காமன்வெல்த் வாலிபால் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 25-18, 25-16, 24-26, 20-25, 15-11 என்ற கணக்கில் இந்தியாவை வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை 25-10, 23-25, 25-21, 25-21 என்ற கணக்கில் வென்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
ஆஸ்திரேலியா பரிசுத் தொகையாக ரூ. 4 லட்சத்தைப் பெற்றது. இந்தியாவுக்குப் பரிசுத் தொகையாக ரூ. 2 லட்சம் கிடைத்தது. இந்திய அணிக்கு மேற்கு வங்க விளையாட்டு ஆணையம் ரூ. 5 லட்சம் வழங்கியது.
தினமணி
The Hindu News :: Australia overcomes fighting India to clinch volleyball title
India go down fighting in final - Other Sports - Sections - Indiatimes Sports
Monday, August 6, 2007
காமன்வெல்த் வாலிபால் இந்தியாவுக்கு 2-ம் இடம்
Posted by Boston Bala at 11:54 PM 0 comments
மரம் கடத்தியவருக்கு மரண தண்டனை
வடகொரியாவில் அரசால் பாதுகாக்கப்பட்ட மரங்களை வெட்டிக் கடத்தியவர் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை தென்கொரிய செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
'வடபாம்கியாங்க் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள யோன்சா என்ற கிராமத்தைச் சேர்ந்த மர வியாபாரியான மும்-ஹைக் என்பவர் வடகொரியாவில் அரசால் பாதுகாக்கப்பட்டு வந்த மரங்களை வெட்டி, சீனாவுக்குக் கடத்தியதாக புகார் எழுந்தது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிய வந்ததையடுத்து, ஜூலை 23-ம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அவரது கூட்டாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது' என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு நிறைவேற்றப்பட்டத் தண்டனையை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1920 முதல் 1930-ம் ஆண்டு வரை வடகொரியா ஜப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அப்போது ஜப்பானின் அடக்குமுறையை எதிர்த்து சோசலிச வடகொரியாவின் நிறுவனர் எனப் போற்றப்படும் கிம் இல்-சங் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தார்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர், வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் வாசகங்களை எழுதினார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அவரது வாசகங்கள் இடம்பெற்ற மரங்களை சோசலிச வடகொரியா பாதுகாத்து வந்தது. மேலும் அந்த மரங்களை 'சுலோகன் மரங்கள்' என்றும் அழைத்தது.
இந்த சுலோகன் மரங்களை வெட்டி சீனாவுக்குக் கடத்தியக் குற்றத்திற்காகத்தான் 5 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி
Slogan tree smuggler executed in N Korea
North Korea executes "slogan tree" smuggler: report
Posted by Boston Bala at 11:43 PM 0 comments
32,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை
இந்தியாவில் 32,000 பள்ளிகள், மாணவர் ஒருவர் கூட இல்லாமல் செயல்பட்டு வருவதாக அரசு ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இவற்றில் 48 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகள் ஆகும். இந்தியாவில் ஆரம்பக்கல்வி 2005-2006 என்னும் தலைப்பில் தேசிய கல்வித்திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11,24,033 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2.92 சதவீதம் பள்ளிகளில் இதுவரை ஒரு மாணவர் கூட சேரவில்லை என அறியப்பட்டுள்ளது.
மாநிலங்களை பொறுத்தவரையில், கர்நாடகத்தில் 7,945 பள்ளிகளில் இந்த நிலைமை காணப்படுகிறது. இவற்றில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளோடு, 15,791 பள்ளிகள் ஆரம்பப் பள்ளிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, 69,353 பள்ளிகள் (6.17 சதவீதம்) 25-க்கும் குறைவான மாணவர்களோடு செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. 1,70,888 பள்ளிகளில் 26 முதல் 50 வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
குறைவான மாணவர்களுடன் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை பிகார், தில்லி, கேரளம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைவாகவே காணப்பட்டது. அனைத்து பள்ளிகளையும் பார்க்கும் பொழுது சராசரியாக 150 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் ஷைலேந்திர சர்மா தெரிவித்துள்ளார். 23,000 பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும் எனவும், 1.3 லட்சம் பள்ளிகள் ஒரேயொரு ஆசிரியருடன் செயல்பட்டு கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
பருவநிலை மாற்றங்களினால் மக்கள் இடம் பெயர்தல் மற்றும் வேறு சில சூழ்நிலைகள் குறைந்த அளவு மாணவர் சேர்க்கைக்கு காரணமாகும். உதாரணமாக, ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள லாஹல் மற்றும் ஸ்பிட்டி ஆகிய பகுதிகளில் குளிர்காலங்களில் நிலவும் சீதோஷ்ண நிலையின் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.
இது போன்ற பள்ளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பது தற்போது அறியப்பட்டுள்ளதால், இதற்கான முழுமையான காரணங்கள் என்ன என்பதை கண்டறியவேண்டும். அதோடு, பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளும் ஒரு காரணியாக இருப்பதால், அதையும் மேம்படுத்துவதில் உரிய கவனம் செலுத்தவேண்டும்.
1,02,227 பள்ளிகளில் ஒரேயொரு வகுப்பறை மட்டுமே இருப்பதே இதற்கு உதாரணமாகும். அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளிகளை அமைக்கவேண்டும் எனவும், போதிய ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் எனவும் மாநில கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
தினமணி
NDTV.com: No student in 32,000 schools: Report
Deccan Herald - 32,000 schools sans a single student
Posted by Boston Bala at 11:37 PM 0 comments
சி ஏ வினாத்தாள் வெளியானதால் தேர்வு தள்ளி வைப்பு
சி ஏ நுழைவு தேர்வின் Common Proficiency test (CPT) வினாத்தாள் தேர்விற்கு முன்னாலேயே 'அவுட்' ஆனதால் இந்திய சார்ட்டட் கனக்காய்வாளர்களின் கழகம் ( ICAI) ்இந்த தேர்வினை தள்ளுபடி செய்தது. காலையிலேயே புனேயிலிருந்து வினாத்தாள் வெளியானதாக செய்திகள் வந்தபோதிலும் மதிய தேர்வும் தடைபடாமல் நடந்தது. ஆனால் மாலையில் கூடிய தேர்வுக் கமிட்டியும் நிர்வாக கமிட்டியும் ஆய்வு செய்து இந்த முடிவை எடுத்தன.
மறுதேர்வு ஆகஸ்ட் 26 நடைபெறவுள்ளது. 203 இடங்களில் இருந்து எழுதிய 82,000 மாணவர்கள் இந்த முடிவினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி ஒரு உயர்மட்ட குழு விசாரனை நடத்தி மீண்டும் நிகழாவண்ணம் விதிமுறைகளை பரிந்துரைக்கும்.
Paper leaks, ICAI test off
Posted by மணியன் at 6:19 PM 0 comments
தில்லி ஜன்பத் சாலையில் தீவிபத்து
தலைநகர் தில்லியின் ஜன்பத் சாலையில் அமைந்துள்ள இந்திய வங்கியின் (Bank of India) கட்டிட அடித்தளத்தில் சிறு தீ வபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு நிலைய குறிப்பொன்று கூறுகிறது. நான்கு தீயணைப்பு வண்டிகள் 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தன.
The Hindu News Update Service
Posted by மணியன் at 6:01 PM 0 comments
குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு அறிவிப்பு!
கோவை குண்டுவெடிப்பின் தீர்ப்புகளை தனிநீதிமன்றத்தில் நீதிபதி பார்த்தசாரதி அவர்கள் சற்றுமுன் வாசித்தார் அதில் கைதி எண் 150 விஜயவாடாவை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (இவர் சிறிது காலத்திற்க்குமுன் இருதய அருவைசிகிச்சை செதுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் சதீஸ் 143 ஆகியோர் நிபந்தனைஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாக கோவைநன்பர் தொலைப்பேசிவாயிலாக தெரிவிதார் இன்னும் ஒருசில மணித்துளிகளில் முழு விபரமும் தெரியவரும்.
Posted by Adirai Media at 5:55 PM 0 comments
கோவை குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஐவர் குற்றவாளிகள்
கோவை குண்டுவெடிப்பு வழக்குகளின் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் மேலும் ஐவர் மீதான குற்றங்கள் நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி உத்திராபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம் இந்த வழக்கில் குற்றவாளிகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்தது. குற்றமற்றவர்களாக தீர்ப்பளிக்கப்பட்ட 84 பேரின் பிணை மனுக்கள் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுவரை அல் உம்மாவின் நிறுவனர் எஸ் ஏ பாட்சா உட்பட 69 பேர் மீது தீவிர குற்றங்கள் இழைத்ததாகவும் மற்ற 89 பேர் மீது சில்லறைக் குற்றங்கள் இழைத்ததாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
The Hindu News Update Service
Posted by மணியன் at 5:54 PM 0 comments
திருப்பதியில் உடை கட்டுப்பாடு வரும் ?
திருப்பதியில் பெண்களுக்கு இந்திய உடைகளை வற்புறுத்துவது பற்றி கோவில் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். சிலநாட்களுக்கு முன் ஒரு பக்தர் பெண்களின் நவீன உடைகள் எண்ணங்களை சிதற அடிப்பதாக எழுப்பிய புகாரின் பேரில் இந்த நடவடிக்கை சிந்திக்கப் படுகிறது. பெண்கள் புடைவைகளையோ மற்ற இந்திய பாரம்பர்ய உடைகளையோ அணிய வேண்டும் என்று விதிக்கப் படும். கோவில் பணியாளர்கள் ஆண்கள் வேட்டியையும் பெண்கள் சேலையையும் அணிகிறார்கள். உடை கட்டுப்பாட்டை ஒருசிலர் வரவேற்றாலும் பெண்கள் அமைப்பொன்று முதலில் கேரள கோவில்களில் ஆண்கள் சட்டையணிந்து வர கட்டாயப் படுத்தப் படவேண்டும் என்று கூறியுள்ளது.
சென்ற மாதம் குருவாயூர் கோவிலில் சேலை மட்டுமே அனுமதிக்கப் பட்ட நிலையிலிருந்து விலகி சூரிதார் அணிவதும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
IBNLive.com > Tirupati authorities give women a dressing down : tirupati temple, dress code
Posted by மணியன் at 5:42 PM 0 comments
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல்:62ம் நினைவுநாள்
ஹிரோஷிமாவின் 62 நினைவுநாளான இன்று ஜப்பான் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று உறுதி எடுத்துள்ளது. அணுஆயுத நாடுகளையும் தங்கள் ஆயுதங்களை விட்டுவிடுமாறு வற்புறுத்தியது. இன்று அமெரிக்க விமானமொன்று 140,000 பேரைக் கொன்ற அதே காலை 8:15 மணிக்கு 45,000 மக்கள் ஒருசேர தங்கள் பிரார்த்தனைகளை கூறி அஞ்சலி செலுத்தினர்.
DNA - World - Japan vows against nukes on Hiroshima anniversary - Daily News & Analysis
Posted by மணியன் at 3:44 PM 0 comments
கிருஷ்ணகிரியில் சிறப்பு பொ.ம:ஜிஎம் ஆர் குழுவுடன் உடன்பாடு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2300 கோடி செலவில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜி எம் ஆர் வணிககுழுவினருடன் ஒருங்கிணைந்து அமைக்க தமிழக அரசு இன்று உடன்பாடு கண்டது. தமிழக தொழில்வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ் இராமச்சந்திரனுக்கும் ஜி எம் ஆர் இன்ஃப்ராஸ்ட் ரக்சரின் இயக்குனர் பிவி நாகேஸ்வர ராவிற்குமிடையே இந்த வணிக ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் கையெழுத்திடுகையில் முதல்வர் கருணாநிதியும் ஜிஎம் ஆர் குழுவின் தலைவர் ஜி மல்லிகார்ச்சுன ராவும் உடனிருந்தனர்.
3300 ஏக்கர் பரப்பில் அமையவிருக்கும் இந்த சி.பொ.ம ரூ11,000 கோடி வரை முதலீட்டை வரவழைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 70,000 பேர் வரை வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.
மேலும்: Chennai Online News Service - View News
Posted by மணியன் at 3:26 PM 0 comments
20 சிசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப் பட்டன: பெங்களூரு
ஒரிசாவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் குறைபிரசவ சிசுக்களின் சடலங்கள் குப்பைகொட்டும் இடத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீராம்புரம் காவல்நிலைய எல்லைக்குள் ராஜீவ் காந்தி சிலையருகே 20 சடலங்கள் கோணிப் பைகளில் மருத்துவமனையின் பிற கழிவுகளுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.காவல்துறையினர் இந்த விதயத்தை மூடிமறைக்க முயன்றபோதிலும் சிலரின் தலையீட்டால் தேசிய பெண்கள் கழகத்திற்கு தெரிவிக்கப் பட்டு சிசுக்களின் பாலினத்தை முடிவு செய்ய விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளன.
20 foetuses recovered from near Bangalore - Yahoo! India News
Posted by மணியன் at 12:53 PM 2 comments
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு.
58 பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில், 153 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. கோவையில் கடந்த 1998 ஆம்ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில், கடந்த புதன்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.
Posted by Adirai Media at 9:55 AM 0 comments
ஒட்டகப்பால் குடித்து அப்பா ஆனார் 90 வயது தாத்தா
ஜெய்ப்பூர், ஆக.6: ராஜஸ்தானைச் சேர்ந்த 90 வயது குடுகுடு தாத்தா ஒருவர், மருமகளையே 4வது மனைவியாக திருமணம் செய்து கொண்டு ஒன்பதாவதாக ஒரு பெண் குழந்தை பெற்று உள்ளார்.
ராஜஸ்தானின் சித்தார்கார் மாவட்டத்தில் உள்ள பாஞ்ச் இம்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நானு ராம்ஜோகி (90). இவருக்கு 3 மனைவிகள் மூலம் 8 குழந்தைகள் மற்றும் 12 பேரக்குழந்தைகள் உள்ளன. இவரது மனைவிகள் அனைவரும் இறந்துவிட்டனர். மூத்த மகன் சிவ்லாலின் மனைவி சாகுரி (30) தான் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.இந்நிலையில், சில ஆண்டுக்கு முன்பு சிவ்லால் இறந்தார். மருமகளை அப்படியே விட்டுவிட மணமில்லாத நானு ராம்ஜோகி, அவரை தனது மனைவி ஆக்கிக் கொண்டார். இவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்த வயதில் தான் தந்தையானது குறித்து நானு ராம்ஜோகி பெருமிதம் கொள்கிறார். அவரது கடா மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி மகிழ்ந்து வருகிறார்.
பஞ்சாபைச் சேர்ந்த விமாரம் ஜாத் என்பவர் தனது 88வது வயதில் தந்தையானது தான் அதிசயமான விஷயமாக பேசப்பட்டு வந்தது. இவர்கள் இருவருமே தங்களுடைய ஆண்மையின் காரணமாக கூறியது, ஒட்டகப்பாலை தினமும் குடிப்பதால் முதுமையை விரட்டி இளமையுடன் திகழ முடிகிறது என்று கூறியுள்ளனர்.
- நன்றி: தினகரன்
Posted by சிவபாலன் at 5:22 AM 2 comments
b r e a k i n g n e w s...