.

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Thursday, August 30, 2007

கருணா குழு முக்கியஸ்தர் சுட்டுக் கொலை

கருணா குழுவின் பிராந்திய அரசியல் பிரிவின் தலைவரான முரளி என அழைக்கப்படும் நடராஜா குமரன் , வயது 24, இன்று புதன்கிழமை விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் [ pistol] குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக விரட்டி விட்டோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்து வரும் வேளையில் இச் சம்பவம் நடந்துள்ளது.


கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் 2003 ல் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி வருகிறார்.



ஆதாரம் : BBC சிங்கள சேவை.

இச் சம்பவம் பற்றிய பிந்திய செய்தி



கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான Daily Mirror [வியாழக்கிழமை ஏடு] நடராஜா குமரன் விடுதலைப் புலிகளால் கொல்லப்படவில்லை எனச் செய்தி வெளியிட்டுள்ளது. கருணா குழுவில் இருந்து பிரிந்த குழுவான பிள்ளையன் குழுவைச் சேர்ந்தவரே இந்த நடராஜா குமரன் என்றும், இவர் கருணா குழுவினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இச் சம்பவம் பற்றி விடுதலைப் புலிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

Wednesday, August 29, 2007

இலங்கையில் இன்று...



இலங்கைக்கு வருகை தந்திருக்கும் மியான்மார் பதில் பிரதமர் லெப்டினட் ஜெனரல் தீன்சின் தமது பாரியார் சகிதம் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ திருமதி தீன்சினுக்கு கைலாகு கொடுத்து வரவேற்பதைக் காணலாம். ...



தகவல் : தினக்குரல்




"இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை" - இலங்கைப் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கா



இலங்கை இன நெருக்கடித் தீர்வு விடயத்தில் இனிமேல் வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்வதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டின் மூலமே தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.



தகவல் : தினக்குரல்




போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் - விடுதலைப் புலிகள் சந்திப்பு



இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சோல்பர்க் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் இன்று (ஓகஸ்ட் 29) பிற்பகல் வன்னியில் விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்தச் சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத் தலைவர் புலித் தேவன் மற்றும் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரயன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.



மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள், போர் நிறுத்தம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்~ கடந்த ஞாயிறன்று தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக வன்னித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.



அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மதிப்பளித்து அதனை நடைமுறைப்படுத்துவது குறுpத்தும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரினால் இந்தப் பேச்சுவார்த்தையின் போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.



தகவல் : Lanka Dissent




தமிழ் இளைஞர்கள் இருவரை வாழைச்சேனையில் காணோம்



வாழைச்சேனை, நாசிகன் பகுதியைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காண வில்லை என்று வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.



அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து சிவானந்தன் (வயது22) மற்றும் கைலாயபிள்ளை தயானந்தன் (வயது 18) ஆகியோரே காணாமல் போயிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த இளைஞர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கையடக்கத் தொலைபேசிக்கு "கிற்காட்' கொள்வனவு செய்வதற்காக ஓட்டமாவடிப் பகுதிக்குச் சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணையை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



தகவல் : உதயன்

பணம் கடத்த முயன்ற இரு இந்தியப் பிரஜைகள் கொழும்பில் கைது

இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயத் தாள்களை எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு இந்தியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இன்று (ஓகஸ்ட் 29) பிற்பகல் இந்த இரண்டு இந்தியப் பிரஜைகளும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு செல்வதற்காக முயற்சித்த வேளையில், விமான நிலைய அதிகாரிகளினால் இவர்கள் சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டுள்ளனர்.


இவ்வேளையில்,இவர்கள் நாணயத் தாள்களை விழுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இவர்கள் நாணயத் தாள்களை விழுங்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


இவ்வாறு இவர்கள் இருவரும் விழுங்கியிருந்த வெளிநாட்டு நாணயத் தாள்களின் பெறுமதி ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.



தகவல் : http://lankadissent.com

Tuesday, August 28, 2007

தெல்லிப்பளைத் துர்க்கையம்மன் ஆலயத் தேர்த் திருவிழா

யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நேற்று [ஞாயிற்றுக் கிழமை] மிகவும் விமர்சையாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. காலை7.00 மணிக்கு இடம் பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு தேரில் பவனி வருவதற்காக அடியவர்களின் அரோகரா கோசத்துடன் அன்னை வெளியில் வந்தார்.





பகல் 9.15 மணிக்கு தேர் இருப்பிடத்தில் இருந்து வீதி ஊர்வலமாக ஆரம்பித்து பகல் 10.00 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்தது. யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான அடியவாகள் காலை முதல் ஆலயத்தில் கூடத் தொடங்கினார்கள்.





தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள், காவடிகள் எனப் பலவும் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.





இடம் பெயர்ந்து பல்வேறு நெருக்கடிக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் எனக் கூறி அழுது புலம்பிய காட்சிகள் அனைவரின் மனத்தையும் தொடுவதாகக் காணப்பட்டது.





Source [தகவல் ஆதாரம்]: www.pathivu.com

விடுதலைப் புலிகள் - இலங்கை இராணுவம் மோதல்


இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள வவுனியா - மன்னார் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்குமிடையே கடும் சண்டை மூண்டது.

திங்கட் கிழமை பிற்பகல் 4 மணியளவில் மன்னார் - வவுனியா மாவட்ட எல்லைப் பகுதிகளை அண்டிய விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நோக்கி இலங்கை இராணுவத்தினர் முன்நகர்வு தாக்குதலை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடாத்தினர்.

இரு மணி நேரமாக இரு தரப்புக்குமிடையில் கடும் சண்டை மூண்டது. இச் சமரில் 3 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இச் சமரில் விடுதலைப் புலிகளுக்கு எதுவித இழப்பும் ஏற்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

source[தகவல் ஆதாரம்] : http://www.tamilnet.com/

Wednesday, August 22, 2007

திருச்சி - இலங்கைத் தமிழருக்கு வந்த சோதனை - 3 ஏட்டு கைது

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள எல்.ஐ.சி. காலனி காவேரி நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது பெரியம்மாவின் மகன் ரமேஷ் (32). இலங்கைத் தமிழரான இவர், லண்டனில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவருக்கு ரோகிணி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற இவர்கள், லண்டன் நகரில் உள்ள லெஸ்தர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

கடந்த 3-ம் தேதி லண்டனில் இருந்து திருச்சி வந்த ரமேஷ், தனது உறவினரான ஜெயராஜ் வீட்டில் தங்கியிருந்தார். 19-ம் தேதி அதிகாலை ஜெயராஜ் வீட்டுக்கு வந்த 6 பேர் தங்களை சிபிசிஐடி குற்றப்பிரிவு போலீசார் என்று அறிமுகம் செய்து கொண்டனர். வீட்டில் இருந்த ரமேஷ் யார் என்று கேட்டனர்.

பின்னர், ரமேஷைப் பார்த்து, ‘உனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு சில ஆதாரங்களும் உள்ளது. உன் மீது வழக்கு போடாமல் இருக்க எங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று கூறி மிரட்டினர்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

Friday, August 17, 2007

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற்றம்

கொழும்பு, ஆக. 17-

இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி தமிழர் பகுதிகளில் பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. யாழ்ப்பாணத்தை தங்கள் பிடியில் வைத்திருக் கும் ராணுவம் அங்கு அவசிய பொருட்கள் செல்வதை தடுத்து நிறுத்தி வருகிறது.

இதனால் போதிய உணவு மற்றும் அவசிய பொருள்கள் இன்றி தமிழர்கள் பட்டினி கிடக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் மீது குண்டு வீசுவது, மாணவர்களை கடத்துவது போன்ற அட்டூழியங்களில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

மேலும் செய்திக்கு "மாலை மலர்".

Saturday, July 14, 2007

முரளிதரன் சாதனை: 700 விக்கெட்கள்

முத்தையா முரளிதரன் சனிக்கிழமையன்று தனது 700வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவரது இந்த சாதனையால் ஸ்ரீலங்கா அணி பங்களாதேசத்தை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 193 ஓட்டங்களில் வென்றது. இந்த டெஸ்ட்டில் முன்னதாக குமார சங்ககாரா 222 ஓட்டங்கள் எடுத்திருந்ததும் குறிப்பிடத் தகுந்தது.

ஸ்கோர்: ஸ்ரீ லங்கா 500-4 (ஆ.மு), பங்களா 131 &176 ( முரளி 6/28 & 6/54)
The Hindu News Update Service

Thursday, July 12, 2007

இலங்கை தமிழர் பகுதியில் குண்டு வீச்சு.

2 பேர் பலி- 11 பேர் படுகாயம்.
இலங்கை அரசு- விடுதலைப்புலி இடையே மீண்டும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக நார்வே நாட்டு தூதர் முல்லை தீவு சென்று விடுதலைப்புலிகளுடன் பேசி விட்டு வந்தார். அவர் கொழும்பு திரும்பிய சில மணி நேரத்தில் தமிழர் பகுதியில் சிங்கள ராணுவம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. முல்லைத்தீவு அருகே உள்ள அனம்பில் பகுதியில் சிங்கள ராணுவத்தின் கிபீர் ரக விமா னங்கள் பறந்து வந்து குண்டுகளை வீசின. அங்கிருந்த கிறிஸ்தவ ஆலயம், மீன் சந்தை தாக்கப்பட்டன. இதில் பள்ளி மாணவர் செல்வா (வயது 15), பாலசுப்பிரமணியம் (51) ஆகியோர் உயிர் இழந்தனர். கலையரசு (4), அருள்சன் (1) ஆகிய குழந்தைகள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பகுதி சுனாமியின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருந்தன. குண்டு வீச்சால் இந்த வீடுகளும் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே விடுதலைப்புலிகளிடம் 17 ஆண்டு களுக்கு மேலாக இருந்த தோப்பிகலா முகாமை ராணுவம் கைப்பற்றி விட்டதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது.

Wednesday, July 11, 2007

மட்டக்களப்பு-தொப்பிகலா பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.

விரைகிறார் நார்வே தூதர்
இலங்கையின் கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் உள்ள முக்கியப் பகுதியான தொப்பிகலாவை மீட்டு விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அப்பகுதிக்குள் ராணுவம் வெகு தூரத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிதான் தொப்பிகலா. அடர்ந்த வனப் பகுதியான தொப்பிகலாவை விடுதலைப்புலிகள் தங்கம் வசம் வைத்திருந்தனர். இந்தப் பகுதியில் மட்டுமே புலிகள் ஆதிக்கம் இருந்ததால் இதை மீட்க கடந்த சில வாரங்களாக இலங்கை ராணுவம் கடுமையாக முயன்று வந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு தொப்பிகலா பகுதியை ராணுவம் கைப்பற்றியதாக இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும்...

Monday, June 25, 2007

ச:சிரீலங்காவில் இனப்படுகொலையை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் ஊர்வலம்

சிரீலங்காவில் தொடர்ந்துவரும் தமிழ் இனப்படுகொலைகளை எதிர்த்து டர்பனில் இந்தியர்கள் அதிகம் வாழும் சாட்ஸ்வர்த் பகுதியிலிருந்து தென்னாப்பிரிக்காவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய பேரணியில் நூற்றுக்கணக்கானவர் பங்கு கொண்டனர்.

மேல் விவரங்கள்...The Hindu News Update Service

Sunday, June 24, 2007

இலங்கை: 10 ஆயிரம் இராணுவத்தார் தப்பி ஓட்டம்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. தமிழர் பகுதிகளில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ராணுவத்துக்கு விடுதலைப்புலிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் விமானப்படை பலமும் அதிக ரித்து வருவது சிங்கள ராணு வத்துக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. இராணுவத்தின் கெடுபிடிகளால் சிங்கள வீரர்கள் அதிருப்தி அடைந்து விடு கிறார்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கும் அவர்களால் ஈடு கொடுக்க முடிய வில்லை.

இதனால் இராணுவத்தில் இருந்து சிங்கள வீரர்கள் தப்பி ஓடுவது அதிகரித்து வருகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இராணுவத்தில் இருந்து 10 ஆயிரத்து 60 சிங்கள வீரர்கள் தப்பி ஓடி விட்டனர். இது தவிர 93 உயர் ராணுவ அதிகாரிகளும் தப்பி ஓடி இருக்கிறார்கள்.



இதனால் இப்போது கூடுதல் இராணுவத்தினரை சேர்க்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. இராணுவத்துக்கு 25 ஆயிரம் பேரையும், கடற்படைக்கு 15 ஆயிரம் பேரையும், விமானப் படைக்கு 10 ஆயிரம் பேரையும் நியமிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் தகுதியான வீரர்கள் இன்னும் கிடைக்கவில்லை.


மாலைமலர்

Friday, June 8, 2007

இலங்கைத் தமிழர்களை வெளியேற்ற தடை.

இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு !

கொழும்பு நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்ற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொழும்பில் வசித்து வரும் தமிழர்களை அங்கிருந்து வெளியேற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பும் வேலையில் கொழும்பு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சர்வதேச மனித உரிமைகளை மீறும் செயல் என்றும், தமிழர்களை ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கடந்த 2 நாட்களில் மட்டும் கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, போர் நடந்து வரும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் கொழும்பு போலீஸாரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற தனியார் அமைப்பு சார்பில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொழும்பு போலீஸாரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

Thursday, June 7, 2007

பயணியை உதைத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

விமானம் தாமதம் என்று பயணிகள் பலமுறை அலைக்கழிக்கப்பட, எரிச்சலுற்ற தமிழகப் பயணி ஒருவர் "மாற்று ஏற்பாடு செய்யக்கூடாதா?" என்று கேட்டதற்கு அவருக்கு 'மாத்து' கொடுத்துள்ளனர் ஸ்ரீலங்கா ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள்.

நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர்.

விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது.

ஆனால் கிளம்பிய சில விநாடிகளிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பயணிகளை தரை இறக்கிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான நிலையத்திலேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் 11 மணிக்கு பயணிகளை விமானத்தில் ஏறுமாறு கூறினர். இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின்னர் மீண்டும் அனைவரையும் கீழே இறங்கி விமான நிலையத்தில் அமருமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் என்ன பிரச்சினை என்று ஆவேசமாக கேட்டனர்.

அப்போது ஜாகிர் உசேன், சற்று கோபமாக, வேறு ஏதாவது ஏற்பாடு செய்யக் கூடாதா என்று கேட்டுள்ளார்.ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர்.

ஆனால் ஜாகிர் உசேனை மட்டும் இறங்க விடாமல் தடுத்த பாதுகாவலர்கள் அவரை விமானத்திலேயே அமர வைத்தனர். பின்னர் கைவிலங்கிட்டு புகைப்படம் எடுத்தனர். பிறகு சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.

வலி தாங்க முடியாமல் ஜாகிர் உசேன் போட்ட கூச்சலால், கீழே இறங்கிக் கொண்டிருந்த பயணிகள் வேகமாக விமானத்திற்குள் வந்தனர். அனைவரும் பாதுகாவலர்களைத் தடுத்து நிறுத்தி ஜாகிர் உசேனைக் காப்பாற்றி கீழே அழைத்துச் சென்றனர்.

தட்ஸ் தமிழ்

கொழும்புவிலிருந்து தமிழர்கள் கட்டாய வெளியேற்றம்

இலங்கை போலிஸ் இன்றுமுதல் தலைநகர் கொழும்புவிலிருந்து தமிழர்களை கட்டாயமாக வெளியேற்றத் துவங்கியுள்ளது. தமிழ் ஈழப் புலிகளின் ஆதரவாளர்களாக சந்தேகிக்கப் படுபவர்களை கண்டறிய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இரவு துவங்கி இலங்கை போலீஸ் 'ரெய்ட்' நடத்தி நூற்றுக்கணக்கில் தமிழர்களை பஸ்களில் ஏற்றி வடக்கு அல்லது கிழக்கு மகாணங்களை நோக்கி அனுப்பிவைத்தது. 'போதிய காரணமின்றி' கொழும்புவில் தங்கியிருக்கும் தமிழர்களை திருப்பி அனுப்புவதாக இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.

குறைந்த விலை லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்கள் பலரும், தற்காலிகமாக தங்கியிருப்பவர்களுமாக மொத்தம் 376பேர் இதுவரை வெளியேர்றப்பட்டுள்ளனர்.

இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளன. 'இனச் சுத்தீகரிப்பு நடவடிக்கை இது' என அவர்கள் வர்ணித்துள்ளனர்.

Police evict Tamils from Colombo BBC News, UK
Sri Lanka begins forced eviction of Tamils from Colombo Hindu
Police evict Tamils from temporary lodges in Colombo India eNews.com

Tuesday, May 29, 2007

"ஆயுத உதவி ப்ளீஸ்!" - இந்தியாவிடம் கேட்கிறது இலங்கை!

இலங்கையின் ராணுவத்துறை செயலர் இந்தியாவுக்கு அதிகாரபூர்வமற்ற வருகை மேற்கொண்டு, உச்சத்தில் நடந்து வரும் உள்நாட்டு போரை சமாளிக்க இந்தியாவிடம் ஆயுத உதவி கோருவதாக பி.டி.ஐ நிறுவன செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

இந்தியா உதவாத பட்சத்தில் வேறு நாடுகளின் உதவி கோரப்படுமாம்.

Thursday, May 24, 2007

ச:விடுதலைப் புலிகள் கடற்படையை தாக்கி 35 வீரர்கள் மரணம்

சிரிலங்காவின் வடக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படை முகாமொன்றை இன்று காலையில் தாக்கியதில் 35 கடற்படை வீரர்கள் இறந்தனர்.இதுபற்றிய தி ஹிண்டு செய்தி

ச: ஸ்ரீலங்கா: இராணுவ பேருந்து குண்டுவெடிப்பில் ஆறுபேர் காயம்

கொழும்பு நகரின் வணிகப்பகுதியில் இன்று ஒரு சிங்கள இராணுவ பேருந்து அண்மையில் கண்ணிவெடியொன்று வெடித்து நான்கு சிங்கள இராணுவத்தினரும் பொதுமக்களிருவரும் காயமடைந்தனர். கொழும்புவின் ரிக்ளமேஷன் சாலையில் காலை 8 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேல் விவரங்களுக்கு ..Sri Lanka: Blast hits military bus - CNN.com

Thursday, May 3, 2007

ச:மனித உரிமை மீறல்களால் இலங்கைக்கு பிரிட்டன் உதவி மறுப்பு

மனித உரிமை மீறல்களை காரணமாக்கி அரசினை நிர்பந்திக்குமாறு பிரிட்டன் அரசு ஸ்ரீலங்கா அரசிற்கு உறுதியளித்திருந்த 5.9 மிலியன் டாலர் உதவியில் பட்டுவாடா செய்யப் படாத மிகுதி பாதியை இன்று இரத்து செய்துள்ளது.

மேல் விவரங்களுக்கு ...

Tuesday, April 10, 2007

ஸ்ரீலங்காவில் பஸ்-ட்ரக் மோதல், 20 பேர் மரணம்

கொழும்புவிற்கு தெற்கே 80 கி.மீ தொலைவில் பீர் ஏற்றிச்சென்ற டிரக் ஒன்றும் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் தீப்பிடித்து 20 பேர் மரணமடைந்தனர்; 40 பேருக்கு காயமேற்பட்டது.

மேலும்..Reuters AlertNet -

-o❢o-

b r e a k i n g   n e w s...