துணை குடியரசுத்தலைவர் பதவிக்கான போட்டியில் மகாத்மா காந்தியின் இரண்டு பேரன்கள் உள்ளதாக இச்செய்தி தெரிவிக்கிறது. தற்சமயம் ஆளுநராகப் பணிபுரியும் கோபால்காந்தி, முன்னாள் எம்.பி ராஜ்மோஹன் காந்தி ஆகியோரே அவர்கள்.
நந்திகிராம சம்பவங்கள் குறித்து கருத்தளித்த கோபால் காந்திக்கு இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்காமல் போகலாமாம்.
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முஷீருல் ஹசன், புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல், ஹிந்து ஆங்கிலப்பத்திரிக்கையின் ஆசிரியர் என்.ராம் உள்ளிட்டோரும் இடதுசாரி வட்டாரங்களில் ஆலோசனையில் உள்ளனராம். காங்கிரஸ்காரர்களாக இருக்கக்கூடாது என்பது இடதுசாரிகளின் நோக்கு.
தி மு க-வும் இப்பதவிக்கு குறி வைத்துள்ளது தெரிந்ததே.
Monday, July 9, 2007
அடுத்த துணை குடியரசுத்தலைவர் யார்?
Posted by வாசகன் at 11:21 PM 0 comments
BSNL: தயாநிதி காலத்து மோசடி கண்டுபிடிப்பு - ராஜா
இதுபற்றி இன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி:
இந்தியாவின் மிகப்பெரிய, அரசுசார் தொலைத்தொடர்புத் துறையான பி.எஸ்.என்.எல்., நிறுவனம் 4.55 கோடி புதிய இணைப்புகளுக்கான கருவிகள் பெறுவதற்காக போடப்பட்ட டெண்டரில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாநிதி மத்திய அமைச்சராக இருந்த போது நடந்த இந்த ஊழல் குறித்து விசாரிக்கவும், டெண்டரை மீண்டும் கோரவும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.
மொபைல் போன் மற்றும் சாதாரண போன் இணைப்புகள் வழங்குவதில் பொதுத்துறை நிறுவனங்களான எம்.டி.என்.எல்., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், எம்.டி.என்.எல்., நிறுவனம் டில்லி மற்றும் மும்பையிலும், நாட்டின் பிற பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் சேவை அளித்து வருகின்றன. இந்தியா முழுவதும் மேலும் 4.55 கோடி மொபைல் போன்(ஜி.எஸ்.எம்.,) இணைப்புகள் வழங்க அதற்கான புதிய கருவிகள் வாங்க பி.எஸ்.என்.எல்., திட்டமிட்டது. இதற்காக, கடந்த ஆண்டு மார்ச்சில் உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. இதற்கு எரிக்சன், மோட்டரோலா, நோக்கியா, சிமென்ஸ், இசட்.டி.இ., ஆகிய ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. டெண்டரில் குறிப்பிட்டு இருந்த தொழில்நுட்ப நிபந்தனைகளை இந்நிறுவனங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஆலோசனை செய்தது. டெண்டரில் குறிப்பிட்டு இருந்த தொழில்நுட்ப நிபந்தனைகள் திருத்தப்பட்டன. இதன் பிறகு தொழில்நுட்பக் காரணம் காட்டி மோட்டரோலா, இசட்.டி.இ., நிறுவனங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்ட போது மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த தயாநிதி இருந்தார். இத்துறையின் அமைச்சராக சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா பொறுப்பேற்றார். பி.எஸ்.என்.எல்., நிறுவனம் விடுத்த டெண்டரை செயல்படுத்தியதை நிறுத்தி வைத்தார்.
ஆறு மாதகாலமாக இது நிலுவையில் உள்ளதால் தனியார் மொபைல் போன் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக அதிருப்தி ஏற்பட்டது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா கூறியதாவது:பொதுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல்., நிறுவனமும் இது போல புதிய இணைப்புகளுக்கான கருவிகள் கேட்டு டெண்டர் விட்டது. அந்நிறுவனத்துக்கு இரண்டாம் தலைமுறை(2 ஜி) மற்றும் மூன்றாம் தலைமுறை (3 ஜி) கருவிகள் சப்ளை செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்காக எம்.டி.என்.எல்., நிறுவனம் ஒரு இணைப்புக்கு ரூ.2,845 மட்டுமே செலுத்த வேண்டும்(இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்ட போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 41 என்ற அளவில் இருந்தது). ஆனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் போட்டுள்ள டெண்டர் படி ஒரு இணைப்புக்கு ரூ.4,940 செலுத்த வேண்டும். மொத்தம் 4.55 கோடி இணைப்புகளுக்கான கருவிகளை பெற வேண்டும். ஒரு இணைப்புக்கு ரூ.4,940 என்றால் 4.55 கோடி இணைப்புகளுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் என்று கணக்கிட்டு பார்த்தால் மலைப்பாக தான் தோன்றுகிறது. இந்த விஷயத்தில் பி.எஸ்.என்.எல்., தேவையில்லாமல் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழக்க வேண்டி உள்ளது. எனவே தான் டெண்டரை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் காலதாமதம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
நாட்டின் தகவல் தொடர்பு இணைப்புகளை அதிகரிக்க நிர்ணயிக்கப்பட்ட காலத்தை தாண்டி இந்த காலதாமதம் செல்லாது. இந்த விஷயத்தில் விரைவில் மறுபரிசீலனை செய்யப்படும். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு விண்ணப்பித்த ஐந்து நிறுவனங்களுடனும் பேசப்படும். எம்.டி.என்.எல்., நிறுவனத்துக்கு, "2ஜி' மற்றும் "3ஜி' கருவிகளை மோட்டரோலா நிறுவனம் தான் சப்ளை செய்ய உள்ளது. இந்நிறுவனம் உலகளவில் தலைச்சிறந்த ஒன்று. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக இந்நிறுவனம் தகுதி பெறவில்லை என்று பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நிராகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அமைச்சர் ராஜா கூறினார்.ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும் டெண்டருக்கு பதிலாக புதிய டெண்டர் விடுவது குறித்து பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு அமைச்சர் ராஜா அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி: தினமலர்
Posted by வாசகன் at 11:13 PM 1 comments
கோயில் யானை மிதித்து சிறுவன் பலி.
கோயில் யானை மிதித்து சிறுவன் பலியான துயரம் கர்நாடக மாநிலம் எடியூரில் இன்று சம்பவித்துள்ளது.
சச்சின் என்ற எட்டுவயது சிறுவன் புகழ்பெற்ற சித்தலிங்கேஸ்வரா கோயிலின் யானைக்கு வாழைப்பழம் கொடுக்க நெருங்கிய போது, கங்கா என்ற பெயருடைய அந்த யானை அச்சிறுவனை காலால் மிதித்துக்கொன்றது.
அச்சமயம் பெற்றோரோ, பாகனோ அருகில் இல்லையாம்.
TOI News
Posted by வாசகன் at 10:57 PM 0 comments
ஜெ.க்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தேர்தல் ஆணையம்.
கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் இன்று வழக்குப் பதிவு செய்தது.
தி மு க வின் வட சென்னை எம்.பி செ.குப்புசாமி இது தொடர்பாக தொடந்திருந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இதுகுறித்த வழிகாட்டும் ஆணையை கடந்த ஜூன்13ல் பிறப்பித்திருந்தது.
புதுக்கோட்டை, புவனகிரி, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி என்ற நான்கு தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா தனித்தனியாக அப்போது மனு தாக்கல் செய்திருந்தார்.
புதுக்கோட்டை மற்றும் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரிகள் அடுத்துள்ள நகர நீதிமன்றங்களில் இவ்வழக்கை இன்று தொடந்துள்ளனர்.
TOI
Posted by வாசகன் at 10:40 PM 1 comments
பாட்னா இரயில் நிலையம் உலகத்தரத்தில்!
மத்திய ரெயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ்வின் முன் முயற்சியில் பாட்னா ரெயில் நிலையம் உலகத்தரத்தை அடைகிறது. பயணிகளுக்கான அதிகபட்ச வசதிகளும், புதிய அதிவேக தொடர்வண்டிகளும் இயக்கப்பட உள்ளனவாம்.
இதற்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாம்
TOI செய்தி
Posted by வாசகன் at 10:30 PM 0 comments
உமர் அப்துல்லா உயிர் தப்பினார்.
கஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா இன்று தீவிரவாதிகளின் குண்டு தாக்குதலிலிருந்து உயிர் தப்பினார்.
குப்வாரா மாவட்டத்தில் பேரணி ஒன்றைத் தொடங்கி வைத்த சில நிமிடங்களில் அப்துல்லா தங்கி இருந்த வீட்டின் மீது இரண்டு கிரேனேட் குண்டுகள் வீசப்பட்டன.
மத்திய சிறப்புக்காவல்படை காவலர்களும், சிறப்பு அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க....TOI
Posted by வாசகன் at 10:23 PM 0 comments
சீனா: மக்கள்தொகை கட்டுப்பாடு மேலும் கடுமையாகிறது
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவற்றுள் அரசு அதிகாரிகள் ஒரு குழந்தைக்கு மேல் பெறக்கூடாது என்பதும் ஒன்று. ஒரு குழந்தைக்கு மேல் இன்னொரு குழந்தை பெறும் அரசு அதிகாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
ஆனால் ஹுனான் மாகாணத்தில் மட்டும் 2000 அரசு அதிகாரிகள் இந்தக் கட்டுப்பாட்டை மீறி ஒன்றுக்கு மேல் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அபராதத் தொகையை செலுத்தி விட்டனர். மிக எளிதாக அபராதத் தொகையை கட்டி விடுவதால் அபராதத் தொகையை மேலும் அதிகரிக்கவும் பதவி உயர்வை ரத்து செய்வது குறித்தும் சீன அரசு ஆலோசித்து வருகிறது.
எம்.பி.க்களுக்கும் இதே கட்டுப்பாடு இருந்தும் சில எம்.பி.க்கள் 4 மனைவிகளை திருமணம் செய்து கொண்டு 4 குழந்தை பெற்றுள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.
Posted by வாசகன் at 10:11 PM 0 comments
'சிவாஜி காங்கிரசை அவமதிக்கிறது' - புதிய வழக்கு
சென்னை: சிவாஜி படத்தில் காங்கிரஸ் கட்சியை அவதூறாக சித்தரித்துள்ளதாக கூறி அப்படத்தைத் தடை செய்ய வேணடும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங்கின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிவாஜி படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் நன்கொடை கேப்பிடேசன் பணம் வாங்குவது குறித்து கூறுவதாக ஒரு காட்சி வருகிறது.
படத்தின் நாயகனான சாப்ட்வேர் என்ஜீனியர் ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து, வில்லனான பல்கலைக் கழக வேந்தர் ஆதிகேசவனுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடைய படங்களுக்கு மத்தியில் அவர்கள் பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் குற்றம் செய்யும் வில்லன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த காட்சி அமைந்துள்ளது.
இதனால் இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் ரூ.50 கோடி நஷ்ட ஈடாக தர உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை செயலாளர், சென்சார் போர்டு, நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், இயக்குனர் ஷங்கர், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மனு நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
தாட்ஸ்தமிழிலிருந்து நேரடி மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
Posted by சிறில் அலெக்ஸ் at 9:06 PM 3 comments
முலாயம் சிங் சொத்து மதிப்பு: சிபிஐ கோருகிறது
உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் ஆர்.பி. பாண்டேவுக்கு சிபிஐ எழுதியிருக்கும் கடிதத்தில், கடந்த 1977ம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்த முலாயம் சிங் தமது சொத்து மதிப்பாக அளித்த உறுதிமொழியை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சிபிஐ அனுப்பியுள்ள இந்தக் கடிதம் தலைமைச் செயலகத்திற்கு கடந்த சனிக்கிழமை கிடைத்திருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
லக்னோ மற்றும் முலாயம் சிங்கின் சொந்த கிராமமான மெயின்புரியில் 2 வங்கிக் கணக்குகள் 2.53 ஏக்கர் நிலம், ஒரு வீடு ஆகியவை தமக்கு சொந்தமானவை என்று முலாயம் சிங் 1977ம் ஆண்டு தேர்தலின் போது குறிப்பிட்டிருந்தார். 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜீப், ஒரு ஸ்கூட்டர், 3 எல்ஐசி பாலிசி போன்றவையும் இருப்பதாக அவர் அந்த உறுதிமொழியில் கூறியிருந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் முடிவடைந்த சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங் தமக்கு சொந்தமாக 2.25 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விவசாய நிலம் 14.63 ஏக்கர், 8 வங்கிக் கணக்குகளில் 35 லட்சம் ரூபாய் போன்றவற்றையும் தமது உறுதிமொழிப் பத்திரத்தில் முலாயம் சிங் குறிப்பிட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- MSN INDIA
The Hindu News Update Service :: CBI seeks information on Mulayam's assets
Posted by Boston Bala at 9:01 PM 0 comments
ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும்: ஜெ
(பழைய படம்)
சென்னை: ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும் என அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறினார். சென்னையில் அவர் அளித்த பேட்டியில் , ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால் அவரை பாசத்துடன் ஏற்று உரிய மரியாதையுடன் நடத்துவோம் என்றார்.
- தினமலர்
Posted by சிவபாலன் at 7:49 PM 8 comments
கர்நாடக அரசு: கஃபீலின் ஈடுபாடு பற்றி ஆதாரங்கள் உள்ளன
கர்நாடக அரசு கிளாஸ்கோ சதியில் பங்கேற்ற கஃபீல் அஹ்மது பற்றி நடத்திய புலனாய்வில் இந்த சதிச்செயலில் அவரதை ஈடுபாட்டை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மாநிலத்தின் உள்துறை அமைச்சர் எம் பி பிரகாஷ் "எங்களின் புலனாய்விலும், பிரித்தானிய காவல்துறை பகிர்ந்த தகவல்களையும் கொண்டு இந்தச் சதியில் அவரது பங்கை உறுதி செய்ய முடிகிறது" என்று கூறினார். இவர்கள் மிகுந்த அறிவுடனும் நாகரீகம் அறிந்தவர்களாகவும் இருந்தும் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் இவர்கள் தெரு ரவுடிகளைவிட பயங்கரமானவர்கள் என்றும் அவர் கூறினார்.
DNA - India - Credible information about Kafeel's involvement: Karnataka minister - Daily News & Analysis
Posted by மணியன் at 7:01 PM 0 comments
ஜோதிபாசு 94ஆம் பிறந்தநாள்
இன்று கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் 94வது பிறந்தநாள். வழமையாக பொதுவுடமை தோழர்கள் தங்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது இல்லை எனினும் தனது சீடரும் மாநில போக்குவரத்து மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான சுபாஷ் சக்ரவர்த்தியின் வேண்டுகோளை தட்டமுடியாது இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதாகவும் கூறினார். " இந்த இனிய நேரத்தில் எதிர்கட்சிக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் மேற்கு வங்கம் தொழில்மயமாவதை ஆதரிக்க வேண்டும், நாங்கள் மக்களுக்கு உணமையில் நல்லதையே செய்கிறோம்" என்று கூறினார். விவசாயத்தில் முன்னணி வகிக்கிறோம்; பஞ்சாயத்து ஆட்சியில் முதன்மையாக இருக்கிறோம். இனி நான்காவதாக இருக்கும் தொழிற்துறையிலும் முன்னணிநிலையை அடைய வேண்டும். சிறுதொழில்களும் நடுத்தர தொழில்களும் வளர விரும்புகிறோம். அதற்கு எதிர்கட்சிகள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வாழ்க்கைக் குறிப்பும் மேல் விவரங்களுக்கும்...India eNews -
Posted by மணியன் at 6:33 PM 0 comments
தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையத்திற்கு ஒளிபரப்புத்துறையையும் கட்டுபடுத்த அதிகாரம் உண்டு: தில்லி உயர்நீதிமன்றம்
தில்லி உயர்நீதிமன்றம் இந்திய தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையம் (TRAI) ஒளிபரப்பு துறையையும் கட்டுபடுத்த அதிகாரம் கொண்டது என தீர்ப்பளித்துள்ளது. சோனியின் டிஸ்கவரி சானலும் ஸ்டார் தொலைக்காட்சியும் இ.தொ.க.ஆக்கு தொலைதொடர்பு சேவைகளை மட்டுமே கட்டுப்படுத்த இயலும் என இந்த நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமனறம்் இிந்த ஆணையம் ஒளிபரப்பு சேவைகளின் கட்டணங்கள் மற்றும் இணைப்பு பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும் என தீர்ப்பு வழங்கியது.
Indiantelevision.com's Digital Edge: Trai has powers to regulate broadcasting, control tariff: HC
Posted by மணியன் at 5:00 PM 0 comments
மும்பையில் ஓஎன் ஜி சி கப்பல் விபத்து: ஐவர் காணவில்லை
எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் சரக்குக் கப்பல் சமுத்ரிகா 10 மும்பை கடற்பிரதேசத்தில் மூழ்கியதில் ஐந்து பேர் காணவில்லை. மதியம் 12:30க்கு நடந்த இந்த விபத்தில் மொத்த பயணிகள் பதினான்கு பேரில் மற்ற ஒன்பது பேர் உடனடியே காப்பற்றப் பட்டனர். ஓஎன் ஜி சி மற்றும் கடலோர காவற்படையினர் மற்ற ஐவரை ஹெலிகாப்டரில் தேடி வருகின்றனர்.
மேலும்...
Posted by மணியன் at 4:48 PM 0 comments
தில்லியில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயம்,ஒருவர் மரணம்
தலைநகர் தில்லியின் போக்குவரத்ட்துவிதிகளை மதிக்காத நீல வரி (Blueline) வண்டிகளின் உரிமத்தை இரத்து செய்யவிருக்கும் நேரத்தில் அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து ஒருவரின் மரணத்திலும் 25 மாணாக்கர்களுக்கு காயத்திலும் முடிந்துள்ளது. கேந்திரிய வித்யாலயா, கார்காடூமா பள்ளிச் சிறார்களை ஏற்றிக்கொண்டு சென்ர அந்த பேருந்து காலை 8 மணிக்கு விகாஸ் மார்கில் கவிழ்ந்தது. சுலைமான் என்ற 50 வயது பொறுப்பாளர் விபத்தில் பலியானார். வண்டியின் ஓட்டுனர் பேருந்தை விட்டு ஓடிவிட்டார். காயமடைந்த மாணவர்களை லால் பகதூர் மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டனர். 18 பேர் முதலுதவியுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இது பற்றி...IBNLive.com > Delhi school bus overturns, bluelines get the axe : school bus, children, accident
Posted by மணியன் at 2:32 PM 1 comments
குளிக்க சென்ற 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலி.
கும்பக்கரை அருவி பகுதியில் குளிக்க சென்ற 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலியானார்கள். சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் 13 பேர் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் இருந்து திரும்பி வரும் வழியில் கும்பக்கரையில் இறங்கினர். அங்கு அருவியில் தண்ணீர் வராததால் மேலே உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது குளத்தில் குளித்த சென்னை டி.நகரை சேர்ந்த ஆனந்த், ஆந்திர மாநிலம் நிஜாமாபாத்தை சேர்ந்த பிரனில் ஆகிய 2 பேர் நீச்சல் தெரியாமல் சிக்கி உயிரிழந்தனர்.
Posted by Adirai Media at 2:26 PM 1 comments
இந்தியா-வங்கதேசம் இடையிலான ரயில் சோதனை ஓட்டம்
இந்தியா-வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயிலின் சோதனை ஒட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இருநாடுகளுக்குமிடையே முறையான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
'இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவு எக்ஸ்பிரஸ்' என்னும் பொருள்படும் 'இண்டர் கண்ட்ரி மாய்ட்ரி (Moitree) எக்ஸ்பிரஸ்' ரயில், கோல்கத்தாவிலிருந்து வங்கதேசத்தின் மேற்கு தர்ஷனா மாகாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சென்றடைந்தது.
நீல நிறத்துடன், பளபளப்பான 6 புதிய பெட்டிகள், ஒரு ஆய்வு பெட்டியுடன் சென்ற இந்த ரயிலில் இந்திய கூடுதல் உள்துறை செயலாளர் அஹ்மத் மற்றும் 31 அதிகாரிகள் பயணம் செய்தனர். நட்புறவு ரயில் இரண்டு நிலையங்களில் ஓய்வுக்குப் பிறகு டாக்கா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு சென்று சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா-வங்கதேசம் இடையே ஆகஸ்டு மாத மத்தியிலிருந்து, தொடர்ந்து நேரடி பயணிகள் ரயில் இயக்குவது குறித்து இருநாட்டு அதிகாரிகளும், திங்கள்கிழமை டாக்காவில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் வங்கதேசத்தின் சார்பில் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டி.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டு, ரயில் போக்குவரத்தை முறைப்படுத்துவது மற்றும் தீவிரவாதிகள் ரயில் மூலம் ஊடுருவுவதைத் தடுப்பது குறித்து பேசுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியேற்றத்துறை அலுவலகத்தை இந்திய எல்லையில் உள்ள ஜீடே மற்றும் வங்கதேச எல்லையில் தர்ஷனா பகுதியில் அமைக்கலாம் என்று புதுதில்லி வட்டாரங்கள் தெரிவித்ததாகவும், பயணிகளுக்கு வசதியாக இருப்பதற்காக ரயில்கள் புறப்படும் இடத்திலேயே இந்த அலுவலகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்று வங்கதேச தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ரயிலின் பயணிகள் பெட்டிகள் இந்தோனேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, ஷெட்பூர் ரயில்வே பணிமனையில் அவை இணைக்கப்பட்டது. இதில் ஏ.சி. வகுப்பு, ஏ.சி. படுக்கை வசதி, பொதுவகுப்பு, தூங்கும் வசதி கொண்ட பெட்டி, இரு புறத்திலும் மின்சாதன பெட்டி, சமையலறை மற்றும் பிரார்த்தனை செய்வதற்கான பெட்டிகள் உள்ளன.
இந்த பெட்டிகள் ரூ.1.80 கோடி முதல் 3 கோடி வரையிலான மதிப்புள்ளவை என்று ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர். பயணக்கட்டணம் ரூ.320, ரூ.480 மற்றும் ரூ.800 என மூன்று விதங்களில் இருக்கும் என்றும், இந்த வருவாயில் சுமார் 78 சதவீதத்தை வங்கதேசமும் மீதமுள்ளதை இந்தியாவும் பங்கிட்டுக் கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 மணி நேர பயணம் இந்த ரயில் பாதையானது 120 கிலோமீட்டர் தூரத்தை இந்தியாவிலும், 418 கிலோமீட்டர் தூரத்தை வங்கதேசத்திலும் கொண்டுள்ளது. 10 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலில் 760 பயணிகள் செல்ல முடியும்.
இந்த ரயில் தினமும் டாக்காவிலிருந்து காலை 7.45 மணிக்கும், மறுமுனையில் இந்தியாவிலிருந்து 7 மணிக்கும் புறப்படும். இதன் மொத்த பயண நேரம் 11 மணி நேரமாகும். இதில் குடியேற்ற அதிகாரிகளின் சோதனை நேரமும் அடங்கும்.
கடந்த 2001-ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமராக இருந்தபோது இருநாடுகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்துத் திட்டம் கையெழுத்தானது. ஆனால் கலீதா ஜியா பிரதமராக இருந்தபோது இத்திட்டம் கைவிடப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி
BBC NEWS | South Asia | First India-Bangladesh train link
Posted by Boston Bala at 5:51 AM 0 comments
'ஏழை' எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம்
சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை அளிக்க வேண்டும் என்று செட்டிநாடு கல்லூரி நிர்வாகத்துக்கு ராமன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மாணவரை ஏழை என நிர்ணயிக்கப்போவது எது என்பதற்கு அரசு அறிவிப்பில் விளக்கம் இல்லை. அப்படியே 'ஏழை' என ஒரு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சலுகை அளித்தாலும்கூட, அந்த மாணவர் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடியைப் பெற்று ரூ. 2.55 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தியாக வேண்டும்.
தினமணி
Posted by Boston Bala at 5:41 AM 1 comments
வாக்களிப்பதை புறக்கணித்தல் தேர்தல் விதிமீறல்: முன்னாள் தேர்தல் கமிஷனர்
குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி, தங்களது எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை வாக்களிப்பதை புறக்கணிக்க அறிவுறுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்தால் அது தேர்தல் விதிமீறலாக அமையும் என முன்னாள் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது:
அரசியல் கட்சிகள் பதிவு செய்து கொள்ளும் போது, 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 29-ன் படி, உள்கட்சி ஜனநாயகத்தை காப்பதற்கான உறுதியளிக்கின்றன. தேர்தலில் வாக்களிப்பதென்பது ஜனநாயகக் கடமை. அதை பூர்த்தி செய்வது கட்சிகளுக்கு அவசியமான ஒன்று.
இதுதவிர்த்து, கட்சிகள் தங்களது உறுப்பினர்களை தேர்தலில் வாக்களித்தலை புறக்கணிக்க அறிவுறுத்தினால் அது தேர்தல் விதிமீறல் மட்டுமல்ல; இந்தியத் தண்டனைச் சட்டப்படி தண்டனைக்குரியதாகும்.
அதேபோல, குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சிகள் தங்களது வாக்காளர்களின் முக்கியத்துவத்தை ஒரு வேட்பாளருக்கு மேல் தெரிவிக்கக்கூடாது என்று வழிகாட்டுதலும் தேர்தல் விதிமீறல் என்றார் கிருஷ்ணமூர்த்தி.
தினமணி
Posted by Boston Bala at 5:35 AM 0 comments
b r e a k i n g n e w s...