.

Monday, August 20, 2007

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.ஸி ) நடத்தும் குரூப் 1 பதவிக்கான தேர்வு

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.ஸி ) நடத்தும் குரூப் 1 பதவிக்கான தேர்வு

தமிழக அரசுப் பணிகளில் முதன்மையான பணியான குரூப் 1 பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

பதவியின் பெயர் ( காலி இடங்கள் )

டெபுடி கலெக்டர் ( 30 )
டி.எஸ்.பி. ( 32 )
கமர்ஷியல் டேக்ஸ் ஆபிசர் ( 45 )
டெபுடி ரிஜிஸ்டிரர் - கூட்டுறவு சங்கம் ( 24 )
மாவட்ட பதிவாளர் ( 2 )
ஊரக வளர்ச்சித் துறையில் துணை ஆணையர் ( 29 )
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ( 7 )
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் டிவிஷனல் ஆபிசர் ( 3 )

சம்பள விகிதம் : ரூ 8000 - ரூ. 13,500

வயது வரம்பு : 1.7.2007 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் விபரங்களுக்கு

Controller of Examinations
Tamilnadu Public Service Commission
Omanthoorar Government Estate
Anna Salai
Chennai 600 002
www.tnpsc.gov.in


கடைசி தேதி : 30 ஆகஸ்ட் 2007

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்?

காங்கிரஸ் கொடுத்த யோசனையை இடதுசாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டில் மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுத்தாலும் மத்திய அரசிற்கு கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவது என இடது சாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் செய்திக்கு "CNN-IBN TV".

சாலைகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு

நடப்பாண்டில் 4 மாநகராட்சி, 56 நகராட்சிகளில் மண் சாலைகளை தார்ச் சாலைகளாகத் தரம் உயர்த்த அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் சிமென்ட், தார், உலோக, மண் சாலைகள் உள்ளன. நான்கு ரக சாலைகளையும் தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.செங்கல்பட்டு, வேலூர், சேலம்,திருப்பூர், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி மண்டலங்களில் 56 நகராட்சிகளில் 60.133 கி.மீ.,மண் சாலைகள் ரூ.8.20 கோடியில் தார்ச்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மாநகராட்சிகளில் 13.150 கி.மீ.,மண்சாலைகள் ரூ.1.80 கோடியில் தார்ச்சாலைகளாக தரம் உயர்த்தப்படும் என அரசு செயலர் (உள்ளாட்சிதுறை) தீனபந்து தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி வீரராகவன் காலமானார்

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இருந்த வீரராகவன் இன்று காலை சென்னையில் காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நீதிபதி வீரராகவன் காலமானதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காயம்: ஆட்சியாளர் கண்ணில் நீர்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தால் இடதுசாரிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ள மத்திய அரசுக்கு மற்றொரு தலைவலியாக வந்துள்ளது வெங்காய விலை உயர்வு.

1998 தில்லி சட்டப்பேரவை தேர்தலில் வெங்காயத்தை பிரசார ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது பாரதீய ஜனதா.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அதே வெங்காய விலை உயர்வை காரணம் காட்டி தில்லியின் தற்போதைய காங்கிரஸ் அரசை பலமாக அசைத்துப் பார்த்தது பாஜக. ஆனால் அந்த முயற்சி பலனளிக்க வில்லை.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்குள் 11 சதவீதம் அளவுக்கு வடமாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்திருக்கிறது.

ஒரு கிலோ வெங்காயம் ரூ.20-க்கு விற்கிறது. நடுத்தர மக்களால் எப்படி வாங்க முடியும் என்கிறார் தில்லியை சேர்ந்த குடும்பத் தலைவி மம்தா.

ஆகஸ்ட் 13-ம்தேதி ரூ.962-க்கு விற்ற ஒரு குவிண்டால் வெங்காயத்தின் தற்போதைய விலை ரூ.1070.

சந்தையில் வெங்காயத்தின் வரத்து குறைந்திருப்பதால் விலை உயர்ந்து கொண்டே செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

கோகல்பூர், பெல்லாரி ஆகிய வெங்காய உற்பத்தி பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கினால் தில்லிக்கு வெங்காய வரத்து அறவே நின்று, விலை உச்சாணி கொம்புக்கு எகிறிவிடும் என்கிறார் மொத்த வியாபாரி ஒருவர்.

எதிர்க்கட்சிகள் அடிக்கடி வெங்காயத்தை காட்டி மிரட்டுவதால், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் தில்லி முதல்வர் ஷீலா திட்சித்.

ஆனால் இதுவரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் படவில்லை. எனினும் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு டன் ஏற்றுமதி வெங்காயத்தின் மீதான விலையை 20 டாலரிலிருந்து 345 டாலர் வரை விலை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

தினமணி

இந்தோனேசியாவில் குமுறும் எரிமலை.

30,000 பேர் வெளியேற்றம்

இந்தோனேசியாவில் உள்ள கரன்ஜிடாங் மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள எரிமலை குமுறத் தொடங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

எரிமலையிலிருந்து ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு லாவா தீக்குழம்புகள் வழிந்தோடி உள்ளது. மேலும் புகையுடன் கூடிய வெப்பகாற்று தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

தற்போது லேசாக குமுறத் தொடங்கி இருக்கும் எரிமலை எந்நேரமும் பெரும் சீற்றத்துடன் லாவா தீக்குழம்புகளை கக்கக்கூடும் என்று இந்தோனேசிய எரிமலைகள் ஆய்வுக்குழு தலைவர் சாட் சிமாடுபாங் எச்சரித்துள்ளார்.

1827 மீட்டர் உயரமுடைய இந்த எரிமலையின் அருகே ஐந்து கி.மீ. சுற்றளவில் வசிக்கும் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தீவில் வசிக்கும் அனைவரும் வெளியேறி விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கரன்ஜிடாங் மலையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு எரிமலையும் சாம்பல் துகள்களை உமிழ்ந்து வருகிறது.

ஆனால் இந்த எரிமலையால் அருகில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து இல்லை என்று இந்தோனேசிய எரிமலைகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி

80 நாள்களில் உலகைச் சுற்றிய விமானப்படை விமானிகள்

இலகு ரக விமானத்தின் மூலம் 80 நாள்களில் உலகைச் சுற்றிவந்து இந்திய விமானப் படை விமானிகள் சாதனை படைத்துள்ளனர்.

ராகுல் மோங்கா, அனில் குமார் ஆகிய இருவரும் இந்திய விமானப் படையில் பணிபுரியும் விமானிகள். உலகை மிக விரைவாக வலம்வரும் சாதனை முயற்சியை, இவர்கள் வெற்றிகரமாக நிறைவுசெய்ய பாகிஸ்தான் விமானப் படையும் தாராள மனதுடன் உதவி செய்துள்ளது.

உலகை வலம்வரும் திட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாறுதலால் ராகுல், அனில் குமார் இருவரும் கராச்சி நகரில் சனிக்கிழமை இரவு தரையிறங்க வேண்டியதாயிற்று. இதற்கு பாகிஸ்தான் விமானப் படையினர் ஒப்புதல் அளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கிளம்பி குஜராத்தின் பூஜ் நகருக்கு வந்துசேர்ந்தனர்.

ரேஷன் கார்டுகளில் குடும்பத்தலைவர் கைரேகை.

ரேஷன் கார்டு(குடும்ப அட்டை)களில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்கவும், போலி ரேஷன்கார்டுகளை அடையாளம் காணவும், குடும்பத் தலைவரின் கைரேகையை ரேஷன் கார்டில் பதிவுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக உணவு அமைச்சர் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பொது விநியோகத் திட்ட முறை குறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைச்சர் ஏ.வ. வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசியபோது வேலு இதைத் தெரிவித்தார்.

தினமணி

ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த ரூ. 31.5 கோடி

கோரையாறு, குடமுருட்டி ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த மாநில அரசு ரூ. 31.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் ஸ்டாலின் அளித்த பேட்டி:

வெள்ளத் தடுப்புக்காக ரூ. 210 கோடியில் காவிரிக் கரையைப் பலப்படுத்தும் திட்டம் "நபார்டு' உதவியுடன் நிறைவேற்றப்படும். இதற்காக பிரதமரைச் சந்திப்பேன். மேலும், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும், கோரையாறு, குடமுருட்டி ஆறுகளில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ. 31.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ரூ. 47.5 கோடியில் மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் ஸ்டாலின்.

தினமணி

மேலும் 3 மாவட்டங்களில் ஆண் பெண் விகிதம் கவலைக்கிடம்

ஆண், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மேலும் மூன்று மாவட்டங்களில் கவலைக்குரிய வகையில் குறைந்துவிட்டதால் அவற்றை ஐறப்புக் கவனப் பட்டியாலில் தமிழக அரசின் சுகாதாரத் துறை சேர்த்தது. கடலூர், பெரம்பலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெண்குழந்தைகள் பிறப்பு குரைந்துவிட்டதாகத் தெரிகிறது.

1960ல் தமிழகத்தின் ஆண் பெண் பிறப்பு விகிதம் 1000ம் ஆண்களுக்கு 995 பெண்களாயிருந்தது 2001ல் 1000க்கு 939ஆகக் குறைந்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு News Post India

சஞ்சய் தத்துக்கு பெயில்

உச்ச நீதி மன்றம் இன்று சஞ்சய் தத்துக்கு இடைக்கால பெயில் வழங்கியது. மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் சஞ்சய் தத் சார்பி கோர்ட்டில் ஆஜரானார். தடா நீதிமன்றம் தீர்ப்பின் பிரதியை சஞ்சய் தத்துக்கு வழங்கிய உடன் அவர் மீண்டும் கோர்ட்டில்் சரணடைந்து வழக்கமான பெயிலுக்கு மீண்டும் மனு செய்யவேண்டும். இதே கட்டுப்பாடுகளுடன் மேலும் ஐந்துபேருக்கு இடைக்கால பெயில் வழங்கப்பட்டது.

Family, friends cheer reprieve given to Sanjay Dutt Hindu - 55 minutes ago
Supreme Court Grants Sanjay Dutt, 5 Others Interim Bail Daijiworld.com
Bollywood Happy, Waits For Sanjay To Get 'regular' Bail NEWSPost India

தென்காசிபடுகொலை:மேலும் 5 பேர் கைது !

தென்காசியில் நடுரோட்டில் இரு பிரிவினர் வெட்டிக் கொண்டு 6 பேர் படுகொலையான வழக்கில் இன்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 14ம் தேதி நடந்த இச் சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று இவ்வழக்கில் மேலகரம், நன்னகரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கண்ணன், தங்கத்துரை, அலெக்சாண்டர், ஆப்ரகாம், பேரின்பராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரையும் நீதிபதி ஜெயகுமார் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பழைய மகாபலிபுரம் சாலை இனி ராஜிவ்காந்தி சாலை

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 64வது பிறந்த நாளையொட்டி, முதன்முறையாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கு வந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி சென்னை பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜிவ் காந்தி பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி முதல்வரை பூங்கொத்து அளித்து வரவேற்றார்

கம்ப்யூட்டர் புரட்சிக்கு வித்திட்டவர் ராஜிவ் காந்தி என்பதை நினைவு கூர்ந்த முதல்வர் இந்த விழாவில் 5 மாணவர்களுக்கு கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அணுசக்தி உடன்பாடு: நடுக்கத்தில் நடுவன் அரசு.

கவிழ்வதைத் தடுக்க காங். தீவிரம்.
இடதுசாரிகளின் கடும் எச்சரிக்கையால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி, புதிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து ஆராயும்.

அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால் ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று இடதுசாரிகள் எச்சரித்தனர். ஆரம்பத்தில் இடதுசாரிகளின் எச்சரிக்கையை படு சாதாரணமாக எடுத்துக் கொண்டது காங்கிரஸ். வாபஸ் பெற்றால் கவலையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அலட்சியமாக பதிலளித்தார்.

இதனால் கடுப்பான இடதுசாரிகள், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மிகத் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தனர். ஒப்பந்தம் அமல்படுத்தப்படக் கூடாது. மீறினால் ஆதரவு நிச்சயம் வாபஸ் பெறப்படும், தேவையில்லாத பல விளைவுகள் ஏற்படும் என பிரதமரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்தார். மேலும்...

பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகவேண்டும்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கட்டாயமாகத் திணிப்பதன் மூலம் பிரதமர் மன்மோகன்சிங் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுவருகிறார். எனவே அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்தை அதிமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. கருணாநிதியை பொருத்தவரை இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை செய்துவிட்டு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தே தீரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் விடாபிடியாக இருந்து வருகிறார். நாடாளுமன்றத்தில் தெரிந்தே பொய் சொல்வது, உண்மைகளை சொல்லாமல் மறைப்பது, மக்களுக்கு முற்றிலும் விரோதமாக செயல்படுவது போன்ற நிலைகளில் இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பிரதமர் மன்மோகன்சிங் செயல்பட்டுள்ளார்.

எனவே அவர் உடனடியாக பதவி விலகவேண்டும். இல்லை என்றால் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அளவில் மாபெரும் போராட்டத்தை நடத்தவேண்டியது வரும் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...