.

Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Tuesday, September 4, 2007

கலக்கும் சென்னை - தபால் துறையில் GPS - வீடியோ.

தபால் பட்டுவாடா செய்யும் வாகனங்களில் GPS பொருத்தி தபால்களை சரியான நேரத்தில் சென்றடைய சென்னைத் தபால் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திக்கு "CNN - IBN TV..."


Monday, September 3, 2007

இன்சாட் விண்ணேவல் வெற்றிகரம்: தலைவர்கள் வாழ்த்து.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எஃப் 04 ராக்கெட் மூலம் ஞாயிறன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த செயற்கைக் கோள் இன்சாட் 4சி ஆர் தொழில்நுட்ப காரணங்களால் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக விண்ணில் மாலை 6.20 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

3 கட்டங்களாக திட்டமிடப்பட்ட வேகத்துடன் டிரான்ஸ்பாண்டர்களை விண்வட்டப்பாதையில் செலுத்தியதும், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். இன்சாட் 4 சி ஆர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பின்னர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் மாதவன் நாயர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த செயற்கைக்கோள் மூலம் வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு வசதிகளை அளிப்பதற்காக உயர் சக்தி வாய்ந்த 12 கே.யு. பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இன்சாட் - 4 சி ஆர் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்பட தலைவர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Sunday, September 2, 2007

இன்சாட்4சி ஆர் இன்று விண்ணேவப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து "இன்சாட்4சிஆர்' செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப் 04 ராக்கெட் இன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வில் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஒரு மைல் கல்லாகவே விளங்குகிறது. 49 மீட்டர் நீளமுள்ள இந்த ராக்கெட் 414 டன் எடை கொண்டது. மூன்று அடுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் சுமந்து செல்லும் "இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோள், இன்சாட்4 ரக செயற்கைக்கோளில் மூன்றாவது. இதற்கு முன் இன்சாட்4ஏ மற்றும் இன்சாட் 4பி ஆகிய செயற்கைக்கோள்கள் முறையே 2005ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2006ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன."இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோளின் எடை இரண்டாயிரத்து 130 கிலோ. தகவல் தொடர்புக்கு முக்கியமானது. அதற்கு ஏற்றவகையில் 12 கேயூ பாண்ட் டிரான்ஸ்பான்டர்கள் இதில் உள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.

தினமலர்

Saturday, September 1, 2007

அறிவியல் இன்று - 01/09/2007

நாஸாவால் மறுதளிக்கப்பட்ட ரஷ்யா,நிலவில் தனியாக தளம் அமைக்க முடிவு
----------------------------------------------------------------------------------------
2025-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பத்தை ரஷ்யா பெற்றுவிடும் என்று அந்த நாட்டின் வின்வெளி கழகத்தின் தலைவர் அணாடோலி பெர்மினோவ் (Anatoly Perminov) கூறியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து 2027-2032-க்குள் நிலவில் விண்வெளி வீரர்கள் சென்று இருக்கும்படியான தளம் அமைக்கவும் திட்டங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட்டாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட நாஸா (NASA) நிறுவனத்தை அனுகியதாகவும்,ஆனால் அந்த யோசனையை நாஸா நிராகரித்து விட்டதாக அவர் தெரிவித்தார்.
சீனா,ஜப்பான்,இந்தியா போன்ற மற்ற நாடுகளும் நிலவு ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய இணையப்பக்கம் இங்கே

தட்பவெட்ப மாறுதல்களால் உணவுப்பற்றாக்குறை ஏற்படும்,ஐ.நா விஞ்ஞானி கருத்து.
-------------------------------------------------------------------------------------
-----
உலகில் மாறி வரும் தட்பவெட்ப நிலையினால் உணவு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு உணவுப்பற்றாகுறை ஏற்படலாம் என்று ஐநா சபையின் வானிலை பிரிவின் மூத்த விஞ்ஞானி எம்.வி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
இன்றைய நிலையில் 6.3 பில்லியன் மனிதருக்கு உலகின் 11 விழுக்காடு உள்ள விலைநிலங்களின் மூலம் உணவு உற்பத்தி செய்து வருகிறோம்,2020-இல் உலகத்தின் மக்கட்தொகை 8.3 பில்லியன் ஆகும்போது இப்பொழுதிருப்பதை விட குறைந்த விலைநிலங்கள் கொண்டு எப்படி உணவளிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
விலைநிலங்களில் உப்புத்தன்மை அதிமாவதும்,நிலங்கள் பாலைவனங்களாக மாறுவதும் ஏற்கெனவே நடந்து வருவதாகவும் ,இன்னும் 10 ஆண்டுகளில் இதன் பாதிப்பை உணர ஆரம்பிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.


ஆதாரம்:
http://www.cbc.ca/technology/story/2007/08/31/science-russia-moon.html
http://www.reuters.com/article/scienceNews/idUSL3191845020070831

Friday, August 31, 2007

அணுசக்தி பயன்பாட்டில் இந்தியா பின்தங்க முடியாது: பிரதமர்

இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்ட அமைதிக்குப் பிறகு தாராபூர் அணுசக்தி நிலையத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா அணுசக்தி பயன்பாட்டினால் கிடைக்கும் வளங்களை இழக்கலாகாது எனக் கூறினார். Fast reactor நுட்பங்கள் விரைவாக மேம்படுத்தப்படவேண்டும் என்றும் உள்நாட்டிலேயே யுரேனியம் கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார். மகாராட்டிரத்தின் தானே மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த அணுசக்தி நிலையத்தில் புதிய இரு அணுசக்தி ஆலைகளை நாட்டிற்கு அர்ப்பணித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.

We can't afford to miss nuclear bus: PM

அறிவியல்/தொழில்நுட்ப செய்திகள்

உலகிலேயே மெல்லிசான தொலைக்காட்சிப்பெட்டி
------------------------------------------------------------
உலகிலேயே மெல்லிசான தொலைக்காட்சிப்பெட்டியை ஜப்பானின் ஷார்ப் (Sharp) நிறுவனம் பார்வையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டது. இந்த தொலைக்காட்சிப்பெட்டியின் தடிமன் வெறும் 20mm-கல் தான். இதை சுவற்றில் ஒரு படம் போல மாட்டிவைக்க முடியும்.
இந்த தொலைக்காட்சிப்பெட்டி எப்பொழுது சந்தையில் விற்கப்படும் என்று தெரிவிக்கபடவில்லை.
இந்த செய்தி பற்றிய இணையப்பக்கம் இதோ


புற்றுநோய்க்கு ஒரு புது மருந்து
-----------------------------------------
எய்ட்ஸ் நோய்க்காக உபயோகப்படுத்தப்பட்ட ஒரு மருந்து புற்று நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய திரன் கொண்டது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த செய்தியை பற்றி அறிய இந்த இணைப்பை சொடுக்குங்கள்


ஆதாரம் :
http://www.reuters.com/article/technologyNews/idUSL3050290720070830
http://www.reuters.com/article/scienceNews/idUSN3045790520070831

அறிவியல் இன்று - 31/08/2007

வலைப்பூக்கள் மூலமாக பரப்பப்படும் கணிணி வைரஸ்
--------------------------------------------------------------

வலைப்பூக்கள் மூலமாக இணைய தள சுட்டிகளை இடுகைகளாக இட்டு,அதை சொடுக்கும் பயனர்களின் கணிணிகளில் வைரஸ்களை பரப்பும் ஒரு கும்பல் பற்றிய செய்தி இதோ இந்த பக்கத்தில்

ஒரு ஐபாட் (Ipod) அளவே உள்ள கருவியில் 30,000 திரைப்படங்களை சேமிக்கலாம்
----------------------------------------------------------------------------------------------


அணுக்களின் அளவுகளில் பொருட்களை கையாளுவது குறித்த ஆராய்ச்சியை நானோ டெக்னாலஜி (Nanotechnology) என்று ஆங்கிலத்தில் வழங்குவார்கள் . இந்தத்துறையில் ஐ.பி.எம் நிறுவனத்தை சேர்ந்த இரு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் மூலம் ஒரு ஆப்பிள் ஐபாட் அளவே உள்ள கருவியில் 30000 திரைப்படங்களை உள்ளடக்கும் தொழில்நுட்பம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளன.இந்த செய்தியை உள்ளடக்கிய இணையப்பக்கம் இங்கே

இன்னும் சில மாதங்களில் காரில் உண்மையாகவே பறக்கலாம்
------------------------------------------------------------------


தரையில் இருந்து 10 அடி உயரத்தில் பறக்கக்கூடிய கார் ஒன்றை மொலர் இண்டர்நேஷனல் (Moller International) எனும் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் வெளியிட உள்ளது.
வருடத்திற்கு 250 கார்கள் எனும் அளவில் தயாரிப்பை தொடங்க உள்ள இந்த நிறுவனம் ,இந்த கார் ஓட்டுவதற்கு சுலபமாகவும் பயணிகளுக்கு நிறைய இடம் கொடுக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறி உள்ளது.
M 200G என்று அழைக்கப்பட உள்ள இந்த காரின் விலை 90,000 அமெரிக்க டாலர்களாக நிற்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாயில் குத்து மதிப்பாக 90,000 X 40 = 36,00,000 ரூபாய்கள்.

கம்மியாதான் இருக்குல்ல??
காரை பற்றி மேலும் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.
பி.கு:படத்தில் இருப்பது அவர்கள் விற்கப்போகும் காரின் மேம்பட்ட வெளியீடு (advanced version).

ஆதாரம் :
http://news.bbc.co.uk/2/hi/technology/6970368.stm
http://www.reuters.com/article/technologyNews/idUSN3046298520070830
http://news.bbc.co.uk/2/hi/business/6970031.stm

படம்:
http://www.21stcentury.co.uk/images/technology/moller_m400_skycar.jpg

Thursday, August 30, 2007

அறிவியல் இன்று - 30/08/2007

சிலந்தி மனிதனை போல் சுவற்றில் ஏறலாம்
--------------------------------------------
புகழ்பெற்ற கேலிச்சித்திர கதாபாத்திரமான ஸ்பைடர்மேனை (Spider man) போல வருங்காலத்தில் யார் வேண்டுமானாலும் செங்குத்தான சுவாற்றின் மேல் அனாயாசமாக ஏறலாம். அப்படி நடக்கும் சாத்தியக்கூறு இருப்பதாக இதை பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இதை பற்றிய செய்தி இதோ




உங்கள் தூக்கம் பார்த்து ஏழுப்பி விடக்கூடிய அலாரம்
-----------
----------------------------------------------
நீங்கள் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது எழுப்பாமல் தூக்கம் கம்மியாக இருக்கும் நேரத்தில் எழுப்பி விடக்கூடிய அலாரம் பற்றி தெரிய வேண்டுமா??
இந்த செய்தியை படியுங்கள்.



வயது வித்தியாசம் குழந்தை பெற முக்கியம்
-------------------------------------------------
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் வயது வித்தியாசம் அவர்கள் குழந்தை பெறுவதை பாதிக்கும் என இவற்றை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆஸ்த்திரிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்

Wednesday, August 15, 2007

இந்திய மொழிகளில் தேட கூகிள் கருவிகள்

கூகிள் இந்தியா, இந்திய மொழிகளில் இணையத்தில் தேட புதிய கருவிகளை அறிமுகம் செய்யவிருக்கிறது. தற்போது இவை கூகிள் ஆய்வகத்தில்(Labs) இருக்கின்றன.

தமிழ் உட்பட்ட 14 மொழிகளில் தேட தட்டச்சுக் கருவிகளை குறுங்கருவிப் பட்டைகளாக(Gadgets/Widgets) பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட கூகிள் துவக்கப் பக்கத்தில் (iGoogle Personalized page) இந்தக் கருவிப் பட்டைகளை நிறுவி ஒருங்குறியில்(Unicode) தேடலாம்.

மேலும் ஆங்கிலவழியில் ஹிந்தியில் தட்டச்சவும் ஒரு கருவியை கூகிள் உருவாக்கியுள்ளது.

இந்திய மொழிகளில் தேடும் கருவிக்கு இங்கே சுட்டவும்

ஹிந்தி தட்டச்சுக் கருவிக்கு இங்கே சுட்டவும்.

Monday, August 13, 2007

கர்நாடகாவில் 'எடுசாட்'

உயர்கல்வி மேம்பாட்டுக்கென செயற்கைகோள் வழி தொலை-விரிவுரைகளை வழங்கும் எடுசாட் திட்டத்தை ஐ.எஸ்.ஆர்.ஓ உதவியுடன் கர்நாடக அரசு இன்று துவங்கியது. முதல் கட்டமாக 102 கல்லூரிகளில் தொலை விரிவுரைகளைக் காணும் வசதி உருவாக்கப்படவுள்ளது இதில் 72ல் ஏற்கனவே இந்த வசதி நிறுவப்பட்டுள்ளது. மொத்தம் 349 கல்லூரிகள் இத்திட்டத்தால் பயன்பெறவுள்ளன.

Karnataka CM launches Edusat network to promote higher education Hindu
Karnataka CM launches Edusat network Chennai Online

Friday, August 10, 2007

இராமாயணம் கணினி விளையாட்டாகிறது

இராமாயணத்தை கணினி விளையாட்டு (Computer Game) வடிவில் உருவாக்கும் பெரும் முயற்சியை இந்தியாவின் விர்ஜின் காமிக்ஸ் மற்றும் உலக முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனம் சோனியும் இணைந்து செயல்படுத்தவுள்ளன. தேர்ந்த திரைப்பட இயக்குநர் ஷேகர் கபூர் இதில் முன்னணி பங்கு வகிக்கிறார்.

Ready for an online game on Ramayana? - The Hindu

Tuesday, August 7, 2007

உலகின் தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் 4 இந்திய கல்வி நிறுவனங்கள்

உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐஐடி (இந்திய உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்), ஐஐஎம் (இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள்), ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகம் ஆகிய 4 கல்வி நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.

ஹார்வார்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளன.

ஐஐடி 57-வது இடத்தையும், ஐஐஎம் 68-வது இடத்தையும், ஜவாகர்லால் நேரு பல்கலை. 183-வது இடத்தையும் பிடித்துள்ளன.

உலகம் முழுவதும் உள்ள 3703 கல்வி நிறுவனங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தலைசிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 3-வது இடத்தையும், தலைசிறந்த 100 அறிவியல் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 33-வது இடத்தையும் ஐஐடி பிடித்துள்ளது. கலைப் படிப்புகளைப் பொருத்தவரையில், தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் தில்லி பல்கலைக்கழகம் 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி

Deccan Herald - Four Indian institutions in world university rankings
IITs 57th in list of world's top varsities :: Economic Times

Thursday, July 26, 2007

ஃபேஸ்புக் மீது மோசடி வழக்கு

உலகெங்கும் உள்ள கல்லூரி நண்பர்களையும் முன்னாள் சகாக்காளையும் ஃபேஸ்புக் கை கோர்க்கிறது. ஹார்வர்டில் படித்தபோது, இந்தத் தளத்திற்கான எண்ணத்தை தங்களிடமிருந்து திருடிவிட்டதாக ConnectU வழக்குத் தொடுத்திருக்கிறது.

2002- ஆம் ஆண்டு கேம்ரானும் (Cameron) டைலரும் (Tyler Winklevoss) திவ்யா நரேந்தாவும் (Divya Narenda) கணினி நிரலி எழுத மார்க்கை (Mark Zuckerberg) தொடர்பு கொண்டார்கள். இணைய தளத்திற்கான நிரலை அப்போது எழுதாமல் தட்டிக் கழித்த மார்க், சில காலங்கழித்து நுட்பத்திற்கான திட்டத்தை களவாண்டு ஃபேஸ்புக் துவங்கினார் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.


BBC NEWS | Business | Facebook site faces fraud claim

Wednesday, July 25, 2007

அண்ணா பல்கலை.யில் அப்துல்கலாமுக்கு சம்பளமில்லை.

குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து விடைபெற்ற அப்துல்கலாம், இன்று இரவு 9 மணிக்கு சென்னை வருகிறார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் மற்றும் பேராசிரியர்கள் அவரை வரவேற்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியதைப் போலவே, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், 'உயிரி தொழிற்நுட்பம்' பாடப்பிரிவின் கவுரவப் பேராசிரியராகவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் பணியாற்ற உள்ளார். இதற்காக சம்பளம் எதுவும் வழங்கப்படாது என்று துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஆயினும் அவருக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க உள்ளது.

"அப்துல்கலாம் அவர்களின் அறிவும் அனுபவமும் மாணவர்களுக்கு நன்கு பலன் அளிக்கும்" என்ற துணைவேந்தர் இது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் தெரிவித்துள்ளார்.

சென்னையை உடனுக்குடன் காண: Sify தளம்

Sify.com சென்னை நகர போக்குவரத்தை உடனுக்குடன்் நிகழ்படங்களாக பரப்பும் வசதியுடன் புதிய தளத்தை வடிவமைத்திருக்கிறார்கள். நகரின் முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள வெப்காம்களிலிருந்து நிகழ்படங்களின் உடனடி பரப்புவதால் நாம் செல்லவேண்டிய வழிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை அறிந்து திட்டமிட இது வசதியளிக்கும் என தமிழ் திரைப்பட பிரபலங்கள் பங்கேற்ற வண்ணமிகு அறிமுகவிழாவொன்றில் சிஃபியின் இணையதளங்கள் துறை தலைவர் சிவராமகிருஷ்ணன் கூறினார். இந்த தளத்தை (www.chennailive.in) தமிழக தகவல் தொழிற்நுட்ப செயலர் டாக்டர் சி சந்திரமௌலி துவக்கி வைத்தார்.

The Hindu News Update Service

திருப்பதி கோவில் தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் போட்டோ தேவஸ்தானம் முடிவு

திருப்பதி - திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் விடுதி அறைகளுக்கான டிக்கெட்டுகள் போன்றவை கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தேவஸ்தான நிர்வாகி கள் தரிசன டிக்கெட், மற்றும் விடுதி டிக்கெட்டுகளில் பக்தர்களின் போட்டோவை அச்சிட் டுத்தர முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அவர்கள் பெங்களூரில் உள்ள இன் டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

டிஜிடல் கேமராவை கவுன்டரில் பொருத்தி தரி சன டிக்கெட் எடுக்கும் போது பக்தரை போட்டோ பிடித்து, அதை டிக்கெட்டில் பதிவு செய்து கொடுக்கலாம் என்று அந்நிறுவனம் சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்

TTD to trifurcate Central Reservation System - Newindpress.com

Monday, July 16, 2007

விரைவில் இணைய வழி வழக்குப் பதிவு

சென்னை உயர்நீதிமன்றம் கணினி மயமாக்கப்படுவதை அடுத்து விரைவில் செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் துவங்கி இணையவழி வழக்கு் பதிக்கும் வசதிகள் செய்யப்படவிருக்கின்றன.

முதல் கட்டமாக ரூ. 451கோடி செலவில் சென்னை உயர்நீதிமன்றம் கணினிமயப்படுத்தப்படவிருக்கிறது. ஒவ்வொரு நீதியரசருக்கும் ஒரு மடிக்கணினியும் மூன்று ப்ரிண்டர்களும் 5 மேசைக் கணினிகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நீதிமன்றமும் குறைந்தபட்சம் இரு சர்வர்களோடு செயல்படும். வீடியோ கான்பெரன்சிங் மூலம் விசாரணைகள் எளிதில் சாத்தியமாகும். காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் கணினிவழி தொடர்புகள் ஏற்படுத்தப்படும். வழக்குகளின் நிலமைகளை இணையவழி கண்டுகொள்ளும் வசதிகளும் செய்யப்படவிருக்கின்றன.

e-filing of cases to begin soon in High Court - The Hindu

Wednesday, July 11, 2007

சைக்கிள் மெக்கானிகின் சாதனை !

சைக்கிள் மெக்கானிக் அப்துல்கனி தான் தயாரித்த மினி டிராக்டரில் பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தார். பண்ருட்டி வட்டம் பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்கனி (52). சைக்கிள் மெக்கானிக்கான இவர், வறுமையின் காரணமாக 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பின்னர் வேலை தேடி 72-ல் மும்பை சென்று 93-ல் திரும்பி வந்து தற்போது பண்ருட்டி கடலூர் சாலையில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்துள்ளார்.
இவர் தன்னிடம் இருந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் ஆகியவற்றின் பாகங்களை பயன்படுத்தி மினி டிராக்டர் செய்துள்ளார். இந்த மினி டிராக்டரை பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு செய்ததாகவும், இந்த மினி டிராக்டர் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 40 கிலோ மீட்டரும், மணிக்கு 15 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என கூறினார்.
மேலும் நவீன விவசாயத்துக்கு தேவைப்படும் கருவிகளை செய்ய இருப்பதாகவும், நிதி வசதி போதுமான அளவு இல்லாத காரணத்தினால் கண்டுபிடிப்புகள் தாமதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி : தினமனி

Tuesday, July 10, 2007

போயிங்787- புதுவடிவ விமானம் அறிமுகம்





பிரபல அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், அறிமுகப்படுத்தியுள்ள போயிங்787 என்ற புது வடிவ விமானம் இது. அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் எவர்ரெட் என்ற இடத்தில் இருக்கும் அதன் தயாரிப்பு கூடத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. குறைந்த எரிபொருள் செலவில், குறைந்த பராமரிப்பு செலவில், அதிக மக்களை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்திற்கு இப்போதே
600 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளனவாம். இந்தியாவின் ஏர்-இந்தியா நிறுவனம் 27 விமானங்களையும் ஜெட்ஏர்வேஸ் 10 விமானங்களையும் வாங்க விண்ணப்பம் செய்திருக்கின்றனவாம்.

நன்றி: தினமலர்-வர்த்தகம்

Friday, June 29, 2007

ஆப்பிள் ஐ போன் வாங்க நீண்ட வரிசைகள்

இன்று விற்பனைக்கு வரும் ஆப்பிள் ஐபோனை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நேற்று இரவிலிருந்தே ஐபோன் கடைகளின் முன்பாக மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.

வரிசையில் நிறபவர் தரும் நேரடி செய்திதொகுப்புக்கள்
From the Front Lines of NY's iPhone Line ABC News
In the iPhone Line Detroit Free Press, United States

வீடியோக்க்கள்





-o❢o-

b r e a k i n g   n e w s...