.

Showing posts with label முழுஅடைப்பு. Show all posts
Showing posts with label முழுஅடைப்பு. Show all posts

Tuesday, July 17, 2007

கேரளா: நாளை முழுஅடைப்பு

கேரளாவில் (வைரஸ்) நுண்கிருமிக் காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை(புதன்) 12 மணிநேர கடையடைப்பு நடத்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக நுண்கிருமிக் காய்ச்சலால் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 450 பேர் உயிரிழந்தனர். எனினும், மாநில அரசு, காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் போதிய அளவு மருத்துவர்களை நியமிக்கவில்லை. மருந்துகளையும் இருப்பு வைக்கவில்லை. அதனால், மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை, பத்தனம்திட்டா மாவட்டம் தவிர, மாநிலம் முழுதும் 12 மணிநேர கடையடைப்பு நடத்தப்படும். மருந்து கடைகள் மற்றும் சில அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் நிறுவனர் தங்கச்சன் தெரிவித்தார் என்று தினமலர் தெரிவிக்கிறது

Thursday, July 5, 2007

இடஒதுக்கீடு: முஸ்லிம்கள் போராட்டம்

கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகம் முழுவதும் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மகளிர், சிறுவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

'இட ஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவீதத்தினரும், அகில இந்திய அளவில் 20 சதவீதத்தினரும் உள்ளனர். எனவே, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் விகிதாசாரத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்.

மத்தியிலுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசும், தமிழகத்தில் உள்ள திமுக அரசும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பொருந்தாத காரணங்களைக் கூறி காலம் கடத்துவதை கைவிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல், தனி இட ஒதுக்கீடு பெறும் வரை தீவிர போராட்டம் நடைபெறும்' என்று மாநிலச் செயலர் சுலைமான் தெரிவித்தார்.

நெல்லையில்...: திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில் சுமார் 400 குழந்தைகள் உள்பட 3,400 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி, மேலப்பாளையத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சேலம்: சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 213 பெண்கள் உள்படட 787 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருச்சி: திருச்சியில் நடந்த போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 6,124 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி

Zee News - Over 1500 court arrest in TN

Wednesday, June 27, 2007

சில்லறை வியாபாரம்: கேரளாவில் இன்று கடையடைப்பு

சில்லறை வியாபாரத்தில் உள்நாட்டு பெரும் நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் ஈடுபடுவதை எதிர்த்து கேரளாவின் வணிகர்கள் இன்று கடையடைப்பு நடத்துகின்றனர். கடையடைப்பு பல நகரங்களில் முழுமையாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
The Hindu News Update Service

Monday, June 11, 2007

ச:இராஜஸ்தான் இனக்கலவரங்கள் அரசியலுக்காக தூண்டப்பட்டவை: பைலட்

அரசியல் ஆதாயங்களுக்காக பல்வேறு சாதியினரை ஒருவருகொருவர் சண்டை மூளவைப்பது மிக தீங்கான செயல் என்று தௌசா எம்பி சச்சின் பைலட் கூறியுள்ளார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை பயன்படுத்தி அரசியலாக்குவதும் சாதீய ஆதிக்க மனநிலையும் இப்போது அதிகரித்து வருகிறது. அரசியல் சார்பின்றி இந்த இடஒதுக்கீடுகளை பிரித்தளிப்பது பற்றி விரிவான ஆய்வு செய்யப்படவேண்டும் என அவர் கோரினார். தவிர கடந்த போராட்டங்களை மிகக் கடுமையாக விமரிசித்த உச்சநீதிமன்றத்தை குறிப்பிட்டு அவர் நடந்த சாலையடைப்பு, கடையடைப்பு ஆகியன மக்களின் அடிப்படை எதிர்ப்பு வழிகளே எனக் கூறினார்.

DNA - India - 'Gujjar-Meena conflict was politically motivated' - Daily News & Analysis

Thursday, June 7, 2007

ச:பாரத ஸ்டேட் வங்கியில் நாளை வேலைநிறுத்தம்

நாளை இந்தியாமுழுமையும் உள்ள அனைத்து பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளிலும் அனைத்துப் பணிகளும் அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும். கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு எதிராகவும் போதுமான ஆட்களை வேலைக்கெடுக்க வேண்டும் என்றும் அவர்களது அதிகாரிகளின் சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளது.

The Hindu News Update Service

Monday, June 4, 2007

ச:தில்லி பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

இராஜஸ்தானின் குஜ்ஜார் இன மக்களின் சாலை மறிப்பு மற்றும் கடையடைப்பு போராட்டத்தால் தலைநகர் தில்லியின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. இதனிடையே அவர்களின் தலைவர் அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் இப்பிரச்சினைக்கு முடிவு காண பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

முழு விவரம்..NDTV.com: Gujjar bandh hits normal life in Delhi

Monday, May 28, 2007

அஸ்ஸாம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஒருசேர நிகழ்ந்த இரு முழு அடைப்புகளால் அஸ்ஸாமின் இயல்பு வாழ்க்கை இன்று பாதிப்படைந்தது.

29 வணிக அமைப்புகள் சேர்ந்து 24 மணி நேர முழு அடைப்புக்கு காம்ரூப் மாவட்டத்திலும், அஸ்ஸாம் கன பரிஷத் குவஹாத்தி நகரில் 12 மணி நேர முழுஅடைப்புக்கும் அழைப்பு விடுத்திருந்தன. மாநிலத்தில் நிகழ்ந்துவரும் குண்டு வெடிப்புகளை கண்டித்து, உல்ஃபா தீவிரவாதத்துக்கு எதிராக இந்த முழு அடைப்புகள் நிகழ்த்தப்பட்டன. மற்ற அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தன.

The Hindu News Update Service

Thursday, May 24, 2007

ச: இட ஆக்கிரமிப்பு விவகாரம்: கொச்சியில் கடையடைப்பு

கேரளாவில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து கட்டிய விடுமுறை விடுதிகளை மூணாறில் தகர்க்க ஆரம்பித்த கேரள முதல்வரின் முயற்சி மற்ற மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. கொச்சி நகரின் முக்கிய சாலையான மகாத்மா காந்தி சாலையில் ஒரு சென் ட் நிலம் 25-30 இலட்சம் பெறுமானமுள்ளது. மாவட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் பலகோடி பெறுமான ஆக்கிரமிப்புக்கள் கண்டறியப் பட்டு அவை அழிக்கப் பட்டன. அதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளும் கடை உரிமையாளர்களும் தங்களுக்கு தக்க முன்னறிவிப்பு கொடுக்கபடவில்லை என்று எழுப்பிய எதிர்ப்பை யடுத்து அவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. இருப்பினும தங்கள் ஒற்றுமையை காட்டும் விதமாக கேரள சாம்பர் ஆப் காமர்ஸ் தரப்பில் இந்த கடையடைப்பு நடத்தப் படுகிறது. உணவகங்களும் அவர்களுக்கு ஆதரவாக இன்று மூடப்பட்டுள்ளன.

The Hindu News Update Service

-o❢o-

b r e a k i n g   n e w s...