.

Friday, March 16, 2007

கிப்ஸ் தொடர்ந்து 6 சிக்ஸ்கள் அடித்து சாதனை

இன்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ் தொடர்ந்து ஆறு சிக்ஸ்கள் அடித்து உலகசாதனை படைத்தார்!

மேலதிக விவரங்களுக்கு

இங்கிலாந்து 209/7

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடந்த போட்டியில் இங்கிலாந்து 209 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்கம் முதலே திணறிய இங்கிலாந்து அணியில் வாகன்,பீட்டர்ஸன் மற்றும் காலிங்வுட் ஆகியோர் மட்டுமே சற்று தாக்கு பிடித்து ஆடினர். பீட்டர்ஸன் 60 ரன்கள் அடித்தார். 133/3 என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அடுத்த ஐந்து ரன்களில் 4 விக்கெடுகளை இழந்து 138/7 என்று தடுமாறியது. பின்பு ஜோடி சேர்ந்த நிக்ஸனும், ப்ளங்கெட்டும் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நியூசிலாந்தின் பாண்ட்,ஃப்ராங்ளின் மற்றும் ஸ்டைரிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

210 ரன்களை அடித்து வாகை சூடுமா நியூஸிலாந்து?

விரிவான ஸ்கோர்கார்ட்

துருவ பகுதியில் உயிர்களின் பரிணாமம் வேகம் அதிகம்

Drought-Ridden Lands
A male Masked Tityra (Tityra semifasciata), seen here at a nesting hole, is one of the tropical species included in a new study of sister species. Its sister species, the Black-Tailed Tityra, diverged from it about 4 million years ago.


பொதுவாக நிலநடுக் கோட்டை ஒட்டிய பகுதியில்தான் உயிர்களின் பரிணாமம் வேகம் அதிகமாக இருக்கும் என நம்பப்பட்டுவந்தது. ஆனால் அதன் வேகம் துருவ பகுதியில் அதிகமாக இருக்கிறது என இப்பொழுது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது பரிணாம வேகம் நிலநடுக்கோட்டு பகுதியில் 3 அல்லது 4 மில்லியன் ஆண்டுகள் இருந்தால் அதே துருவ பகுதியில் 1 மில்லியன் ஆண்டுகளே இருக்கும்.

கனடாவில் பரிணாம வேகம் அதிகம். அமேசானில் குறைவு.


மேல் விபரங்களுக்கு இங்கே செல்லுங்க..Discovery News

பக்கிஸ்தானில் GEO TV அலுவலகத்தில் போலீஸ் ரெய்ட்

இஸ்லாமபாத்தில் ஜியோ டி.வியின் அலுவலகத்தில் போலிஸ் திடீரெனப் புகுந்து அங்குள்ளவர்களைத் தாக்கியுள்ளனர்.

பாக்கிஸ்தானின் உச்சநீதிமன்ற தலமை நீதிபதியை பதவிநீக்கம் செய்ததன் எதிரொலியாக அங்கு முஷரப்புக்கு எதிராக போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்களை அடக்கும்விதமாக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன(Times of India).

Pak police barge into Geo TV office

Police raid Geo News office in Islamabad

பின்னூட்டத்தில் செய்தி தந்த அனானிக்கு நன்றி.

ராஜ் டிவி பங்கு ரூ.275இல் விற்பனை துவக்கம்

ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க், இன்று மும்பை பங்கு சந்தையில் தன் பங்குகளின் விற்பனையைத் துவக்கியது. தன் முதல் பொதுவிற்பனை விலையை விட 7% அதிக விலையில் ரூ.275இல் ஆரம்பித்தது. கடைசியாக ரூ.227.90க்கு விற்றுக் கொண்டிருந்ததாக இந்த The Hindu News Update Service செய்தி கூறுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அரசு பாதுகாப்பு

நீதிமன்ற வளாகத்தில் உணர்ச்சிவயப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி திரு ஏ.ஆர் இலட்சுமணன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கூம் முழு பாதுகாப்பு அளிக்கப் படும் என மாநில அவையில் உள்துறை இணையமைச்சர் எஸ் இரகுபதி கூறினார்.தலைமை நீதிபதியின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அந்த அறிக்கை வந்தவுடன் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கூறினார்.

இது பற்றிய The Hindu News Update Service

சற்றுமுன்னில் வந்த முந்தைய செய்தி

மதுவிலக்கு சாத்தியமில்லை ராமதாஸூக்கு கருணாநிதி சூசக பதில்

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும் மதுவிலக்கு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இதற்கு சூசகமாகப் பதில் அளித்து முதல்வர் வெளியிட்டள்ள அறிக்கை -

டாஸ்மாக் மொத்த கொள்முதல் வியாபாரம் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டாஸ்மாக் சில்லரை கடைகள், பார் எல்லாம் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.

ஆனால் அப்போது அதற்கு அதிகமாக எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் மதுவிலக்கு கொள்கை பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள்.

மேலும் அவர் -

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு உடனடியாக அரசிதழில் வெளியிட சட்டப்படி சாத்தியமில்லை

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தவதற்கு சட்டப்படி சாத்தியமில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி தெளிவுபடுத்தியுள்ளார்.

அதே சமயம் தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகும் முடிவில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றும் அவர் சுட்டுக் காட்டியுள்ளார்.

மேலும்

வருமானவரி வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக செலுத்துவதற்கு வசதியாக, வரியை வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

வருமான வரி செலுத்த அனுமதிக்கபட்டுள்ள வங்கிகள் விபரம்....

மைக்ரோசாஃப்ட்டின் விர்சுவல் பிசி 2007

மைக்ரோசாஃஃப்டின் இந்திய மேம்பாட்டுமையம் (Microsoft India Development Center) ஒரே கணினியில் வெவ்வேறு இயங்குதளங்கள் ஒரே சமயத்தில் இயங்கக் கூடிய 'மாயக் கணினி' (Virtual PC) 2007ஐ வடிவமைத்திருக்கின்றனர்.
செய்தி

சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து

சென்னை துறை முகத்திலிருந்து அமெரிக் காவுக்கு நேரடியாக கண்டெய்னர் களை ஏற்றி செல்லும் கப்பல் போக்கு வரத்து இன்று தொடங்கியது. அமெரிக் காவிலிருந்து வந்த பிரம்மாண் டமான சரக்கு கப்பல் இன்று காலை சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தது

இவ்வளவு பெரிய கப்பல். சென்னை துறைமுகத்துக்கு வருவது இதுவே முதல்முறை. இந்த கப்பல் 294 மீட்டர் நீளமுள்ளது. இதில் 5100 கண்டெய்னர்களை ஏற்றி செல்லலாம். இந்த கப்பலின் எடை 55000 டன் இவ்வளவு பெரிய கப்பலை சென்னை துறைமுகத்தில் முதல் முறையாக கையாள்கிறோம். இன்று இரண்டாயிரம் கண் டெய்னர்கள் இந்த கப்பலி லிருந்து இறக்கப்பட்டன. 2000 கண்டெய்னர்கள் ஏற்றப்பட்டன. இதுவரை சென்னையிலிருந்து அமெரிக் காவுக்கு கண்டெய்னர்கள் கொழும்பு துறை முகத்துக்கு கொண்டு சென்று அங்கிருந்து பெரிய கப்பலில் ஏற்றி அனுப்பப்படும். இனி அந்த பிரச்சினை இல்லை அமெரிக்காவுக்கு நேரிடையாக கண்டெய்னர்களை ஏற்றி செல்ல முடியும்.

source; மாலைமலர்

மிரட்டல்: முலாயம் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்.

முலாயம்சிங்யாதவ் மனு மீதான விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி எ.ஆர்.லட்சுமணன் அறிவிப்பு

புதுடில்லி: முலாயம்சிங்யாதவ் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது. இதற்கு, சி.பி.ஐ., மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் தனது வழக்கை ஐகோர்ட் நீதிபதி கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறி முலாயம்சிங்யாதவ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதி எ.ஆர்.லட்சுமணன் விசாரிப்பதாக இருந்தது. இந்நிலையில், தனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், எனவே தான் இந்த மனு மீதான விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாகவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி எ.ஆர்.லட்சுமணன் அறிவித்தார். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

source: தினமலர்

வங்காள பந்த்

காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் விடுத்திருந்த கதவடைப்பு கோரிக்கையால் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.


BBC NEWS |செய்தி

ஐசிசி உலகக் கோப்பை - நேற்றைய ஆட்டங்கள்


பெர்முடா: 78 ( 24.4 ஓவரில்)
ஸ்ரீலங்கா: 321-6 ( 50.0 ஓவரில்)
ஸ்ரீலங்கா பெர்முடாவை 243 ரன் வித்தியாசத்தில் வென்றது

ஸ்கோர் விவரம் ஆட்டவிவரம்

ஐயர்லாந்து: 221-9 ( 50.0 ஓவரில்)
சிம்பாப்வே: 221 ( 50.0 ஓவரில்)

ஐயர்லாந்தும் சிம்பாப்வேயும் ஆட்டம் சமன்
ஸ்கோர் விவரம் ஆட்ட விவரம்

ஷானாஸ் ஹூஸேனின் 'ஸ்டார்ஸ்டிரக்ஸ்'

ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் கடைகள் அமெரிக்காவின் மூலை முடுக்கெல்லாம் காணப்படும். கிட்டத்தட்ட ஒத்த பெயர் கொண்ட ஸ்டார்ஸ்டிரக்ஸ் காபி கடைகளை ஷானாஸ் ஹுசேன் திறக்க உள்ளார்.

The Hindu: Starbucks readies India foray; Upset about Starstrucks

மாருதி கார்களின் விலை உயர்வு

மாருதி உத்யோக் நிறுவனம் தனது அனைத்து வகையான கார்களின் விலையையும் ரூ.1,017 வரையில் உயர்த்தியுள்ளது.

இதனை இன்று அறிவித்துள்ள அந்நிறுவனம், 2007-08-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிறுவனங்கள் கல்விக்காக செலுத்தும் வரியில் ஒரு சதவிகிதம் உயர்த்தப்படுவதாக அறிவித்ததால், இந்த விலையேற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஸ்விஃப்ட் மாடல் - Rs 4,68,657
மாருதி 800 - Rs 1,93,914

Yahoo - Tamil

சூப்பர்ஹீரோ ஆகிறார் சச்சின்

மும்பையிலிருந்து வெளியிடப்படும் காமிக் பத்திரிகையொன்று சச்சின் டெண்டுல்கரை 'சச்சின் தி மாஸ்டர் ப்ளாஸ்டர்' (Sachin the Master Blaster) எனும் சூப்பர் ஹீரோவாக வைத்து புது காமிக் புத்தகங்களை வெளியிட உள்ளது.


Master blaster goes comic
Tendulkar to have a "superhero avatar" in Virgin Comics
Sachin as comic superhero
"Sachin Tendulkar is well recognised as an achiever globally, and it works best to have him as the hero for our comic, gaming and animation series," said Suresh Seetharaman, president of Virgin Comics and Virgin Animation.

"As we continue to expand our animation facilities in Mumbai and London, we are proud to partner with Virgin Comics to create this exciting new character and story that will surely live beyond the pages of the comic book," said Arif Morbiwalla, founder of Total Multimedia.

விண்வெளி சுற்றுலா போகும் முதல் இந்தியர்

கேரளாவைச் சார்ந்த சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா என்பவர் இந்தியாவின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணியாகப் போகிறார்(Space Tourist). இதற்கு இவர் செலவிடும் 1கோடி ரூபாயில் அதிகத்தை புத்தகம் எழுதி சம்பாதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை சார்ந்த ஊடகவியளாலரான இவர் கடந்த 10 வருடங்களில் ஏறத்தாழ 50 நாடுகலைச் சுற்றிவந்துள்ளார்.

Keralite to be first Indian space tourist
First Indian space tourist ready to take off
"The whole process took him two years. The contract was signed on February 26 this year. The flight charges are roughly around Rs 90 lakh and are likely to be scaled down further," he said.

-o❢o-

b r e a k i n g   n e w s...