.

Showing posts with label ஐரோப்பா. Show all posts
Showing posts with label ஐரோப்பா. Show all posts

Monday, August 13, 2007

இலண்டன்: பிக்பென் கடியாரத்திற்கு ஓய்வு


Photographs: Scott Barbour/Getty Images

இலண்டனின் நகரமக்களுக்கு பழக்கமான பிக்பென் கடிகாரத்தின் மணியோசை சனிக்கிழமை 8 மணிக்கு நின்றது. அடுத்த ஆறு வாரத்திற்கு பராமரிப்பு வேலைகளிற்காக நிறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அதன் தென்மூலையில் ஏறி சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.2009 ஆண்டு கொண்டாடப்படவிருக்கும் அதன் 150 வருட ஆண்டுநிறைவிற்கு ஆயத்தமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கடிகாரம் செப்.7.1859இல் நிறுவப் பட்டது.

rediff.com: Big Ben, London

Thursday, August 9, 2007

அமெரிக்காவில் சொத்துக்களுக்கான கடன்கள் குறித்து கவலைகள்

அமெரிக்காவில் சொத்துக்களுக்கான கடன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளின் பாதிப்புகள் குறித்த கவலைகளை அடுத்து, நிதிச் சந்தையில் போதிய பணத்தை உறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய மத்திய வங்கி தலையிட்டுள்ளது. சந்தையின் ஒழுங்கு நிலையைச் சரி செய்யும் வகையில், ஏனைய வங்கிகளுக்கு, 130 பில்லியன் டொலர்களை ஐரோப்பிய வங்கி கிடைக்கச் செய்துள்ளது.

சாத்தியமான கடன் அழுத்தம் குறித்த அச்சங்கள் காரணமாக நிதி நிறுவனங்களும், கூட்டுத்தாபனங்களும், மற்றும் முதலீட்டாளர்களும் ஆட்டடம் கண்டுள்ளனர்.

இந்த அச்சங்கள் காரணமாக இன்று முன்வேளையில் நியூயோர்க் பங்குச் சந்தையில் பங்கு விலைகளில் வீழ்ச்சியும் காணப்பட்டது.

தமிழ் பிபிசி

Zee News - ECB injects USD 130 bn in European financial system
BBC NEWS | Business | ECB moves to help banking sector
Subprime: The Ugly American Hits Europe - BusinessWeek
Stocks Tumble as Home Loan Worries Spread - New York Times
Economics focus | The mandarins of money | Economist.com: "Central banks in the rich world no longer determine global monetary conditions"
Monetary policy | It ain't easy | Economist.com: "Despite the recent turbulence in the credit markets, the Federal Reserve holds fire on interest rates"

Tuesday, August 7, 2007

ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஆதர்டன்

டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் ஆதர்டன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீசாந்தின் நடவடிக்கைகள் கிரிக்கெட் போட்டியின் உன்னதத் தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளது என்றார்.

கேப்டன் வான் தோள் பட்டை மீது இடித்ததற்காக மட்டுமே நடுவர்கள் ஸ்ரீசாந்துக்கு அபராதம் வித்தித்துள்ளதாகவும், அவரது பந்துவீச்சு வெறுப்புடன் வீசப்பட்ட ஒன்று என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீசாந்தின் செயலை நடுவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும், இந்திய கேப்டன் டிராவிட் இதற்கு பொறுப்பேற்று ஓவலில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆதர்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.

MSN Tamil

NDTV.com: Sreesanth must be banned: Atherton
Cricinfo - Sreesanth must be banned for beamer: Atherton

Thursday, August 2, 2007

வடதுருவத்தில் ரஷியா தனது கொடியை நாட்டியுள்ளது

வடதுருவத்தில் வடபுள்ளிக்கு கீழே உள்ள ஆர்க்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் ரஷ்யக் கொடியை நடுவதற்காக சென்ற இரண்டு ரஷ்ய நீர் முழ்கிக் கப்பல்களில் ஒரு கப்பல் தற்போது கடலின் மேல் மட்டுத்துக்கு வந்து விட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வாளர்களை ஏற்றிக் கொண்டு கடலுக்குக் கீழே 4 ஆயிரம் மீட்டருக்கும் கீழ் சென்ற இந்த இரண்டு நீர் முழ்கிக் கப்பல்களும், ஆபத்து மிக்க தம்முடைய பயணத்தை முடித்த பிறகு - வடதுருவத்தில் இருக்கும் பனிப் பாறைகளுக்கு இடையேயுள்ள சிறிய இடைவெளி வழியாக
கடலின் மேலேயுள்ள ஆய்வுக் கப்பலை வந்தடைந்துள்ளன.

எண்ணெய் வளம் அதிகம் இருப்பதாக நம்பப்படும் இந்தப் பகுதி மீது ரஷ்யா கோரி வரும் உரிமையை வலுப்படுத்துவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேறு சில நாடுகளும் இப் பகுதிக்கு உரிமை கோரியுள்ளன.

முந்தைய செய்தி: கனடா உரிமை பாராட்டும் கடற்பகுதி

BBC Tamil

BBC NEWS | Europe | Russia plants flag under N Pole
Russian polar expedition moves to bolster Moscow's claim to the North - International Herald Tribune: "About 100 scientists aboard the Akademik Fyodorov are looking for evidence that the Lomonosov Ridge - a 1,995-kilometer, or 1,240-mile, underwater mountain range that crosses the polar region - is a geologic extension of Russia, and therefore can be claimed by it under the UN Convention on the Law of the Sea.

Denmark hopes to prove that the Lomonosov Ridge is an extension of the Danish territory of Greenland. Canada, meanwhile, plans to spend $7 billion, or €5.11 billion, to build and operate up to eight Arctic patrol ships in a bid to assert its sovereignty."

Friday, July 6, 2007

லண்டன் கார் குண்டு சம்பவம்:குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை.

லண்டன் கார் குண்டு சம்பவம் தொடர்பாக பெங்களூரை சேர்ந்த சபீல் அகமது என்ற டாக்டர் மற்றும் அவரது சகோதரர் கபில் அகமது ஆகியோர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஆஸ்திரேலிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரில் உள்ள டாக்டரின் குடும்பத்தினரிடம் பெங்களூர் போலீசார் இன்று காலை 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் விசாரணை விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

Thursday, July 5, 2007

இலண்டன் ட்யூப் இரயில் தடம் புரண்டது


இலண்டனில் பாதாள இரயில்வண்டியொன்று இன்று மதியம் தடம் புரண்டதில் நூற்றுக்கணக்கான பயணிகள் அடைபட்டனர். இலண்டனின் சென்ட்ரல் லைனில் மேற்கு நோக்கிசெல்லும் வண்டியொன்று மைல் எண்டிற்கும் பெத்னல் கிரீன் நிலையத்திற்கும் இடையே மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.
மேலும்...BBC NEWS | UK | England | London | Hundreds stuck in Tube derailment

இலண்டன் தீவிரவாதம்: கைது செய்த எண்மரில் மூவர் இந்தியர்

பிரித்தானியாவில் தோல்வியடைந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் கைதான எட்டு பேரில் இன்னொருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு வேலைக்குச் செல்லும் இந்திய மருத்துவர்களுக்கு இனி விசா கிடைப்பது கடினமாகிவிடும் என ஆங்கில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.இது பற்றிய செய்தியுரை..Third Indian suspect in London bombings- Hindustan Times

Sunday, July 1, 2007

விமான நிலையம் மீது தாக்குதல் - இங்கிலாந்தில் பரபரப்பு.

பிரித்தானிய மாகாணங்களுள் ஒன்றான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கார் தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்திற்குள் ஒரு கார் படு வேகமாக வந்தது. அந்தக் காரை பாதுகாவலர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால் பாதுகாவலை மீறிக் கொண்டு அந்தக் கார் படுவேகமாக நுழைவாயிலை நோக்கி விரைந்தது.

வந்த வேகத்தில் நுழைவாயில் சுவற்றில் மோதி நின்றது. அடுத்த விநாடியே கார் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் வந்தவர்கள் தற்கொலைப் படைத் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற தகவல் பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தக் காரைச் சுற்றிலும் போலீஸார் குவிந்தனர். அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேயற்றப்பட்டனர்.

தீப்பிடித்து எரிந்த காரிலிருந்து குதித்த இருவரும் உயிர் தப்பிவிட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் தெற்காசியர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஒருவரின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்னொருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த இந்த திடீர் சம்பவத்தால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

நேற்று முன் தினம் தான் லண்டனில் குண்டுகளுடன் நிறுத்தப்பட்ட கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

இந் நிலையில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் கார் குண்டு மற்றும் கிளாஸ்கோ தாக்குதல் குறித்து லண்டன் மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இரு சம்பவங்கள் தொடர்பாகவும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கும், கிளாஸ்கோ தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன. இது தீவிரவாத தாக்குதல் என்று கூற முடியும்.

விமான நிலையத்தில் மோதியவர்களில் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளார். அவரது உடலில் சந்தேகத்திற்கிடமான ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அது தற்கொலைப் படையினர் அணியும் ஜாக்கெட்டாகவும் இருக்கலாம். அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதும் அந்த நபர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலிருந்து ஊழியர்கள், நோயாளிகள் இடம் மாற்றப்பட்டனர். பின்னர் உடலிலிருந்து அந்தக் கருவி எடுக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது என்றார்.

இதற்கிடையே செஷையர் பகுதியில் ஒரு பெண் உள்பட 3 பேர் இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முஸ்லீம் என்று நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இவர்கள் இருவரும் வந்த காரை மடக்கி இருவரையும் கைது செய்தனர்.

இருப்பினும் இந்தக் கைது குறித்த முழு விவரத்தையும் காவல்துறை வெளியிடவில்லை.

இந்த இரு சம்பவங்களையும் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு நிலை உச்சகட்ட அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நன்றி: தட்ஸ் தமிழ்

Friday, June 29, 2007

இலண்டனில் பெரும் குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டது

இலண்டனின் வெஸ்ட் எண்ட் பகுதியில் டைகர்டைகர் இரவுவிடுதியருகே பெட் ரொல், ஆணிகள், சிறு காஸ் சிலிண்டர்கள் ஆகியவைகளை திணித்த கார் குண்டு ஒன்றை திறனிழக்கச் செய்திருக்கின்றனர். ஸ்காட்லாந்து காவலின் தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவரும் துணை உதவி கமிஷனரும் ஆன ் பீட்டர் கிளார்க் இந்த கருவி மட்டும் வெடித்திருந்தால் பெரும் பொருட்சேதமும் உயிர்ச் சேதமும் நிகழ்ந்திருக்கும் எனக் கூறினார்.

Massive car bomb defused in London | UK Latest | Guardian Unlimited

Thursday, June 28, 2007

புதிய இங்கிலாந்து பிரதமர்: மன்மோகன் வாழ்த்து

கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருந்த டோனி பிளேர் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்து பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கோர்டன் பிரவுன் இன்று பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற பிரவுனுக்கு இந்திய பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் பிரவுனின் பதவியேற்பால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், இந்த வாய்ப்பு இரு நாடுகளுக்கிடையே நட்புறவையும், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Wednesday, June 27, 2007

இங்கிலாந்து பிரதமர்: டோனியின் கடைசி நாள்

இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் கேள்விநேரத்திற்குப் பிறகு 10, டௌனிங் தெரு வீட்டில் தன் கடைசி மதிய உணவை முடித்துக்கொண்டு விடை பெறுகிறார் டோனி ப்ளயர். பத்தாண்டுகாலம் ஆட்சி புரிந்தபிறகு தனது கட்சியின் கார்டன் ப்ரௌனுக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு பதவி விலகுகிறார். பத்தாண்டுகளாக நிதியமைச்சராக பணிபுரிந்த ப்ரௌன் தனது நீண்ட நாளைய கனவை நனவாக காணும் நாளிது. அவர் ஈராக் பிரச்சினையை எவ்வாறு கையாளப்போகிறார் என அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

ப்ரௌன் பிரதமரானபோது தனது இல்லத்தை மாற்ற வேண்டியதில்லை, ஏனெனில் நிதியமைச்சராகவே அவர் பிரதமரின் வீட்டில் தான் வசித்துவந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட 11,டௌனிங் தெரு இல்லம் பெரிதான டோனி பிளயர் குடும்பத்திற்கு சரியாக இருந்ததால் இருவரும் swap செய்துகொண்டிருந்தனர்.
The Hindu News Update Service

Saturday, June 9, 2007

ச: பிரிட்டனில் குற்றம்புரிந்தவரை நீதிமன்றம் அந்நாட்டிற்கு வெளியேற்றம்

கற்பழிப்பு, கொலை குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கும் மணீந்தர் பால் சிங் கோலியைவெளியேற்றுமாறு வெள்ளியன்று தில்லி நீதிமன்றத்தில் அந்நாட்டிற்கு வெளியேற்றும் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரித்தானிய கோரிக்கையை ஏற்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர் அக்குற்றம் புரிந்திருக்கக்கூடிய வாய்ப்புகளை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அதே நேரம் அவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இந்த வெளியேற்றத்திற்கு அனுமதி அளிப்பதாகவும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

கோலி 17 வயது பிரிட்டிஷ் பெண்ணை கடத்திச் சென்று வன்புணர்ந்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளார். கொலைபுரிந்து இந்தியாவிற்கு தம் உடல்நலமில்லா அன்னையை காண்பதற்கு வந்து இங்கேயே தலைமறைவாக இருந்தார். ஜூலை 14,2004இல் மேற்குவங்கத்தில் கலிம்போங்கில் பிடிபட்டார்.

Court allows Kohli extradition, but says don't hang him- Hindustan Times

Tuesday, June 5, 2007

ச: மீண்டும் பனிப்போர்?

அமெரிக்காவின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏவுகணை எதிர்ப்பு/பாதுகாப்பு திட்டத்தால் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் கருத்துவேறுபாடு எழுந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா கிரெச் குடியரசில் ஒரு ராடார் அமைப்பை நிறுவ உள்ளது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புட்டின் அமெரிக்கா இத் திட்டத்தை தொடர்ந்தால் 'பனிப்போர் காலத்துக்கு செல்ல நேரிடும்' என்றும் 'ரஷ்யா ஐரோப்பாவை நோக்கி தான் ஏவுகணைகளை திருப்பும்' என்றும் எச்சரித்துள்ளார். இதற்கு பதிலளித்த புஷ் 'பனிப்போர் ஓய்ந்துவிட்டது' என்றும் இத்திட்டத்திற்கு பயப்ப்படாமல் ரஷ்யா ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிரெச்்ரெச் தவிர போலந்தில் ஏவுகணை தடுப்பு மையங்களையும் அமெரிக்கா உருவாக்க உள்ளது.

ஜெர்மெனியில் நடக்கவிருக்கும் ஜி8 கூட்டத்தொடர்களில் இதைக் குறித்து நேரடி பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கின்றன.

Bush to Putin: 'Cold War Is Over'ABC News
Bush says: 'Russia is not the enemy' Times Online
Bush defends missile defense shield San Jose Mercury News

Friday, June 1, 2007

ச:பிபிசி நிருபர் கடத்தல்: ஒளிப்படம் வெளியீடு

கடத்தப்பட்ட பிபிசி நிருபர் ஆலன் ஜான்ஸ்டன் பேசிய ஒளிப்படம் அவரைப் பிடித்துவைத்திருப்பாதாகக் கூறும் இஸ்லாமிய குழு ஒன்றினால் வெளியிடப் பட்டுள்ளது. அந்த ஒளிப்படத்தில் தான் மார்ச் 12 தேதி பிடிக்கப்பட்டதிலிருந்து நன்றாகக் கவனித்துக் கொள்ளப்படுவதாகவும் பாலஸ்த்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமிக்க பிரித்தானிய அரசு ஆரம்பத்திலிருந்தே முயன்றுவருவதாகவும் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு செய்தி கொடுக்கும் சமயம் பிபிசி இந்த செய்தியை அவரது குடும்பத்திற்கு கொண்டு செல்ல மறுக்கிறது என்ற குறிப்புடன் ஒளிப்படம் 'டக்'கென்று முடிகிறது.

மேல் விவரங்களுக்கு ..BBC's Alan Johnston paraded on the web | Breaking News | News | Telegraph

Thursday, May 17, 2007

எஸ்டோனிய நாட்டு கணனிகள் மீது இணையத்தளம் மூலம் தாக்குதல்

எஸ்டோனிய அரசாங்க கணனி வலையமைப்புகள் மீதான இணையத் தளம் மூலமான தாக்குதலை, இராணுவ ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டுள்ள நேட்டோ அமைப்பு, இந்த தாக்குலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக ஒரு நிபுணரை அங்கு அனுப்பியுள்ளது.

இந்த இணையத்தளம் மூலமான தாக்குதல் குறித்து எஸ்டோனியா ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதல் ரஷ்ய அரசாங்கத்தினாலேயே ஆரம்பிக்கப்பட்டதாக எஸ்டோனியா கூறும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

எஸ்டோனியர்கள் தமது நடவடிக்கைகள், வணிகங்கள் ஆகியவற்றை நடத்துவதன் மையப் பகுதி வரை இந்த அச்சுறுத்தல் சென்றுள்ளது.

எஸ்டோனிய இணையத்தள சார்வர்களை அளவுக்கு அதிகமாக நிரப்பி, அவை முடக்கப்படும் நிலையை ஏற்படுத்தும் ஒன்றிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களால், எஸ்டோனிய அரசாங்க இணையங்கள், வங்கிகள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவை பல தடவைகள் செயலிழந்து போயின.

நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய ஒன்றிய- ரஷ்ய மாநாட்டில் இந்த விவகாரம் முதன்மை விவகாரமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று எஸ்டோனியா விரும்புகிறது.
- (BBC Tamil)

Russia accused of unleashing cyberwar to disable Estonia | Russia | Guardian Unlimited

ச: இணையம் பற்றித் தெரியாத நீதியரசர் !

புதனன்று ஆங்கில நீதிபதியொருவர் இணையதளம் (Website) என்றால் என்னவென்று தெரியாது என்று இணையம் வழி தீவிரவாதம் தூண்டியதாக ப்திவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது கூறினார். நீதிபதி பீட்டர் ஓப்பன்ஷாவின் புரிதலுக்காக அரசு வழக்கறிஞர் மார்க் எல்லிசன் தனது குறுக்கு விசாரணையை சற்று நிறுத்திக்கொண்டு "web site", "Forum" முதலிய சொற்களை விவரித்தார்.
தொடர்புள்ள செய்தி: "Web site" baffles Internet terrorism trial judge - Yahoo! News

இதனை யொட்டிய கணினி பொறியாளர்களின் இணையதள விவாதம்

Saturday, May 12, 2007

ச: டென்னிஸ்:ரோம் மாஸ்டர்ஸ்: பயஸ்-தாம் ஜோடி அரையிறுதியில்

ரோம்மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் மூன்றாவதாக தரவரிசையில் உள்ள இந்திய-செக்கோஸ்லோவாகியா ஜோடியான பெயஸ் தாம் ஜோடி 6-4,6-3 என்ற கணக்கில் உரோமானிய அண்ட்ரே பாவல், ஜெர்மானிய அலெக்ஸாண்டர் வாஸ்கே ஜோடியை வென்று பொட்டியின் அரை இறுதிக்கு சென்றனர். இந்த சுற்றுவரை இந்த ஜோடி விளையாடாமலே போட்டியாளர்களின் விட்டுக் கொடுத்தலினால் வென்று வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

விவரங்களுக்கு..The Hindu News Update Service

Thursday, May 10, 2007

ச:டோனி ப்ளேர் பதவி விலகல்

10 வருடங்களாக இங்கிலாந்தின் பிரதமராக பணியாற்றிவந்த டோனி ப்ளேர் வரும் ஜூன் 27ம் தேதி பதவி விலகப் போவதாக அறிவித்தார். ஈராக்கில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப்படைகளுடன் சேர்ந்தது முதல் டோனி ப்ளேருக்கு ஆதரவு குறைந்து வந்தது.

அறிவிப்பை வெளியிட்டு பேசிய ப்ளேர்,'நெஞ்சில் கையை வைத்துச் சொல்கிறேன் எது சரி என நம்பினேனோ அதையே செய்தேன்' எனக் கூறினார்.

கடந்த நூறு வருடங்களில் பிரதமராக 10 வருடம் பணிபுரிந்த இரண்டாம் நபர் டோனி ப்ளேர்.

Blair bows out after 10 years Reuters
Britain's Blair to step down on June 27 Los Angeles Times,
Blair in his own words Reuters
No jokes for Blair's likely heir CNN

Wednesday, May 9, 2007

ச:'சம்போவைக் காப்பாத்துங்கள்' லண்டனில் இந்துக்கள் கவலை

வேல்ஸில் அமைந்துள்ள இந்துக் கோவிலுக்குச் சொந்தமான சம்போ எனும் காளை மாட்டைக் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்ற இங்கிலாந்தில் வாழும் இந்துக்கள் பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

மே 3ல் சுற்றுச் சூழல் அலுவலகத்திலிருந்து வந்த ஆணைப்படி சம்போவுக்கு டி.பி நோய் பிடித்துள்ளதால் அதை மே 14க்குள் கொல்லவேண்டும் என ஆணை பிறப்பித்தது. இதை அடுத்து சம்போவின் உயிரைக் காப்பாற்றக் கோரிக்கைகளும் கூட்டு முயற்சிகளும் தொடர்கின்றன.

சம்போவைக் கொல்வது தங்கள் மத நம்பிக்கைக்கையை காயப்படுத்தும் என இதற்காக அமைக்கப்பாட்டுள்ள குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

கோவில் நிர்வாகம் சம்போவுக்கு மருத்துவ உதவியை நாடியுள்ளதாகவும் மற்ற வளர்ப்பு மிருகங்களிடமிருந்து சம்போ தனிமைப் படுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Save Shambo, Hindu groups urge UK Govt.

Tuesday, May 8, 2007

சரித்திரம் படைத்தது வட அயர்லாந்து

இன்றைய தினம் 'சற்றூமுன்'னிற்கு மட்டுமன்றி வட அயர்லாந்திற்கும் சரித்திரம் படைத்திட்ட நாளாகும். சண்டை போட்டுக்கொண்டு பிரிந்திருந்த பிராட்டஸ்டன்ட்களும் கத்தோலிக்கரும் தங்கள் கருத்து வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைந்து அரசு அமைக்க முன்வந்துள்ளனர். நாற்பது ஆண்டுகாலமாக இருந்துவந்த போராட்டங்களும் வன்முறையும் ஒரு முடிவுக்கு வருகின்றது. பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயரும் அயர்லாந்து பிரதமர் பெர்டி அஹெர்னும் இந்த சரித்திர சம்பவத்திற்கு சாட்சியாக வட அயர்லாந்து நாடாளுமன்ற கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.

Historic day for Northern Ireland: World: News: News24

Chronology: The Northern Ireland Conflict - UK

-o❢o-

b r e a k i n g   n e w s...