பசிபிக் பெருங்கடலிலுள்ள பாப்புவா நியூகினியாத் தீவுகளில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, அவர்களது உறவினர்கள் உயிருடன் புதைப்பதை தாம் கண்டுள்ளதாக சுகாதாரச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார். தங்களுக்கும் எய்ட்ஸ் நோய் பரவிவிடும் என்கிற அச்சத்தின் காரணமாக அவர்கள் இவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை புதைத்து விடுகிறார்கள் என்று மார்கிரெட் மராபே என்னும் அந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
உயிருடன் இருக்கும் மூன்று பேர் புதைக்கப்படுவதை தாம் நேரில் கண்டதாகவும், அங்கு இவ்வாறு செய்யப்படுவது சாதாரண வழக்கம் என்று தம்மிடம் அங்குள்ளவர்கள் கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தெற்கு பசபிக் பகுதியில் பாப்புவா நியூகினியாவில்தான் அதிகபட்சமாக எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள வயதுவந்த மக்களில் இரண்டு சதவீதம் பேர் இந்தத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ் பிபிசி
BBC NEWS | Asia-Pacific | PNG Aids victims 'buried alive'
Monday, August 27, 2007
எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதாகச் செய்தி
Posted by Boston Bala at 11:05 PM 1 comments
அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் இராஜிநாமா
அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் ஆல்பர்டோ கொன்சாலெஸ் இராஜிநாமா செய்துள்ளார். நீதித் துறையை அவர் தலைமையேற்று நடத்துவது குறித்து, தொடர்ந்து பல மாதங்களாக விமர்சனங்கள் எழுந்து வந்தன.
கடந்த ஆண்டு ஒன்பது அரசு வழக்கறிஞர்கள் பதவி நீக்கப்பட்ட விடயத்தில் அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தார் என்று ஜனநாயகக் கட்சியினர் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். தீவிரவாதத்தின் மீதான போர் என புஷ் அரசால் கூறப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நடவடிக்கையில் அதிபர் புஷ் அவர்களின் அதிகாரங்களை விரிவுபடுத்த அவர் அனுமதித்தார் என்கிற விடயம் தொடர்பாக அவர் அதிகப்படியான அழுத்தத்தை சந்தித்து வந்தார்.
தமிழ் பிபிசி
US Attorney General Gonzales Resigns | World Latest | Guardian Unlimited
Gonzales has been loyal voice for administration - CNN.com
Posted by Boston Bala at 10:58 PM 0 comments
பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்களில் குறைகள்: CAG
அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நடுவண் அரசின் சமூகநீதி அமைச்சு மற்றும் பழங்குடியினர் அமைச்சுக்கள் சரிவர பயன்படுத்தவில்லை என தலைமை கணக்கு ஆய்வாளரின் அறிக்கை கூறுகிறது. மற்ற மாணவர்களுக்கும் இந்த மாணவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி வளர்ந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டுகிறது. கல்வி வளர்ச்சியின் இரு எடுத்துக்காட்டுகளாக மொத்த பதிகை விகிதம்(Gross Enrolment Ratio) மற்றும் மொத்த வெளியேறும் விகிதம் (Gross Dropout Ratio) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை கீழ்நோக்கி செல்வதை காட்டுகிரது. வெளியேறும் விகிதம் பொது மாணவர்களுக்கு 6.7%ஆகவும் இவர்களுக்கு 15.1% ஆகவும் 2001இல் இருந்தது 2003-04 ஆண்டில் 10.4% ஆகவும் 16.6% ஆகவும் மோசமாவதை சுட்டியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காதது, தாமதமாக அல்லது குறைவாக பட்டுவாடா செய்தது, வேறு திட்டங்களுக்கு மாற்றியது போன்ற குறைகள் மற்றும் இத்திட்டத்தை பொதுமக்கள் அறியுமாறு விளம்பரம் செய்யாதது இந்த இடைவெளி வளர்வதற்கு காரணங்களாக அவ்வறிக்கை கூறுகிறது.
DNA - India - CAG finds fault in SC, ST education schemes - Daily News & Analysis
Posted by மணியன் at 8:32 PM 0 comments
ஆர்குட் தளத்தில் மாயாவதியின் போலி தகவல்
கூகிளின் ஆர்குட் தளம் மும்பையில் நடந்த கொலைகளுக்கு பின்னர் பொதுமக்களிடையே தவறான எண்ணத்தைப் பெற்று வருகிறது. இதனை வலுப்படுத்துமாறு உபி முதல்வர் மாயாவதி பெயரில் ஆர்கூட் தளத்தில் ஒரு பயனர் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் தவறான மற்றும் இழிவான முறையில் அவரது தனித்தகவல் (Profile) பதியப்பட்டுள்ளது. இதனை அறிந்த உபி அரசு முழுவதும் ஆய்வு செய்து குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.
DNA - India - Probe ordered into Maya's profile on Orkut - Daily News & Analysis
Posted by மணியன் at 8:11 PM 0 comments
தா.கிருட்டிணன் கொலைவழக்கு ஆந்திராவிற்கு மாற்றப்பட்டது
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை, மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு மாற்றி உச்சநீதமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் வாக்கிங் போன நேரத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களால் கொடூரமாக வெட்டிக் ெகால்லப்பட்டார். திமுகவில் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல் காரணமாகவே இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஆனால் இந்த வழக்கில் கைதான அனைவரும் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
இந் நிலையில் கொலை வழக்கில் முக்கிய சாட்சியும், முதல் சாட்சியுமான முத்துராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மு.க.அழகிரி அரசியல் பலம் கொண்டவர்.
எனவே இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் நியாயம் கிடைக்காது, சாட்சிகளின் உயிருக்கும் உத்தரவாதம் கிடைக்காது. எனவே இந்த வழக்கை மதுரையிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் அசோக் பான் மற்றும் சிர்புர்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வழக்கை மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்: Ta.Krittinan murder case transfered to Andra
Posted by மணியன் at 8:00 PM 0 comments
துபாய் வணிகரின் மகன் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலி
துபாய் வணிகரின் மகன் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலி
துபாயில் தொழில்புரிந்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவரின் 16 வயது மகன் முஹம்மது யஹ்யா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பலியான செய்தியறிந்து உடனடியாக தாயகம் திரும்பினார். இச்செய்தி அலியின் குடும்பத்தினரை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது.
முஹம்மது யஹ்யா ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா இளநிலை கல்லூரியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து யஹ்யாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் கிடைத்தையடுத்து அங்கு சென்ற பொழுது யஹ்யா பிணமாக கிடந்தது கண்டு மிகுந்த அதிர்ச்சியுற்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஆந்திர மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.godubai.com/gulftoday/article.asp?AID=34&Section=Home
Dubai resident's son among the dead in India blasts
Posted by முதுவை ஹிதாயத் at 7:18 PM 0 comments
மூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு இலக்கு 282 ரன்கள்
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது ஒரு தின கிரிக்கெட் போட்டி எக்பாஸ்டனில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான குக் மற்றும் பிரையர் ஆகியோர் முறையே 40 ரன்கள், 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பீட்டர்சன் 9 ரன்களிலும், காலிங்வுட் 44 ரன்களிலும், ஷா 19 ரன்களிலும், போப்ரா 10 ரன்களிலும், இயான் பெல் 79 ரன்களிலும், ப்ராட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ட்ரெம்லெட் 19 ரன்களுடனும், ஆன்டர்சன் 0 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பியூஸ் சாவ்லா, யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், முனாப் படேல், ரமேஷ் பொவார், ஆர்.பி.சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்திய அணி 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்க உள்ளது
Posted by வாசகன் at 7:07 PM 0 comments
இரயில்களில் ஏ.டி.எம் வசதி விரைவில்.
ஓடும் ரயில்களில் ஏ.டி.எம். வசதி விரைவில் செய்யப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் அரங்க. வேலு வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சேலம் கோட்டம் அறிவிக்கப்பட்டு, ரூ. 1.8 கோடியில் கட்டடங்கள் உள்ளிட்ட விரிவாக்கப்பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த கோட்டம் ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இதில் எந்த தடங்கலும் இல்லை. கேரள எம்.பி.க்கள் கூடுதலான பகுதிகளை கேட்டார்கள். அதுகுறித்து பேசி தீர்க்கப்படும்.
பாலக்காடு கோட்டத்தை பிரிப்பதில் எவ்வித வியாபார இழப்பீடும் இல்லை. திருவனந்தபுரம் மண்டலம் அமைப்பது குறித்து மத்திய அமைச்சர் லாலு முடிவு செய்வார். ஓடும் ரயில்களில் விரைவில் தேசிய வங்கிகளின் ஏ.டி.எம். வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தினமணி
Posted by வாசகன் at 7:02 PM 0 comments
நாடு முழுதும் 150 விமான தளங்களைப் பயன்படுத்தத் திட்டம்
நாடு முழுவதும் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பயன்படுத்தப்படாமல் உள்ள 150 விமான தளங்களை பயனுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் மற்றும் மாநில அரசுகளின் முதலீட்டில் இவற்றை இயக்கச் செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
உலகப் போரின் போது ராணுவத்தின் பயன்பாட்டுக்கும், அவசரமாக போர் விமானங்கள் தரையிறங்குவதற்கும் நாடு முழுவதும் ஏராளமான விமான தளங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் தற்போது 150க்கும் மேற்பட்ட குட்டி விமான நிலையங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
தற்போது, இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேவையை சமாளிக்க கூடுதல் விமான நிலையங்களை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இதற்காக தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள விமானத் தளங்களை விமான நிலையங்களாக மாற்றி இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
தினமலர்
Posted by வாசகன் at 6:54 PM 0 comments
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி 31 ஆகஸ்ட் முதல்
7-வது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் 9-ந்தேதிவரை சென்னையில் நடக்கிறது. எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானங்களில் போட்டி நடக்கிறது.
இந்தப்போட்டியில் மொத்தம் 11 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. `ஏ' பிரிவில் பாகிஸ்தான், ஐப்பான், மலேசியா, ஆங்காங், சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும், `பி' பிரிவில் இந்தியா, கொரியா, சீனா, வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தப்போட்டிக்காக இந்திய வீரர்கள் கடந்த சில தினங்களாக சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனா அணி நேற்று இரவு சென்னை வந்தது.
ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வீரர்கள் இன்று காலை சென்னை வந்தனர். இதையொட்டி விமானநிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. இதே போல பாகிஸ்தான் வீரர்கள் தங்கும் சவேரா ஓட்டலிலும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாளை வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
Posted by வாசகன் at 6:51 PM 0 comments
ராஸ் அல் கைமாவில் இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்கம்
ராஸ் அல் கைமாவில் இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்கம்
துபாய்: ராஸ் அல் கைமாவில் இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.
இதில் துபாய்க்கான இந்தியத் துணைத் தூதர் வேணு ராஜாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ரக்கீன் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இம்மாத் ஹப்பர், ஜெனரல் அல் நூபி முகம்மது உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூத்த இந்தியரான மங்கம்மாள் பஞ்சோலியா கெளரவிக்கப்பட்டார்.
பின்னர் பாலிவுட் கலைஞர்கள் கலந்து கொண்ட ஏக் ஷாம் இந்தியா கே நாம் என்ற பெயரிலான கண்கவர் கலை நிகழ்ச்சியும் நடந்தது.
விஜய் தாவ்தா, திலீப் மேத்தா ஆகிேயார் நிகிழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினர். இந்தியா இன்டர்நேஷனல் கிளப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை நாராயணன் பாபிலானி விளக்கிப் பேசினார். கீதா பாபிலானி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
www.thatstamil.com
Posted by முதுவை ஹிதாயத் at 6:48 PM 0 comments
2000 அடி ஆழத்தில் மூன்று வாரங்களாக...
அமெரிக்காவின் உட்டாவ் பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள் வெள்ள நீர் புகுந்து அந்த சுரங்கம் இடிந்து விழுந்தது.
சுரங்கத்துக்குள் வேலை செய்து கொண்டிருந்த தொழி லாளர்களில் 6 தொழி லாளர்களை 3 வாரங்கள் ஆகியும் மீட்க முடிவில்லை. 2000 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடும் அவர்களை மீட்க மேல் பகுதியில் இருந்து இதுவரை 6 ஆழ் துளைகள் போட்டனர். ஆனாலும் மீட்க முடியவில்லை. அவர்கள் இருக்குமிடமும் தெரியவில்லை.
இந்த நிலையில் 7-வதாக மீட்பு படையினர் ஒரு துளை போட்டு அதில் நவீன கேமரா பொருத்தப்பட்ட ரோபாட்டை செலுத்துகிறார்கள். துளை வழயாக இந்த போராட் 1000 அடி ஆழத்தில் சென்று தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை படம் பிடித்து அனுப்பும். அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா.. இருந்தால் அவர்களை எப்படி மீட்க வேண்டும் என்ற தகவலையும் இந்த ரோபாட் தெரிவிக்கும்.
Posted by வாசகன் at 6:48 PM 0 comments
பத்துஆண்டுகளாக நடந்த பணமோசடி வழக்கிலிருந்து ஹேமமாலினி விடுதலை.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் 1997-ம் ஆண்டு ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு ஆடுவதற்கு நடிகை ஹேமமாலினி ஒப்புக்கொண்டார். இதற்காக நிகழ்ச்சி அமைப்பாளர் சுரேஷ் குல்ஜாரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கி இருந்தார்.
ஆனால் அவர் ஒப்புக் கொண்டபடி அந்த நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை. அட்வான்ஸ் தொகையையும் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து சுரேஷ் குல்ஜார் ஹேமமாலினி மீது கோட்டா கோர்ட்டில் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, பாதுகாப்பு காரணங் களுக்காகத்தான் அந்த நாட்டிய நிகழ்ச்சியில் ஹேமமாலினி கலந்து கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியை மாவட்ட அதிகாரிகள் ரத்து செய்து விட்டனர்.
இதனால் ஹேமமாலினி மீதான வழக்கை தள்ளுபடி செய்கிறேன்'' என்று கூறினார். இதையடுத்து பண மோசடி வழக்கில் இருந்த ஹேமமாலினி விடுவிக்கப்பட்டார்.
இது பற்றி ஹேமமாலினி கூறும்போது:-
"மோசடி வழக்கில் இருந்து நான் விடுவிக்கப்பட்டதை அறிந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. இது பற்றி நான் வேறுஎதுவும் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.
மாலைமலர்
Posted by வாசகன் at 6:42 PM 0 comments
ஆப்கன்: அமெரிக்கத் தாக்குதலுக்கு ஹமீத் கர்சாய் கண்டனம்.
ஆப்கானிஸ்தானில் மறு சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கூட்டு படைகள் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
தெற்கு பகுதியில் மூசா காலா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களையும் நடத்தி வருகிறது.
இதை தொடர்ந்து இந்த பகுதிகளில் அமெரிக்க கூட்டு படையினர் விமான தாக்குதல் நடத்தியது.
தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக கூறி பொது மக்களின் குடியிருப்புகள் மீது விமானங்கள் சரமாரி குண்டு வீசின. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 அப்பாவி பொது மக்கள் பலியாகி விட்டனர். இன்னும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அமீது கர்சாய் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்
நன்றி: மாலைமலர்
Posted by வாசகன் at 6:34 PM 0 comments
கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர்
கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர்
பாறை இடையே பாலம் கட்ட பரிந்துரை
ஆகஸ்ட் 27, 2007
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே பாலம் கட்டுவது குறித்து தமிழக அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்று சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் முல்லைவேந்தன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
கன்னியாகுமரி பழத் தோட்டம் மற்ற இடங்களில் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு ஒரு முன் மாதிரி பழத்தோட்டமாக இருந்து வருகிறது. திருவள்ளுவர் சிலை பராமரிப்பு ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இது குறித்து பரீசிலிக்கப்படும்.
திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் விதமாக பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்தை அரசுக்கு தெரிவிப்போம் என்றார்.
www.thatstamil.com
Posted by முதுவை ஹிதாயத் at 6:28 PM 0 comments
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்
ரயில்வேயை அலற வைத்த 'பொது ஜனம்'
சாத்தான்குளம்: லஞ்சம் தராததால் தன்னை பாதி வழியில் இறக்கிவிட்ட டிக்கெட் பரிசோதகரையும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத தென்னக ரயில்வேயையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அலற வைத்துள்ளார் ஒரு திருவாளர் பொதுஜனம்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஹென்ஸ் குமார் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி திருச்சூர் செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸில் ரயிலில் முன் பதிவு செய்தார். அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கிடைத்தது.
பயண தினத்தன்று ரயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டைக் காட்டி விபரம் கேட்டார். அதற்கு அவர் நாகர்கோவிலில் உங்களுக்கு பெர்த் கிடைக்கும் என்று கூறியதால் ஹென்ஸ் குமார் ரயிலில் ஏறினார்.
நாகர்கோவில் வந்ததும் டிக்கெட் பரிசோதகர், உங்களுக்கு பெர்த் உறுதியாகிவிட்டது. ஆனால், ரூ. 100 (லஞ்சம்) தந்தால்தான் பெர்த் தரப்படும் என்றார்.
என்னிடம் பணம் இல்லை என்று ஹென்ஸ் குமார் கூறியதையடுத்து அவரை டிக்கெட் பரிசோதகர் வலுக்கட்டாயமாக அடுத்த ஸ்டேசனில் இறக்கிவிட்டார்.
இது குறித்து ஹென்ஸ்குமார் சென்னையில் உள்ள தென்னக ரெயில்வே மேலாளருக்கு புகார் அனுப்பியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.
இதையடுத்து தனது புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் (Right to information act) மூலம் அறிந்து கொள்ள விரும்புவதாகக் தென்னக ரெயில்வேக்கு கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து சிக்கலில் மாட்டிய தென்னக ரயில்வே அதிகாரிகள் உடனடியாக டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் ஹென்ஸ் குமாரை நேரில் சந்தித்த அந்த டிக்கெட் பரிசோதகர், மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு புகாரை வாபஸ் பெறுமாறும் கெஞ்சியுள்ளார்.
அந்த டிக்கெட் பரிசோதகரின் வேலை காலியாகும் நிலை ஏற்பட்டதால் ஹென்ஸ் குமாரும் மனமிறங்கி தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது மிகப் பெரிய ஆயுதம். அதை நாம் சரியாக பயன்படுத்தினால் தவறு செய்யும் அரசுத்துறையினரை அலற வைக்க முடியும்.
www.thatstamil.com
Posted by முதுவை ஹிதாயத் at 6:24 PM 1 comments
சோனியாவின் மூன்று அம்சத் திட்டம்
இடதுசாரி கட்சிகளின் கோபத்தை அடக்கவும், அவர்களை சமாதானப்படுத்தவும் சோனியா மூன்று அம்ச திட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்த திட்டம் என்ன என்பது மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் ஆகியோர் மட்டுமே இதை அறிந்துள்ளனர். பிரதமரை சந்தித்த பிறகு காங்கிரஸ் உயர் மட்ட கூட்டத்திலும் சோனியா பங்கேற்றார். இதில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அந்தோணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் பங்கேற்றனர்.
அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் தற்போது வரை நடந்துள்ள சம்பவங்கள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரியுடன் நடத்திய பேச்சு குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரிவாகவும், முக்கிய கருத்துக்களையும் விளக்கினார். இடதுசாரி கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து தற்போது சற்று இறங்கி வந்திருப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இடது சாரி கட்சிகளிடம் காணப்படும் இந்த மாற்றம் குறித்து சோனியா மகிழ்ச்சி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் மத்திய கமிட்டி கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள், மத்திய அரசை கவிழ்க்கும் அளவுக்கோ அல்லது அபாய எச்சரிக்கை செய்யும் அளவுக்கோ இல்லை என்பதும் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நிலைப்பாடு இருப்பதுபோல இடதுசாரி கட்சிகளுக்கு என்று தனிப்பட்ட நிலைப்பாடு உள்ளது நியாயமே என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. தவிர இடதுசாரி கட்சிகளுக்கு இருக்க கூடிய நிர்பந்தங்களும், அதை ஏற்க வேண்டிய அவசியம் குறித் தும் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது. மற்றவர்கள் தெரிவித்த கருத்துக்களை சோனியா உன்னிப்பாக கேட்டுக் கொண்டார். தனது நிலை குறித்து அவர் எதையும் கூறவில்லை.
மத்தியில் கூட்டணி ஆட்சி ஏற்பட முக்கிய காரணம் சோனியா தான். அவருக்கு ஏழு மொழிகள் தெரியும் என்ற தகவல் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். கூட்டணி ஆட்சி பிரச்னை ஏற்படும் போதெல்லாம், பிரச்னையை ஏற்படுத்தும் கூட்டணி கட்சிகளுடனும், இடதுசாரி கட்சிகளுடனும் நயமாக பேசி பிரச்னைக்கு தீர்வு கண்டு வருபவர் சோனியா தான். அந்த வகையில் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தையும் சோனியா சிறப்பாக கையாளுவார் என்றே காங்கிரசார் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கூடாது என்று இடதுசாரி கட்சிகளும், ஒப்பந்தத்தை அமல்படுத்தியே தீர வேண்டும் என்று பிரதமர் மன்மோகனும் தங்கள் நிலையில் மிகவும் தீர்மானமாக உள்ளனர். இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்றால், சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மற்றும் அணுசக்தி சப்ளை குழுவுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி அவற்றுடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதை செய்யக் கூடாது என்பது தான் இடது சாரி கட்சிகளின் நிலை.
இந்த கட்டத்தில் தான் தனது 3 அம்ச திட்டத்தை சோனியா செயல்படுத்த உள்ளார்.
1. ஒப்பந்தத்தை அமல்படுத்துவதை மெதுவாக மேற்கொள்வது,
2. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் பேச்சு வார்த்தையை முடிந்தஅளவுக்கு ஒத்திப்போடுவது 3. இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை களைய தீர்வுக்காண வழியை கடைப்பிடிப்பது என்பது சோனியாவின் மூன்று அம்ச திட்டம்.
இந்த திட்டத்தை மேற்கொண்டால், பிரதமர் மன்மோகன் சிங் தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வர வேண்டியதாக இருக்கும். இருப்பினும், இடதுசாரி கட்சிகளை சமாதானப்படுத்தி அதன்பிறகு ஒப்பந்தத்தை அமல்படுத்தலாம் என அவருக்கு சோனியா எடுத்து கூறுவார் என்றே கருதப்படுகிறது.
இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை களைய மேற்கொள்ள வேண்டிய தீர்வுக்காண வழியில் முதல் இடத்தை பெறுவது பார்லிமென்ட்டில் நடக்க உள்ள விவாதம்.
இந்த விவாதத்தின் போது அமெரிக்காவின் ஹைட் சட்டத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஒப்பந்தம் குறித்த கவலைக்கு விரிவான விளக்கம் அளிக்கப்படும். இந்த விவாதத்தின்போது பா.ஜ., உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் காரசாரமாக பேசுவர். அவர்களுக்கு இணையாக காங்கிரஸ் எம்.பி.,க்கள் பேச வேண்டும் என்றால், அவர்கள் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நன்கு அறிந்து இருக்க வேண்டும். எனவே, அவர்களுக்கு இந்த ஒப்பந்தம் குறித்து விளக்கி கூறும்பணியை அணுசக்தி நிபுணர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்படைத்துள்ளார்.
இதன் அடுத்த கட்டமாக இடதுசாரி கட்சி தலைவர்களுடன் சோனியாவே நேரிடையாக பேச்சு நடத்த உள்ளார். அடுத்த சில நாட்களில் இந்த பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் வருவதை யாரும் விரும்பவில்லை. எனவே காங்கிரசுக்கு சாதகமான தேர்தல் சூழ்நிலை வரும் வரை ஆட்சியை தொடர வேண்டும் என்பதே சோனியாவின் எண்ணம். அதற்காக இடதுசாரி கட்சிகளை சமாதானப்படுத்தும் பணியில் அவர் தீவிரமாக இறங்கி விட்டார் என்றே காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
Posted by வாசகன் at 6:21 PM 1 comments
அறிவியல் இன்று - 27/08/2007
அண்டார்ட்டிகாவில் பறக்கும் ரோபோ
------------------------------------------
அண்டார்ட்டிகாவில் அராயச்சி செய்வதற்கு பறக்கும் ரோபோ ஒன்றை சீனா வடிவமைத்துள்ளது. ஹெலிகாப்டரை போல் பறக்கும் திறனுடைய இந்த ரோபோ ,அண்டார்ட்டிகாவில் அலைந்து திரிந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இது போன்று தரையில் ஊர்ந்து /சறுக்கிக்கொண்டு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு ரோபோவும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட இருக்கிறது.
இதனால் செலவும் உயிர்ச்சேதமும் பெருமளவில் தவிர்க்கப்படும் என்று சீன துருவ ஆராய்ச்சி கழகத்தின் (Polar Research Institute of China) செய்தித்தொடர்பாளர் சின்சாவ (Xinhua) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். விரிவான செய்திகள் இங்கே
இளநிலை உயிரணுக்கள் இதய நோய்களின் தீர்வா??
--------------------------------------------------------
மனிதனின் உடலில் பலவிதமான உயிரணுக்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு உயிரணுக்களும் வித்தியாசமானவை. இவையெல்லாம் ஒவ்வொரு விதமாக மாறுவதற்கு முன் தோன்றும் உயிரணுக்களை இளநிலை உயிரணுக்கள் (Stem cells)என்று அழைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட உயிரணுக்களின் உதவியோடு எலிகளின் இதய நோய்களை குணப்படுத்தும் சோதனை முயற்சி ஒன்றில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் வருங்காலத்தில் மனிதனுக்கும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு இந்த இளநிலை உயிரணுக்கள் மூலம் தீர்வு காணலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்குறது.
இந்த செய்தி பற்றி மேலும் விவரம் அறிய,இங்கே க்ளிக்குங்கள்.
நன்றி :
http://www.reuters.com/article/technologyNews/idUSPEK27411020070826
http://www.reuters.com/article/scienceNews/idUSN2538161420070826
Posted by CVR at 7:00 AM 1 comments
சந்திரபாபு நாயுடு மகன் பாலகிருஷ்ணா மகளை மணந்தார்
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷின் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. தனது மாமாவும், நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகள் பிராமிணியை அவர் மணந்தார்.
எளிமையாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, நாகேஷ்வர ராவ், ஜெயசுதா, கிருஷ்ணம் ராஜூ உள்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் திருமண நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பிற பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் முதல்வர் ராஜசேகர ரெட்டி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவரது சார்பில் சபாநாயகர் கே.ஆர். சுரேஷ் ரெட்டி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், தெலுங்கு சினிமா உலகில் நீங்கா இடம் பெற்ற, மறைந்த என்.டி. ராமராவின் மகன் ஆவார்.
தினமணி
Posted by Boston Bala at 5:13 AM 0 comments
அன்னை தெரசாவின் 97-வது பிறந்த நாள்
Nuns Mark Mother Teresa's Birthday - washingtonpost.com
கோல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை 97-வது பிறந்த நாளையொட்டி அன்னை தெரசாவின் கல்லறையில் அஞ்சலி செலுத்துகிறார் "மிஷனரி ஆப் சாரிட்டிஸ்' தலைவி சகோதரி நிர்மலா.
Japanese PM's wife visits Mother Teresa's home: "Mother Teresa's legacy lives on"
Sister Nirmala :: On September 5, it will be ten years since the death of Mother Teresa
Posted by Boston Bala at 4:54 AM 0 comments
ஜெர்மானிய பெண்ணுக்கு 53 லட்சம் நஷ்டஈடு
11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் கையை இழந்த ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டை சேர்ந்த குந்தா நீயுபர் (Gunda Neubauer) ,53 என்ற பெண் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். பஸ்ஸில் அவர், உதய்பூரில் இருந்து மவுண்ட் அபுவிற்கு சென்ற போது பஸ் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் நீயுபர் தனது வலது கையை இழந்தார்.
இதனால் அவர் ஜெர்மனியில் பார்த்து வந்த வேலையை இழக்க நேரிட்டது. இதனையடுத்து ரூ.11.67 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரி தில்லியில் உள்ள ஜெர்மன் துதரகத்தின் மூலம் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார்.
இதற்கான நஷ்டஈடு தொகையை வழங்குவதற்கு பஸ்சை விபத்துக்குள்ளாக்கிய டிரைவரும், கண்டக்டரும் தான் பொறுப்பு. எனினும் அவர்களுக்கு பதிலாக பஸ் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிறுவனம் அந்த பெண்ணுக்கு ஒரு மாதத்திற்குள் ரூ. 53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
தினமணி
The Hindu News :: German national gets Rs 53 lakhs for loss of limb in accident
Posted by Boston Bala at 4:37 AM 1 comments
பழநியில் ரோப் கார் பெட்டி அறுந்து விழுந்து 4 பேர் பலி
பழநி: பழநி மலைக்கோயிலுக்கு ரோப் காரில் சென்ற ஆவின் அதிகாரிகள் இருவர் உட்பட 4 பேர் பலியாயினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
- தினமலர்
Posted by சிவபாலன் at 2:41 AM 0 comments
b r e a k i n g n e w s...