.

Sunday, June 17, 2007

மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளருக்கு ரஜினி மன்றம் ஆதரவு

மதுரை மாவட்ட ரஜினி தலைமை நற்பணி மன்ற நிர்வாகிகள் சோலைராஜா, ரபீக், பாண்டியன், சிங்க ராஜ், தம்புராஜ் உள்பட நிர்வாகிகள் நேற்று மாலை மதுரை மீனம்பாள்புரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.அழகிரி, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் முன்னிலையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்ய போவ தாகவும் அறிவித்தனர்.

இதனை வரவேற்று மு.க.அழகிரி ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

முன்னாள் எம்.பி. ராம்பாபு பேசும்போது:- ரஜினிகாந்த் நடித்து வெளிவந்திருக்கும் சிவாஜி சினிமா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ள வேளையில் ரஜினி மன்றத்தினரின் ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என்றார்.

மாலைமலர்

சீனாவில் அடிமைத் தொழிலாளர்களை பயன்படுத்தியவர்கள் கைது

சீனாவில் சட்டவிரோதமான சுரங்கங்கள் மற்றும் செங்கற் தொழிற்சாலை ஆகியவற்றில் அடிமைத் தொழிலாளர்களை பயன்படுத்தியதுடன் தொடர்புடைய 160க்கும் அதிகமானவர்களை தாம் தற்போது கைது செய்துள்ளதாக சீனாவின் வட பகுதியில் உள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ஆட்தேடலின் போது கைது செய்யப்பட்டவர்களில், சான்சி மாகாணத்தில் உள்ள செங்கற் தொழிற்சாலையில் பணியாற்றிய தலைமை அதிகாரி ஒருவரும் அடங்குவார். அநேகமாக 570 பேர் அடிமைகளாகக் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேர் சிறார்கள். சான்சி மற்றும் அண்டை மாநிலமான ஹெனன் ஆகிய இடங்களில் இவர்கள் விடுவிக்கப்பட்டுளனர்.

இந்த அராஜகங்கள் குறித்து ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வெளிவந்ததை அடுத்து, அவை குறித்து விசாரிக்குமாறு சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் உத்தரவிட்டிருந்தார்.

- பிபிசி தமிழ்

BBC NEWS | Asia-Pacific | Scores held over Chinese slavery

கூகிளில் விளம்பரம் செய்வதை ஈ-பே நிறுத்தியது

கூகுளின் 'ஆட்வோர்ட்ஸ்' பயனர்களில் ஈ-பே மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. கூகிள் விளம்பரங்களுக்காக மட்டும் வருடத்திற்கு 25 மில்லியன் டாலர்களை ஈபே செலவழிக்கிறது.

ஈபே-யின் மாநாட்டுக்குப் போட்டியாக கூகிளும் தவணை அட்டை செயலாக்க கருத்தரங்கை ஒரே நேரத்தில் நடத்துவது இதற்கான காரணம். கடன்/தவணை அட்டை வியாபாரத்தில் கூகிளும் நுழைவதால் ஈபே-யின் நிறுவனமான பே-பால் (PayPal) வணிகம் பாதிக்கப்படும் என்று எண்ணுவதால், இந்த திடீர் வாபஸ் அறிவிப்பு வெளியானது.

BBC NEWS | Business | Angry eBay pulls Google adverts

புற்றுநோய் பகுப்பாய்வு: தமிழ் விஞ்ஞானியின் சாதனை!



புற்றுநோய்க்கான சாத்தியங்களை அதன் மிக ஆரம்பக்கட்டத்திலேயே-சிறிதே இரத்தம், சிறிதே சிறுநீர் வைத்து ஆராய்ந்து கண்டறிந்து விடுவதன் மூலம் பெருமளவு தடுத்துவிடமுடியும் என்று தமிழ்நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி முனைவர். வ.மாசிலாமணி நிரூபித்துள்ளார். மாசிலாவின் புற்றுநோய் பகுப்பாய்வு (Masila's Cancer Diagnostics) என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வரிய சாதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் (Indian Council of Medical Research) அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பு வழமையாக நடைமுறைபடுத்தப்பட்டால், வருடாவருடம் இலட்சக்கணக்கானோர் புற்றுநோய் தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்ள முடியும். 'தென்றல்' என்று பெயரிடப்பட்டுள்ள தனது அரசுசாரா, இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் மூலம் ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு தாம் சேவையாற்றவிருப்பதாக விஞ்ஞானி மாசிலாமணி தெரிவித்துள்ளார்.


முனைவர் மாசிலாமணி தன்னுடைய கண்டுபிடிப்பை அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் -டெல்லி (AIIMS - DELHI), குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், அஹமதாபாத் ஆகியவற்றில் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தார் இச்சாதனையை அங்கிகரித்து அளித்த சான்றிதழைப் பெற்ற பின், தன்னுடைய மகனும் இளம் விஞ்ஞானியுமான இளங்கோவனுடன் குடியரசு தலைவர்
அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.

விஞ்ஞானி முனைவர் வ.மாசிலாமணி ரியாதிலுள்ள அரசர் சவூத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

MASILAMANI'S
Invention Gets Validation


ரியாத் பதிவர் பாலமுகுந்தன் இது பற்றி

வன்புணர்வுக்கு உள்ளான பெண்களின் படங்களைப் பத்திரிக்கைகளில் வெளியிடத் தடை

'வன்புணர்வுக்கு ஆளாகி நீதி கேட்டு காவல் நிலையம் வரும் பெண்களின் புகைப்படங்களை, ஊடகங்களில் வெளியிடக் கூடாது' என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்தியப் பெணகளுக்கான தேசிய கூட்டமைப்பின்(National Federation of Indian Women) தமிழக மாநிலச் செயலாளர் கே.சாந்தகுமாரி பதிவு செய்த பொதுநல வழக்கொன்றை விசாரித்த நீதிபதி தர்மராவ் மற்றும் நீதிபதி பழனிவேலு ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

'காவல்துறையினரால் இது போன்ற புகைப்படங்களை ஊடகத்தினர் எடுக்காமல் தடுக்க முடியும். ஆனால் மனிதாபிமானமும் புரிந்துணர்வும் இல்லாமல், அவர்கள் இந்த நடவடிக்கைகளை அனுமதித்து வருகின்றனர்.' என்றும் கூறுகிறது அந்தத் தீர்ப்பு.

மேலும்: Court bars publication of pictures of rape victims - The Hindu

தைலாபுரம் நிகழ்ச்சிகளின்: குறுந்தகடு கருணாநிதி வெளியிட்டார்

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சிலப்பதிகாரம், குற்றால குறவஞ்சி இசை குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது.

முதல்-அமைச்சர் கருணாநிதி சிலப்பதிகார இசைகுறுந்தகடை வெளியிட இசைஅமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதன் பெற்றுக்கொண்டார். குற்றால குறவஞ்சி குறுந்தகடை பேராசிரியர் திருமுருகன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

தைலாபுரம் நிகழ்ச்சிகளை குறுந்தகடாக்கி வெளியிட்டு இருக்கிறார்கள். அதையும் நாமும் கண்டு மகிழ்ந்தோம். குற்றால குறவஞ்சி, சிலப்பதிகாரம், பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை இசைபடையாக பொழிந்ததை கண்டோம்.

பொங்கல் தினத்தில் தைலாபுரம் தோட்டதில் நடந்த நிகழ்ச்சிகளை கண்ட போது எனக்கும் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. ஏனென்றால் எனக்கு அப்படி ஒரு தோட்டம் இல்லையே என்று. தைலாபுரம் என்ற பெயரை தமிழார்வபுரம் என்று மாற்றுங்கள். இந்த கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றினால் உங்கள் கோரிக்கை நிறை வேற்றப்படும்.

தமிழ்மீதும், தமிழர் கலை யின் மீதும், தமிழ் இசை மீதும் உங்களுக்குள்ள ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். போற்றுகிறேன் கொங்கு தமிழ்வளர்ச்சி அறக்கட் டளை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை நான் தொடங்கி வைத்து இருக் கிறேன். எதையும் முடக்கி வைத்து பழக்கம் இல்லை. அது தொடர்கிறது.

தமிழனுக்கு இசை உண்டு அது மறைந்து போகும் நிலை வந்த போது ராஜாஅண்ணாமலை செட்டி யார் போர்க்கோலம் பூண்டு தமிழ் இசையை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.ராஜாஜி கல்கி போன்றோரும் அதற்காக பாடுபட்டனர்.

இந்த உலகத்தில் தமிழ் நாட்டில்தான் தாய் மொழியை தமிழாக கொண்டு வேறு மொழியில் பாடுகிறார்கள் என்று ஆர்.கே. சண்முகம் செட்டியார் கூறி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் வாழ்ந்த தியாகராயர் அவரது தாய் மொழியான தெலுங்கில் பாடல் பாடியுள்ளார். எனவே தாய் மொழியை மதிக்க வேண்டும் என்று ராஜாஜி கூறி உள்ளார்.

தமிழர்களுக்கு என்று ஒரு இசை இல்லை என்ற நிலை இருக்ககூடாது. டாக்டர் ராமதாஸ் சுட்டி காட்டியபடி சீர்காழி மூவ ருக்கு மணி மண்டபம் உட னடியாக கட்டப்படும். மற்ற கோரிக்கைகளையும் நானே எழுப்பியதாக கருதி நிறை வேற்ற முயற்சி செய்வேன் அதற்கு தாங்களும் உறு துணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர்டாக்டர் ராமதாஸ் சிறப்புரை யாற்றினார். அவர் கூறியதாவது:-

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக இசைத்தமிழை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இளைஞர் சமுதாயமும் இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

கடந்த 4 ஆண்டுகளாக தைலாபுரம் தோட்டத்தில் பொங்கல் தினத்தை யொட்டி 3 நாட்கள் பழந்தமிழ் கலைகளை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக நடத்தி வருகிறோம். அதில் மகள், மருமகள், பேரன், பேத்திகள் பங்கேற்று வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியை நீங்களும் இங்கு காட்சியாக ரசித்தீர்கள்.

மற்றவர்களுக்கும் இது போன்ற ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக அதை உங்களுக்கு காட்டினோம்.

தற்போது தமிழ்நாட்டில் சரியான தமிழை பேசினால் முகம் சுளிக்கிறார்கள். ஆங்கிலம் கலந்து பேசும் போதுதான் மகிழ்கிறார்கள். சங்கர் என்ற பெயரை ஷங்கர் ஆக்கி விட்டார்கள். பல தமிழ் பெயர்கள் மாறி வருவதால் ஆங்கில கலப்பு இல்லாமல் பேசினால் தமிழ் வெறியன் என்கிறார்கள். புதுச்சொல்லை அறிமுகப்படுத்தும் போது கிண்டலும், கேலியும் வருகிறது. தமிழ்நாட்டில் தான் இந்த நிலை இருக்கிறது.

முதல்வரை அழைத்து தமிழ் பண்ணிசையை தொடங்கினோம். அதை மீட்டு எடுக்க வேண்டும் நாங்கள் எதை செய்தாலும் தமிழை, முத்தமிழை அழைக்காமல் செய்வதில்லை. இது வெறும் புகழ்ச்சி வார்த்தை அல்ல தமிழில் 11 ஆயிரத்து 991 பண்கள் இருந்ததாக சொல்கிறார்கள். தற்போது 43 ஆக குறைந்து விட்டது. சீர்காழி மூவருக்கு மண்டபம் அமைப்பதற்காக 11 கிரவுண்ட் நிலம் ஒதுக்கி கலைஞர் அடிக்கல் நாட்டினார். ஆட்சி மாற்றம் வந்ததால் இன்று வரை அது நிறைவேற வில்லை. இனி அதை நிறைவேற்றுங்கள் வில்லை. தமிழ்நாட்டில் 17 இசைப்பள்ளிகள் உள்ளன. அவற்றுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். 4 இசைக்கல்லூரிகளில் பாடங்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும். சென்னையில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக யாழ்வடிவில் ஒரு அரங்கம் அமைக்க வேண்டும். அது அடையாள சின்னமாக இருக்க வேண்டும்.

தமிழ் மொழியில் முனைவர் பட்டம் பெறும் சிலருக்கு தமிழை உச்சரிக்க கூட தெரியவில்லை எனவே தமிழில் முனைவர் பட்டம் பெறுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல சிறப்பான தேர்வு நடத்தி தஞ்சை தமிழ் பல்கலைகழகம் மூலம் தான் பட்டம் அளிக்கவேண்டும்.

இந்திய அரசியல் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. 2,3 நாட்கள் டெல்லியில் தங்கி இருந்து சாதித்துவிட்டு வந்து இருக்கிறார்கள். தமிழ் உள்பட நாட்டினில் உள்ள 18 மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும். அதையும் சாதிக்கும் ஆற்றல் உங்களுக்குத்தான் உண்டு. அது நிறைவேறினால் தமிழ் அரியணை ஏறும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய மந் திரிகள் ராசா, அன்புமணி, வேலு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, கனிமொழி, தயாளு அம்மாள் கவிஞர்கள் வைரமுத்து, அப்துல்ரகுமான், சு.ப.அறவாணன், மற்றும் பாலசுப்பிரமணியம், நடராச பிள்ளை, ஏவிஎம் சரவணன் உள்படபலர் கலந்து கொண் டார்கள்.

முன்னதாக சவுமியா அன்புமணி வரவேற்றார். முதல்-அமைச்சர் கருணா நிதிக்கு கண்ணகிசிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பல்வேறு கலைஞர்களுக்கு கருணாநிதி நினைவு பரிசு வழங்கினார். டாக்டர் ராமதாசின் பேத்தி சங்கமித்ரா நன்றி கூறினார்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சிலப்பதிகாரம்: இசை குறுந்தகடு கருணாநிதி வெளியிட்டார்: மாலைமலர்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் & திருச்செந்தூரில் உள்வாங்கல்

இந்தோனேசியாவின் வடகிழக்கு பகுதியில் கடலுக்கு அடியில் சனிக்கிழமை காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவானது. நிலநடுக்கத்தால் சுனாமி ஏதும் உருவாகவில்லை என அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சனிக்கிழமை காலை சுமார் 50 அடி தொலைவுக்கு கடல் உள்வாங்கியது. 5 மணி நேரத்திற்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது. பகல் 11 மணிக்கு பின்னரே முற்றிலும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

'சர்' ஆனார் சல்மான் ருஷ்டி

பிரபல இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு சனிக்கிழமை நைட்ஹுட் பட்டம் வழங்கி கௌரவித்தார் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத். பல்வேறு துறைகளில் அரும்பங்கு ஆற்றியதற்காக பிரிட்டனில் குடியேறியுள்ள மேலும் 19 இந்தியர்களுக்கும் அவர் விருது வழங்கி கௌரவித்தார்.

ராணியின் பிறந்த நாளையொட்டி பல துறைகளில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இந்த 20 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

ருஷ்டியின் 60வது பிறந்தாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. புக்கர் பரிசையும் வென்றுள்ள ருஷ்டி தற்போது அமெரிக்காவில் தான் அதிகம் வசிக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த

  1. ஷமி சக்கரவர்த்தி, இயக்குநர், லிபர்ட்டி மனித உரிமைகள் அமைப்பு,
  2. சஞ்சய் ஆனந்த் (ஹோட்டல் தொழிலதிபர்),
  3. மயூர் கேசவ்ஜி லகானி (டாக்டர்),
  4. ரஷ்மி சுக்லா (பொதுச் சுகாதாரத்துறை பிராந்திய இயக்குநர்).
  5. ராஜ்குமார் அகர்வால் (மருந்து உற்பத்தி துறை),
  6. ரமேஷ் கோவிந்த்லால் காந்தி,
  7. அசோக் கோஸ்,
  8. ஜஸ்மிந்தர் கிரேவல்,
  9. டேனியல் யாமின் பிரகாஷ் கான்,
  10. பேராசிரியர் சீனிவாசன் ரகுநாதன் (விண்வெளி ஆய்வு பொறியியல் ஆராய்ச்சி),
  11. சந்தோஷ் தாஸ்,
  12. மிருதுளா தேசாய்,
  13. விநோத் தேசாய்,
  14. ரவீந்திர பிராக்ஜி கோவிந்திதா,
  15. சுதர்ஷன் குமாரி மொகிந்திரா,
  16. சத்தியநாராயண் சர்க்கார்,
  17. தேவி தயாள் சர்மா,
  18. ஜஸ்வந்த் சீரா
உள்ளிட்டோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கௌரவ பட்டம்

காமன்வெல்த் வெற்றிக்குப் பாராட்டு

ஜெய்ப்பூரில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமல், வீராங்கனை ஷாமினி ஆகியோர் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் அதுல்ய மிஸ்ரவை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உடன் பயிற்சியாளர்கள் ஏ. சீனிவாசராவ் (வலது கோடி), ஏ. முரளீதர ராவ். சரத்கமல் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், குழு போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார். ஷாமினி, குழு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

தினமணி

பிரதிபா தேர்வில் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு தொடர்பு: உமா பாரதி

ஆளும் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா பாட்டீல் தேர்வு செய்யப்பட்டதில் கிறிஸ்தவ அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதால் அவருக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என சிவசேனைக்கு உமா பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து சிவசேனை தலைவர் பால்தாக்கரேவுக்கு, மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவருமான உமாபாரதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பிரதிபா பாட்டீலுக்கு தாங்கள் ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதாக ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. பிரதிபா பாட்டீல் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

ஆனால், ராஜஸ்தான் மாநில அரசு கொண்டு வந்த மதமாற்றத்தை கண்காணிக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் என்ற முறையில் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். எனவே, அவருக்கு ஆதரவு அளிப்பது என்பது ஹிந்துத்வா கொள்கைகளுக்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி

பிரதிபா பாட்டீலுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான பெயர்களில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், பிரணாப் முகர்ஜி, அர்ஜுன் சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை விட பிரதிபா பாட்டீல் மிகச் சிறந்தவர் தான் என்று ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பின் பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள ஷெகாவத் மிக திறமை வாய்ந்தவர். இப் பதவிக்கு ஏற்ற சரியான நபர் அவர் தான். அதேவேளையில், காங்கிரஸ் முகாமில் மற்ற தலைவர்களை விடவும் பிரதிபா பாட்டீல் சிறந்தவர் தான்.

கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்வு செய்ய அனைத்துக் கட்சிகளும் தவறி விட்டன. குடியரசுத் தலைவர் பதவிக்கு பொருத்தமானவராக நடந்து கொண்டவர் கலாம் என்றும் அதில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...