காரர் ஒருவர் வீட்டிலும், தொடர்ந்து விமானப்படை அதிகாரி, முஸ்லிம் பிரமுகர் வீடுகளில் வேலை பார்த்தார். கடைசியாக சென்னையைச் சேர்ந்த பிரா மணர் ஒருவர் வீட்டில் வேலை பார்த்த நஜிமா அவர் மூலம் தொழில் அதிபரை மணந்து உயர்ந்து நிலையை அடைந்தார்.
மேலும் படிக்க...
Posted by
வாசகன்
at
12:14 AM
1 comments
Saturday, June 16, 2007
சவூதி: வாகனமோட்டிகள் அலைபேசிட தடை?
வாகனமோட்டிகள் கை பேசிகளைப் பயன்படுத்திட தடை விதித்துள்ள 50 நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவும் தன்னை இணைத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. சவூதி போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார். 'வாகனம் ஓட்டுவோர் தம் கவனத்தைக் குலைக்கும் எந்தச் செயலும் தடை விதிக்கப்படும்" என்றார் அவர். "அவற்றுள் உண்ணல், குடித்தலும் அடங்கும்".
ஒரு இணையதள கருத்துக்கணிப்பில் (!) 63 சத சவூதி பொதுமக்கள் இக்கருத்திற்கு ஆதரவளித்துள்ளனராம்.
"சவூதிகளுக்கு இது மிகவும் சிரமமாக அமையும்" என்றார் ஒரு கல்லூரிப் பேராசிரியர். "காவல் அதிகாரிகளே.. இதற்கு விதிவிலக்கில்லையே!.."
ஐரோப்பாவின் 25 நாடுகளில் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அரபு நாடுகளான பஹ்ரைன், ஜோர்டான், எகிப்து இதை ஏற்கனவே சட்டமாக்கியுள்ளன.
அரப் நியூஸ்
Posted by
வாசகன்
at
12:49 PM
0
comments
Friday, June 15, 2007
இணையதளம் மூலம் ஹஜ் யாத்திரை விண்ணப்பம்
ஹஜ் யாத்திரை பயணத்துக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.
2007-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான அச்சடிக்கப்பட்ட அறிவுரைகளுடன் ஹஜ் விண்ணப்பப் படிவங்கள் ரூ. 100 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பணக் கொடுப்பாணை, கேட்புக் காசோலை ஆகியவற்றை அளித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இத்தொகை விண்ணப்பங்களை அன்னியச் செலாவணித் தொகையுடன் சமர்ப்பிக்கும்போது சரி செய்யப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு என்ற பெயரில் அன்னியச் செலாவணி முன் பணம் ரூ. 10,700-உடன் இம்மாதம் 30-ம் தேதிக்குள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இணையதள முகவரி: www.hajjtn.org
தினமணி
Posted by
Boston Bala
at
11:47 PM
0
comments
Thursday, June 14, 2007
ஜெத்தா: தந்தை வன்புணர்ந்ததாகப் பொய்ப்புகார். மகள் காதலனுடன் கைது!
ஜெத்தா: பாகிஸ்தானைச் சேர்ந்த 21 வயது ஸர்னீ என்னும் இளம்பெண் கடந்த ஆண்டு ஜூனில் தனது தந்தை மீதே வன்புணர்வு குற்றம் சுமத்தியிருந்தார். பரபரப்பான இந்தக் குற்றச்சாட்டு உள்ளூர் நீதிமன்றத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இருதரப்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின், தன்னுடைய ஆண்நண்பர் காஷிஃப் என்பவரை மணக்க தந்தை தடை விதித்த காரணத்தால், இப்படியொரு அபாண்டக் குற்றச்சாட்டை வீசியதாக இளம்பெண் ஸர்னீ ஒத்துக்கொண்டுள்ளார். தன் 32 வயது ஆண்நண்பரின் தூண்டுதலே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.காஷிஃப் அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக அவர் கூறினார்.
முன்னதாக, காஷிஃப் என்கிற அந்த ஆண்நண்பர், சமீபத்தில் தன் மகளை தன் வீட்டிலிருந்து கடத்திச்சென்றதாக 40 வயது தந்தை தெரிவித்துள்ளார்.
விசாரணைகளுக்குப்பின், இளம்பெண் ஸர்னீக்கு எட்டுமாதங்களூம், அவருடைய ஆண்நண்பர் காஷிஃப்புக்கு ஒரு வருடமும் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Posted by
வாசகன்
at
3:31 PM
0
comments
Wednesday, June 13, 2007
சவூதி: உடல்திறன்வேண்டுவோர் உதவித்தொகை 812 மில்லியன் ரியால்.
சவூதி அரேபியாவில், குடிமக்களில் உடல்திறன் மேம்பட வேண்டியோருக்கான உதவித்தொகையாக 812 மில்லியன் சவுதி ரியால்கள் வழங்கப்பட்டன. இதனால் 1,30,000 பேர் பலனடைவர். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 486 மில்லியன் ரியால்களுக்கு இது 326 மில்லியன் இவ்வருடம் அதிகமாகும்.
இவர்களுக்கான வருடாந்திர உதவித்தொகை குடும்பத்தைப் பொறுத்து 10,000 ரியாலிலிருந்து 2000 ரியால்கள் வரை வேறுபடுகின்றன.
இந்த உதவித்தொகை பயனர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டதாக சவூதி நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அரப் நியூஸ்
Posted by
வாசகன்
at
6:41 PM
2
comments
Tuesday, June 12, 2007
சவூதி: பிலிப்பைனியருக்கு STC விலைச்சலுகை!
ஜூன் 12 ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் சுதந்திர தினம் என்பதை முன்னிட்டு சவூதி அரேபிய தொலை தொடர்புத்துறை வாழ்த்துக்களுடன் விசேட விலைச்சலுகையினை அறிவித்துள்ளது.
அதன்படி ஃபிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இன்று நள்ளிரவு வரையிலான 24 மணி நேரத்துக்கு தொலைபேசி கட்டணங்களில் 50 சதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தொலைதொடர்புத்துறை உயரதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார்.
Posted by
வாசகன்
at
11:16 AM
0
comments
Saturday, June 9, 2007
சவூதி: 60 நாட்கள் சுற்றுலா விசாக்கள் அனுமதி!
சுற்றுலா வழியாக அந்நியச்செலாவணியைப் பெருக்கும் திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலாக்களுக்கான குழு நுழைமதி(Group Visa)களை வழங்கிட சவூதி அரசு முன் வந்துள்ளது.
இத்தகவலை சுற்றுலாத்துறை உயர் ஆணையத்தின் தலைவர் அஹ்மத் அல் ஈசா தெரிவித்துள்ளார்.
இவை ஹஜ் உம்ரா போன்ற புனிதப்பயணங்களுக்கு அப்பாலும் வழங்கப்படும் சுற்றுலா நுழைமதிகளாகும்.குறைந்தபட்சம் சுற்றுலாக்குழுவினர் ஐந்துபேரேனும் இருக்கவேண்டும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மொத்த வளர்ச்சி விகிதத்தில் சுற்றுலாத்துறை 6% சதவீதம் (55 பில்லியன் ரியால்கள்) பங்களித்துவருவதும், இவ்வளவை அதிகரிக்க அரசு தீர்மானித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும்...
Posted by
வாசகன்
at
3:15 PM
0
comments
Thursday, June 7, 2007
சவூதி: மேலும் 750 இந்தியர்கள் வெளியேற்றம்!
அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்த 1000 இந்தியர்களை கடந்த வாரம் சவூதி அரேபிய அரசு வெளியேற்றியிருந்தது. அவ்வகையில் மேலும் 750 இந்தியர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர் என்று தெரிகிறது.
உம்ரா,ஹஜ் போன்ற புனிதப்பயண நுழைமதியில் வந்து அக்காலகட்டத்திற்கு மேலும் அனுமதியின்றி தங்கிய வெளிநாட்டவர்கள் வெளியேற ஏப்ரல் 2 தொடங்கி ஜூன் 1 வரை பொதுமன்னிப்பு காலத்தை சவூதி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அச்சமயம் 1000 இந்தியர்கள் வரை வெளியேற்றப்பட்டிருந்தனர். மேலும் 750 இந்தியர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று ஜெத்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்பெசல் உம்ரா ஓவர்ஸ்டேயர்ஸ் செல் ஒன்றைத் தொடங்கி 24 மணி நேர உதவித் தொலைபேசி சேவையையும் அறிவித்துள்ள துணை தூதரகம், இந்தியர்,உம்ரா விசா என்பதற்கான சான்றாதாரங்களுடனும் பயண ஏற்பாடுகளுடனும் வருவோர் இம்மையத்தை தொடர்பு கொண்டால், சவூதி அதிகாரிகளுடன் இணைந்து அவர்களை நாட்டுக்கு அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியத் துணை தூதரக ஸ்தானிகர் அவுசாஃப் சயீத் இத்தகவலை பி.டி.ஐ-க்கு அளித்துள்ளார்.
Posted by
வாசகன்
at
7:34 PM
0
comments
சவூதி: வெளிநாட்டவருக்கான புதிய முதலீட்டு வழிகள்.
தனது நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கான புதிய முதலீட்டு வழிகளைத் திறப்பது பற்றி சவூதி அரேபிய அரசு ஆலோசித்து வருகிறது.
பத்திரிக்கை குறிப்புகளின் படி, இந்நாட்டில் பணிபுரியும் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வருடம் ஒன்றுக்கு சவூதி ரியால் 100 பில்லியன் ($26.6 பில்லியன்) என்ற அளவில் தத்தம் நாட்டுக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
உழைத்து சம்பாதிக்கிற பணத்தை விருப்பப்படி செய்யும் உரிமையை மதித்தும், பரஸ்பர பயன்களை கணக்கில் கொண்டும், முதலீட்டு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று சவூதி அரேபிய வணிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்கள் சவூதி பங்குச்சந்தையில் ஈடுபடலாம் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவூதியிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட தொகை பத்து சதவீதம் அளவு குறைக்கப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
"தேவையான வாய்ப்பும், ஊக்கமும் அளிக்கப்பட்டால், வெளிநாட்டவர்கள் மகிழ்ச்சியுடன் சவூதியில் முதலீடு செய்வர்" என்று ஏர் இந்தியாவின் சவூதி அரேபிய மக்கள் தொடர்பாளர் விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
Posted by
வாசகன்
at
12:20 PM
0
comments
b r e a k i n g n e w s...
