.

Wednesday, April 11, 2007

பிகாரில் பள்ளிக்கூடம் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல்

முங்கர், ஏப். 11: பிகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் பனஹரா என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் நடத்தப்பட்டபோது பள்ளிக்கூடத்தில் யாரும் இல்லை என போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்க கூடிய சிலர் நடுநிலைப் பள்ளியின் சில அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

பள்ளி அறைகளுக்குள் இருந்து சில வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன என முங்கர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரவீந்திர சங்கரன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிகாரில் ஹௌரா-கயா ரயிலிலும், மத்திய ரிசர்வ் போஸீசார் முகாமிலும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இந் நிலையில் பள்ளிக் கூடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dinamani

விடுதலைச் சிறுத்தைகள் மண்ணுரிமை மாநாடு ஜூன் 17-க்கு ஒத்திவைப்பு

திண்டிவனம், ஏப்.11: நெல்லையில் ஏப்.14-ம் தேதி நடைபெற இருந்த விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு ஜூன் 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்

செண்டூர் விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதி : விஜயகாந்த்

சென்னை, ஏப். 11: திண்டிவனம் அருகே செண்டூரில் நடந்த வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25,000 வீதம் ரூ. 4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

புதுக் கட்டடங்களில் ஊனமுற்றோருக்காக சாய்தளம் அமைப்பது கட்டாயமாக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை, ஏப். 11: அரசுக் கட்டடங்கள், அரசு சார்ந்த கட்டடங்கள், தனியார் நிறுவனக் கட்டடங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களை ஊனமுற்றோர் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளம் (RAMP) அமைப்பது கட்டாயமாக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

பார்வையற்றோரைத் திருமணம் புரியும் நல் உடற்கூறு உள்ள நபர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையைப் பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. ஆனால் மற்ற வகை ஊனமுற்றோரை மணம்புரியும் நபர்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.24 ஆயிரமாக உள்ளது. இந்த வருமான உச்ச வரம்பு இவ்வாண்டு முதல் நீக்கப்படுகிறது. இதன் மூலம் மற்ற தகுதிகள் உள்ள அனைவரும் இத் திட்டங்களில் கீழ் பயனடைவார்கள்.

ஊனமுற்றோருக்கு நவீன செயற்கை உறுப்பு வாங்க அரசு மானியமாக ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும்.

ஆதரவற்ற சிறுவர் சிறுமியருக்கான சிறப்பு இல்லங்கள் மற்றும் குழந்தைகள் இல்லங்களைப் பராமரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியம் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.225 என்ற நிலையிலிருந்து ரூ.450 ஆக இவ்வாண்டு முதல் உயர்த்தப்படும்.

தூத்துக்குடி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

அரசினர் கூர்நோக்கு இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் சிறப்பு இல்லங்கள், பிற்காப்பு நிறுவனங்களில் மற்றும் மகளிர் காப்பகங்களில் உள்ள இல்லவாசிகளுக்கு இவ்வாண்டு ரூ.7 லட்சத்து 42 ஆயிரம் செலவில் வாரம் ஒரு முறை கோழி இறைச்சி வழங்கப்படும்.

Dinamani

தேர்தல் கமிஷனிடம் பா.ஜ.இன்று விளக்கம்

உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது, சர்ச்சைக்குரிய சிடியை வெளியிட்டது குறித்து தேர்தல் கமிஷனிடம் பா.ஜனதா இன்று விளக்கம் அளிக்க உள்ளது.அந்த சிடி, தங்களது கவனத்திற்கு கொண்டுவராமலேயே வெளியிடப்பட்டதாகவும், அதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் பா.ஜனதா தலைவர்கள் கூறியிருந்தனர்.ஆனால் காங்கிரஸ்,பிஎஸ்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜன்மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் பா.ஜனதா கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன.இதனிடையே தேர்தல் கமிஷனும் உங்கள் கட்சி அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.இந்நிலையில், தேர்தல் கமிஷனின் நோட்டீசுக்கு பா.ஜனதா தலைவர்கள் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.

கோவை குண்டுவெடிப்பு: விரைவில் தீர்ப்பு!

கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி 12 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் பலர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான சம்பவங்களில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 181 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2002ல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. நான்கு கட்டங்களாக நீதிமன்றத்தில் வாதம் நடந்தது.எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் கடந்த 30ம் தேதி முடிந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாராயணமூர்த்தி மன்னிப்பு கோரினார்

தேசிய கீதத்தை அவமதித்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நாராயணமூர்த்தி மன்னிப்பு கோரினார்.


"CNN - IBN"

ச: ஏர் டெக்கான் 2006ல் சிறப்பான சேவை

பெங்களூர்

இந்திய விமான பயணிகள் சங்கம் (ஏ.பி.ஏ.ஐ) என்ற அமைப்பு விமான பயணிகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சேவையினை அளித்து வருகிறது. லாப நோக்கமின்றி செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, அதன் உறுப்பினர்கள், நாடு முழுவதிலும் உள்ள இத்துறை சார்ந்த செய்தி தொடர்பாளர்கள் மற்றும் அடிக்கடி விமான பயணத்தை மேற்கொள்ளும் பல்வேறு நிறுவன அதிகாரிகள் மத்தியில் ஓர் ஓட்டெடுப்பை நடத்தியது. இந்த ஓட்டெடுப்பின் வாயிலாக ஏர் டெக்கான் நிறுவனம் 2006-ஆம் ஆண்டில் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் சிறப்பான சேவை அளித்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் கூறும்போது, "2006-ஆம் ஆண்டின் சிறந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக ஏர் டெக்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் விமான பயணம் மேற்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற நிறுவனத்தின் இலட்சியத்திற்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்தியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் வளர்ச்சிக்கு விமானப் போக்குவரத்து வசதிகள் மிகவும் முக்கியமானதாகும்'' என்று தெரிவித்தார்.

தினகரன்

ச: 2010ல் ஐ.டி. துறையின் மொத்த ஊழியர்களில் பெண்கள் 50%

பெங்களூர், ஏப். 11: பெண்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்வதை விரும்பும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விடுமுறை, குழந்தை பராமரிப்பு, வீட்டருகே அலுவலகம் என சலுகைகளையும் கொட்டித் தருகின்றன.

ஐ.டி. நிறுவனங்களில் நாட்டிலேயே அதிக ஊழியர்களைக் கொண்டது டாடா கன்சல்டன்சி. அதன் 88 ஆயிரம் ஊழியர்களில் 25 சதவீதம் பெண்கள். இது ஓராண்டு முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப்போது பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தப் போகிறது டிசிஎஸ்.

அடிக்கடி வேலை மாறாதது, வேலை நேரம் வீணாகாதது மட்டுமின்றி ஐ.டி. நிறுவனங்கள் விரும்பும் திறமைகளும் பெண்களிடம் இருப்பதே, அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க காரணம். திறமையான பெண் ஊழியர்களை வேலை யில் தக்க வைத்துக் கொள்ள புதுமையான சலுகைகளை அளிக்கிறோம். அதிகபட்சம் 2 ஆண்டு விடுமுறை எடுத்து விட்டு, பிறகு அதே பணியில் சேரலாம் என்றார் டிசிஎஸ் மனித வள பிரிவு தலைவர் பத்மநாபன்.
Ôலேடீஸ் ஸ்பெஷல்Õ என்ற பெயரில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை டெக் மந்திரா நிறுவனம் அடிக்கடி நடத்துகிறது. தனது பெண் ஊழியர்களில் கர்ப்பிணிகள், குழந்தை பெற்றவர்களுக்கு உதவ, பெங்களூரில் சாட்டிலைட் அலுவலகங்களை இன்போசிஸ் அமைத்துள்ளது.

இதன்மூலம், நீண்ட தூர பயணத்தைத் தவிர்த்து, அவரவர் வீட்டின் அருகே உள்ள அலுவலகத்தில் பணியாற்றலாம். ஐபிஎம் நிறுவனம் ஏற்கனவே பெண் ஊழியர்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அலுவலகத்தை ஒட்டி காப்பகம் அமைத்துள்ளது. வேலையின் இடையே அதிகநேரம் வரை குழந்தைகளை சந்திக்க அனுமதித்துள்ளது.
இதற்கிடையே, 2010ம் ஆண்டில் ஐ.டி. துறையின் மொத்த ஊழியர்களில் பெண்கள் எண்ணிக்கை பாதியாக உயரும் என்று நாஸ்காம் கணித்துள்ளது.

தினகரன்

ச: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சீரமைப்பு

மதுரை, ஏப்.11: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ரூ. ஒன்றரை கோடி செலவில் உலக தரத்திற்கு நிகராக சீரமைக்கப்படுவதையட்டி சென்னை தொழில்நுட்ப குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருங்காட்சியமாக இருந்து வருகிறது. இதனை ரூ.1 கோடியே 55 லட்சம் செலவில், உலகத்தரத்திற்கு நிகராக அழகுபடுத்தப்படுத்த சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இம்மண்டபத்தின் தரையை செப்பனிடுவது, ஐம்பொன், கற்களால் ஆன சிலைகளை அவற்றின் காலம், சிறப்பு, வரலாற்றுத் தகவல்களுடன் காட்சிக்கு வைப்பது, திருவிளையாடல் புராணம் உள்பட ஓவிய காட்சிகளை வகைப்படுத்தி வைப்பது, நவீன விளக்குகளுடன் காட்சிப் பெட்டிகள் அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் நடக்க இருக்கிறது. வெளியிலிருந்து மேலும் பல பழமைப் பொருட்களையும், சிலைகளையும், வரலாற்று ஆவணங்களையும் இந்த அருங்காட்சியகத்திற்கு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தினகரன்

ச: எம்.எஸ்.சுவாமிநாதன் எம்.பி.யாக நியமனம்

புதுடெல்லி, ஏப்.11: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், நாட்டிய மேதை கபிலா வத்ஸயாயன் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் கலாம் நியமித்து உள்ளார்.
மாநிலங்களவை நியமன உறுப்பினர் ஒருவரின் பதவி காலம் முடிந்ததைத் தொடர்ந்து ஒரு இடம் காலியாக இருந்தது. அந்த இடத்துக்கு பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 6 ஆண்டு இந்த பதவியில் இருப்பார்.
Ôபசுமைப் புரட்சியின் தந்தைÕ என்று அழைக்கப்படும் சுவாமிநாதன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் விஞ்ஞான ஆலோசனை கமிட்டி, உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்துள்ளார். இயற்கை மற்றும் இயற்கை வள பாதுகாப்புக்கான சர்வதேச யூனியனின் தலைவராகவும் பணியாற்றினார்.

தினகரன்

ச: கமலின் தசாவதாரம் படத்துக்கு தடை நீங்கியது

சென்னை : நடிகர் கமலஹாசன் நடிக்கும் "தசாவதாரம்' படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது.

நீதிபதி ராமசுப்ரமணியன் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

தனது கதையை காப்பி அடித்து இருப்பதாக மனுதாரர் தவறாக கருதியுள்ளார். அதற்கான ஆதாரங்களை அவர் காட்டவில்லை. மேலும் தனது கதையை அப்படியே தயாரிப்பதாக மனுதாரர் நிரூபிக்கவில்லை. அவரது மனுவை தள்ளுபடி செய்ய இதுவே போதுமானது. படத்தின் கதையை தாக்கல் செய்யுமாறு தயாரிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது. அவரும் தாக்கல் செய்தார். இருதரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட கதைகளை படித்து பார்த்தேன். இரண்டும் ஒரே மாதியாக இல்லை. முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. எனவே இப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவில் கூறியுள்ளார்.

தினமலர்

ச: பாகிஸ்தான் திரும்புகிறார் பெனாசீர்

பாகிஸ்தானில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள போதிலும், தாம் நாடு திரும்ப போவதாக பெனாசீர் புட்டோ தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான புட்டோ, தற்போது லண்டனில் தங்கி உள்ளார்.தனது சுயசரிதையை ஏற்கனவே எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ள பெனாசீர், அந்த புத்தகத்தில் சில பகுதிகளை கூடுதலாக எழுதி அதன் மறுபதிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் மேற்கண்ட தகவலை எழுதியுள்ள அவர், பாகிஸ்தானில் இறங்கிய உடனேயே தாம் கைது செய்யப்படவோ அல்லது படுகொலை செய்யப்படவோ வாய்ப்புள்ளது என்பதை தாம் உணர்ந்துள்ளபோதிலும், பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மக்களுடன் தாம் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறியுள்ளார்.

"Yahoo-Tamil"

ச: பிரணாப் முகர்ஜி வீடு திரும்பினார்

புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 10 ஏப்ரல் 2007

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.


"YAHOO - TAMIL"

-o❢o-

b r e a k i n g   n e w s...