.

Monday, April 16, 2007

ச: அமெரிக்காவில் வெர்ஜினியா பல்கலை.,யில் துப்பாக்கிச்சூடு : 22 பேர் பலி

வாஷிங்டன் : அமெரிக்காவில் வெர்ஜினியா பல்கலை.,யில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் பற்றி அதிபர் புஷ் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்


- "CNN-IBN", தினமலர்

சற்றுமுன்: வேன்மீது மீது ரெயில் மோதி பயங்கரம்: 11 கிராம அதிகாரிகள் பலி

காஞ்சீபுரம், ஏப். 16-

சென்னையில் இன்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பேரணி நடை பெற உள்ளது. முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து இந்தபேரணி நடை பெறுகிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து கிராம நிர்வாக அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து 22 கிராம நிர்வாக அதிகாரிகள் இந்த பேரணியில் பங்கேற்க இன்று அதிகாலை ஒரு வேனில் சென்னை புறப்பட்டனர்.

வேலூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் சண்முக பரணி தலைமையில் அவர்கள் புறப் பட்டு வந்தனர். காஞ்சீபுரம் அருகே வந்ததும் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள குருஸ்தல மான தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்ல அவர்கள் முடிவு செய்தனர்.

காலை 9.40 மணி அளவில் வேன் கோவிந்தவாடி அகரம் கிராமத்தை நெருங்கி யது. அங்குள்ள ரெயில்வே கேட்டை வேன் கடக்க முயன்றது. அது ஆள் இல்லாத ரெயில்வே `கேட்' ஆகும்.

அந்த சமயத்தில் தூரத்தில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் மின் னல் வேகத்தில் வந்து கொண் டிருந்தது. `ரெயில் தூரத்தில் தானே வருகிறது அதற்குள் கடந்து போய் விடலாம்'' என்ற எண்ணத்தில் வேன் டிரைவர் `கேட்'டை கடக்க முயன்றார்.

அதற்குள் எக்ஸ்பிரஸ் ரெயில் நெருங்கி விட்டது. கண் இமைக்கும் நேரத்துக்குள் அந்த ரெயில் வேன் மீது மோதியது.

மோதிய வேகத்தில் பலத்த சத்தத்துடன் வேன்தூள்- தூளாக நொறுங்கியது. வேனின் பின் பகுதி முழுமையாக நொறுங்கிச் சிதறியது. உடைந்த வேனின் ஒரு பகுதியை ரெயில் 15 மீட்டர் தூரத்துக்கு இழுத் துச் சென்று நின்றது. வேனில் இருந்த 23 பேரும் சின்னா பின்னமாகி

சிதறினார்கள்.இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டு, துண்டாகி சிதறி பலியானார் கள். அவர்களது உடல்கள் ரெயில் தண்டவாளத்தில் ஆங் காங்கே சிதறிக் கிடந்தன. அந்த பகுதியே ரத்த ஆறு ஓடியது போல காட்சி அளித்தது.

மற்ற 11 கிராம அதிகாரிகள் உடல் நசுங்கி படுகாயங்களு டன்துடி துடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்றவர்கள் ஓடி வந்தனர்.

சம்பவ இடத்துக்கு ரெயில்வே ஐ.ஜி. ராஜா உத் தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா மற்றும் போலீசாரும் மீட்பு படை யினரும் வந்தனர். உயிருக் குப் போராடிக் கொண் டிருந்தவர்களை மீட்டு, மருத் துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தென்னக ரெயில்வே அதிகாரிகளும் சிறப்பு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்தவர்கள் காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

வருகிறது.இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் விபத்தில் பலியா னோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் புதுப்பாக் கத்தில் உள்ள ஆள் இல்லா ரெயில்வே கேட்டில் சென்னை - திருமால்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆட்டோ மீது மோதி 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பாக்கம் விபத்தில் 17 உயிர்கள் பறிபோனதுமே ரெயில்வே அதிகாரிகள் ஆள் இல்லா ரெயில்வே கேட் பகுதிகளில் கவனம் செலுத்தி இருந்தால் இன்று நடந்த பரிதாப உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம்.


வேனில் வந்த 23 பேர் விபரம்

1. சண்முகபரணி

(செங்காநல்லூர்)

2. புருஷோத்தமன்

(அத்திïர்)

3. மனோகரன்

(அடுக்கம்பாறை)

4. தாண்டவராயன்

(செம்பேடு)

5. பிரபாகரன்

(சேன்பாக்கம்)

6. நாராயணசாமி

(விரிப்பாச்சிபுரம்)

7. நடராஜன் (அரிïர்)

8. தாமோதரன்

(கரடிக்குடி)

9. மதிவாணன்

(மேல்மணவூர்)

10. வெங்கடேசன்

(பெல்லூர்)

11. ராமமூர்த்தி (வல்லம்)

12. எஸ்.குணசேகரன்

(வேலம்பாடி)

13. எம்.குணசேகரன்

(பாலமதி)

14. செல்லபாண்டியன்

(ஊனைவாணியம்பாடி)

15. துரைசாமி

(கனிகனியான்)

16. மேகநாதன்

(மேல் அரசம்பட்டு)

17. பாலகிருஷ்ணன்

18. குமாரசாமி

(இலவம்பாடி)

19. பன்னீர்செல்வம்

(அணைக்கட்டு)

20. நந்தகுமார்

(பெருமுகை)

21. ரவி

(ராமமூர்த்தி மகன்)

22. மோகன்

23. குமார்

(வேன் டிரைவர்)

=மாலைமலர்.

மேலும் தட்ஸ்தமிழ்

சட்டசபையில் இன்றும் அதிமுக வெளிநடப்பு.

4 அதிமுக எம்எல்ஏக்களை இந்த பட்ஜெட் கூட்ட தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது. முன்னதாக அதிமுக துணைதலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த ஏப்ரல் 5ம் தேதி சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனையில் (செருப்பை காட்டி கலாட்டா செய்தது) 4 அதிமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக அவர்கள் தங்கள் கடமையை செய்வதிலிருந்து விலகி வைக்கப்பட்டுள்ளனர். புரட்சித் தலைவரை விமர்சித்து பேசியதால் உணர்ச்சிவசப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சிகாரர்களும் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். ஆனால் எங்களுக்கு மட்டும்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.எனவே சபாநாயகர் இதுகுறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

சிகரெட் விலை உயர்வு-"ஊதுவோர்" டென்ஷன் !

பட்ஜெட்டில் சிகரெட் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால், சிகரெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் புகை பிடிப்போர் தடுமாற்றம் அடைந்துள்ளனர். 2007-2008 க்கான மத்திய பொது பட்ஜெட்டில் புகையிலை தொடர்பான பொருட்கள், பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு 5% கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து சிகரெட்டுகளின் விலையையும் அதன் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. வில்ஸ் சிகரெட்டின் விலை நேற்று முதல் திடீரென உயர்த்தப்பட்டது. ரூ.3க்கு விற்கப்பட்ட ஒரு சிகிரெட்டின் விலை இப்போது ரூ. 3.50க்கு விற்கப்படுகிறது. முன்னதாக ஒரு பாக்கெட் வில்ஸ் சிகரெட்டின் விலை ரூ. 33 ஆக இருந்தது. இப்போது ரூ. 34 ஆக விற்கப்படுகிறது. இதேபோல, கிங்ஸ் சிகரெட்டின் விலை ரூ. 3.50லிருந்து ரூ. 4 ஆக அதிகரித்துள்ளது. கத்திரி சிகரெட் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளால் புகை பிடிப்போர் டென்ஷனாகி உள்ளனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்

ராகுல் காந்திதான் உத்தரப்பிர்தேசத்தின் எதிர்காலம்:பிரதமர் மன்மோகன்.

ராகுல் காந்திதான் உத்தரப்பிர்தேசத்தின் எதிர்காலம் என்றும் உத்தரப்பிரதேசத்தின் புதிய தலைவர் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை பொதுத் தேர்தல் பிரசாரத்துக்காக முதல் முறையாக வந்துள்ள பிரதமர், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவைப் பெருக்கும் உத்தியாக, ராகுல் காந்தியை மையப்படுத்தி பிரசாரம் செய்தார்.
புதிய பாரதத்தைப் படைக்க ராஜீவ் காந்தி 20 ஆண்டுகளுக்கு முன்னால் கனவுகண்டார்; அதே போல உத்தரப் பிரதேசத்தை முன்னேற்ற ராகுல் காந்தி உறுதிபூண்டிருக்கிறார் என பிரதமர் கூறினார்.
இதனிடையே உத்தரபிரதேச மாநில முலாயம் அரசின் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மாநிலத்தில் வேளாண் மற்றும் தொழில்துறைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இதற்கு மாநில அரசுதான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு அளித்த வளர்ச்சி நிதியை மாநில அரசு பயன்படுத்தவில்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்த எந்த அரசும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்

ச: தூக்கம் இல்லை என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ விமானி விமானத்தை ஓட்ட மறுப்பு்

புதுடில்லி : சரியான தூக்கம் இல்லை என்று சொல்லி விமானி விமானத்தை ஓட்ட மறுத்ததால், புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான பயணிகள் 12 மணி நேரம் பெரும் அவதிக்குள்ளானார்கள். புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 02.30 மணிக்கு பிஏ143 என்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் செல்ல தயாராக நின்று கொண்டிருந்தது. அதில் 225 பயணிகள் அமர்ந்திருந்தனர். ஆனால் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவில்லை. காரணம் என்ன என்று கேட்டபோது அந்த விமானத்தின் பைலட் கேப்டன் வில்லியம் விமானத்தை ஓட்ட மறுக்கிறார் என்று தெரியவந்தது. என்ன காரணத்தால் ஓட்ட மறுக்கிறார் என்று விசாரித்தபோது அவர் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. நேற்றிரவு அவர் தங்கி இருந்த ஹோட்டலில் ஒரே இடையூறாக இருந்ததால் அவரால் சரியாக தூங்க முடியவில்லை என்றும், சரியான தூக்கம் இல்லாமல் விமானத்தை ஓட்ட முடியாது என்றும் சொல்லி விட்டதாக தெரியவந்தது. வேறு வழியின்றி அதிலிருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். அதற்கு பதில் வேறு விமானமும் ஏற்பாடு செய்யப்படாததால் அதே விமானம் மதியம் 2.30க்கு தான் புறப்பட்டு சென்றது. இது பற்றி பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிகாரி ராதிகா ரெய்சி கூறுகையில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் பாதுகாப்பு முறைப்படி, பாதுகாப்பை கருத்தில்கொண்டு இம்மாதிரியான நேரங்களில் விமானியை விமானம் ஓட்ட அனுமதிப்பதில்லை என்றார்.


- தினமலர்

ச: இந்து-முஸ்லீம் கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்: தஸ்லீமா

ஏப்ரல் 15, 2007

போபால்: இந்து-மூஸ்லீம் கலப்புத் திருமணங்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் கூறியுள்ளார்.

இஸ்லாம் குறித்து அவர் எழுதிய சர்ச்சைக்குள்ளான நாவலையடுத்து அவருக்கு எதிராக வங்கதேசத்தில் பத்வா பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் நாட்டைவிட்டு வெளியேறினார். இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த அவர் சமீபகாலமாக பலத்த பாதுகாப்புடன் இந்தியாவில் தங்கியுள்ளார்.

இந் நிலையில் போபாலில் உள்ள பாரத் பவன் பல் கலை மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அவர் பேசுகையில்,

இந்தியாவில் இந்து பெண்ணும் மூஸ்லீம் ஆணும் திருமணம் செய்துக் கொண்டு படும் துனபங்களை கண்டால் வருத்தம் தான் வருகிறது.

இது போன்ற திருமணங்களை எதிர்ப்பதற்கு பதிலாக வரவேற்று ஆதரிக்க வேண்டும்.

"Thatstamil"

சங்கராச்சாரியாரை கைது செய்த எஸ்.பி.பிரேம்குமார் திடீர் டிஸ்மிஸ்

ஏப்ரல் 15, 2007

சென்னை: சங்கராச்சாரியாரை கைது செய்து பெரும் பரபரப்புக்குள்ளான எஸ்.பி. பிரேமகுமார் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

21 ஆண்டுகளுக்கு முன் ராணுவ வீரர் நல்லகாமன் என்பவரையும் அவரது மகனையும் தாக்கி ரோட்டில் கைவிலங்கு போட்டு இழுத்துச் சென்றது, ராணுவ வீரரின் மனைவியை தாக்கியது மற்றும் பெண் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியது ஆகிய வழக்குகளில் சமீபத்தில் பிரேமகுமாருக்கு எதிராக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


21 ஆண்டுகளாக இந்த வழக்கை இழுத்தடித்து வந்த பிரேம்குமாரை நீதிமன்றத்தில் சரணடையவும், அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக ஜெயேந்திரருக்கு எதிரான வழக்கில் அப்ரூவரான ரவிசுப்பிரமணியத்தை, திமுக ஆட்சிக்கு வந்த பின் நேரில் சந்தித்த பிரேம்குமார், அவரை தப்பிச் செல்லுமாறு கூறி சிக்கலில் மாட்டினார். அந்த விவகாரத்தில் பிரேம்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

இப்போது நல்லகாமன் வழக்கிலும் உச்ச நீதிமன்றத்திடம் கண்டனம் பெற்றுள்ளார் பிரேம். இதையடுத்து அவரை பதவியில் இருந்தே டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

அரசு ஊழியர் நன்னடத்தைப் பிரிவு 3 (11)ன் கீழ் பிரேம்குமார் மீது இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

இந்தப் பிரிவின்படி எந்த விளக்கமும் கேட்காமலேயே பதவி நீக்கம் செய்ய முடியும். தேச துரோக செயல்களுக்குத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது பிரேம் குமார் மீது இந்தப் பிரிவில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

"Thatstamil"

ச: சர்வஜித்து ஆண்டு எப்படி இருக்கும்

ராசி பலன்களில் ஆர்வம் உள்ளவர்கள் "சர்வஜித்து ஆண்டு எப்படி இருக்கும்" என்று அறிய இங்கே செல்லுங்க.. "வெப் உலகம்"

ச: ஊட்டியில் இந்தியா-சீனா எல்லைப் பேச்சுவார்த்தை!

ஞாயிறு, 15 ஏப்ரல் 2007

இந்திய-சீன இடையிலான எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடைபெற்று வரும் பேச்சுவார்ததையின் அடுத்தகட்டம் வரும் சனிக்கிழமை டெல்லியிலும், மறு நாள் ஊட்டியிலும் நடைபெற உள்ளது.

60 ஆண்டு காலத்திற்கு மேல் நீட்டித்து வரும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இதுவரை நடைபெற்ற 9 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, எல்லைகளை வகுக்கும் முக்கியக் கட்டப் பேச்சுவார்த்தை வரும் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறுகிறது.

சீனத்தின் சார்பாக அந்நாட்டு அயலுறவுத் துணை அமைச்சர் தாய் பிங்குவா, இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.

"வெப் உலகம்"

ச: 27 % இட ஒதுக்கீடு:சுப்ரீம் கோர்ட்டில் நாளை அப்பீல்

புதுடெல்லி(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நாளை அப்ப்பீல் செய்யும் என தெரிகிறது.

சொலிசிட்டர் ஜெனரல் கூலம் வான்வதி மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியன் ஆகியோர் அரசு தரப்பில் ஆஜராகி வாதாட உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

"Yahoo Tamil"

ச: 'உ.பி.யின் எதிர்காலம் ராகுல்காந்தி'

லக்னோ(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைவராகவும், அம்மாநிலத்தின் எதிர்காலமாகவும் ராகுல் காந்தி திகழ்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மன்மோகன், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.

ராகுல் காந்திதான் உங்களது எதிர்காலமாக உள்ளார்.அவர் உங்களுக்காக உழைக்கிறார்.எனவே தயவு செய்து காங்கிசுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என மன்மோகன் மேலும் பேசினார்.

ராகுல்காந்திக்கு இந்த அளவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆதரித்துப் பேசியது உத்தரபிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

"Yahoo Tamil"

ச: காவிரி:தேவைப்பட்டால் தமிழகம் சுப்ரீம் கோர்ட் செல்லும்

சென்னை(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007

காவிரி நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து விட்டு, அதன்பின்னர் தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட் செல்வது என தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதமைச்சர் கருணாநிதி, காவிரி நடுவர் மன்றத்திடம் எத்தகைய மனுவினை தரலாம் என்பதை தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொண்டார்.

"Yahoo Tamil"

-o❢o-

b r e a k i n g   n e w s...