.

Friday, September 7, 2007

திட்டமிட்டபடி படகுகளில் யாழ்ப்பாணம் செல்வோம்!

திட்டமிட்டபடி இராமேஸ்வரத்திலிருந்து எதிர்வரும் 12 ஆம் தேதி உணவு மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகளில் யாழ்ப்பாணம் செல்வோம். இதில் எந்தவித மாற்றத்துக்கும் இடமில்லை என்றும் தமிழர் விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் தேதி வரை இரு பிரிவுகளாக படகு பிரசார பயணம் மேற்கொள்வோம். மதுரையில் இன்று இடம்பெறும் பிரசார தொடக்க விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மற்றும் சேதுராமன், ஜனதாதள மாநில பொதுச் செயலாளர், ஜான் மோசஸ் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நெடுமாறன் மேலும் கூறியதாவது, தமிழின விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இலங்கை யாழ்ப்பாணத்தில் பட்டினி கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் உணவு மற்றும் மருந்து பொருட்களை திரட்ட தொடங்கினோம். 2 மாதங்களில் ரூ. 2 கோடி மதிப்புள்ள மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.இந்த பொருட்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு அனுப்ப இந்திய தேசிய செஞ்சிலுவைச் சங்கத்தை கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி அணுகினோம். அவர்கள் அதற்கு உடன்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இலங்கைக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடந்த 9.2.07 அன்று கடிதம் எழுதினோம். மேலும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...