.

Wednesday, July 11, 2007

சிறுநீரகம் பாதித்த சிறுமியை ஆற்றில் வீசிய தந்தை.

மிகவும் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் பற்றி தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஆறுவயது மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் விரக்தி அடைந்த தந்தை, மகளை ஆற்று நீருக்குள் வீசி எறிந்து விட்டு தப்பி ஓடினார். வெள்ளத்தில் தத்தளித்த சிறுமியை மீனவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்தனர்.

உ.பி., ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள தேவ்காளி என்ற குக்கிராமத்தில் வசிப்பவர் பக்கேரு சோன்கர். இவருக்கு ஆறு குழந்தைகள். கிராமத்தில் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது கடைசி குழந்தையான ஆறு வயது சரிதாவிற்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது. சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த வாரம் சரிதாவை சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், "சரிதாவை குணப்படுத்த ரூ.மூன்று லட்சம் செலவாகும். உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்' என சோன்கரிடம் கூறினார். ஏற்கனவே கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தி வந்த சோன்கர், இதனால் அதிர்ச்சி அடைந்தார். "யாரிடம் போய் பணம் கேட்பது, நமக்கு உதவ ஒருவரும் இல்லையே' என விரக்தி அடைந்த அவர், சரிதாவை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் ஜான்பூர் திரும்பினார். சரிதாவுடன் அங்கு ஓடும் கோமதி ஆற்றுக்கு சென்றார். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இருந்து, கரை புரண்டு ஓடும் ஆற்று நீருக்குள் சரிதாவை வீசி எறிந்து விட்டு திரும்பி பார்க்காமல் நடையை கட்டினார்.

அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், ஒரு சிறுமி நீருக்குள் தத்தளித்துக் கொண்டு இருப்பதையும், அந்த சிறுமி, "அப்பா காப்பாற்றுங்கள், அப்பா கப்பாற்றுங்கள்' என உதவிக் குரல் எழுப்புவதையும் கண்டனர். உடனடியாக சரிதாவை தண்ணீரில் இருந்து மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுபற்றி ஜான்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி யோகேந்திர சுக்லா கூறுகையில்,""சரிதாவை ஆற்றுக்குள் வீசிய சோன்கரை தேடி வருகிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தற்போது எங்கள் கவலை எல்லாம் சரிதாவைப் பற்றித் தான். அந்த குழந்தையை எப்படியாவது காப்பற்ற வேண்டும்,''என்றார்.நினைவு திரும்பிய சரிதா, ""எங்க அப்பா ஏன் என்னையை ஆற்றுக்குள் துõக்கிப் போட்டார்? உங்களுக்கு தெரியுமா?'' என கள்ளம் கபடம் அறியாத மழலை மொழியில் கேட்டது, அங்கிருந்த டாக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் மனதை உலுக்கி விட்டது.

நேபாளம்: மன்னருக்கான ஊதியம் நிறுத்தம்.

நேபாளத்தில் அரசர், அரசி, பட்டத்து இளவரசர்/வரசி, இராஜமாதா ஆகியோருக்கான வருடாந்திர படி (Allowance) வரும் நிதிநிலை அறிக்கை முதல் நிறுத்தப்படும் என்று இந்தச்செய்தி தெரிவிக்கிறது. இது மன்னர் குடும்பத்தினருக்கு மேலும் ஒரு பின்னடைவாகும். எனினும் இதில் அரண்மனையின் 700 ஊழியர்களுக்கான அத்யாவசிய செலவுத்தொகை அடங்காது.

கடந்த ஆண்டு சுமார் 500,000 அமெரிக்க டாலர்கள் இவர்களுக்கான ஊதியமாக வழங்கப்பட்டிருந்தன.

சினிமா இரசிகர்கள்: இராமதாஸ் கடும் தாக்கு

இன்றைய தினமலர் செய்தி:

"சினிமா ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பவன், "நான் ஒரு முட்டாள்' என்று தனது நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டதாகத்தான் கருதுவேன்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். திருவண்ணாமலையில் ஒரு விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் சினிமாவை பற்றி சில நேரம் நான் மட்டுமே கடுமையான விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது. சினிமாவே தேவையில்லை. இளைஞர்களை, சமுதாயத்தை, தமிழை சினிமா சீரழிக்கிறது. சினிமாவில் யதார்த்தம் கிடையாது. சினிமாவில் "மசாலா' என்று பல்வேறு பார்முலா சொல்கிறார்கள். சினிமாவில் ஒருவர் 100 பேரை அடிப்பார். எந்த ஊரிலும் சண்டையின் போது ஒரே ஆள் 100 பேரை அடிப்பது கிடையாது. அதேபோல், கற்பழிப்பு காட்சிகளை சினிமாவில் விலாவாரியாக காண்பிக்கின்றனர். நடைமுறையில் கற்பழிப்பு சம்பவம் நடந்தாலே பலரும் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். தற்போது, ஒரு சிலர்தான் கற்பழிப்பு குறித்து போலீசில் புகார் கொடுக்க முன்வருகின்றனர்.

இப்போது சினிமாவில் நாகரீகம் என்ற பெயரில் கலாசார சீரழிவு நடக்கிறது. இதனை ஆதரிக்க அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொண்டு சிலர் உலா வருகின்றனர். அத்தகைய நபர்கள் உண்மையிலேயே அறிவுஜீவிகள் கிடையாது. இது வருத்தம் அளிக்கிறது. சினிமா ரசிகர் மன்றங்களே கூடாது என்று நான் தொடர்ந்து பலமுறை சொல்லி வருகிறேன். ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பவன், "நான் ஒரு முட்டாள்' என்று தனது நெற்றியில் எழுதி ஒட்டிக் கொண்டதாகதான் நான் கருதுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தோனேசியா: படகு மூழ்கியது 45 பேர் கதி என்ன?

இந்தோனேஷியாவில் பயணிகள் படகில் பயணம் செய்த 45 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்தோனேஷியாவின் கிழக்கு கடற்பகுதியில் பயணிகள் படகு ஒன்று 70 பேருடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் படகு கடலில் மூழ்கியதில் அனைவரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். ஆனால், கடற்படையினரால் 23 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மேலும், இரு சிறுவர்களின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக எஞ்சிய 45 பேரை தேடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தினமலர் கடைசி செய்திகள்

திருப்பூரில் வைரமுத்து பிறந்த நாள் விழா: கவிஞர் தமிழச்சிக்கு விருது

ஜுலை 13 கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் ஆகும். இந்த நாள் வெற்றித் தமிழர் பேரவை அமைப்பின் சார்பில் கவிஞர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விழா 13-ந் தேதி மாலை 6 மணிக்கு திருப்பூரில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கவிஞர் வைரமுத்து தன் பிறந்த நாளில் கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குகிறார். இந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த கவிஞர் தமிழச்சிக்கு ரூ.10 ஆயிரமும், பட்டயமும் கவிஞர் வைரமுத்து வழங்குகிறார்.

தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் வாழ்த்துரை வழங்குகிறார். கவிஞர் வைரமுத்துவின் புகழ் பெற்ற படைப்புகளான கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் என்ற 2 படைப்புகளின் மையக் கருத்துக்களை அடிப்படை யாகக் கொண்ட சிறப்புப் பட்டி மன்றம் நடக்கிறது.

வெற்றித் தமிழர் பேர வையின் திருப்பூர் நகரத் தலைவர் ஜீவானந்தம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். கணக்காயர் லோக நாதன் வரவேற்று பேசுகிறார். சிற்பி ரகுநாதன், நன்றியுரையாற்றுகிறார். விழா நிகழ்ச்சிகளை கனகலட்சுமி தொகுத்து வழங்குகிறார். விழாவில் கலந்து கொள்ள கவிஞர் வைரமுத்து நாளை மறுநாள் காலை விமானத்தில் கோவை சென்று திருப்பூர் செல்கிறார்.

மாலைமலர்

மீண்டும் அமைதிப்பேச்சு: நார்வே தூதர் இலங்கை விரைந்தார்

இலங்கையில் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்குமிடையை கடும் போர் நிகழ்ந்து வரும் நிலையில் இலங்கையின், கிழக்கு மற்றும் வடக்கு பகுதகளில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது இலங்கை இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் , நார்வே அமைதி தூதர் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தினருக்குமிடையை பேச்சுவார்த்தை நடத்த கிளிநொச்சி சென்றுள்ளார்.

இச்செய்தி: இன்றைய தினமலர்

ஒவ்வொரு துறை வாரியாக கருணாநிதி நேரடி ஆய்வு: அமைச்சர்களுடன் ஆலோசனை

முதல்-அமைச்சர் கருணாநிதி ஒவ்வொரு துறையிலும் நடந்துள்ள பணிகள், நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்கிறார்.

இன்று மாலை 4 மணிக்கு நெடுஞ்சாலைத்துறை பணி கள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி ஆய்வு செய்கிறார்.அமைச்சர் வெள்ளைக் கோவில் சாமிநாதன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்துகிறார்.

இதில் சட்டமன்றத்தில் அறிவிக் கப்பட்ட அறிவிப்புகள் எவ்வாறு செயல் வடிவம் பெற்றுள்ளன. மத்திய மாநில நிதி ஒதுக்கீடு எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த புதிய பணிகளை மேற் கொள்வது, ஏற்கனவே நடந்து வரும் பணிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து கேட்டறிகிறார். மேல் நடவடிக்கை எடுக்க ஆலோசனையும் வழங்குகிறார்.

இதுபோல

  • நாளை பொதுப் பணித்துறையிலும்,
  • 13-ம் தேதி வீட்டு வசதி துறையிலும்,
  • 14-ந் தேதி உணவு, விவசாயம்,
  • 15-ந் தேதி ஆதிதிராவிடர் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் நலத்துறை
  • 16-ந் தேதி சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளில்
  • 17-ந் தேதி நகராட்சி, உள்ளாட்சித்துறை பணிகள் பற்றியும்,
  • 18-ந் தேதி சுகாதாரத்துறை பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும்

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மாலைமலர்

இந்தியா: 2008ல் சந்திரனுக்கு விண்கலம்.

இந்தியா வரும் 2008ம் ஆண்டு சந்திரனுக்கு விண்கலம் (ராக்கெட்) அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். விண்கலம் (ராக்கெட்) அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருவதாகவும் மாதவன் நாயர் கூறினார்.

இச்செய்தி இன்றைய தினமலரிலிருந்து

பட்டமளிப்பு விழா: சத்யராஜ், தேவாவுக்கு டாக்டர் பட்டம்

நடிகர் சத்யராஜ இசையமைப் பாளர் தேவா ஆகியோருக்கு சத்யபாமா பல்கலை கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங் கப்படுகிறது. இதற்கான விழா பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையதலைவர் டாக்டர் மாதவன்நாயர் பட் டங்களை வழங்குகிறார். பல்கலைகழக வேந்தர் ஜேப்பியார் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். டாக்டர் மயில்வாகனன்நடராஜன், எம்.பி. நிர்மல் ஆகியோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படு கிறது.

IndiaGlitz - Doctorate for Sathyaraj, Deva - Tamil Movie News
DNA - After Hrs - Tamil hero Satyaraj awarded lifetime contribution - Daily News & Analysis

கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விலக்கு: கருணாநிதி அதிரடி!

தமிழகத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தலையும், நடக்கப் போகிற கூட்டுறவு சங்கத் தேர்தல்களையும் அடியோடு விலக்கம் (ரத்து) செய்து முதல்வர் கருணாநிதி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

கூட்டுறவு சங்கத் தேர்தலால் கூட்டணியில் பொருமல் ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார். கூட்டுறவு நோக்கத்துக்கு மாறாக தேர்தல் நடந்ததாக குறிப்பிட்டுள்ள முதல்வர், சட்டசபை கட்சிகளின் தலைவர்களை கலந்து ஆலோசித்து புதிய வழிமுறைகளை வகுத்து தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2001ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட்டு, தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அவை கொண்டு வரப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி முடியும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, கடந்த மாதம் 8ம் தேதியன்று தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் பணிகள் துவங்கின. ஐந்து கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் இம்மாதம் 7ம் தேதி துவங்கியது. இந்த தேர்தலை அ.தி.மு.க., ம.தி.மு.க., போன்ற எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், ஆளுங்கட்சியினரே அனைத்து பதவிகளையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். ஆளும் கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு கூட பதவிகளை விட்டுக் கொடுக்க மறுத்து, பல இடங்களில் மற்ற கட்சியினர் மனு தாக்கல் கூட செய்ய விடாமல் தடுத்தனர்.இதனால், கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தியடைந்தனர்.

பா.ம.க., தலைவர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் செயலர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் நல்லகண்ணு ஆகியோர் ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்தனர். பலத்த பாதிப்புக்கு ஆளான காங்கிரசார் "வழக்கம் போல்' அமைதி காத்தனர். ஆனால், பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் அதிருப்தியால் கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலை உருவானது. ஆளுங்கட்சியினர் அராஜகம் மூலம் கூட்டுறவு அமைப்புகளை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல் கட்ட தேர்தலில் 25 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நீக்குவதாக செய்வதாக கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி முன்னதாக அறிவித்தார். இப்போது முழுமையாக நீக்கம் செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.


நன்றி: தினமலர்

கிறிஸ்தவர்கள் உதவி- ஏழைகள் நீண்ட வரிசை- படம்


பாளையங்கோட்டையில் இன்று மாம்பழச்சங்க விழா நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் வழங்கும் அரிசி மற்றும் காணிக்கைகளை பெறுவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து மிக நீண்ட வரிசையில் காத்திருந்த ஏழைகள்.

பிபாசா பாசு ரொனால்டோ முத்தம்: சர்ச்சை


ஷில்பா ஷெட்டியின் முத்தத்திற்கு எழுந்த சர்ச்சை அடங்கும் முன் , லிஸ்பனில் நடந்த புதிய ஏழு உலக அதிசயங்கள் அறிவிப்பு நிகழ்ச்சிக்குப் பின் நடந்த விருந்தில் நடிகை பிபாசா பாசு கால்பந்து ஆட்டக்காரர் ரொனால்டோவுடன் முத்தம் கொடுத்தபடி எடுக்கப்பட்ட படங்கள் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அந்தப் படங்களில் இருப்பது தானே என்றும் இருப்பினும் அவை ஒரு சம்பந்தமில்லாத பொழுதில் எடுக்கப்பட்டவை என்றும் அவர் கூறினார்.

அவர் சக நடிகர் ஜான் அப்ரஹாமை காதலிக்கும் நேரத்தில் இந்த சர்ச்சை அவரது சொந்த வாழ்வில் என்ன பிரச்சினைகளை உருவாக்கப் போகிறதோ ?
IBNLive.com > Bipasha gets up, close and 'smoochy' with Ronaldo : bipasha basu, cristiano ronaldo

மேட்டூர் அணை ஜூலை 25 திறப்பு

காவேரி டெல்ட்டா பகுதி சம்பா பயிர் விவசாயத்தை முன்னிட்டு தமிழக அரசு மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து ஜூலை 25 முதல் தண்ணீர் திறந்துவிட இன்று முடிவு செய்துள்ளது.

Mettur Dam water to be released from July 25-India-The Times of India

மட்டக்களப்பு-தொப்பிகலா பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.

விரைகிறார் நார்வே தூதர்
இலங்கையின் கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் உள்ள முக்கியப் பகுதியான தொப்பிகலாவை மீட்டு விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அப்பகுதிக்குள் ராணுவம் வெகு தூரத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிதான் தொப்பிகலா. அடர்ந்த வனப் பகுதியான தொப்பிகலாவை விடுதலைப்புலிகள் தங்கம் வசம் வைத்திருந்தனர். இந்தப் பகுதியில் மட்டுமே புலிகள் ஆதிக்கம் இருந்ததால் இதை மீட்க கடந்த சில வாரங்களாக இலங்கை ராணுவம் கடுமையாக முயன்று வந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு தொப்பிகலா பகுதியை ராணுவம் கைப்பற்றியதாக இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும்...

ஓடும் இரயிலில் மானபங்க முயற்சி: RPF DIGக்கு வலைவீச்சு

ஜூலை 8 அன்று சம்பூர்ண கிராந்தி விரைவுவண்டியில் குளிரூட்டப்பட்ட முதல்வகுப்பில் பயணித்த வந்தனா எனற பீஹார் மாநில இ.ஆ.ப அதிகாரியையும் அவரது சகோதரியும்கௌதம் சீமா என்ற இ.ஆ.ப அதிகாரியின் மனைவியுமான சுஜாதா என்பவரிடமும் குடிபோதையில் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக பி ஜே இராவல் என்ற இரயில்வே பாதுகாப்புப் படையின் டிஐஜி மீது முதல் குற்ற பத்திரிகை பதியப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை கண்கணிப்பாளர் அஜிதாப் குமார் கூறினார். இரு உறுப்பினர்களைக் கொண்ட துறைசார்ந்த விசாரணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டு தனது அறிக்கையை ஒருவாரத்திற்குள் சமர்ப்பிக்கும். முன்னர் இரயில்வே அமைச்சர் லாலு 'தன்னிடம் இர.பா.படை தலமைக்காவலர் இதுபோல நடக்கவில்லை ' என்று கூறியதை யடுத்து எழுந்த சர்ச்சையின் பின்னணியில் இந்த விசாரனைக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

The Hindu News Update Service

கிளாஸ்கோ எதிரொலி : பெங்களூரு ஐ.டி கம்பனிகள் கலக்கம்

கிளாஸ்கோ நகர தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கஃபீல் அஹ்மது பெங்களூருவில் சிலகாலம் தகவல்தொழிற்நுட்ப நிறுவனமொன்றில் பணியாற்றிய செய்தி வெளியானதை அடுத்து பன்னாட்டு நிறுவனங்களின்் தகவல்களின் பாதுகாப்புக் குறித்து கலக்கம் எழுந்துள்ளது. சரியான பாதுகாப்பு கருவிகளையும் நடத்தைகளையும் கொண்டிராத நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கஃபீல் திசம்பர் 2005 இலிருந்து ஆகஸ்ட் 2006வரை இன்ஃபோடெக் எந்தர்பிரைசஸ் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். ்இந்தஇந்த இந்த நிறுவனம் விமான தயாரிப்புத் துறையில் பல பன்னாட்டு வாடிக்கையாளர்களுக்காக பெங்களூருவிலும் ஹைதராபாத்திலும் அவர்களின் வடிவமைப்பு வேலையை செய்து கொடுக்கிறது. அந்த நிறுவனத்தில் விமானங்களை வெடிவைத்து தகர்க்கும் சதிகாரர்களுடன் சம்பந்தப்பட்டுள்ள கஃபீல் வேலை பார்த்திருப்பது வெளிநாட்டு நிறுவனங்களின் இரகசியம் காக்கவேண்டிய வேலைகளை இந்தியாவிற்கு கொடுப்பது பற்றி பல விவாதங்களை எழுப்பவிருக்கிறது.

மேலும்..DNA - India - Terror link scares IT firms - Daily News & Analysis

சைக்கிள் மெக்கானிகின் சாதனை !

சைக்கிள் மெக்கானிக் அப்துல்கனி தான் தயாரித்த மினி டிராக்டரில் பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தார். பண்ருட்டி வட்டம் பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்கனி (52). சைக்கிள் மெக்கானிக்கான இவர், வறுமையின் காரணமாக 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பின்னர் வேலை தேடி 72-ல் மும்பை சென்று 93-ல் திரும்பி வந்து தற்போது பண்ருட்டி கடலூர் சாலையில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்துள்ளார்.
இவர் தன்னிடம் இருந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் ஆகியவற்றின் பாகங்களை பயன்படுத்தி மினி டிராக்டர் செய்துள்ளார். இந்த மினி டிராக்டரை பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு செய்ததாகவும், இந்த மினி டிராக்டர் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 40 கிலோ மீட்டரும், மணிக்கு 15 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என கூறினார்.
மேலும் நவீன விவசாயத்துக்கு தேவைப்படும் கருவிகளை செய்ய இருப்பதாகவும், நிதி வசதி போதுமான அளவு இல்லாத காரணத்தினால் கண்டுபிடிப்புகள் தாமதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி : தினமனி

'அன்புடன் வரவேற்போம்' - ஜெ

அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால்
அன்புடன் வரவேற்போம்: ஜெ.


ஜூலை 10, 2007

சென்னை: அதிமுக கூட்டணியில் சேர பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீர்மானித்தால், அவரை பாசத்துடன் வரவேற்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு நேற்று ஜெயலலிதா வந்தார். அங்கு பல்வேறு கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர்கள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை ஜெயலலிதா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், டாக்டர் ராமதாஸ் அதிமுக அணிக்கு வந்தால் அவரை வரவேற்போம். பாசத்துடன், உரிய கெளரவத்துடன் அவரை நடத்துவோம் (அப்படியா!!).

காவிரி நீர்ப் பிரச்சினையில் தனது கடமையைச் செய்ய முதல்வர் கருணாநிதி தவறி விட்டார். கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று அந்த மாநில துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் பெங்களூருக்குச் சென்று ஓய்வு எடுக்கிறார் கருணாநிதி.

அங்கு கர்நாடக முதல்வரைச் சந்தித்து தண்ணீர் திறந்து விடுங்கள் என்று கேட்பதற்கு அவருக்கு நேரம் இல்லை.

தயாநிதி மாறன் மீதான ரூ. 10 ஆயிரம் கோடி மோசடி குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்தப் புகாரை அவர்களே சொல்லியிருப்பதால் உண்மையாகத்தான் இருக்கும். இதுபற்றி அமைச்சர் ராசாதான் விளக்கமாக தெரிவிக்க வேண்டும்.

இப்போது ஏன் இந்த மோசடியை அம்பலப்படுத்துகிறார்கள். இதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்பதையும் இந்த விவகாரத்தில் உண்மை நிலைமையையும் திமுக விளக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிப்போம். எங்களது அணியின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஓம் பிரகாஷ் செளதாலா வீட்டில் நடைபெறும்.

கொல்கத்தாவில் நந்திகிராமம் பிரச்சினையில் மேற்கு வங்க அரசை எதிர்த்து பேரணி நடத்தவுள்ளார் மம்தா பானர்ஜி. அதில் நானும் பங்கேற்க வேண்டும் என்று கோரி என்னைப் பார்க்க வந்தார். ஆனால் நான் அந்த பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்றார் ஜெயலலிதா.

நன்றி : தட்ஸ் தமிழ்

மும்பையில் சர்ச்சைக்குரிய நிலத்தில் மாளிகை - சிக்கலில் இருந்து தப்பினார் முகேஷ்

மும்பையில் சர்ச்சைக்குரிய இடத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி வீடு கட்டிக் கொள்ள தடை ஏதும் இல்லை என மகாராஷ்டிரா வக்ப் வாரியம் சான்றிதழ் அளித்து உள்ளது.

மும்பையில் ரூ.100 கோடியில் 27 மாடி மாளிகை கட்டி வருகிறார் முகேஷ் அம்பானி. மொத்தம் 4,532 சதுர மீட்டர் பரப்பில் உள்ள அந்த நிலத்தில் வீடு கட்டுவது சட்ட விரோதம் என மகாராஷ்டிர அரசு அறிவித்தது. காரணம், அந்த இடம் மகாராஷ்டிர வக்ப் வாரியத்துக்கு சொந்தமாக இருந்தது. அது கரீம்பாய் இப்ராஹிம் கோஜா அநாதைகள் இல்லத்துக்கு மாற்றப்பட்டது.

ஆனால் அந்த நிலத்தை மாற்ற வக்ப் வாரியத்துக்கு உரிமை இல்லை என மாநில அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்துதான் சட்ட விரோதமானது என மாநில அரசு அறிவித்தது. இப்போது இந்த விஷயத்தில் புதிய திருப்பமாக, வக்ஃப் வாரியத்துக்கு ரூ.16 லட்சத்துக்கு தந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுவிட்டார். இது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

மாநில அரசின் சட்டப்படி, வக்ஃப் வாரிய சொத்துகளை விற்பதற்கோ, குத்தகைக்கு தருவதற்கோ வாரியத்துக்கு அனுமதி இல்லை. ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு சொத்துகளை மாற்ற மட்டும்தான் அதிகாரம் உண்டு.

இந்நிலையில் வக்ப் வாரியம் வெளியிட்ட அறிக்கைபடி, முகேஷ் அம்பானி வீடு கட்டும் இடம் தங்களுக்கு சொந்தமானது அல்ல எனவும் அது கரீம்பாய் இப்ராஹிம் கோஜா அநாதைகள் இல்லத்துக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது வெளியான சில மணி நேரங்களில், மகாராஷ்டிர அரசின் வக்ப் துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த இடம் வக்ப் வாரியத் துக்கு சொந்தமானதுதான் என தெரிவித்துள்ளது.

- தினகரன்

முந்தைய சற்றுமுன்...: வக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்.

IBNLive.com > Mukesh Ambani pays 16 lakh to Wakf board, gets NOC : Mukesh Ambani, illegal land, Mumbai, skyscraper

Zee News - Wakf land can`t be sold, transferred: Central Wakf Council

கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: என்.வரதராஜன்

தமிழகத்தில் முறைகேடாக நடத்தப்பட்டுள்ள கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் என்.வரதராஜன் வலியுறுத்தினார்.

மேலும் கூட்டுறவுத் தேர்தலில் திமுகவுடன் மார்க்சிய கம்யூனிஸ்ட் தொகுதி உடன்பாடு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கூட்டுறவுத் தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து அக்கட்சி சார்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்குத் தலைமை வகித்து அவர் பேசியது:

தமிழ்நாட்டில் கூட்டுறவுத் தேர்தல் 90 சதவீத இடங்களில் முறைகேடாக நடந்துள்ளது. ஆளும் கட்சியினருடன் அதிகாரிகள் இணைந்து இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். நடக்கும் வன்முறைகளைப் பார்த்தால் தமிழக அரசுதான் இத் தேர்தலை நடத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் குறித்து அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அளித்த பேட்டி சரியல்ல. என்னோடு தொடர்புகொள்ள முடியவில்லை என அவர் கூறியிருப்பது தவறு செய்துவிட்டு தப்பிக்க நினைக்கும் செயலாகும்.

கூட்டுறவுத் தேர்தலை ஜனநாயக ரீதியாக நடத்துங்கள் எனக் கூறியபோது முதல்வர் தலையசைத்தார். ஆனால் படிப்படியாக வளர்ந்து ஜனநாயக விரோதத்துக்குள் திமுக சிக்கிக்கொண்டுள்ளதோ? என நினைக்கத் தோன்றுகிறது. மத்திய அரசின் ஆன்லைன் வர்த்தகத்தில் திமுக தலையீடு, மின்சார உற்பத்தியில் தனியார் கூடாது என்பது, மக்களவை, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு, சென்னை விமான நிலைய விஸ்தரிப்பை தனியாரிடம் தரக் கூடாது ஆகியவற்றில் திமுக செயல்பாட்டை வரவேற்றோம். ஆனால் இந்த ஆதரவு ஜனநாயகத்தை அழிப்பதற்கான அனுமதியாக திமுக கருதக் கூடாது என்றார் வரதராஜன்.

தினமணி

CPM alleges DMK 'high-handedness' in Coop Elections

-o❢o-

b r e a k i n g   n e w s...