.

Saturday, June 16, 2007

மதுரை: புதிய மாவட்ட ஆட்சியர்.

மதுரையின் புதிய மாவட்ட ஆட்சியராக சுந்தரமூர்த்தி இன்று மதியம் பதவியேற்றுக் கொண்டார். மதுரை மேற்கு தொகுதி வேட்பு மனுத்தாக்கலின் போது, தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உட்பட 6 பேரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவுப்படி, மதுரையின் புதிய மாவட்ட ஆட்சியராக நாமக்கல் ஆட்சியராக இருந்த சுந்தரமூர்த்தி நியமிக்கப்பட்டார். அதன்படி, சுந்தரமூர்த்தி இன்று மதியம் மதுரை ஆட்சியராகப் பதவியேற்றுக்கொண்டார்.

குடியரசுத்தலைவர் தேர்தல்: வேட்புமனு தொடக்கம்.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

ஜூன் 30ம் தேதி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம். ஜூலை 2ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூலை 4ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஜூலை 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ம் தேதி நடைபெறும்.

ஜூலை 25ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் கலாம் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்

பீகார்: வெள்ளம் சூழ 300 கிராமங்கள்.

இரண்டு நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக பீகாரின் 300 கிராமங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இவை வட பீகாரில் அமைந்துள்ளா முஸஃப்பர்பூர், தார்பங்கா, சீதாமர்ஹி மாவட்டங்களைச் சேர்ந்தவை.

தலைநகர் டெல்லியிலும் இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 55.மிமிக்கும் அதிகமான மழை பொழிந்துள்ளது. வெப்ப நிலை 36 டிகிரி செல்ஷியஸ்ஸாக இருந்தது.


At least 300 villages flooded in Bihar


Heavy rains lash capital

அதிமுக எம் எல் ஏக்கள் வாங்கிய கருணாநிதி வாட்ச்

மூன்றாவது அணி, ஜனாதிபதி தேர்தல் என்று கணக்கிட்ட படி ரஜனியுடன் 'சிவாஜி'யை ஜெயலலிதா 'வாட்ச்' செய்துக்கொண்டிருக்க.....முதல்வர் கருணாநிதி உருவப்படம் பொறிக்கப்பட்ட கைக்கடிகாரங்களை அதிமுகவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபை உறுப்பினராக பொன்விழா கண்ட முதல்வர் கருணாநிதியைப் பாராட்டி சட்டசபையில் விழா எடுக்கப்பட்டது. இதையடுத்து பொன்விழா நினைவாக அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வரின் உருவப் படம் பொறிக்கப்பட்ட தங்க கைக்கடிகாரம், சூட்கேஸ் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

இவற்றை சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாங்கிச் சென்றனர்.

இந் நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களும் பெரும் ஆர்வத்துடன் இந்த பரிசுப் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபைச் செயலாளர் அறைக்குச் சென்று இவற்றை அவர்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.

இதுவரை 40க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் இவற்றை வாங்கிச் சென்றுள்ளனராம். ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் மட்டுமே பெறவில்லையாம்.

'ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டேன்':-பிரதீபா பாட்டீல்.

"எனக்கென்று சுய சிந்தனை இருக்கிறது, நான் ஏன் ரப்பர் ஸ்டாம்பாக' இருக்கவேண்டும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார் குடியரசுத்தலைவர் களத்தில் நிற்கும் பிரதீபா பாட்டில்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரைச் சந்திக்க டெல்லி வந்துள்ள அவர், தான் அப்படி இருந்ததேயில்லை என்றார்.

துணை குடியரசுத்தலைவரும், போட்டி வேட்பாளராக உள்ளவருமான பைரோன்சிங் ஷெகாவத்தைச் சந்திக்க நேரம் கேட்டிருந்த பிரதீபாவுக்கு, அவர் இருப்பிடத்திற்கே வந்து சந்தித்து ஆச்சரியமளித்துள்ளார் ஷெகாவத்.

நாட்டின் பெரிய பதவிக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவது மிகப்பெரிய முன்னேற்றமாகவும், இந்நாடு பெண்களுக்கு அளிக்கும் கெளரவமாகவும் அமையும் என்ற பிரதீபா, "பெண்கள் இதனால் ஊக்கமடைவார்கள்" என்றார்.

மேலும் படிக்க... TOI

சோனியாவும் பிரதீபாவும்

ஐக்கிய முன்னணி கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி அக்கூட்டணியின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பிரதிபா பாட்டீலை சனியன்று அவரது தில்லி இல்லத்தில் வரவேற்றக் காட்சி. படம் நன்றி: Hindu News Update Service

ச:ஜம்முகாஷ்மீரில் கிரெனேட் தாக்குதல்: எட்டு பேர் காயம்

சனிக்கிழமை காலை ஜம்முகாஷ்மீரின் பரமூல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய எரிகுண்டு (Grenade) தாக்குதலில் மூன்று பாதுகாப்பு வீரர்கள் உட்பட எட்டுபேர் காயமடைந்தனர்.
Eight persons injured in grenade attack in J&K-India-The Times of India

ச: பெண்ணைத் தள்ளிய அமைச்சர் மன்னிப்பு கேட்டார்

பிஹாரின் விவசாய அமைச்சர் நரேந்திர சிங்கிடம் தன் மகனுக்கு வேலை கேட்டு வந்த விதவைத் தாயாரை தள்ளி விட்டதற்கு இன்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் நிதீஷ்குமார் ஒரு வாரத்திற்குள் அந்த பெண்மணியின் இறந்த கணவருக்கு உரிய தொகைகளை அவருக்குக் கொடுக்கவும் மகனுக்கு வேலைக்கு ஆணை இடவும் முதன்மை செயலருக்கு உத்திரவிட்டார்.

முன்னதாக அமைச்சர் சிங் பாகல்பூரிலுள்ள விவசாயக் கல்லூரியை காண வருகை தந்தபோது தேவி அவரை அரசு ஊழியராக பணியாற்றிய தன் கணவரின் இறப்புக்குப் பின்னர் தன் மகனுக்கு வேலை தேடி விண்ணப்பத்துடன் அணுகியபோது கூட்டத்தில் அவரை அமைச்சர் தள்ளியது டிவி படப்பிடிப்புகளில் பதிந்தது. அவர் தான் தள்ளவில்லை என்று முதலி மறுத்தபோதிலும் டிவி நிகழ்படங்களை கொண்டு எதிர்கட்சி RJD போராட்டம் நடத்தியது. தன் அரசிற்கு ஏற்பட்ட கெட்டபெயரை தவிர்க்கும் முகமாக முதலமைச்சர் நிதீஷ்குமார் உடனே காரியமாற்ற வேண்டியிருந்தது.

மேல் விவரங்கள், நிகழ்படங்களுக்கு: Minister 'pushes' woman| Impact : Bihar, Bhagalapur, Agriculture Minister Narendra Singh, Assault : IBNLive.com : CNN-IBN

ச:ஹட்ச் செல்பேசியில் சிவாஜி பாடல்கள்

முன்னணி செல்பேசி நிறுவனமான ஹட்ச் ஹங்காமா.கொம் உடன் இணைந்து தமிழ் திரைப்படமான சிவாஜியின் பாடல்களையும் படங்களையும் செல்பேசியில் தனிப்பட்ட முரையில் வழங்கவிருக்கிறது. இதன்மூலம்ம் ஹட்ச் வாடிக்கையாளர்கள் பாடல்களை அழைப்புமணியாகவும், அழைத்தவர் மணியாகவும் தவிர பின்னணிபடங்கள், படச் செய்திகள், திரைப்பட அறிவிப்புகள், சிறு துணுக்குகள் என சிவாஜி படத்தின் பல விதயங்களைப் பெறமுடியும். தவிர போட்டிகளும் நடத்தப் படுகின்றன. விவரங்களுக்கு.... 'Sivaji-The Boss' @ NewKerala.Com News Channel

ச:குடியரசுதலைவர் தேர்தல்: வெங்கடசாமி அதிருப்தி

ஐக்கிய முன்னேற்ற கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தான் தெரிந்தெடுக்கப்படாததை அடுத்து மூத்த காங்கிரஸ் தலித் ் தலைவர் ஜி வெங்கடசாமி வருத்தமடைவதாக கூறினார். இந்திராகாந்தி இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
மேலும்...Zee News

குடியரசுத் தலைவர்:போட்டியிட தனக்கு விருப்பமில்லை.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி!

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிதெரிவித்தார். இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில் குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட தான் விரும்புவதாக வந்த செய்திகள் ஊகத்தின் அடிப்படையில் அமைந்தவை. உள்நோக்கம் கொண்டவை. காங்கிரஸ் தலைமையின் முடிவுப்படியே கட்சியிலும், அரசிலும் தனது செயல்பாடுகள் அமையும். இந்த விஷயத்தில் மேலும் எந்த ஊகங்களுக்கும் இடம்இல்லை. குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் சார்பில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பது குறித்து கூட்டணி, ஆதரவு கட்சிகளுடன் பேச்சு நடத்திய பிறகு சோனியாகாந்தி அறிவிப்பார் என்று பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ளார்.

ச: மலேசியாவில் இரஜனி இரசிகர்கள் வன்முறை

இந்திய சினிமா இரசிகர்கள் நாடெங்கும் திரையிட இருந்த சிவாஜி படம் தொழிற்நுட்பக் கோளாறினால் திரையிடுவதில்் ஏற்பட்ட தடங்கல்களுக்கும் தாமதங்களுக்கும் எதிராக திரையரங்குகளை தாக்கி பொருட்சேதம் ஏற்பட்டது. கோலாலம்பூரின் க்ளாங் மாவட்டத்தில் இருக்கும் சிரி இன் டான் தியேட்டர் ஒளி,ஒலி உபகரணங்கள் பாதிக்கப்பட்டதால் மூட வேண்டியதாயிற்று. வடக்கே இபோ நகரில் தியேட்டர் மேலாளர் ஒருவர் தாக்கப்பட்டு தலைக் காயம் அடைந்தார். காவலர்கள் அனேகரை கைது செய்துள்ளது. இதுபற்றி மேலும்....

சவூதி: வாகனமோட்டிகள் அலைபேசிட தடை?

வாகனமோட்டிகள் கை பேசிகளைப் பயன்படுத்திட தடை விதித்துள்ள 50 நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவும் தன்னை இணைத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. சவூதி போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார். 'வாகனம் ஓட்டுவோர் தம் கவனத்தைக் குலைக்கும் எந்தச் செயலும் தடை விதிக்கப்படும்" என்றார் அவர். "அவற்றுள் உண்ணல், குடித்தலும் அடங்கும்".

ஒரு இணையதள கருத்துக்கணிப்பில் (!) 63 சத சவூதி பொதுமக்கள் இக்கருத்திற்கு ஆதரவளித்துள்ளனராம்.

"சவூதிகளுக்கு இது மிகவும் சிரமமாக அமையும்" என்றார் ஒரு கல்லூரிப் பேராசிரியர். "காவல் அதிகாரிகளே.. இதற்கு விதிவிலக்கில்லையே!.."

ஐரோப்பாவின் 25 நாடுகளில் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அரபு நாடுகளான பஹ்ரைன், ஜோர்டான், எகிப்து இதை ஏற்கனவே சட்டமாக்கியுள்ளன.

அரப் நியூஸ்

பிரதிபாவுக்கு எதிராக ஷெகாவத்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் ஷெகாவத் சுயேச்சையாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க சரத் யாதவ் உறுதியளித்ததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளருக்கு சிவசேனை ஆதரவு அளிக்கும் என்று கூட்டணி நம்புவதாகவும் அவை தெரிவித்தன. பிரதிபா பாட்டீல் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிவசேனை அவருக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று கூறப்படும் தகவல்களில் ஆதரமில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மொத்த வாக்குகள் - 11 லட்சம்
காங்கிரஸ் & ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 5,70,000

பிறர்: 4,60,970
பாஜக & தேசிய ஜனநாயகக் கூட்டணி - 3,54,689
மூன்றாவது அணி - 1,06,281

மூன்றாவது அணி வேட்பாளரை அறிவிக்காவிட்டால் பிரதிபா பட்டீல் ஜனாதிபதியாவது உறுதி.

அதிமுக, சமாஜ்வாதி கொண்ட மூன்றாவது அணியினர் தனியாக வேட்பாளரை நிறுத்தினால் விருப்ப வாக்குமுறை நடைக்கு வரும். அதன்படி, தங்களின் முதல் விருப்பம் யார், இரண்டாம விருப்பம் யார் என்று வாக்களிக்க வேண்டும்.

மிகக் குறைந்த வாக்கு வாங்கியவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். ஆனால், எல்லாருமே இரண்டாவதாக ஒருவரைப் பரிந்துரைப்பதால், வாக்கு எண்ணிக்கை கூட்டலின் இறுதியில் முதலிடம் பெறுபவர் வித்தியாசப்படலாம்.

மூன்றாவது அணி வேட்பாளரை நிறுத்துவதால் பைரான் சிங் ஷெகாவத்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகிறது.

ஷெகாவத் போட்டி உறுதி | NDTV.com: NDA refuses support to Pratibha Patil

அமைச்சராகிறார் கனிமொழி: முதல்வர் கருணாநிதி சூசகம்?

மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தனது மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் ஆக்கப்படுவார் என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார். மூன்று நாள் தில்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசினார் கருணாநிதி.

"குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வை வெற்றிகரமாக முடித்துச் சென்னை திரும்பும் நீங்கள், கனிமொழியை அமைச்சராக்க எப்போது வருவீர்கள்?' என்று கேட்டதற்கு, "செய்யலாம், செய்யலாம்'' என்று பதிலளித்தார் அவர்.

அதாவது, கனிமொழி அமைச்சராக்கப்படுவார் என்பதை சூசகமாகத் தெரிவித்த கருணாநிதி, அவர் எப்போது அமைச்சராக்கப்படுவார் என்பது குறித்து எந்த குறிப்பும் காட்டவில்லை. கடந்த மாத இறுதியில் தில்லி வந்த முதல்வர், சென்னை திரும்பும் முன் செய்தியாளர்களுடன் பேசும்போது, கனிமொழிக்கு அமைச்சர் பதவி தரப்படுமா என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை.

தினமணி

பிலிப்பைன்ஸ் பேருந்தில் குண்டுவெடிப்பு

ஃபிலிப்பைன்ஸின் வீணா (Weena Bus Company) போக்குவரத்து நிறுவனத்தின் பேருந்துகளில் இரண்டு குண்டு வெடித்தது. ஐவர் மரணம் அடைந்தார்கள். ஏற்கனவே மே பதினட்டாம் தேதி இதே நிறுவனத்தின் பஸ்ஸில் குண்டு வெடித்திருக்கிறது.

BBC NEWS | Asia-Pacific | Bomb explodes on Philippine bus

-o❢o-

b r e a k i n g   n e w s...